விடுதலை – ஒரு பக்கக் கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 17, 2023
பார்வையிட்டோர்: 2,349 
 

மேடம் Billing ல கூப்பிடறாங்க. கேஷ் கவுண்டர்ல ஒரு 50000/- கட்டச் சொல்றாங்க உடனே..

ICU கண்ணாடி வழியாக அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தாள் மீனு. 

மறுநாள் காலை.. 

யார் எத்தனை  முறை கேட்டும் கையெழுத்திடாத மீனு எல்லா Forms இலும் கையெழுத்து போட்டு விட்டாள் என்று கூறி அதை டாக்டரிடம் கொடுத்தான் சரவணன். 

அப்படின்னா நாங்க formality start பண்ணிடறோம் என்ற டாக்டர்.. Sister ventilator remove பண்ணிடுங்க. General medicine மட்டும் drips ல போகட்டும்.

என்ன நடந்தது. எதற்காக Forms இல் கையெழுத்திட்டாள் மீனு.  விவரித்தாள் தன் கணவன் சரவணனிடம்..

அம்மா நேற்று கனவில் வந்து பேசுவது போல் இருந்துச்சுங்க. அம்மாடி மீனு..சொன்னா புரிஞ்சுக்கோ. என்னை கருணை கொலை பண்றதா நினைச்சுக்காதே.  எல்லா formலும்  sign பண்ணிடு. பிடிவாதம் பிடிக்காத. எனக்கு வந்திருக்கிற வியாதி அப்பிடி.  நோயோடவே வாழறது வீணான வாழ்வு மீனு. என் அவஸ்தை எனக்குத்தான் தெரியும். 

ஒண்ணு நோய் குணமாகணும். இல்ல நோயாளி மரணிக்கணும். என் விஷயத்துல ரெண்டாவது தான் நடக்கும். அது உனக்கும் தெரியும். ஆனால் உன் மனசு ஏத்துக்கல.  டாக்டர்ஸ் சுவாசம் இருக்கிறா மாதிரியே அவங்க விசுவாசத்த காட்டுவாங்க. அதெல்லாம் மெஷின் பண்ற வேலை. புரிஞ்சுக்கோ. நீ தாமதம் பண்ண பண்ண கட்டணம்தான் கட்டணும் லகரத்துல. நீயும் மாப்பிள்ளையும் எவ்வளவு தான் செலவு செய்வீங்க. புரியுதா செல்லம். மனச திடப் படுத்திக்கோ. கண்டிப்பா உனக்கு மகளா உன் வயித்திலேயே பொறப்பேன். எனக்கு விடுதலை கொடு மீனு.

சார்.. முடிஞ்சிடிச்சி last breathe போய்ட்டு இருக்கு.  பாக்கறவங்க போய் பார்க்கலாம். அதிகபட்சம் இன்னும் அரைமணி நேரம் தான் இருப்பாங்க. 

உறவினர்கள் எல்லாம் போய் பார்த்தாலும் இன்னும் இழுத்துக் கொண்டே இருந்தது. மீனு சிறிது தண்ணீர் கொடுத்த அடுத்த சில விநாடிகளில் சுவாசம் அடங்கியது.

உற்றார் உறவினர்கள் பெரும்பாலும் செய்யும் தவறு இதுதான். பிழைக்க வழியில்லை என்று தெரிந்தும் சக்திக்கு மீறிய செலவுகளை செய்வார்கள்.

இன்னொற்றையும் சொல்ல வேண்டும். மருத்துவம் அன்று சேவையாக இருந்தது. ஆனால் இன்றைய மருத்துவர்கள்….

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *