விடியாத இரவுகள்

 

ராதா,நல்லா யோசித்துக்கோ, நீ சுமக்கிறது சரியில்லை, சீக்கிரமாக ஒரு முடிவை எடு,அதன் பிறகு உனக்கு பிடித்த வாழ்க்கையை அமைத்துக்கொள், உங்க அத்தையே அப்படி சொல்றாங்க, அப்புறம் நீ ஏன் கவலைப்படுகிறாய்? என அறிவுறுத்திக் கொண்டு இருந்தாள் மாலா.

மாலா ராதாவின் பள்ளிக்காலத் தோழி, இவளைப் பார்க்க ஒரு மாலை வேளையில் வந்து இருந்தாள்.

ராதா, மணமாகி ஐந்தே மாதங்கள் தன் கணவனுடன் வாழ்ந்து, பதினாறு வார கருவை சுமக்கும் இளம் விதவை பெண்.

உறவு என்று சொல்லிக்க இருந்த அம்மாவும், ராதாவிற்கு மணமான இரு மாதங்களில், அதற்காகவே காத்து இருந்தார் போல நோய்வாய்பட்டு இறந்துவிட்டாள். அம்மாவின் மறைவுக்குப் பிறகு புகுந்த வீடே தன் வீடாக நினைத்து அத்தையிடம் பாசத்துடன் பழகி
வந்தாள்.

கணவன் குமாருக்கு பிளம்பிங் வேலை, அவ்வப்போது குடித்தாலும் , குடித்தனம் நடத்துவதில் ஒன்றும் குறை வைத்ததில்லை.

நன்றாக சென்ற இவர்கள் வாழ்க்கை, ஒரு நாள் வாகனம் ஓட்டும்போது அலைபேசியில் பேசியதில் கவனம் சிதறி, வீட்டிற்கு பொட்டலமாய் வந்து சேர்ந்தான்.

கருவினை தடவியபடி உட்கார்ந்து இருந்த ராதா, வீட்டிற்கு வந்த ராசியை அனைவரும் குறை கூறிக் கலைந்தனர்.

அத்தை நானே, கருவைக் கலைத்துக்கொள் என்றுதான் சொல்கிறேன் முடியாது என்று சொல்கிறாள்.என்றாள் மாலாவிடம் அத்தை.

அத்தை கருவைக் கலைப்பது சட்டபடி குற்றமாகும் அதனாலே பயப்படுகிறாளோ என்னவோ? என்றாள் மாலா,

இருபது வாரத்திற்கு மேலே உள்ள கருவை கலைத்தால்தான் குற்றம் என்றாள் ராதா.

உனக்கே தெரியுது இல்லே குற்றம் இல்லை, என.
பின்னே என்னடி? உனக்கு ? கலைச்சுட வேண்டியதுதானே?
என்றாள்.

கலைச்சிட்டு? என எதிர்கேள்வி கேட்டாள்.

அதற்கு பதிலே இல்லாமல் வெறுமையான பார்வை மட்டுமே மாலாவிடம் இருந்தது.

இப்படிதானம்மா, நான் சொன்னாலும் கேட்கிறாள். என்ற அத்தை சாப்பாடு எடுத்து வைக்க அடுப்படி சென்றாள்.

என்னடி, உன் வாழ்க்கையை வாழ வேண்டாமா? மாலா.

என் வாழ்க்கை என்ற ஒன்று இருக்கா?

அம்மாவுடன் சந்தோஷமாகத்தான் இருந்தேன், பிரிந்தேன்,

பிறகு குமாருடன், குமாரை இழந்தேன்

இப்போ அத்தையுடன், இதில் எனக்கான தனி வாழ்க்கை ஏது?

அத்தைக்குப் பிறகு? நான் அநாதை தானே ? என்று தேம்பினாள்.

அத்தையும் தன் மகனை இழந்து தவிக்கின்றார், அதை வெளிப்படுத்தாமல் இருக்கிறாள். அவர் தன் பிள்ளையை இழந்தது போல நானும் என் பிள்ளையை பாதியிலேயே இழக்க விரும்பவில்லை,

விடியாத இரவுகள் என்று ஒன்றும் இல்லை, இரவுகள் கண்டிப்பாக விடிந்துதானே ஆகனும், இந்த புதிய வரவே எங்களுக்கான ஆறுதலாக இருக்கும், அதன் எதிர் பார்ப்பில் ஒரு ஆறு மாத காலம் நாங்கள் நகர்த்துவோம்.

மீத வாழ்க்கையை காலம் கைபிடித்து நகர்த்தட்டும் என்று சொல்ல, சாப்பாட்டுத் தட்டுடன் வந்த அத்தை, கண்கள் கலங்கியபடி ராதாவை அணைத்து தோளில் சாய்த்தபடி அமர்ந்தாள்.

ராதாவின் பார்வையில், இரவு நேரத்து நிலா மெல்ல வானிலே ஊர்ந்து சென்றது. இந்த இளம் விதவையின் விடியலுக்காக. 

தொடர்புடைய சிறுகதைகள்
என்னங்க! ஏன் இவ்வளவு டென்சனா இருக்கீங்க? முதல் முதலா நேர்முக தேர்விற்குப் போவது போல, சும்மா தைரியமா போங்க, ஐந்து வருடம் குழந்தைங்களை வைது ஆட்டோ ஓட்டியஅனுபவம், இருபது வருடம் இந்த மாநகரப் பேரூந்தில் ஓட்டிய நீங்கள், ஓய்வு பெற்ற பிறகும் ...
மேலும் கதையை படிக்க...
என்ன ஆச்சு ராமுக்கு ?நல்லாத்தானே இருந்தான். என்று வருத்தமாக ராமுவின் மனைவி சாராதாவிடம் கேட்ட குமார். ராமுவின் பள்ளிக்காலத்திலிருந்தே தோழன், மற்றும் சாரதாவின் உறவினர். தெரியலை! திடீர்னு அன்றைக்கு காலையில் எழுந்தவர், எனக்கு தலை சுற்றுகிறது, தலை வலியும் அதிகமாக இருக்கு என்றார். அதிலிருந்து ...
மேலும் கதையை படிக்க...
அமைதியாகத்தான் இருந்தது. உறவினர்கள் வரும் வரை அந்தக்குடியிருப்பு பகுதி , அதில் வசித்த வயது அறுபதைக் கடந்த தம்பதியருக்கு வாரிசு என்று யாரும் இல்லை, அது பற்றிய அவர்கள் கவலையும் கொண்டதில்லை அனைவரிடமும் அன்பு காட்டிப் பழகுவார்கள் , சொந்த ஊர் நாகப்பட்டினம் ...
மேலும் கதையை படிக்க...
கரண் வீடே களை கட்டி இருந்தது. மாவிலை தோரணம்,மாக்கோலம் இடப்பட்டிருந்தது, திருமணமாகி கரண்-சித்ரா தம்பதியர், வீட்டிற்க்கு வரும் நாள் இன்று. இரண்டு மாதம் முன்பு வரை அவர்கள் காதலர்கள். கரண் பிரபல தனியார் பாங்க் ஒன்றில் வேலை, சித்ராவும் அதே வங்கியில் வேலை பார்த்து ...
மேலும் கதையை படிக்க...
முத்தப்பா!| மைசூர் வண்டி எத்தனை மணிக்கு வரும்? போங்க! போய் விருந்தாளியை அழைச்சுகிட்டு வாங்க! - புனிதா. இப்பத்தான் கும்பகோணம் தாண்டியிருக்கு! நான் போறேன் பாத்துக்கிறேன் - மாரி் என்கிற மாரியப்பன். வண்டியை எடுத்துகிட்டு குத்தாலம் ரயிலடி போகத் தயாரனான். புனிதா மாரி தம்பதியரின் மூத்த ஒரே மகன் ...
மேலும் கதையை படிக்க...
ஏய்,இந்திரா, டிபன் ரெடியா? மணி என்ன ஆச்சு? விடிகாலையிலே எழுந்த பின்னும் உன்னால் நேரத்திற்கு தயார் பண்ண முடியல இல்ல, என்னத்தான் பண்ணுகிறாயோ? நாங்க எல்லாம் வெளியே போனத்துக்கு அப்புறம் மத்த வேலையை பார்க்க வேண்டியதுதானே, என அங்கலாய்த்த படியே கையில் நாளிதழ் ...
மேலும் கதையை படிக்க...
அனைவரின் இருப்பை அழிக்கும் கடைசி இடம். ஓ வென்று இருந்தது, கடைசியாக எரியூட்டப்பட்ட சடலம் ஒன்று எரிந்தபடி இருக்க, அருகே உள்ள கொட்டகையில் புல் பூண்டு முளைத்து , பயன்பாடாற்ற கொட்டகையில் ஆடு ஒன்று விளையாடிக் கொண்டு இருந்தது, தன் குட்டியுடன். வெட்டியான் ஈசானம் ஓரமாக அமர்ந்து தனது ...
மேலும் கதையை படிக்க...
மணி ஓடு, முதலாளி வண்டி மாதிரி இருக்கு,போய் கேட்டைத் திற, ஓடுடா என சத்தம் போட்டுக்கொண்டு இருந்தார் வீனஸ் திரையரங்க மேலாளர் காவலாளி மணியிடம், ஓடிப்போய் திறந்தான் மணி முதலாளிதான் வந்து இருந்தார், தனது திரையரங்கத்திற்கு மாதம் இருமுறை வந்து பார்வையிடுவது அவரது ...
மேலும் கதையை படிக்க...
என்னம்மா! என்ன பன்றது உனக்கு, தலைவலி எல்லாம் எப்படி இருக்கு? பசங்க எல்லோரும் சொளக்கியமா இருக்கா, நீ கவலைப்படாதே!, நான் இருக்கேனே!, இந்தா! இந்த பூவை வச்சுக்கோ, இன்னிக்கு வெள்ளிக்கிழமை,நீ எப்போதும் செய்வியே விளக்கு பூஜை, இன்னிக்கு நான் பன்னினேன்,என்ன சிரிக்கிற, ஏதோ எனக்கு தெரிஞ்சதை ...
மேலும் கதையை படிக்க...
கடற்கரை மணலில் கை கோர்த்தப்படி அமர்ந்து இருந்தனர்.விஜியும்,சுந்தரும். இவர்களைப் போலவே அலைகளும் ஒன்றொடு ஒன்று தவழ்வதும்,விலகுவதும் போல காதல் புரிந்து கொண்டு இருந்தது. ஆம், இருவரும் காதலர்கலாக இருந்து மணமானவர்கள்.ஒரே கட்டிடத்தில் இருக்கும் வெவ்வேறு கம்பெனியில் பணிபுரியும் போது அடிக்கடி லிப்டில் சந்தித்து, காதலர்களாக ...
மேலும் கதையை படிக்க...
இடங்கடத்தி
கையறுநிலை
பிரிவில் சந்திப்போம்
ஓரகத்தி
பச்சைத் துண்டு
பூக்களை பறிக்காதீர்கள்
மயானம்
படமா?பாடமா?
ஒற்றை நாணயம்
எச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)