கல்யாணத்துக்குப் பிறகு படிக்க வைப்பதாகச் சொல்லித்தான் கமலாவை திருமணம் செய்து கொண்டான் சுந்தர். இருவருக்கும் ஏழு ஆண்டுகள் வித்தியாசம்.
தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் சுந்தருக்கு போதுமான வருமானம் கிடைத்தது. கமலா ஆசைப்படி தொழிற்கல்வி டிப்ளமோ படிப்பில் சேர்த்துவிட்டான்.
வயது இருபதை கடந்ய அவளுக்கு படிக்க வேண்டும் என்பதில் அதிக ஆசை இருந்தது.
“” ஏய்…கமலா… கல்யாணம் பண்ணிட்டு கல்லூரிக்கு வர்றே…. தெனமும் சாய்ந்தரம் உன்ன கூட்டிப்போக வர்றாறே அவர்தானா…..” கிண்டலடித்தனர் தோழிகள்.
வழக்கம்போல், வேலை முடிந்து வரும்போது கல்லூரி வாசலில் நின்றான் சுந்தர்.
” கமலா……….” அழைப்பதற்குள் காணாதது போல் பேருந்தில் ஏறினாள்.
” எதுக்கு என் கூட……..” வீட்டில் பேச்சை இழுத்ததுதான் தாமதம்.
” ப்ளீஸ்….. இனிமே காலேஜ் பக்கம் வராதீங்க…. கல்யாணம் ஆயிடுச்சானு என் ப்ரண்டுக கேட்கும் போது ரொம்ப கேவலமா இருக்கு…..” கண்கள் கொப்பளிக்க வார்த்தைகளால் கோடு போட்டாள் கமலா.
வாழ்க்கையின் அர்த்தம் தெரியாத கமலாவை மேலும் கீழும் பார்த்தான்.
நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதலில் பரிசுகள் பல பெற்ற அவனால் கமலா வரைந்த அந்தக் கோட்டைத் தாண்டிட முடியவில்லை. குடும்பம் அவன் குறுக்கே நின்றது. அவள் கண்களில் இருள் சூழ்ந்துகொண்டு இருப்பதை மட்டும் உணர்ந்தான். அந்தக் கோட்டுக்கு வெளியே நின்றபடி…….
தொடர்புடைய சிறுகதைகள்
வழக்கம் போல் இரவு உறங்கச் சென்றேன். உறக்கத்தில் விழித்த என் குழந்தைகள் எப்போதும் போல் ஆளுக்கொரு பக்கமாய் என்மீது கால்களை தூக்கிப் போட்டுக்கொண்டு என் முகத்தைப் பார்த்தனர். அந்தப் பார்வையின் அர்த்தம் புரியாதவனா நான். கதை கேட்காமல் ஒருநாளும் உறங்கியதில்லை என்பதை ...
மேலும் கதையை படிக்க...
வயிற்று வலியும் மயக்கமும் வர வீட்டு வாசலிலே விழுந்துவிட்டேன். "அய்யய்யோ....! தொளசி விழுந்துட்டானே....." என் தாய் ஆரியமாலா அழுது ஓடி வர அனைவரும் வந்துவிட்டனர். பாதி கெரக்கத்தில் இருந்த என்னை தூக்கி முகத்தில் தண்ணீர் தெளித்தார்கள். ஓரளவு மயக்கம் தெளிந்தேன். வயிற்று ...
மேலும் கதையை படிக்க...
''இந்தக் கூறுகெட்ட உலகத்துல காலம் போறதே தெரியமாட்டேனுது... எப்புடியாவது திங்ககெழம சந்தையில எலந்தப்பழத்த வித்துறனும். கனகுக்கு மாத்திக்கிறதுக்குக்கூட வேற பாவாடை இல்ல. கிடைக்கிற காசுக்கு நல்ல பாவாடைய வாங்கிட்டு இருட்டுறதுக்குள்ள வீடு வந்து சேந்துறனும். தனக்குள்ளயே பேசிக்கொண்டு கனகையும் கையில் பிடித்துக்கொண்டு ...
மேலும் கதையை படிக்க...
"நாம அப்புடி பேசிருக்ககூடாதோ... போயும் போயும் கல்யாணம் நடக்குற எடத்துல அப்புடி நா பேசினது சரியில்ல.... இல்ல பேசுனது சரிதான் .. அப்புடி பேசுனாத்தான் மத்தவனுகளும் திருந்துவானுக நாட்ட ஆளுறதுல இருந்து நாசமா போக வைக்கிற வரைக்கும் ஏதோ ஒரு வாத்தியாருகிட்ட ...
மேலும் கதையை படிக்க...
அவன் எதிர்பார்க்கவே இல்லை. மதுப்புளியில் ஊரே கூடியிருந்தது. கைக்குழந்தையுடன் நின்றிருந்த தேவியை பார்க்க வெட்கப்பட்டு தலை குனிந்து நின்றான் மலைச்சாமி.
'' ஏம்பா....எத்தன முறை சொல்லியாச்சு. திருந்தவே மாட்டியா....'' கடுகடு முகத்துடன் பேசினார் தலைவர் முருகையன்.
'' ஏம்புள்ளய நிக்க வச்சு கேள்வி கேட்குறீங்க... ...
மேலும் கதையை படிக்க...
“சின்னத்தம்பி! நாலு பொரோட்டா, ரெண்டு ஆப்பாயில்” சாணார் ஓட்டலில் வேலைபார்க்கும் சப்ளையர் இளமதியன் சத்தம் போட்டுச் சொன்னதும் “ரெடி என்றவாறு வேகமாக பொரோட்டோ மாவைப் பிசைந்து சிறு உருண்டைகளாக வைத்திருந்ததில் நாலு உருண்டைகளை சப்பாத்தி கட்டையால் உருட்டி தோசைக்கல்லில் போட்டான். ரெண்டு ...
மேலும் கதையை படிக்க...
காஷ்மீர் மக்கள் ஒவ்வொருவரும் மூட்டைகளை சுமந்து கொண்டு குடும்பம் குடும்பமாக வேற்றிடம் நோக்கி சென்றார்கள். போர் அபாயத்தை வானொலியும் தொலைக்காட்சியும் அறிவித்துக்கொண்டே இருந்தன. ஆயுதங்களையும் ஆட்களையும் இந்தியாவும் பாகிஸ்தான் தீவிரவாதிகளும் குவித்து வைத்திருந்தனர். பனித்தூறல்களை துடைத்துவிட்டு சூரியகதிர்கள் உலாவிக்கொண்டு இருந்தன. இந்திய ...
மேலும் கதையை படிக்க...
மரத்திலிருந்த இலைகள் சருகுசருகாய் காய்ந்து விழுந்துகொண்டிருந்தன. பலநாள் உழைத்த களைப்பால் நாய்கள் நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டு எலப்பு வாங்கின. வாகனங்கள் '' டர் டர்'' என்ற சத்தத்துடன் அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தன. இரைச்சலுக்கு மத்தியில் பதினெட்டாம் நம்பர் பேருந்து அண்ணாநகர் பஸ் ...
மேலும் கதையை படிக்க...
மலையும் உருகுகின்ற வெயில், வெயிலின் கொடூரப்பிடியில் பலரும் சிக்கித் தவித்தனர். அதைத் தணிப்பதற்காக சாலையோர இளநீர் கடையில் சிலர் ஈக்களாக மொய்த்துக் கொண்டிருந்தனர். தண்ணீரின் வறட்சியால் தலையே சுத்துவது போலிருந்தது ராஜமாணிக்கத்திற்கு.
''எப்படியாவது நம்ம தலைவர சந்திச்சு ஆட்டோகிராப் வாங்கிறனும். அவர் நடிக்கிற ...
மேலும் கதையை படிக்க...
மழைத்தூறலாய் வெப்பக்கதிர்கள் பூமியில் விழுந்து கொண்டிருந்தன. தெருநாய்கள் நிழலுக்கு ஒதுங்கி உறங்கிக் கிடந்தன. இலைகள் மண்தரையில் மடிந்து கிடந்தன. காற்றுக்கு அசையாதவைகளாகவே மரங்கள் காட்சியளித்தன.
தலையில் உருமாக்கட்டு. இடுப்பில் ஒரு கந்தைத் துணி. தலையில் ஒரு கூடை. அதில் நிறைய வேர்வை சிந்தி ...
மேலும் கதையை படிக்க...