சென்னையிலிருந்து என்னை தர்மபுரிக்கு டிரான்ஸ்பர் செய்திருக்கிறார்கள்.
இன்னும் மனைவி சுமதி குழந்தைகளை அழைத்து வரவில்லை. ஒரு நல்ல வீடு பார்த்து அழைத்து வர வேண்டும்.
சில வீடுகள் பார்த்ததில் இரண்டு வீடு எனக்கு பிடித்திருக்கிறது.ஒரே மாதிரியான வசதிகள் கொண்ட அதில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். ஒரு வீட்டின் வாடகை ஐயாயிரமும் மற்றது ஆறாயிரமும் சொல்கிறார்கள்.
இந்த ஐயாயிரம் சொல்லும் ஹவுஸ் ஓனர் மாடியில் அவர் குடும்பத்துடன் இருந்து கொண்டு கீழ்ப் போர்ஷனை வாடகைக்கு விடுகிறார்.
ஆறாயிரம் சொல்பவர் பெங்களூரில் இருக்கிறார்.இங்கே எப்போதாவதுதான் வருவார்.வாடகையை பேங்க் அக்கவுன்ட்டில் போட வேண்டுமாம்.
ஐயாயிரம் சொல்லும் வீட்டைப் பிடித்தால் மாதம் ஆயிரம் மிச்சப் படுத்தலாம். எதற்கும் சுமதியிடம் கேட்டு அட்வான்ஸ் கொடுக்கலாம் என்று போன் செய்தேன்.
அவள் எல்லா விபரங்களையும் கேட்டுவிட்டு ஆறாயிரம் சொல்லும் வீட்டிற்கே அட்வான்ஸ் கொடுத்திடுங்க என்றாள். நான் ஆச்சர்யமாக ஏன்? என்றேன்.
” ஹவுஸ் ஓனர் மாடியில இருந்தா ஏதாவது சொல்லிகிட்டே இருப்பாங்க.மோட்டார் ரொம்ப நேரம் ஓடுது.துணி இங்கே காயப் போடாதீங்க.உங்க வீட்டுக்கு என்ன அடிக்கடி கெஸ்ட் வராங்க.இப்படி ஏதாவது சொல்லி கிட்டே இருப்பாங்க.அது மட்டுமில்லை நம்மை அவங்க அடிமை மாதிரி நடத்துவாங்க. அதான் அந்த வீடு வேண்டாங்கிறேன்” என்றாள்.
பரவாயில்லையே சுமதி இப்படி எல்லாம் யோசிப்பாளா? என்று ஆச்சரியப் பட்டுப்போனேன்.
தொடர்புடைய சிறுகதைகள்
சதாசிவம் தன் பேத்தியின் எதிர்காலத்தைப் பற்றி பேச மகளிடம் எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தார்.
இருபதை நெருங்கிக் கொண்டிருக்கும் பேத்தி தீபிகா தன்னோடு மியூசிக் கிளாஸ் படிக்கும் பரத்தைக் காதலிக்கிறாள்.அது சதாசிவத்தின் மகள் காயத்ரிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.அதனால் மியூசிக் கிளாஸீக்கும் தீபிகாவை ...
மேலும் கதையை படிக்க...
நமச்சிவாயம் ஆசிரியர் கடந்த பத்து நாட்களாக நடைப்பயிற்சிக்கு வரவில்லை. இன்றுதான் வந்திருக்கிறார்.அவர் பையனுக்கு திருமணம்.அதனால்தான் வரவில்லை.
ஆனால் எங்களுக்கு யாருக்குமே அழைப்பில்லை.அவர் நல்ல சம்பளம் வாங்குகிறார்.பையனும் ஐ.டி. கம்பெனியில் நன்றாக சம்பாதிக்கிறான்.ஆனாலும் இந்த கல்யாணத்தை மிக எளிமையாக நடத்தி இருக்கிறார் .
கோவிலில் திருமணம்.அருகில் ...
மேலும் கதையை படிக்க...
ராகுல்,அவன் மனைவி தீபா,குட்டிப் பாப்போவோடு அடுத்த வாரம் அமெரிக்கா செல்கிறார்கள்.எங்கள் கம்பெனியிலிருந்து அவனுக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
சொல்ல முடியாது அங்கேயே செட்டில் ஆவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
அவனுக்கு வாழ்த்துக்கள் சொல்வதற்காக அவன் வீட்டிற்கு சென்றோம்.
" ஸாரி சார்! நாங்க யு.எஸ். போக வேண்டாம்னு ...
மேலும் கதையை படிக்க...
கார் ரிப்பேராக இருப்பதால் டாக்சிக்கு போன் செய்துவிட்டு அப்பார்ட்மென்ட் வாசலில் காத்திருந்தேன்.
சே! இந்த நகர வாழ்க்கை வர வர எரிச்சலூட்டுகிறது.காலை எழுந்ததில் இருந்து ஒரே பரபரப்பு! மனைவி கவிதாவுக்கும் டென்சன். பாப்பாவை ஸ்கூலுக்குத் தயார் செய்ய வேண்டும்.
எனக்கு மதிய சாப்பாடு ,காலை ...
மேலும் கதையை படிக்க...
ராகவன் சார் ரிட்டயர்டு ஆகி அடுத்த நாளே இரண்டு கம்யூட்டர்,ஒரு ஜெராக்ஸ் மிஷினுடன் மெயின் ரோட்டில் அந்தக் கடையை ஆரம்பிப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.அவருடைய பக்கத்து ஆபிஸில் வேலை செய்யும் நானும் எதிர்பார்க்கவில்லை!
அவர் அரசாங்க வேலையில் இருக்கும் போதே மிகவும் சின்சியரானவர் ...
மேலும் கதையை படிக்க...
காலம் மாறவில்லை! – ஒரு பக்க கதை
எளிமையான திருமணம் – ஒரு பக்க கதை
வெளிநாட்டு வாழ்கை – ஒரு பக்க கதை
பிடித்த வேலை – ஒரு பக்க கதை
அந்த ரகசியம் – ஒரு பக்க கதை