வள்ளி திருமணம்

 

வள்ளியின் ‘ஆலோலம்’ அந்தக் காட்டுக்கே ஓர் கீதம்; பறவைகள் அதைக் கேட்டு இன்புறவே தினைப் புனம் வரும். கதிர்களைக் கொத்துவதுபோல் பாசாங்கு செய்யும். வள்ளி , கவணை வீசிச் சோ ! சோ! என்று பாட் டிசைத்ததும், பறவைகள் தம்மை மறந்து, மரக்கிளை களிலே அமர்ந்து இன்புறும். கீதம் நின்றால், ஒன்ஸ் மோர்’ கேட்பதுபோல், மீண்டும் தினையைத் தின்ன வரும்! மீண்டும் வள்ளியின் சங்கீத வாய்மொழி ஆரம்பமாகும். வேட்டையாடச் செல்லும் வீரர்கள் கொஞ்ச நேரம் வள்ளி – யின் விருந்தை அனுபவித்து விட்டுத்தான் போவார்கள்.

வரகவி சோமசுந்தரர், வள்ளி கலியாண காலட்சேபத் திலே மகா திறமைசாலி ! வள்ளி, அன்று எண்ணாதன வெல்லாம் இவர் கூறுவார். வேலன் அன்று பேசாததை இவர் செப்புவார். பாட்டும் சுவையாக இருக்கும். மக்கள் அவருடைய காலட்சேபத்தைக் கேட்டு மிக மகிழ்வர். அன்று அவர், ஆறுமுகம் பிள்ளையின் வீட்டிலே நடந்த திருமணத்திலே, வள்ளி கலியாணத்தை விமரிசையாக நடத்திக் கொண்டிருக்கையிலே. வள்ளி எனும் ஓர் வனிதை, – குறக் குலம் பெண்ணல்ல, பிள்ளை வாள் வீட்டு பந்து — கேட்டு இன்புற்றாள். பிறகு தாகவிடாய் தீர்ந்ததடிதத்தையே! என் மோக விடாய் தீர்க்காயோ தத்தையே! என்று விருத்த வேலர் கேட்ட பகுதியும், அவர் ஆணை வைத்த பகுதியும், பின்னர் மணந்ததுமாகிய பகுதிகளைக் காலட்சேயக்காரர் மிக ரசமாகக் கூறினார். வள்ளி அதனைக் கேட்டுக் களித்தாள். விடியற்காலை மூன்று மணி வரையிலே தாக்கம் வராமல் வீட்டின் மூன்றாவது கட்டிலிலே, படுத்துப் புரண்டு கொண்டிருந்தாள். காலட்சேபக்காரரின் குறட்டை சங்கீதமாகவும், கொசுவை விரட்ட அவர் தட்டிக்கொண்டி ருந்த சத்தம் தாளமாகவும் இருந்தது. மற்றவர்களும் உறங்கிக் கொண்டிருந்தனர். வள்ளியின் கண் மூடவில்லை, கருத்தும் தூங்க மறுத்தது.

“வள்ளிக் கணவன் பேரை
வழிப்போக்கன் சொன்னாலும்”

என்ற கிளிக்கண்ணியை எவ்வளவு அருமையாகப் பாடினார். கிழவர் நடப்பதை எப்படித் தள்ளாடித் தள்ளாடி நடந்து காட்டினார் என்று காலட்சேபக்காரரின் திறமை களை வியந்தவண்ணம் வள்ளி, புரண்டு கொண்டிருந்தாள் காலடிச் சத்தம் கேட்டது திடுக்கிட்டு யார் என்று பார்க்க, காலையிலே மணமான மாப்பிள்ளை நிற்கக் கண்டு, கண் களை இறுக மூடிக்கொண்டு தூங்குவதுபோல் பாசாங்கு செய்தாள். மாப்பிள்ளை வள்ளித் திருமணம் ‘ நடக்கும் போதே வள்ளியைத்தான் பார்த்துக்கொண்டே இருந் தான். நெடுநாட்களாகவே வள்ளியை அவன் உள்ளத் திலே வைத்துக் கொண்டிருந்தான். அவனுக்குத்தான் இந்த வள்ளியைக் கட்டுவதாக, ஆறுமுகம் பிள்ளை முத லிலே நினைத்தார். ஆனால் வள்ளி, ஏழை வீட்டுப் பெண் மூன்றாவது கட்டு, பெரிய இடமாகக் கிடைக்கவே மாப்பிள்ளையின் தகப்பனார், வள்ளி திருமணத்திற்கு ஒப்ப வில்லை. சாவித்திரி கலியாணம் நடந்தது. சகல சம்பத்து களுடனும் சாவித்திரி, அன்று காலையில், சிங்கார வேலனைத் திருமணம் செய்து கொண்டாள். அன்று இரவே வேலன், வள்ளியைத் தேடிக்கொண்டு, மூன்றாவது கட்டுக்கு வந்து நின்றான். அங்கு படுத்திருந்தவர்களைச் சாடையாகப் பார்த்தான், வள்ளி தெரிந்தாள். மெள்ளக் கால்மாட்டுப் பக்கமாக நின்று, சுற்று முற்றும் பார்த்துக்கொண்டே, கால் விரலை மிதித்தான். வள்ளிக்கு உடல் ஜில்லென்றாகி விட்டது, பயத்தால் . காலை இழுத்துக்கொண்டாள். அந்த வேகத்திலே வேலன் கீழே இடறினான். சத்தம் கேட்டுப் படுத்துக் கொண்டிருந்தவர்களிலே யாரோ விழித்துக் கொண்டு, என்ன சத்தம்? என்று கேட்க சமையற்கட்டுக் குள் சந்தடியின்றிச் சென்றுவிட்டான் மாப்பிள்ளை. வள்ளிக்கு அடக்க முடியாத சிரிப்பு ! ”எதுவோ பூனை வந்தது, துரத்தினேன்” என்று கூறிவிட்டாள். விழித்த வர் மீண்டும் குறட்டை விட்டனர். ” இவ்வளவு ஆசை என் மீது வைத்திருப்பவன் எவளோ பணத்தோடு வரவே அவளைப் பந்தலிலே பத்துப்பேர் முன்னிலையில் தாலி கட்டி விட்டு, விடியற்காலை என் விரலை மிதித்து வாடி என்று அழைக்கின்றான். எவ்வளவு சூது, “அக்ரமம்” என்று வள்ளிக்குக் கோபம். வாயைத் திறக்க முடியுமா, பாபம்! காலையிலே கலியாணமானவன், இந்தக் கதியிலே காணப்பட்டால், கலியாணத்திற்கு வந்தவர்கள் கை கொட்டிச் சிரித்து, ஊர்கூட்டிச் சொல்லிவிட மாட்டார் களா ! நம்மால் அவருக்கு ஏன் தொல்லை வரவேண்டும் என்று அம் மங்கையின் தூய உள்ளம் நினைத்தது. உள்ளே நுழைந்த மாப்பிள்ளையின் மனம் துடித்தது வெளியே வரு வதும், தூங்குபவர் கைச்சாத்தமோ, கால் சத்தமோ கேட் டால், உள்ளே போய்ப் பதுங்குவதுமாக இருந்தான். என்ன முட்டாள் தனமாக செய்துவிட்டோம் என்று துக்கித் தான். வள்ளி அதே நேரத்தில் தும்மினாள். அவள் விழித்துக் கொண்டிருக்கிறாள் என்று தெரிந்ததும், பயம் போய்விட்டது. அந்த எண்ணம்’ மேலிட்டது . “வள்ளி” என்று மெள்ள அழைத்தான். அவளருகே சென்று படுத் திருந்தவள் எழுந்து “ஏன்? யார்?” என்று கொஞ்சம் உரத்த குரலிலே கேட்டாள். “மெதுவாகப் பேசு வள்ளி! ஒன்றுமில்லை. ஒரு விஷயம். தனியே இப்படி வாயேன்.”

“ஊஹும் . இதென்ன அக்ரமம்? நான் மாட்டேன்”

“சீ நான் என்ன உன்னை ஏதாவது செய்து விடுவேன் என்று பயமா? அதெல்லாம் இல்லை. இங்கே வாயேன்.”

பேச்சை வளர்த்திக் கொண்டே இருந்தால், தூங்கு பவர் விழித்துக்கொண்டு தன்னைத் திட்டுவார்கள் என்று அந்த ஏழைப் பெண் பயந்தாள். மெள்ள எழுந்து, தோட்டத்துப் பக்கம் சென்றாள். வேலன் பின் தொடர தோட்டத்தருகே வந்ததும்,

“இதோ, பாருங்கோ ! யாராவது விழித்துக் கொண் டால், என் கதி என்ன ஆவது? கன்னி கழியாத பெண்ணுக்கு இந்த நேரத்திலே ஆண் பிள்ளையுடன், அதிலும் காலையிலே கலியாணமானவனுடன் என்னடி பேச்சு என்று என்னை ஏசுவார்கள். போய்ப் பேசாமல் படுத்துத் தூங்குங்கள். இவ்வளவு ஆசை என் மீது இருக்கிறவர் தானா. அந்தத் தேய்ந்து போன சிறுக்கியைத் தேடிக் கட்டிக் கிட்டீர், ஏன், மணை ஏற அவள், மஞ்சத்துக்கு நானா? நாங்கள் ஏழைகளானாலும், மானத்துக்கு அஞ்சினவங்கோ மகாராஜா ! நாம் குழந்தைகளா இருந்ததிலிருந்து சோந்து விளையாடினோம். போதும் போங்கள் நானல்ல, மசியவள்”

“வள்ளி. நான் கெட்ட நினைப்புடன் வந்தேனென்றா எண்ணுகிறாய்?”

“தொட்டுக்கிட்டுப் பேசாதிங்க. தூரமா நில்லுங்க. நான் கூவி வீட்டை கலக்கிடுவேன்.”

“வள்ளி! நான் வந்தது, அதற்கெல்லாம் அல்ல. உண்மையாக, சாத்தியமாக. அப்படிப்பட்டவனா?”

“ஒரு பெண்ணுக்காக, ஆண் எத்தனை பொய் சத்தியமும் வைப்பான் என்று பாகவதர் இராத்திரி சொன்னாரே, நான் கேட்டேன்.”

மீண்டுமோர் காலடிச் சத்தம் கேட்டது. வள்ளி கைகளைப் பிசைந்து கொண்டு, “ஐயோ! என் மானம் போகுமே! நீ போயேன் எங்காவது தொலைந்து, யாரோ வருகிறார்களே” என்றாள்.

வேலன், பாய்ந்து சென்று, அங்கிருந்த பெரிய மரத்தின் பின்புறம் மறைந்து கொண்டான்.

வந்தது, வள்ளியின் அத்தை. மகா கைக்காரி. வள்ளியும் வேலனும் தோட்டத்துப் பக்கம் புகுந்ததைத் தெரிந்து கொண்டே வந்தாள். அவளுக்கு ஓர் மகன். அவனைக் கலியாணம் செய்து கொள்ள மாட்டேனென்று வள்ளி ஒரே பிடிவாதமாக இருந்தாள். அதனால், வள்ளிமீது வேதத் துக்குக் கோபம் பழி தீர்க்கச் சமயம் கிடைத்தது என்று எண்ணி, தொலையில் வரும்போதே . “ஏண்டிம்மா வள்ளி! பத்தினி! உன் யோக்யதை இதுதானா” என்று அடித்துப் பேசினாள்.

“என்ன அத்தை என்னென்னமோ பேசறீங்க, வயித்தை வலிச்சுதுன்னு தோட்டத்துக்கு வந்தேன்; விபரீதமா அர்த்தம் செய்து கொண்டு பேசறிங்க.”

“துணைக்கு வந்தானா வேலன்!”

“அவரு எங்கே வந்தாரு?”

“வந்துதான். அதோ மாமரமா மாறி நிற்கிறானே! வாடா. அப்பா! வேலு; காலட்சேபம் கேட்டானே இராத்திரி, முருகன் வேங்கை மரமானான்னு, இவன் மாமரமாயிட்டான்.”

“ஐயோ! அத்தை சத்தியமா சொல்கிறேன், நான் வரச்சொல்லலெ, இவரே வந்தாரு, காலை மெதிச்சாரு. இந்தக் கோலத்துக்கு என்னைக் கொண்டுவந்தாரு.”

“இல்லை, நான் கேக்கறேன். இந்த நேரத்திலே, உங்க ரெண்டு பேரையும் தனியாக இங்கே கண்டா என்ன எண்ணுவாங்க. ஏண்டி வள்ளி ! விலையாகிற பண்டமாச்சே நீ விஷயம் தெரிஞ்சா, எவண்டி உன்னைக் கட்டிக்கொள்வான்? இதோ போய், வீட்டிலே எல்லோரையும் எழுப்பி இங்கே கொண்டுவந்து உங்க ரெண்டுபேர் மானத்தையும் வாங்கு கிறேன்.”

“அத்தே! உன் காலைக் கும்பிடுகிறேன். எங்க பாட்டி வந்தா என்னைப் பிணமாக்கிடுவாங்க. காரி உமிழ்வார்களே. நான் ஒரு பாபமும் அறியேன். அடபாவி உன்னாலே இந்த தீம்பு வந்ததே!”

“அவனை ஏண்டி சபிக்கிறே! உனக்கு எங்க போச்சு புத்தி?”

“என்னைக் காப்பாத்துங்கோ அத்தே ! உங்க காலிலே விழறேன்.”

“சரி! நான் சொல்றபடி கேட்பதாகச் சத்தியம் செய்! கை போட்டுக் கொடு!”

“சத்தியமா, உங்க பேச்சைக் கேட்டு நடக்கிறேன். மாரியாயி சாட்சியா!”

“சரி! நான் இங்கே கண்டதை ஒருவரிடமும் சொல்லவில்லை, என் மகனைக் கட்டிக் கொள்ள வேண்டும்.”

“பழனியையா? நான் மாட்டேன்.”

“சத்தியத்தை மறந்தா சாப்பிட மண்கூடக் கிடைக்காது; மாரிமேல் சத்தியம் செய்ததை மறந்துடாதே.”

“ஐயோ ! இது என்ன கஷ்டகாலம். நான் என்ன செய்வேன்”

“சத்தியத்தின்படி நடக்கிறாயா, இல்லையானா வீட்டிலே இருப்பவர்களைக் கூப்பிடவா?”

“கூப்பிடாதீங்க. பழனியைக் கட்டிக் கொள்கிறேன். சத்தியமாகதான்.”

“இப்ப சரி! வேலா! இன்னம் எவ்வளவு நாழி தாண்டா, மரத்தின் பின்னாலே இருக்கப்போறே?”

வள்ளியை மிரட்டி தனக்கு இணங்க வைத்த அத்தை மரத்தின் மறைவிலே போய்ப் பார்க்க, அங்கு, வேலன் இல்லாதது கண்டு திடுக்கிட்டாள்.

“வள்ளி! இதென்னடி மாயம்! மரத்துக்குப் பின்னாலே போனவனைக் காணோமே” என்று அத்தை கேட்க , வள்ளியும் தேடிப் பார்த்துத் திகைத்தாள். இவர்கள் பேசிக் கொண்டிருப்பதற்குள், மரத்தின் கிளையிலே ஏறி, பக்கத்துத் தெருப்பக்கமாகக் குதித்து, அந்தத் தெருவைத் தாண்டி, கலியாண வீட்டுக்கு வந்து சேர்ந்த சிங்கார வேலன், பாகவதரின் பக்கத்திலே பரமசாது போல் படுத்துக்கொண்டான்.

“எங்கோ போய் விட்டான், கிடக்கட்டும். போய்ப்படு உள்ளே . சத்தியத்தின்படி அடுத்த மாசம் பழனிக்கும் உனக்கும் கலியாணம் தெரிஞ்சுதா. பாட்டி வேண்டான்னு சொன்னாக்கூட நான் பழனியைத்தான் கட்டிக்கொள்வேனென்று சொல்லணும் தெரியுமா? போ உள்ளே, படுத்துத் தூங்கு.”

“அத்தே! அவரு கூத்தாடுகிற வேலையை விட்டுட்டாப் போதும். அதிலேயும் பொம்பளை வேஷம் போடுகிறாரே அதுதான் கூடாது.”

“ஆகட்டும், சொல்றேன். ஆனால், அவன் பொம்பளை வேஷம் போட்டா , பேச்சு நடை இவ்வளவும் அசல் பொம் பளை போலவே இருக்கும்.”

வள்ளி சிரித்துவிட்டு, விட்டுக்குள் போய், பழையபடி படுத்துக்கொண்டாள், ஆனையைக் காட்டி அவன் கலியாணத்தை முடித்துக் கொண்டான். அத்தை நமது அசட்டுத்தனத்தைக் கண்டு நம்மை மருமகளாக்கிக் கொண்டாள் என்று எண்ணினாள்: வள்ளிக்குச் சிரிப்பும் வந்தது. தூங்கும் போது கூட புன்னகை தவழ்ந்தது.

தோட்டத்திலே, அத்தை, டோப்பா சேலை முதலிய வேஷங்களைக் கலைத்து, பழனியானான், “ஸ்திரீ பார்ட்டிலே திறமை இல்லையானால், நமது தாயாராகவே நடித்து வள்ளியிடம் சத்தியம் வாங்கியிருக்க முடியுமா” என்று பூரித்தான். உள்ளே தூங்கிய வள்ளி மட்டும், விளக்கெடுத்துக் கொண்டு படுத்திருந்தவர்களை பார்த்திருந்தால், உண்மையான அத்தை உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டிருக்கலாம். அவள் சத்தியம் செய்தாகிவிட்டது. இனி பழனியே கணவன் என்று தூங்கிக்கொண்டிருந்தாள்.

பொழுது விடிந்ததும், மாப்பிள்ளை வள்ளியின் முகத்தைக் கண்டு வெட்கமடைந்தான். பழனியின் முகத்தைக் கண்டு வள்ளி நாணமடைந்தாள். அந்த பந்தலிலேயே, வள்ளி திருமணத்துக்கு நிச்சய தாம்பூலம் மாற்றிக் கொள்ளப்பட்டது, பழனி தன் தாயாரிடம் நாடகம் பலித்ததைக் கூறினான். மறுமாதம் வள்ளி கலியாணம் நடந்தது.

- அண்ணாவின் ஆறு கதைகள், திராவிடப்பண்ணை, திருச்சி -2, மூன்றாம் பாதிப்பு 1968 

தொடர்புடைய சிறுகதைகள்
புரோகிதர் புண்ணியகோடீஸ்வர கனபாடிகளுக்குப் பிரமபுரத்திலே அபாரமான மதிப்பு! கெம்பீரமான உருவம் - இனத்தின் இலட்சணப்படி! உலகம் உருண்டை வடிவமென்பதை விளக்கும் தொந்தி! கட்டாந்தரையிலே இரண்டோர் புற்கள் முளைத்துக் காய்ந்து கிடப்பது போன்ற வைதீகக் குடுமி, பஞ்ச கச்சம், பட்டை விபூதி, சந்தனப் ...
மேலும் கதையை படிக்க...
"என்னுடைய ஜாதி எங்கே தெரிகிறது? காதலரே! நீர் என் கண்களிலே ஏதோ உமது உள்ளத்தை உருக்கும் ஒளியைக் காண்பதாகச் சொல்கிறீர். என் உதட்டைக் கோவைக் கனி எனக் கூறுகிறீர். பவளவாய்! முத்துப் பற்கள் ! பசும் பொன்மேனி! சிங்கார நடை! கோகில ...
மேலும் கதையை படிக்க...
"அன்னம்! வாடி இங்கே, எப்போதும் ஒரே விளையாட்டுத்தானா? வந்து சாமியைக் கும்பிடடி! கண்ணைத் திறந்து பாரடியம்மா; காமாட்சி என்று சேவிச்சுக்கோ காலையிலே எழுந்ததும், கனகாம்பரமும் கையுமா இருக்கிறாய். மாலையிலே மல்லிகைப் பூவுடன் மகிழ்கிறாய். இப்படியே இருந்துவிடுமா காலம்? வா, வா, விழுந்து ...
மேலும் கதையை படிக்க...
என்னைத் தூக்கிவாரிப் போட்டுவிட்டது அந்தச் சொல். மனப்பிராந்தியல்ல, என் செவியிலே தெளிவாக விழுந்தது அப்பேச்சு. என் மூச்சே திணறிவிட்டது. என்னை நிலை குலைய வைத்த அந்தச் சொல்லுரைத்தவரோ, நெற்றியிலே நீறு பூசி, வெள்ளை ஆடை அணிந்து, விளங்கினார். போக்கிரியல்ல, போக்கற்றவருமல்ல, புத்திதடுமாறி ...
மேலும் கதையை படிக்க...
"டே மண்டூ ! சாட்டாச்சேன்னோ? சரி கொஞ்சம் உட்கார். நேக்குக் கொஞ்சம் கையை வலிக்கிறது. நான் சொல்லிண்டு வர்ரேன். சமர்த்தா எழுது, தெரியறதோ" "ஆகட்டும் மாமா ! லெடரோ?" "எதா இருந்தா என்னடா நோக்கு சொல்வதை எழுதேண்டா!" "ஆஹா! இதோ லெடர் பேபர் எடுத்துண்டு வர்ரேன்" "பார்க்கணும் ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: அறிஞர் அண்ணாதுரை. முதல்தரமான குதிரை! கால் சுத்தமாக இருக்கின்றது. சவுக்கு ஒடுக்கவே தேவையில்லை. “டிராக்” கம்பீரமாக இருக்கிறது. பக்கத்திலே வண்டி வரும் சத்தம் கேட்டால் கண்களிலே ஒரு மிரட்சி. கால்கள் துடிக்கின்றன. காற்று வேகமாகக் கிளம்புகிறது. முகத்திலே களையும் இருக்கிறது. ...
மேலும் கதையை படிக்க...
"சரசா மிகப் பொல்லாதவள் ! படித்த பெண்! ஆகவே, அம்மா - எதைச் சொன்னாலும் குற்றங் கண்டு பிடிக்கிறாள்" என்று அந்த ஊர் குளத்தங்கரையில் குப்பம்மாள் கூறினாள். "ஆனால், சரசா, நல்ல அழகு ! தங்கப்பதுமை போன்றவள்! தாய்க்கு ஒரே மகள் ! ...
மேலும் கதையை படிக்க...
வண்டிக்கார வரதன் வேலையினின்று நீக்கப்பட்டான். கணக்குப் பிள்ளை கந்தசாமி வீடுபோய்ச் சேர்ந்தான். தோட்டக்காரனின் குடும்பம் கலைந்தது. அவன் மாலை வரை வேலை செய்துவிட்டு, வீடு சென்று விடவேண்டும். சந்தான கிருஷ்ண ஐயர் இவ்வளவு 'டிஸ்மிஸ்' ஆர்டர் போட்டதற்குக் காரணம், பெயருக்கேற்றபடி அன்றி, ...
மேலும் கதையை படிக்க...
ஜல் ஜல் ஜல் ! ஜல் ஜல் ஜல் ஜல! "உம்! கொஞ்சம் வேகமா நட. வேகற வெய்யில் வர்ரதுக்குள்ளே ஊர் போவோம்." ஜல் ஜல், ஜல் ஜல, ஜல் ஜல், ஜல ஜல. "சும்மா போகமாட்டாயே, நீ. உன் வாடிக்கையே அதுதான் ! சவுக்கடி ...
மேலும் கதையை படிக்க...
"விபசாரியா?" - கோபத்துடன் இக் கேள்வி பிறக்கிறது. "ஆமாம்" - சோகம் கப்பிய குரலில் பதில் வருகிறது. கேள்வி கேட்டவர் திகைத்து நிற்கிறார். அவர், வெட்கத்தால் அவள் நிலைகுலைந்து நிற்பாள் என்று எதிர்பார்த்தார். பதிலோ அவ்விதமில்லை. அவள் பேச்சை நிறுத்தவில்லை. "ஆமாம் ...
மேலும் கதையை படிக்க...
புரோகிதரின் புலம்பல்
தங்கத்தின் காதலன்
பிரார்த்தனை
சரோஜா ஆறணா!
சொல்வதை எழுதேண்டா!
காமக் குரங்கு
அவள் மிகப் பொல்லாதவள்
வாலிப விருந்து
கபோதிபுரக் காதல்
குற்றவாளி யார்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)