வலை தள நட்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 28, 2014
பார்வையிட்டோர்: 9,011 
 

நாளைக்கு கார்த்தால என்னமா பண்ண போறே.

ஏன் என்னை திடீர்ன்னு கேக்கறீங்க.

இல்லேம்மா சண்டே இல்லையா அது தான் கேட்டேன்.

எப்பவும் போல தான், ஆனா காலைல கொஞ்சம் வேலை இருக்கு.

சண்டே அன்னைக்கு என்ன வேலை, ஆபீஸ்ல ஏதாவது…….. ? இது நான்.

இல்லே இல்லே ஆபீஸ்லலாம் இல்லே, ஆனா கொஞ்சம் வெளில போக வேண்டி இருக்குப்பா.

சரி சரி நான் வேணும்னா கொண்டு விடட்டுமா? இது நான்

வேண்டாம் வேண்டாம் நீங்க எதுக்குப்பா, பாவம் நீங்க, ரெஸ்ட் எடுங்க

சண்டே ஒரு நாள் தான் நீங்க ரெஸ்ட் எடுக்கறீங்க, நான் வேணும்னா சமையலை முடிச்சிட்டு போயிடறேன். எடுத்து போட்டு சாப்பிடுங்க..

வேண்டாம்மா , பாவம் நீ தான் எங்கையோ வெளில போகணும்னு சொல்றியே, நீ பாட்டுக்கு உன் வேலைய பாரு, சாப்பாடு எல்லாம் நான் பார்த்துக்குறேன், தேவைப்பட்டா வெளில பார்த்துக்குறேன். இது நான்.

சரிப்பா, சும்மா நாள் பூரா தூங்காம, வேளைக்கு எழுந்து சாப்பிடுங்க, நான் பக்கத்துக்கு மெஸ்ல ஆர்டர் பண்ணிட்டு போறேன். என்று எனக்கு ஆர்டர் செய்தாள்.

போறவ, செஞ்சு வெச்சிட்டு போறது, அது என்ன வாயில சொல்றது, எல்லாம் வாய் வார்த்தை. இது மனதின் எரிச்சல்.

நான் போயி சீரியல் பார்க்க போறேன், நீங்க தூங்குங்க.

அவள் சீரியல் பார்க்க போக நான் தூங்கிப்போனேன்.

பொழுது விடிந்தது.

அவள் கலையில் எழுந்ததோ, சீக்கிரம் கிளம்பி போனதோ தெரியவே இல்லை.
வீட்டில் ரெண்டு சாவி இருந்தா இப்படி தான்.

போர் அடிக்குது , ஒருவாரம் ஆச்சே, இந்த பேஸ்புக் பேஸ்புக் அப்படின்னு சொல்லறாங்ளே, அந்த அக்கௌன்ட் என்ன ஆச்சின்னு பாப்போம். போன வாரம் பார்த்தது, அப்புறம் ஒரு லைக் போடல, ஒரு ஸ்டேடஸ் அப்டேட் போடலே, என்னடா இது உலகம், ஹப்பா இன்னைக்கு அவ இல்லே, இன்னைக்கு முழுசா உட்கார்ந்து பேஸ்புக்ல கலக்க வேண்டியது தான்.

// போனா வராது பொழுது போனா கிடைக்காது,//

என்னாது இது , இது பேஸ்புக்கா இல்லே ரோட்டு கடை பையன் கூவல்லா

ஹா ஹா ஹா , இது பேஸ்புக் தான்

ஒஹோ இன்னைக்கு தானே அது,

மறந்தே போனேனே, இன்னைக்கு அவ வரேன்னு சொன்னாளே

நினைக்கும் போதே மனதில் ஒரு பூ பூத்தது.

என்னை நன்றாக புரிந்து கொண்ட ஒரே பெண் நண்பி.

எனக்கு என்ன புடிக்கும் என்ன புடிக்காதுன்னு பார்க்காமலேயே சொல்லும் ஜிநியஸ் அவள்.

வாரத்திற்கு ஒரு நாள் வரும் என்னையே அவள் எப்படி புரிந்து வைத்திருக்கிறாள்.

எனக்கும் வாய்த்து இருக்கிறாளே ஒருத்தி, தோசை வேணும்ன்னு கேட்டால், வேண்டும் என்றே தோசை செய்யாமல் உப்புமா செய்வாள், கேட்டால் சண்டை வரும் .

நல்ல வேளை அவள் இல்லை,

மீட்டிங் போய் பார்த்தால் தான் என்ன,??? போய் தான் பார்ப்போமே.

இன்னைக்கு பார்த்தே விட வேண்டும், நிச்சயம்மாய் அவள் வருவாள்.

நட்பு ஒன்றே நிரந்தரம், இப்படி ஒரு நண்பி இருந்திருந்தால், கல்யாணமே வேண்டாம் என்று இருந்திருப்பேன்.

கிளம்பும் போது மறக்காமல் பூட்டி விட்டு வெளியே வந்து பார்த்தால்,
இரண்டு காரும் இருந்தன.

இவள் கார் கூட கொண்டு போகலை.

என்ன மனுஷி இவ, கடைசீயா எப்போ அவளுடன் காரில் போனேன், ஞாபகம் இல்லை, இவ “L” போர்டா இருந்தபோது தொணைக்கு ஆளு தேவை பட்டது, சைடு பார்க்க. அனால் இப்போ கார் ஓட்ட கூட இவளுக்கு சோம்பேறித்தனம். சம்பாரிக்கும் கொழுப்பு ஆட்டோவில போயிருப்பாள்.

மனதிற்குள் வந்த கோவத்தை அடக்கி கொண்டு, மெயின் கேட்டை பூட்டாமலேயே என் காரில் கிளம்பினேன்.

எங்கேயோ மீட்டிங் அப்படின்னு போட்டிருந்தாங்களே, இருங்க ஸ்டேடெஸ் பாப்போம்.

ரீச்சுடு.

பேஸ்புக்ல மெசெஜ்ல போட்டிருக்கா.

( இவளும் இருக்காளே, ஒரு நாளும் நான் வேலைக்கு கிளம்பும் போது, வாசலுக்கும் வந்ததில்லே, கிளம்பி போனாலும் சொல்லிட்டு போனதில்லே. )

ஹ்ம்ம்ம் , எவனுக்கு குடுத்து வெச்சிருக்கோ, பேஸ்புக் நண்பி இன்னும் சிங்கள் அப்படின்னு போட்டிருக்கா, பாவம் நல்லவனா கிடைக்கணும், நண்பிக்காக மனம் கடவுளை வேண்டியது.

மேசெஜ்லேயே கேட்டேன் , எப்படி வருவது.

வழி சொன்னாள்.

ஆச்சு வந்தாச்சு.

/////// எங்கே அவள் என்றே மனம் தேடுதே ஆவலால் ஓடி வா.
அங்கே வரும் என் பாடலை கேட்டதும் கண்களே பாடிவா. /////////

M.G.R. பாடல் எப். எம். ல ஓடி என் மனதை இதம் ஆக்கியது.

ஒரே ஒரு பயம் தான் , ஊரெல்லாம் இவளுக்கு பிரண்ட்ஸ் , எவளாவது
அங்கே இருந்து, நம்மை போட்டு குடுத்து ஒரு வேளை கும்மாங்குத்து விழுமோ ????? பயமாகத்தான் இருந்தது.

சரி கிளம்பியாச்சு, இனி என்ன வந்தாலும் ஒரு கை பார்துக்க வேண்டியதுதான்..

இவளுக்கு பிரண்ட்ஸ் இருக்கா மாதிரி எனக்கும் இருக்க கூடாதா என்ன. ?

உள்ளே வரலாமா மெசெஜ் போட்ட அடுத்த நிமிஷம், அடுத்த பதில் மெசேஜ், உள்ளே வாங்க. உள்ளே வாங்க.

பதில் மெசேஜ் இன்னும் உற்சாகத்தை குடுத்தது.

வாசல்ல ஒருத்தர், கழுத்துல ஒரு அட்டையுடன்.

ஹே உங்கள பார்த்திருக்கேன், நீங்கோ தானே சார் இந்த ஜோக்ஸ் ஜோக்ஸ் அப்படின்னு www.dailyjokes.com ல போயி, டெய்லி காப்பி பேஸ்ட் பண்ணுவீங்களே, நான் உங்க ரசிகன் சார், என்று நான் சொன்னது தான் தாமதம், அவருக்கு சந்தோசம் தாங்கலை.

நீங்க கூட வாரத்திற்கு ஒரு நாள் வந்தாலும், சாபிடுற விஷயமா எழுதி தள்ளுவீகளே,

உங்க சாப்பாட்டு ரசனை ஓஹோ ஓஹோ சார் என்றார்.

ஆமாம், நிஜத்துல கிடைக்காததை இங்கே தானே சார் தேடறோம், இது நான்.

சார், நீங்க முதல்ல ஒரு ஐநூறு ரூபா கட்டணும்.

ஹால் சார்ஜெஸ் வித் புட்.

அவர் குரலில் ஒரு வேண்டுதல் தெரிந்தது.

கட்டிட்டா போச்சு ,

சார் ஒரே ஒரு தகவல் வேணும்,

என்ன என்பது போல் ஒரு பார்வை பார்த்தார்.

ரூபா வந்திருக்காங்களா ?

ஏற இறங்க என்னை பார்த்த அவர், ஒரு ஏளன சிரிப்புடன் , வந்திருக்கா வந்திருக்கா.

இவர் ஏளன சிரிப்பு பார்த்த எனக்கு , அவ கொஞ்சம் நம்ம எதிர்பார்ப்புக்கு கம்மியா இருப்பாளோ ???? என்ற எண்ண தோன்றியது.

சரி இவ்வளோ தூரம் வந்து விட்டு பார்க்காமல் போனா நல்லா இருக்காது..

ஐநூறு ரூபா கட்டியவுடன் அவர், ஒரு முக மூடி குடுத்தார்.

இதை போட்டுகிட்டு தான் உள்ளே போகணுமாம்.

ஒருத்தர் ஒருத்தரா அறிமுகம் நடக்கும்போது தான் கழட்டணுமாம்.

விருப்பம் இல்லேன்னா கழட்ட கூட வேண்டாமாம்.

இந்த மனுஷன் மட்டும் மெனக்கெட்டு ஏன் வாசல்ல நின்று இந்த வேலை பார்குறாருன்னு இப்போ புரிஞ்சுது.

உள்ளே நுழையும் போதே இவர் மட்டும் பார்த்துட்டார்.

அவரோ :
இங்கே மனம் தான் முக்கியம் சார், மூஞ்ச வெச்சிகிட்டு என்ன பண்ண போறோம்.

மூஞ்சு பார்த்தா பழகினோம்.

உங்களுக்கு என் ஜோக்ஸ் எல்லாம் பிடிக்கிறது, எனக்கு உங்களோட சாப்பாடு பிடிக்கும், பார்த்தவுடனே பசி எடுக்கும் பாருங்க, வீட்டுல கஞ்சி தான் குடிப்பேன், ஆனா உங்க போஸ்டு பார்த்துட்டு சாப்டா அவ்வளோ பஞ்ச பட்ச பரமானந்தம் மாதிரி இருக்கும் சார்.

மனசு சார் மனசு, அதை பார்த்து தானே பழகி, இங்கே நேருல வந்திருக்கோம், என்ன நான் சொல்லறது, என்று பெரிதாய் ஒரு சிரிப்பு சிரித்தார்.

மத்தவங்களுக்கு தான் இதெல்லாம் .

தான் முதல்ல நின்னு பார்த்தாச்சு, மத்தவன் பார்த்தா என்ன பார்கலைன்னா என்ன. மனதின் ஓரத்தில் என் மன குரல்.

ஒரு விதத்தில், நமக்கும் சேப்டி தானே, இவளோட ( அது தான் என் மனைவியோட ) பிரண்டு யாராவது வந்திருந்தா கூட நாம மாடிக்க மாட்டோம்.

சந்தோஷத்துடன் மாட்டி கொண்டேன். முக மூடியை.

உள்ளே நுழைந்தவுடன் , அனைவர் முகத்திலும் முகமூடி.

இன்னும் மீட்டிங் ஆரம்பிக்கவில்ல போல.

அனைவர் கையிலும், லேட்டஸ்ட் செல் போன்.

உள்ளே நுழைந்தவுடன், என்னோட டேக் கார்டு பார்த்து அவர்களே வந்து அறிமுக படுத்தி கொண்டார்கள்.

முகம் தெரியுமா தெரியாதா.? பெண்கள் ஏனோ ஆண்கள் பக்கம் வரவில்லை.

நேரில் பார்க்கும் போது, சகஜமாக பழக கொஞ்சம் நேரம் பிடிக்கும் இல்லையா. அவளோ ரொம்ப சாப்டு வேற. என்னை நானே சமாதான படுத்திகொண்டேன்.

ஒரே குழப்பம் என் மனதில்.. அவள் யாராய் இருக்கும். ? நாமாவது முக மூடியை கழட்டி விடலாமா?

அதிலும் குழப்பம், யாரும் கழட்டாமல் போனால், நாம் மட்டும் கழட்டி, நம்மை பிடிக்காமல், அப்புறம் எல்லாருமா சேர்ந்து என்னை பிளாக் செய்து விட்டால் என்ன பண்ணுவது.?

ஒவோருவராய் எழுந்தனர், அவர்கள் முகநூல் பெயரை சொன்னனர்.

நிஜ பெயர் வேண்டாமே என்று ஆரம்பத்தில் ஒருத்தர் சொல்ல, மற்றவரும் அதையே தொடர, மூஞ்சும் தெரில பேரும் தெரில , கொஞ்சம் எரிச்சல் வந்தது எனக்கு. ஐநூறு ரூபாய் வேஸ்டா போயிடுமோ ??? சரி சாப்பிடுவதற்கு முக மூடிய கழட்டி தானே ஆக வேண்டும். அப்போது பார்த்தல் போச்சு என்று மனதின் ஓரத்தில் ஒரு ஓசை.

சரி நாமும் பேஸ்புக்ல மேசெஜ் போட்டு பாப்போம்.

பதில் மேசெஜ் வந்தது. அப்போதும் கண்டு பிடிக்க முடியல. எல்லோரும் போனிலேயே பிஸியாக இருந்தனர்.

{ இதற்கு நடுவில் இவள் வேற, அப்போ அப்போ எஸ். எம். எஸ் ,ல எழுந்தியா, சாபிட்டியானு, போரவ போயாச்சு, இப்போ வந்து பரிவொட விசாரிக்கராளாம்.
ஆச்சு ஆச்சு , என்று கடுப்போடு ஒரு பதில் எஸ்.எம்.எஸ். போட்டேன். }

யாரவது ஒருத்தர், மெசெஜ் பார்த்தா பரவால்ல, பக்கத்துல இருந்தவரை பார்த்தா அவரும் பிஸியா பேஸ்புக்ல தான் இருந்தார்.

நம்மை போல தானா இவனும் ஹி ஹி ஹி , எனக்குள் சிரிப்பு.

பேஸ்புக்ல மெசேஜ் வந்தது. // இங்கே சாப்பிட வேண்டாமே, வெளில போயிடலாம் // , நண்பியின் மெசேஜிற்கு, வேண்டாம் என்றா சொல்ல முடியும்.

// சரி, இது என் கார் நம்பர் , கீழே வெயிட் பண்ணுங்க நான் வரேன் // – பதில் மெசேஜ் அனுப்பினேன்.

சரி என்றள் பதில் மெசேஜில்.

எஸ்.எம்.ஸ். வந்தா தான் முன்னே எல்லாம் போன் சூடாகும். இப்போவெல்லாம் போன் கொஞ்சம் மக்கர் பண்ணறது. பேஸ்புக்ல மெசேஜ் வந்தாலும் சூடாகுது, வர வர போனுக்கு – பேஸ்புக் மெசேசஜக்கும், எஸ்.எம்.எஸ். மெசேஜக்கும் வித்தியாசமே தெரியறது இல்லே, கொஞ்சம் கடுப்புடன், கீழே இறங்கி காரில் புல் ஏசி போட்டு காத்திருந்தேன்.

வந்தாள்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தோம். என் முகத்தில் வேர்வை , போகலாம் என்றல் ஒற்றை வார்த்தையில்.

ஒன்றும் பேச தோன்றவில்லை, எங்கே போவது என்றும் தெரியவில்லை, அவளும் அப்படியே உணர்ந்திருக்க வேண்டும், கார் அந்த சந்து முனை திரும்பி மெயின் ரோடு வந்தவுடன், அவள் குரல் பிசிறில்லாமல் சொன்னது.

முதலில் ஒரு ரெஸ்டோரன்ட் , போனோம், சாபிட்டோம், பில் குடுத்தேன், பில் குடுத்து முடிக்கும் முன்னே அவள் காரின் அருகில், ஓடி வந்து கார் கதவை திறந்து விட்டு பின் மூடி, என் பக்கம் வந்து அலுங்காமல் குலுங்காமல் கார் ஓட்டினேன், வெகு நாள் கழித்து இப்போதுதான் இவ்வளவு மெதுவாக கார் ஒட்டுகிறேன், அடுத்து, ஒரு ஜ்வேல்லேரி என்றாள், சிறிது பயம் வந்தது, உள்ளே சென்றவள் இருப்பதிலேயே பெரிய ஹாரம் எடுத்து கொண்டாள், பின் அதே கார் கதவு திறப்பு, அடுத்து நல்லி என்றாள், என் நல்லி எலும்பே உடைந்தது போல இருந்தது. ஒரு பெரிய சரிகை புடவையாய் இருக்க ஒரு சிறிய நான்கு விரக்கடை அளவில் பட்டு துணி பார்டர் கூடிய புடவை, தேய்த்து தேய்த்து என் கார்டு தேய்ந்தே போனது.

DEBITTED INTO YOUR ACCOUNT, DEBITTED INTO YOUR ACCOUNT, என்று வந்த எஸ்.எம்.எஸ். போனை சூடாக்கியது.

// இதற்கு தான ஆசை பட்டாய் பாலகுமாரா ??? //

கார் அதுவாகவே, என் வீடு நோக்கி பயணித்தது. ஏசி காரிலும், வீடு கிட்டே வர கிட்டே வர எனக்கு வேர்த்தது, ஒரு தைரியத்தில் வீடு வரை வந்துவிட்டேன். வீட்டிற்க்குள் வண்டியை பார்க் செய்தேன்.

சரேல் என்று இறங்கிய அவள் , வாங்கிய அனைத்து பைகளையும் எடுத்துக்கொண்டு நேரே வாசல் கதவிற்கு போனாள்.

கைபையை திறந்து தன் சாவியை எடுத்து வீட்டின் கதவை திறந்தாள்.
அவள் உள்ளே போன வேகத்திலேயே, என் மூச்சு நின்று போனது.
இரண்டு நிமிடம் மௌனம்.

உள்ளே போவதா, இல்லை இப்படியே ஓடி போவதா, பூரி கட்டையா, இல்லை அருவா கதியா ????????

க்ர்ர் க்ர்ர்

போனில் மெசேஜ்.

போன் சூடாக இல்லை, சில் என்று இருந்தது, பார்த்தால் முக நூல் மெசேஜ்.

// நன்றி என்றிருந்தது.//

சந்தோஷத்தில் மனது ஜில் என்றிருந்தது, ஓடினேன் வீட்டிற்கு வெளியில், தெருமுனையில் உள்ள பூக்கடைக்கு, ( பத்து வருடங்கள் கழித்து ) அடுத்த இரண்டு நிமிடத்தில் கையில் அவளுக்கு பிடித்த பிச்சி பூவுடன்.

// என்ன பார்க்குறீங்க, என்னையே பார்த்து பார்த்து என்ன பிரியோசனம், சீக்கிரம் அவங்க அவங்க வீட்டுக்கு போங்க, வீட்டையும் கொஞ்சம் கவனிங்க அது தான் உண்மையான வாழ்க்கைக்கு நல்லது //

ஸ்டேடஸ் அப்டேட் போட்டு விட்டு வீட்டிற்க்குள் ஓடினேன்.

ரூமுக்குள் நுழையும் முன்பே அப்டேட்டிற்கு அவளிடமிருந்து “லைக்” வந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *