வன்முறை நடுவேவரமாகும் வேதம்

 

மொத்த உலகமும் வாழவே மனம் விரும்பும் சாந்திக்கு சொந்த வாழ்க்கையில் இப்படியொரு சரிவு நிலை கல்யாணத்துக்கு முன் அவள் எதுவும் கனவுகள் கண்டவளில்லை கனவு என்பது நிஜமெனத் தோன்றாத வெறும் நிழல் என்பதை அறிய முடியாமல் போன பேதையல்ல அவள் வெறும் நிழல்களையே நம்பி ஓடுகின்ற மனிதர் நடுவே உயிர் சத்தியம் ஒன்றையே கடவுள் காட்சியாகக் காணும் தெய்வீக இருப்பு நிலை கொண்டவள் அவள் அப்பேர்ப்பட்ட அவள் மனதை உயிரைக் குறி வைத்து வீழ்த்தவே குடும்ப உறவு என்று சொல்லிக் கொண்டு வந்து சேர்ந்த இத்தைகைய கொடிய சவால்கள். ஒன்று இரண்டல்ல, சொல்லிக் கொண்டே போனால் கணக்கு நீளும். எண்ணிலடங்காத சோக அனுபவங்களக் கொண்ட நிழல் வாழ்க்கையே, ஆசையாய் அவள் எதிர் கொள்ள நேர்ந்த திருணத்திற்குப் பின்னாலான சரிவு நிலை. அதுவே அவளுக்கு மிகக் குரூரமான பலி பீடத் தண்டனை மாதிரி. அதில் விதிவசமாக வந்து நிற்க நேர்ந்த தவறு நிலைக்கு பாவம் அவள் என்ன செய்வாள். எத்தனை பேர்களென்று தான் அவள் தலையை உருட்டுவார்கள். உருட்டவுமில்லை இரத்தம் கொட்டத் தலை கொய்து நிலத்தில் போடுவார்கள். இதற்கு அவள் கணவன் நரேந்திரனும் உடந்தை தான். ஆரம்பத்திலிருந்தே அவனுக்கு அவளைப் பிடிக்கவில்லை. வெறும் பணத்துக்காக ஐயா விரித்த வஞ்சக வலையில், அவன் விழ நேர்ந்ததற்கு அவளா பொறுப்பு.? அறிவு பூர்வமாக அதையெல்லாம் சிந்தித்து அன்பு வழியில் அவளை நேசிக்க முடியாமல் போன அவனின் பகை கொண்டு சாதிக்க முன், வந்த வரட்டுக் குண பேதங்களுக்கு ஈடாகவே அவன் உறவு சார்ந்த கறை குளித்து எழும் மனிதர்களும் அவளைக் கழுவிலேற்றித் தண்டிக்கவே காத்துக் கிடந்ததை தனக்குத் திருமணத்தினால் ஏற்பட்ட தீராத சாபமாகவே எண்ணி மனம் குமுறிப் பல தடவைகளில் வெறுமனே அழ மட்டுமே அவளால் முடித்தது, அந்த அக்கிரமங்களை எதிர்த்து ஒரு வார்த்தை கூடப் பேசியறியாத கடவுளின் அருள் நிலை கொண்டு பிரகாசிக்கும் ஒரு சத்திய தேவதையே அவள்,

அழகாய் ஆடம்பரமாய் அவளைத் தோலுரிக்க வந்த அவளின் அந்தக் கல்யாணமும், அதன் பின்னால் வந்த வாழ்க்கையும் குடும்ப உறவுகளென்ற உயிர் மையமே பொய்யாகிப் போன ஒரு சூனிய இருப்பாகவே அதை எதிர் கொள்ள நேர்ந்த நிலையில் விட்டு விலக முடியாமல் போன முட் படுக்கையாகவே அவள் நெஞ்சில் இரத்தம் கொட்ட விழ நேர்ந்தது. ஏனோ ஆரம்பத்திலிருந்தே அவள் கணவன் பிரபுவிற்கு அவள் ஒரு வேண்டாத விருந்தாளி தான். பகல் முழுதும் அவளைக் கண்ணில் கண்டாலே கரித்துக் கொட்டுகிறவன் இரவில் மட்டும் படுக்கை சுகம் வேண்டி அவளை நாடி வரும் அவனுக்குத் தன் உடம்பைத் தாரை வார்ப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை அவளுக்கு, அவன் எப்படியெல்லாம் குரோத வெறி தலை தூக்கச் சன்னதமாடித் தன்னைக் கொன்று போட்டாலும் அவன் காலடியே சரணமென்று புழுவாக விழுந்து கிடக்கிற நிலைமைதான் அவளுக்கு அவனை விட்டால் வேறு தெய்வமில்லையென்று நம்பி வந்தவள் அவள் அப்படி நம்பியது போல் அவன் தெய்வமாக இருக்கவில்லை, பதிலாக அவளை பொறுத்த வரை அவன் ஒரு மனித மிருகம் தான் இதுவே உண்மையென்றாலும் தன் பிறந்த வீட்டு மனிதர்களுக்கு அவன் ஒரு தெய்வம் தியாகி அவர்கள் மேல் அவன் சொரிகின்ற அன்பு மழை அவள் வரையில் பொய்த்துப் போனதே, அப்படியென்றால் இந்த அன்பு கூட வெறும் வரட்டுச் சித்தாந்தமே, அவளுக்கு அதை நினைக்க அழுகை அழுகையாக வரும், இப்போதெல்லாம் சோறும் கண்ணீரும் தான் அவளுக்கு வாழ்க்கை

அவள் அவனுக்காக எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்து தன் சுகங்களை உணர்வுகளை மனதைத் தியாகம் செய்து டவுனிலுள்ள அவர்கள் வீட்டில் வந்து குடியிருந்த நேரம், அவள் இதுவரை அனுபவித்திராத கொடிய வறுமைச் சூழ்நிலை தான் அவர்கள் வீட்டில், ஐயா ஒழுங்கில்லை, பயங்கர குடிகாரன், செய்கிற சுருட்டுத் தொழிலும் ஒழுங்கில்லை, அவனோ குறைந்த சம்பளம் வாங்கும் ஓர் அரச ஊழியன், அவனை நம்பியே அந்தப் பெரிய குடும்பம், அவர்கள் நடுவே அவள் எடுபடாமல் போனதற்கு அது மட்டும் காரணமல்ல, வறுமை நெருப்பில் திரிந்து போன மனம் தான் அவர்களுக்கு அந்தப் பாதையை விட்டு விலக முடியாத உயிர் திரிந்து குழறுபடியாகி விட்ட மன நிலை தான் அவனுள்ளும் கொடி கட்டிப் பறப்பதையே அனுபவிக்க நேர்ந்த துயரம் மட்டுமே அவளுடையது,

அவள் கண் முன்னால் நிழல் குடித்து திரிந்து போன மாயப் பிரபஞ்ச வெளி, அதில் உயிரொளி அறியாமல் மயங்கும் மனங்கள், அவற்றில் அவளும் ஒன்றா? அல்லது வேறா? இதை எதிர் கொண்டு வெற்றி வாகை சூடவே இருள் வந்து குடிக்கும் நித்திய சவால்கள் அவள் முன், ஒரு நாள், அன்று புனிதமான ஒரு வெள்ளிக்கிழமை என்று ஞாபகம், அன்று கூட மூதேவி முகத்தில்தான் அவள் விழிக்க நேர்ந்தது, அப்படி பிறக்க அவள் என்ன பாவம் செய்தாளோ தெரியவில்லை, நீண்ட நாட்களுகுப் பிறகு அவளைக் குசலம் விசாரித்து விட்டுப் போகத் தம்பி குமரன் ஊரிலிருந்து வந்திருந்தான், அவளுக்கு நேரே இளையவன் அவன், பிறவிப் பெருமையாக வரும் தெய்வீகக் களை கொண்ட கம்பீர புருஷன் அவன், இன்று அம்மாவுக்குப் பதிலாக அவன் வந்திருக்கிறான் அடிக்கடி அம்மா அங்கு வந்து போனாலும் அது எடுபடுவதில்லை, அவள் நல்லவளாக இருந்தாலும் நரேந்திரனுக்கும், அவன் சார்ந்த உறவு மனிதர்களுக்கும், அவள் ஒரு சூனியக்காரியாகவே மாறி விட்ட கொடுமையை அவள் எப்படி மன்னிப்பாள்?, அப்பேர்ப்பட்ட பாவக் கோட்டையான அந்த வீட்டின் தோஷம் நீங்கவே ஒரு புண்ணிய புருஷன் போல் வந்து சேர்ந்தான் குமரன். அவன் காலடிபட்ட மண்ணும் புனிதம் பெற்று நிற்பதாய் அந்தக் காட்சி கண்டு மனம் குளிர்ந்து போன மகிழ்ச்சி மட்டுமே அவளுக்கு. ஆனால் அவளின் அன்பற்ற கணவன் நரேந்திரனுக்கு அவள் அருமைத் தம்பியின் முகம், கூடக் கரித்தது, அன்று அவனுக்கு விடுமுறை நாளானதால் அவனும் வீட்டில் தான் இருந்தான் அவளைத் தவிர அந்த வீட்டில் எவருமே தம்பியைக் கண்டு கொள்ளாதது அவளுக்குப் பெரும் ஏமாற்றத்தையே அளித்தது. கடவுள் வாசனையே பிடிக்காத மனிதர்கள் வேறு எப்படித்தான் நடந்து கொள்வார்கள்.? நடை பிசகினால் வாழ்க்கையே தடம் புரண்டு போகும்,

குமரனைக் கண்டவுடன் ஓடி ஒளிந்து கொண்ட மனிதர்களின் நிலையும் அதுவாகத் தான் இருந்தது. குமரன் அதைக் கூடப் பொருட்படுத்தாமல் தனக்கு இயல்பான இனிய சுபாவத்தின் களை மாறாமல் நீண்ட நேரமாக அவளோடு தனித்து இருந்து உரையாடி விட்டு, மதியமளவில் அங்கிருந்து கிளம்பிப் போன பிறகு தான் புயலே வெடித்தது. இது வரையும் அறைக்குள்ளிருந்து அவர்கள் என்ன பேசுகிறார்களென்று ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு, மனம் குழம்ப வெளிப்பட்டு வந்த நரேந்திரனையே வெறிக்கப் பார்த்தபடி நிலையழிந்து நின்று கொண்டிருந்தாள் சாந்தி, பெயர் போலவே குணக்கோளாறில்லாத எதையும் எதிர்த்துப் பேசியறியாத பரம சாது அவள், அப்படிப்பட்ட அவள் முன்னால் தான் அன்பின் சுவடேயறியாத அவளைப் பலி கொள்ளத் துடிக்கும் முரட்டுக் காளை மாதிரி அவன் முகம் வெறி கொண்டு சிவப்பேறிக் கிடந்தது

“திடீரென்று குரலை உயர்த்தி “எல்லாத்தையும் மறந்து போங்கோ”, என்றான் நூறு தடவை அதையே சொல்லி விட்டு அடங்காத சினத்துடன் வெறி கொண்டு அவன் நிற்பதைப் பார்த்து விட்டு அழுகை குமுற குரல் நடுங்கி அவள் கேட்டாள் “எதை நான் மறந்தேன் “

அவன் அதற்கு ஒன்றும் சொல்லத் தோன்றாமல் சிலநிமிடங்கள் மெளனமாக இருந்து விட்டு ஒன்றுக்கொன்று குழறுபடியாய் குரலை உயர்த்தி அவன் சொன்ன வேதம். வேதமல்ல அது, ,மன விகாரத்தோடு கூறும் வார்த்தை எப்படி வேதமாக முடியும்?”

அவன் சொன்னான் “ஒரே போடாய் போடுவன்? இது அவனுக்கு மிகவும் பழகிப் போன மந்திரம் மாதிரி வேதம், சொல்வதற்கே தெய்வீக மந்திரங்கள் இருக்கும் போது இது என்ன? வேதத்தோடு விளையாடுகிறானா அவன்? வேதம் ஒன்று மட்டுமே அவள் நிலை அதை அறியாதவனாய் அவன் சொல்கிறான் “ஒரே போடாய் போடுவன்”

வேறு யாரை? அவளைத் தான் அப்படிப் போட்டாலும் அவள் நிம்மதியாகப் போய்ச் சேர்ந்திருப்பாள் விதிக்கப்பட்ட இந்த நரகத்திலிருந்து அவளுக்கு விடுதலை கிடைத்திருக்குமே. அப்படிக் கொன்று தீர்க்குமளவுக்குக் கொடியவளா அவள்? அப்படியானால் இந்த வார்தைக் குரூரம் ஏன் அவன் வாயிலிருந்து வர வேண்டும்? தம்பி குமரன் வந்து போனானே. அதற்கா இவ்வளவு பெருந் தண்டனை? அவளை உயிரோடு சமாதி வைக்கவே இந்த வார்த்தை நெருப்பு அவன் வாயிலிருந்து, தீச்சுவாலையாய் கனல் கொண்டு பற்றியெரியும் போது அவள் அப்படியே பஸ்பமாகி விட்டிருப்பாள். அவள் வேதம் வழி நடக்கும் தேவதையென்பதால் நல்ல வேளை அது நடக்கவில்லை அது அவனுக்குப் பழகிப் போன மந்திர மாதிரி, போடுதல் அழித்தல் சுடுதல் இவ்வாறான வன்முறைப் பாடமே அறியாத பேதை அவள். அவளைப் பார்த்து அவன் சொல்கிறான் ஒரே போடாய் போடுவன்/1” “போடட்டும் நன்றாகப் போடட்டும்” “இந்த வன் முறைத் தீக்குளித்தல் நடுவே நான் வேதமாகக் கிளம்பி வருவேன்” என்று மிகவும் தீர்க்கமாக ஒளி கொண்டு பிரகாசிக்கவே பிறந்து வந்த தேவதையாய் தன்னை நினைவு கூர்ந்த வண்ணம் அவள் தனக்குள் மெளனம் கனத்துப் பேசிக் கொண்டது அவன் கேட்கவல்ல அதுவும் தனக்குத் தான் என்று மிகவும் பெருமிதத்தோடு நினைவு கூர்ந்தாள் அவள், அதைக் கேட்க நேர்ந்தால் அவனும் தன் பாவங்கள் நீங்கிப் புனிதம் குளித்து எழுவான் என்ற நம்பிக்கை ஏனோ அவளுக்கு வரவில்லை உயிர் தரிசனமே இல்லாதொழிந்த பாலைவன மனம் கொண்டு பற்றியெரிகிற அவன் முன் தன் களங்கமற்ற புனித இருப்பின் அகண்ட பிரகாசமான பேரொளி கூட வெறும் நிழலாகவே கருகி ஒழிந்து தான் போகும் என்று அவளுக்கு உறைத்தது 

தொடர்புடைய சிறுகதைகள்
சாரதாவின் மனதை அக்கினிப் பிழம்பாகக் கொதிக்க வைத்து உணர்வுகளால் பங்கமுற்று, அவள் விழ நேர்ந்த மிகவும் துக்ககரமான ஒரு கரி நாள் அது. புனிதமான தீபாவளி நன்னாளுக்கு முந்தைய தினமென்று நன்றாக ஞாபகமிருக்கிறது அவளுக்கு . அவள் கல்யாண வேள்வி கண்டு ...
மேலும் கதையை படிக்க...
உலகைப் புரிந்து கொள்ள இயலாத, குழந்தைத் தனத்துடன் அவரையே ஆழ்ந்து நோக்கி மிரள மிரள உற்றுப் பார்த்தபடி, அவரிடம் கதை கேட்க, அவள் அமர்ந்திருக்கும் நேரம் சுகமான ஓர் அந்தி மாலைப் பொழுது. கோவில் மண்டபத்துக் கருங்கல் தூணருகே இறை வழிபாடு ...
மேலும் கதையை படிக்க...
காலில் சலங்கை கட்டிக் கொண்டு,ஆடும் பிரமையில் சுபா தன்னை மறந்து நிறையவே கற்றுத் தேறியிருப்பது போல்,இயல்பாகச் சுழன்று சுழன்று நர்த்தனம் புரிவதை, ஒரு வேடிக்கை போலப் பார்வதி தூரத்தில் நின்று பார்த்து கொண்டிருந்தாள்..நடன வகுப்புக்குப் போயோ,ஒரு கை தேர்ந்த குருவிடம் முறையாகப் ...
மேலும் கதையை படிக்க...
மங்கையைச் சந்திப்பதற்காகப் பாரதி முதல் தடவையாக அவள் வேலை பார்க்கும் கந்தோருக்கு வந்திருந்தாள். அவளை நேரிலே சந்திப்பதென்பது அவ்வளவு எளிதான,காரியமல்ல.அதற்குமுன்அனுமதி பெற்றுத்தான் வரவேண்டும். எனினும், நட்பின் நிமித்தம்,அனுமதியின்றியே உள்ளே நுழையக்கூடிய சலுகையை மங்கை வழங்கக்கூடும் என்ற நம்பிக்கையிலேயே, பாரதி வந்திந்தாள் ஒருகாலத்தில் அவளைச் ...
மேலும் கதையை படிக்க...
திலகவதி முதன் முதலாக அந்தப் பிரபலமான மகளிர் கல்லூரிக்குப் படிக்க வந்தது ஒரு மாறுபட்ட புது அனுபவமாக இருந்தது மகளிருக்கான கல்லூரி அது ஆண் வாடையே கிடையாது பழகிப் பார்க்கும் முகங்களெல்லாம் பெண் முகங்கள் தாம் அவர்களோடு புதிதாய் அறிமுகமாக வேண்டிய ...
மேலும் கதையை படிக்க...
சத்தியம் தோற்பதில்லை
பாத பூஜை
ஏகலைவன்
மறை பொருள் மயக்கம்
ஒரு தேவதையின் சரிந்த கிரீடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)