வண்டவாளம்….!

 

ரோட்டோர குழாயில் தண்ணீர் பிடித்து இடுப்பில் குடத்துடன் சென்ற வள்ளிக்குத் தன்னைத் தாண்டி சாலையோரம் மெல்ல நடந்து செல்லும் தம்பதிகளைப் பார்த்ததும் மனசுக்குள் குப்பென்று ஆத்திரம் அவமானம். சுள்ளென்று கோபம்.

வீட்டிற்குள் நுழைந்த அடுத்த விநாடி, ”என்னதான் காசு பணம் இருந்தாலும் மனுசாளுக்கு அடக்க ஒடுக்கம், மனசு கட்டுப்பாடு வேணும்….! ” சத்தமாக முணுமுணுத்துச் சென்றாள்.

நாற்காலியில் அமர்ந்து தினசரி படித்துக்கொண்டிருந்த கங்கதாரன் மனைவி குரல்; காதில் விழ… ”என்னடி ? ” கேட்டான்.

”ம்ம்… என் வயித்தெரிச்சலைக் கொட்றேன்.!” தன் சூடு மாறாமல் படக்கென்று சொல்லி டக்கென்று குடத்தை அடுப்படியில் வைத்தாள்.

”காலையில தண்ணீர் பிடிக்கப் போனவளுக்கு அப்படி என்ன திடீர் வயித்தெரிச்சல், வம்பு ? ”

”ம்ம்…. இந்தத் தெரு கடைசி வீட்டு வண்டவாளம்…கசுமாளம் !” வந்தாள்.

”விபரம் சொல்லு ? ”

”ம்ம்… பெத்துக்க வேண்டிய புள்ளைங்க ரெண்டும் சோடிப் போட்டுக்கிட்டு வண்டியில வேலைக்குப் போகுது. வயசான காலத்துல வீட்டுல சும்மா இருக்க வேண்டிய பெருசுங்க ரெண்டும் தனிமைக் கெடைக்கிற கும்மாளம்… வயித்துல புள்ள. இந்த அசிங்கம் புரியாம.. அக்கம் பக்கம் என்ன சொல்லுமோ என்கிற அறிவு..வெட்கம், மானம், ரோசம் இல்லாம புள்ள நல்லா பொறக்கனும்ன்னு நடைபயிற்சி வேற….” நீட்டி முழக்கி நிறுத்தினாள்.

”விபரம் புரியாம அறிவு கெட்டத்தனமா உளறாதே!” கங்காதரன் அதட்டினான்.

”உனக்கு ஏன்ய்யா சட்டுன்னு இந்த கோபம் ? ” கேட்டு அவள் திகைத்துப் பார்க்க….

”அந்தம்மா பாக்கியம் வேற யாருக்கும் கெடைக்காத தெரிஞ்சுக்கோ !”

”அப்படி என்ன பாக்கியம் ? ”

”காதல் கலியாணம் முடிச்சு வேலைக்குப் போகும் மகன் மருமகள் ஒரு குறை இல்லாம நல்லா இருந்தாலும் என்ன காரணமோ அஞ்சு வருசமா புள்ளே இல்லே. இந்தம்மா…வாடகைத்தாயாய் அவுங்க கருவைத் தாங்கி பேரனைச் சுமக்குறாங்க. அது நல்லா பொறக்கனம்ன்னுதான் புருசனோட நடைபயிற்சி. வாடகைத் தாய்க்கு கொடுக்க வேண்டிய லட்சக்கணக்கான பணம் மிச்சம். குழந்தைக்குத் தாய்ப்பால் கிடைக்கும். பந்த பாசம் அந்நியோன்யம்ன்னு…அந்த குடும்பத்துக்கு ஏகப்பட்ட பலாபலன் !” முடித்தான்.

தலை கிர்ரடிக்க……வள்ளி திறந்த வாய் மூடவில்லை. 

தொடர்புடைய சிறுகதைகள்
அறையைத் திறந்து கட்டிலைப் பார்த்ததும் நடேசுக்குச் சொர்க்கம் கிடைத்த மகிழ்ச்சி, மனசுக்குள் குதூகலம். அவ்வளவு பயணக்களைப்பு. காலையில் பேருந்து ஏறி.... இரவு எட்டு மணிக்கு மதுரையில் இறங்குவதென்றால் சமானியப்பட்ட விசயமில்லை. உட்கார்ந்து பயணத்ததில் முதுகு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி. 28 ...
மேலும் கதையை படிக்க...
இருளும் ஒளியும் கலந்த மசக்கையான நேரம். பக்கத்து வீட்டில் ஏதோ கரைச்சல். சோமசுந்தரம் மிராசு, அவரின் கூலி ஆள் சங்கன், மிராசுவின் மனைவி செண்பகம்.... என்று குரல்கள் மாறி மாறி கேட்டது. கொஞ்ச நேரத்தில் சோமசுந்தரத்தின் மகன் ராமு என் வீட்டிற்குள் நுழைந்தான். படித்துக்கொண்டிருந்த என்னிடம் ...
மேலும் கதையை படிக்க...
‘வசதியான வீடு. இன்டர்நெட்ன்னு எல்லா வசதி வாய்ப்புகளும் இருக்கு. ஆனா தொலை பேசி மட்டும் எதிரி எண் தெரியற அளவுக்கு வசதி கெடையாது. இவ்வளவிற்கும் அது பெரிய காசும் கெடையாது. ஏன் இப்படி ?......‘ - வீட்டிற்குள் உட்கார்ந்து நண்பனோடு பேசிக் ...
மேலும் கதையை படிக்க...
என் நண்பனின் அப்பா சந்திரசேகரனுடன் நான் பேசிக் கொண்டிருக்கும்போதுதான் துணிப் பையுடன் என் பழைய தலைமை ஆசிரியர் வெங்கடசுப்ரமணியன் அவரிடம் வந்தார். இருவரும் நண்பர்கள். ஒன்றாக வேலை பார்த்தவர்கள். வெவ்வேறு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களாய் இருந்தவர்கள். இரண்டாண்டுகளுக்கு முன் இருவரும் ஒய்வு. சந்திரசேகரன் ...
மேலும் கதையை படிக்க...
குமார், காலை 9. 10 த்திற்கெல்லாம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நுழைந்தான். அப்போதுதான் கடைநிலை ஊழியன் கந்தசாமி.... அலுவலக முகப்பில் பார்வையாளர் பகுதியில் எல்லோர் பார்வையும் படியுமிடத்தில் ஸ்டூல் மேல் ஸ்டூல் போட்டு சுவரில் ஆணி அடித்து அதை மாட்டினான். நீலக்கலர் பிரேம் போட்டு , ...
மேலும் கதையை படிக்க...
அவன்-இவள்…!
நேர்க்கோடு..!
ஏன்…?
மச்சம் உள்ள ஆளு…!
யாருக்காக அது..?!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)