அது ஒரு மாலை வேளை, அவசர அவசரமாக பணியிலிருந்து வந்த வசுந்தரா விறு விறுவென்று சமைக்கத் தொடங்கினாள். இரவு உணவைப் பிள்ளைகளுக்கு ஊட்டிவிட்டு அவர்களை நேரத்தோடு படுக்க வைத்தாள். தானும் கணவரோடமர்ந்து உரையாடிக்கொண்டே உணவை மென்று சுவைத்தாள். ஆனாலும் உணவு தொண்டைக்குள் இறங்க மறுத்தது. எப்படி எங்கே தொடங்குவது என்ற கேள்விதான் அவளுக்குள் எழுந்துகொண்டே இருந்தது. எப்படியாவது கேட்டுவிட வேண்டும்.
“என் நண்பி சுபாவைத் தெரியும்தானே உங்களுக்கு, அவளும் நானும் விண்வெளிக்கு சுற்றுலா சென்றுவருவதாக முடிவு செய்திருக்கிறோம். அவள் ஏற்கனவே இருவருக்கும் சேர்த்து பதிவு செய்துவிட்டாள். நான் பொய் வரலாம் என்றிருக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்”. அவள் சொல்லி முடித்த போது அவனால் எதுவும் பதில் சொல்ல முடியவில்லை.
ஒருவாறு கணவனின் சம்மதத்தைப் பெற்று புறப்பட ஆயத்தமானாள். இலேசான தங்க நிறம் கலந்த கைப்பெட்டி ஒன்று அத்தோடு ஒரு தோள்ப் பை. இவைதான் அவள் பயணத்திற்காக எடுத்துச் செல்பவை. முதலில் அதிவேக தொடருந்தில் செல்லவேண்டும். ஒரு குறிப்பிட்ட அளவு தூரம் சென்ற பின்பு தொடருந்து நிலையத்திலிருந்தே விண்வெளிப் கப்பல் புறப்படும் என்று கூறியிருக்கிறார்கள்.
தொடருந்து புறப்பட்டபோது அவளுடைய மகன் சாளரத்தினூடே அம்மா என்று கையசைப்பதைப் பார்த்தாள். நெஞ்சு படபடத்தது. மகன் பத்திரமாக இருக்கின்றானா, தொடருந்திற்கு அருகில் வந்தானா? என்று பல யோசனை அவளுக்குள் எழுந்தது. தொடருந்துச்சீட்டும் இன்னும் வாங்கவில்லை. அடுத்த தரிப்பிடத்தில் இறங்கிக் கொள்ளவேண்டும் என்று முடிவு செய்வதற்குள் தொடருந்து பல மயில்கள் தூரத்தைக் கடந்துவிட்டது.
திடீரென்று ஒரு பெரிய சத்தம் கேட்கிறது. சாளரத்தினூடே வெளியில் பார்க்கிறாள். விண்ணை நோக்கி ஓர் ஏவுகணை வீசப்படுகிறது. வானை நோக்கிப் பறந்த ஏவுகணையின் பிற்பகுதியிலிருந்து நெருப்புக் கக்கிக்கொண்டு பொறியாகத் தெறிக்கிறது. அப்போது ஏவுகணை இரண்டாகப் பிரிந்து ஒரு குழல் போன்ற வடிவம் வெளிவருகின்றது. அதிலிருந்து ஒரு மனிதர் விண்ணில் பறக்கின்றார். அந்தக் கணத்தில் தொடருந்திலிருந்த வசுந்தரா அந்த மனிதரைப் பார்க்கிறாள். அந்த மனிதர் வசுந்தராவைப் பார்த்ததை வசுந்தரா அவதானிக்கவில்லை.
சில மணித்துளிகள் கடந்த பின் தொடருந்தைச் சுற்றி பலமுறை பறந்து கொண்டே வலம் வந்துவிடுகிறார் அந்த மனிதர். எதிர்பாராத விதமாக ஒலிபெருக்கியில் யாரோ பேசத் தொடங்குகிறார். இந்தத் தொடருந்தில் ஓர் இந்திய சாயலுடைய பெண் இருப்பதாகவும் அந்தப் பெண்ணைத் தான் திருமணம் செய்ய விரும்பியவதாகவும். அந்தப் பெண் இதை கேட்டுக் கொண்டிருந்தால் தானாகவே முன்வரலாம் என்று அறிவிக்கப்படுகிறது.
வசுந்த்ராவிற்கு என்ன நடக்கின்றதென்றே தெரியவில்லை. ஓர் தரிப்பிடத்தில் தொடருந்து நின்றபோது, வசுந்தரா தன் விண்வெளிப்பயணச் சுற்றுலாக் கனவை தூக்கியெறிந்துவிட்டு திரும்ப வீடு நோக்கிப் புறப்படத் தயாரானாள். வீட்டிற்கு வந்த வசுந்தரா தன் கணவர் குழந்தைகளைக் கட்டியணைத்து மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினாள்.
தொடர்புடைய சிறுகதைகள்
காயா, அவள்தான் வீட்டில் கடைசிப்பிள்ளை. அவள் இப்பொழுது மிகவும் கோவமாக இருக்கிறாள். காலையில் கனவு கண்டனீங்களா? என்று மிகவும் பயமுறுத்தும் குரலில் கேட்டார் அப்பா.
இல்லை, என்று சத்தமிட்டு கூறினாள் காயா. இல்லை, இல்லை இல்லை என்று கத்தினாள்.
வா இங்கே, காலை உணவு ...
மேலும் கதையை படிக்க...
காலை ஐந்து மணிக்கெல்லம் அவன் எழுந்துவிடுவான். கீழ் மாடியில் வரவேற்பறை, சமையலறை ஒரு குளியலறையையும் மேல் மாடியில் நான்கு படுக்கையறையோடு ஒட்டியதாக ஒரு உல்லாச அறையையும் ஒரு களிவறையோடு ஒரு குளியலறையையும் கொண்ட அந்த வீட்டின் கீழ் மாடிக்கு வந்து காலைக்கடமைகளை ...
மேலும் கதையை படிக்க...
அது ஒரு இலையுதிகாலத்தின் இதம் கலந்த மாலை வேளை. மிகப் பிரமாண்டமான உல்லாச விடுதியில் ( கோட்டல்) வரவேற்பு மண்டபத்தில் இரவு நேர விருந்துபசாரத்திற்காக காத்திருக்கின்றார்கள். வண்டுகள் ரீங்காரம் செய்யும் ஓசைபோல் கேட்கிறது ஆங்காங்கே குழுமி நின்று பேசிக்கொண்டிருப்பவர்களின் இரைச்சலான பேச்சு. ...
மேலும் கதையை படிக்க...
அவனுக்கு இப்போது வயது முப்பது. நல்ல குண்டுத்தோற்றம். சுமாரான உயரம். என்றும் புன்னகை பூத்த முகம். தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருக்கும் அவனைத் தேடி அவன் அலுவலக அறைக்கு அடிக்கடி சக பணியாளர் கூட்டம் அலை மோதும்.
காலையில் கண்டவுடன் ...
மேலும் கதையை படிக்க...
இன்று திங்கட்கிழமை, அதிகாலை நேரம் 6:30 மணியிருக்கும் அவசர அவசரமாக 6:35 ற்கு என் வீட்டிலிருந்து 200 மீற்றர் தூரத்தில் இருக்கும் பேரூந்து தரிப்பிடத்திலிருந்து ஒஷ்லோ(Oslo) தலை நகரம் நோக்கி புறப்படும் பேரூந்தை பிடிப்பதற்காக வெளிக்கிட்டுக்கொண்டிருக்கிறேன். வீட்டுக்கு வீடு இரண்டு மகிழூந்து, ...
மேலும் கதையை படிக்க...
ஒரு அழகான குடும்பத்தில் கணவன், மனைவி, இரண்டு பெண் பிள்ளைகள் மற்றும் ஓர் ஆண் பிள்ளை என வீடே குதூகலம்தான். குட்டி கண்ணனுக்கு வயது ஒன்பதுதான் அவன்தான் வீட்டில் கடைக்குட்டிப்பிள்ளை. அவன் அக்காமார் அவனைவிட இரண்டும் மூன்றும் வயதே மூத்தவர்கள்.
கண்ணனுக்கு ஆருயிராய் ...
மேலும் கதையை படிக்க...
ஒரு சிறுவன் மரக்குச்சிகளை வண்டிலுக்குள் அடுக்கிக் கொண்டிருந்தான். அப்பொழுது ஒரு தானியங்கியைச் சந்தித்தான்.
வணக்கம் கூறி, விளையாடுவோமா? என்று கேட்டான்.
தானியங்கி மின்னியது: ஆம்!
அவர்கள் விளையாடினார்கள். சிறுவன் மகிழ்ச்சியாக இருந்தான்.
இருவரும் இறக்கமான பாதையில் ஓடியதால் தானியங்கியின் பொத்தான் ஒரு கல்லில் அடிபட்டுவிட்டது. அதனால் தானியங்கி ...
மேலும் கதையை படிக்க...
அது ஒரு மாலை நேரம், மூன்று நான்கு மணியிருக்கும் 1996 ஆம் ஆண்டு என நினைவிருக்கிறது.இன்று போலவே பெருத்த மழை சோ என்று பெய்துகொண்டிருந்தது. இடையிடையே இடி மின்னல் முழக்கம் காதை பிளந்து கொண்டிருந்தது. எப்பவும் போல இடிமின்னல் வந்தால் “ ...
மேலும் கதையை படிக்க...
கரோனா, நான்தான் பேசுகின்றேன். என்னால் உங்களுக்கு தொந்தரவா? கண்ணுக்குத்தெரியாமல் காற்றில் கலக்ந்து சுவாசத்தில் நுளைந்துவிடுகின்றேன் என்று பேசிக்கொள்கிறார்கள். முற்றிலும் பொய் நம்பாதீர்கள். நான் ஓர் தொற்றுக்கிருமி. என்னைத்தொட்டால் பற்றிக்கொள்கிறேன். தும்மலுடன் வந்து ஒட்டிக் கொள்கிறேன். இருமலுடன் செருமப்பட்டு வெளி வருகின்றேன். சுத்தமாக ...
மேலும் கதையை படிக்க...
என் பள்ளித்தோழி, பார்ப்பதற்கு சுமாராக இருப்பாள். உருண்டையான தன் கண்களை உருட்டியும் முத்துப்பற்களால் புன்னகையை எப்போதும் உதிர்த்தும் என்னை மயக்கியவள் அவள். என் ஊருக்கு அயல் ஊரில்தான் அவள் குடியிருந்தாள். 1994 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்பில் ...
மேலும் கதையை படிக்க...