லட்சுமி – ஒரு பக்க கதை

 

‘‘சார், போஸ்ட்…’’குரல் கேட்டு வெளியே வந்தான் ஸ்ரீராம். அவன் கண்களையே அவனால் நம்ப முடியவில்லை. இரண்டு வாரத்துக்கு முன் நடந்த இன்டர்வியூ அது. சரியாகப் பண்ணவில்லையோ என்று குழம்பிக் கொண்டேயிருந்தான். இன்று அந்த கம்பெனிதான் அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் அனுப்பியிருந்தது.

வானில் பறக்க வேண்டும் போலிருந்தது அவனுக்கு. காரணம் அவனது அப்பா.நேற்றுக்கூட லட்சுமியோடு ஒப்பிட்டு அவனை வசைபாடினார்.தபாலை வாங்கியவனின் எதிரில்தான் நின்றாள் லட்சுமி.

‘‘பாரு லட்சுமி! ஐயா இப்போ கம்பெனி மேனேஜர். பார்த்துக்கோ! அப்பா நேற்று ரொம்ப பேசிட்டார்னு வருத்தப்பட்டேன். அதுவும் உன்னோட ஒப்பிட்டு என்னைப் பேசிட்டாங்க, ரைட்டு! இப்பவும் உனக்காகத்தானே டவுனுக்கு அப்பா போயிருக்காங்க’’ என்றபடி லட்சுமியை நெருங்கினான்.

‘‘என்னடா, கையில கடுதாசியோட லட்சுமியை முறைச்சிக்கிட்டு இருக்க?’’ என்றபடி வந்தார் அம்மா.

‘‘அம்மா! எனக்கு வேலை கிடைச்சிட்டும்மா’’ என்றான் உற்சாகத்துடன்.

‘‘ரொம்ப சந்தோஷம்டா… லட்சுமிக்கு புண்ணாக்கு வாங்க அப்பா டவுனுக்கு போயிருக்காங்க. போன் போட்டு சொல்லு. நான் லட்சுமிக்கு தண்ணி வைக்கணும்… வழிவிடு’’ என்றபடி சென்றார் அம்மா!

- வே.சரஸ்வதி உமேஷ் (ஜனவரி 2011) 

தொடர்புடைய சிறுகதைகள்
ஒரு நாள் போவார், ஒரு நாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம்…! ஒரு சாண் வயிற்றை, வளர்ப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம்…….. ஊரார் நினைப்பது சுலபம்…!!! பாடலில் வழிந்தோடும் நெஞ்சைப் பிழியும் துயர வரிகள் மார்பில் அறைந்து கொண்டிருந்த வேளையில், பதஞ்சலியின் குரலில் அந்தக் குடிசையே கிடுகிடுத்தது. சம்பங்கிய ...
மேலும் கதையை படிக்க...
வடக்கு தோப்பில் நேற்று தேங்காய் வெட்டு நடந்து தேங்காய்கள் சிதறி கிடந்தன. தேங்காய்களை ஒன்றுசேர்த்து கூடையில் அள்ளி கொட்டத்துக்கு முன் இருக்கும் களத்துமேட்டில் குவித்துக்கொண்டிருக்கின்றனர் ‘மலர்கொடி’ உட்பட ஐந்து பெண்கள். அதை நல்லதும் கெட்டதுமாக தரம் பிரித்துக்கொண்டிருக்கிறான் ‘கிறுக்கா என்ற கிட்ணா’. ...
மேலும் கதையை படிக்க...
வேணுகோபால் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து கொண்டு விட்டான். ஆறு மணிக்குள் கார் வந்துவிடும். ராணிப்பேட்டை, மேல் விஷாரம், ஆம்பூர், வாணியம்பாடி என்று போய் ‘கோடவுன்’களை ஆய்வு செய்து விட்டு மாலை நான்கு மணிக்குள் பாரிமுனையில் உள்ள அவன் வங்கிக் கிளைக்குப் போய் ...
மேலும் கதையை படிக்க...
எங்கள் தெருவில் ஒரு பெந்தகொஸ்தே சர்ச் இருக்கிறது. அதற்குப் பக்கத்தில் ஓர் ஐயர் வீடு. ஐயர் கொஞ்சம் வயதானவர். அவர் வீட்டுத் தோட்டம் சரியாகப் பராமரிக்கப் படாமல் எப்போதும் புல்லும் பூண்டும் மண்டிக்கிடக்கும். இன்று காலை நான் அலுவலகத்துக்கு வரும்போது, அந்தத் ...
மேலும் கதையை படிக்க...
“லேகா… டைனிங் டேபிள் சேர் பின்னணும்ன்னு சொன்னியே, ஆள் வந்தாச்சு’ என்று, இரண்டு கண்களும் தெரியாத ஒரு வயதானவரை கையைப் பிடித்துக் கூட்டி வந்து, ஹாலில் அமர வைத்தான் மணி. வயர் பிய்ந்து போன இரண்டு நாற்காலிகளை வாசல் வராண்டாவுக்கு எடுத்துச் சென்ற ...
மேலும் கதையை படிக்க...
துயரம்
ஒடுக்கப்பட்ட நொண்டி சாமி
சுரண்டல்
அசோகர் கல்வெட்டு
உதவி – ஒரு பக்க கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)