Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

ரேங்க் – ஒரு பக்க கதை

 

“என்னடா பரீட்சை எழுதியிருக்கே? எல்லாத்திலேயும் ஒண்ணு, ரெண்டு மார்க் குறைவா வாங்கியிருக்கே?’

இரண்டாம் வகுப்பு மாணவன் தினேஷிடம் எரிந்து விழுந்தாள் வகுப்பு ஆசிரியை.

“இல்லே… மிஸ்.. நல்லாத்தான் எழுதினேன்.’

“என்னத்த கிழிச்சே… நல்லா படிச்சாத்தானே…? ஃபர்ஸ்ட் ரேங்க் வரணும்னு சொல்லியிருக்கேன்
இல்லே.. எப்பவும் செகண்ட் ரேங்கிலேயே இருக்கே…?’

தலையில் ஒரு குட்டு வைத்தாள்.

“ஸாரி மிஸ். அடுத்த தடவை ஃபர்ஸ்ட் ரேங்க் வந்திடறேன் மிஸ்…’

வீட்டிற்கு திரும்பிய தினேஷ், அம்மாவிடம், “என்னம்மா மிஸ் எப்ப பார்த்தாலும், நான்
ஃபர்ஸ்ட் ரேங்க் எடுக்கலேன்னு திட்டிகிட்டே கடுப்பேத்திக்கிட்டிருக்காங்க…? அவங்கள
பார்க்கவே பிடிக்கலே…!’

“அப்படிச் சொல்லக்கூடாது கண்ணு…டீச்சரெல்லாம் கடவுளை விட முன்னாடி உள்ளவங்க…’

“என்னம்மா சொல்லறே?’

“ஆமாம்பா… மாதா, பிதா, குரு, தெய்வம்…கேட்டிருக்கேயில்லே… முதல்லே மாதா..அம்மா, இரண்டாவது பிதா… அப்பா, மூணாவது குரு… டீச்சர், அப்புறம் நாலாவதுதான் தெய்வம்… கடவுள்…’

“அப்ப மிஸ்ஸே… மூணாவது ரேங்க்தானா? அப்ப எதுக்கு அவங்களுக்கு மேலே… ரெண்டாவது
ரேங்க்லே இருக்கிற என்னை திட்டறாங்க…?’

பதில் சொல்லத் தெரியாது விழித்தாள் அவனது அம்மா.

– புதுவை சந்திரஹரி 

தொடர்புடைய சிறுகதைகள்
இடி இடித்தது; காற்று சுழன்றடித்தது; ஈரமண்ணின் வாசனை..இதோ, சற்று நேரத்தில் மழைவரப் போகிறது... அட, வந்தேவிட்டது!. விண்ணிலிருந்து சடசடவென்று இறங்கிய மழை நீர் பூமியை நனைக்கஆரம்பித்தது. சின்னப்பையன் ஓடிவந்து மூச்சிரைக்க நின்றான். அண்ணே!அண்ணே! ``என்னடா சின்னு, என்ன ஆச்சு?'' காபி பார் அருள் கேட்டான். ``அண்ணே!அம்மினியக்காகிட்டே பாபுப் ...
மேலும் கதையை படிக்க...
காலையில் ஆ·பீசுக்கு வந்து உட்கார்ந்து தினமணியைப் பிரிப்பதற்குள் அதற்காகவே காத்திருந்ததுபோல் ·போன் வந்தது. எதிர்முனையில் உச்ச சத்தத்தில் 'ஹலாவ்' என்கிற குரலைக் கேட்டதும் தெரிந்துவிட்டது. சங்கரலிங்கம். 'சொல்லுங்க சார், நான் விஜயன்தான் பேசறேன்' 'விஜயன் சார், விஜயன் சார்', ஆக்ஸிஜனுக்குத் திணறுகிறவர்போல் எதிர்முனையில் சங்கரலிங்கம் ...
மேலும் கதையை படிக்க...
மெல்லிய குளிர் பரவிய அறையில், டிக்… டிக்… டிக்… கடிகார முள் நகரும் சப்தம் இரவின் அமைதியை கிழித்து பயமுறுத்திக் கொண்டிருந்தது. என்றும் போல விமலாவிற்கு தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்துத் தூக்கத்திடம் தோற்றுப் போனவளாக… வயதாக… வயதாக தூக்கம் ...
மேலும் கதையை படிக்க...
குணா கண்விழித்தபோது சாந்தி அருகில் இல்லை.கனவென்று நினைத்து மீண்டும் உறங்கினான்.அதிகாலையில் வலுக்கட்டாயமாக அவன் உறக்கம் கலைக்கப்பட்டு அறையின் மூலையில் அமர்த்தப்பட்டான்.சாந்தி மட்டும் தூங்கிக்கொண்டிருந்தாள்,அவனுக்கு கோபம் வந்தது அவளுக்கு மட்டும் என்ன தனிச்செல்லம்.எப்போதும் காலையில் அவளை எழுப்ப அம்மாதான் அருகில் உட்கார்ந்து கத்திக்கொண்டிருப்பாள்,இன்று ...
மேலும் கதையை படிக்க...
கௌசல்யாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. உள்ளுக்கும் வாசலுக்குமாக நடந்து கொண்டிருந்தாள். இன்று ஞாயிற்றுக்கிழமை. அவள் கணவர் வீட்டுக்கு வரும் நாள்! சமையல்காரப் பெண்மணி எடுபிடி வேலை செய்ய.. சமையலில் மும்முரமாக இருந்த சைலஜா இவளைப் பார்த்துவிட்டு கேலியாக சிரித்தாள். ''பார்த்தியா அங்கே? மேடம், ஐயாவுக்காக பரபரன்னு ...
மேலும் கதையை படிக்க...
தேவை, ஒரு உதவி!
எழுத்தாளன் மனைவி
அதையும் தாண்டிப் புனிதமானது…
எழவுக்குருவி
மேற்கில் தோன்றிய உதயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)