ரெசிபி – ஒரு பக்க கதை

 

“நேத்து எங்க வீட்டுக்காரர் உங்க வீட்டுக்கு வந்திருந்தப்போ எதோ தோசை சுட்டு கொடுத்தியாம். அது அவ்ளோ டேஸ்டா இருந்துசின்னு வந்ததுல இருந்து சொல்லிகிட்டே இருக்கார் …….’ நீயும் அதே மாதரி செய்யேன் ‘ன்னு கேக்குறார் . அதுக்கு ரெசிபி சொல்லேன் ” விமலாவிடம் போனில் கேட்டல் மாலதி ….

“ரெசிபியா? அந்த கொடுமைய ஏன் கேக்குற ? எங்க வீட்டுக்காரர் தீடிர்னு உங்க வீட்டுக்காரரை இங்க கூட்டிட்டு வந்துட்டார் . மாச கடைசி விட்டுல ஒரு மளிகை சாமானும் இல்ல . அவசரத்துக்கு வாங்க , வீட்டுப் பக்கம் பலசரக்குக் கடையும் கிடையாது .

என் பழக்கம் எந்தப் பொருளையும் சுத்தமா காலி செய்ய மாட்டேன் . ராவும் மைதா,கோதுமை , கடலை மாவு , ஊளுதம்மாவு , எல்லா டப்பாவிலும் கொஞ்சம் இருந்தது . அதெல்லாம் ஒன்ன கலந்து , புளிப்புக்கு மோர் ஊத்தினேன்” என்றாள் விமலா …

” சே…. சமையல்ல சில சமயம் இப்படி அவசர சமாளிப்பு கூட அருமையா வந்திடுது இல்ல ” என் வியந்தபடியே போனை வைத்தாள் மாலதி ….

விமலாவும் போனை வைத்த கையேடும் டீபாயில் இருந்த ‘ சுவையான தோசை ரெசிபிகள் ‘ புத்தகத்தை கவனமாக எடுத்து பீரோவுக்குள் மறைத்து வைத்தாள் …. 

தொடர்புடைய சிறுகதைகள்
கதிரவன் தன்பயணத்தை இனிதே தொடங்கி வெண் கதிர்களால் அப்பகுதியை வெப்பப் படுத்திக் கொண்டிருந்தான். காலை மணி 10. சிங்கப்பூரில் தனியார் குடியிருப்பு பேட்டைகளில் அழகாக வடிவமைக்கப்பட்ட நீச்சல் குளம் இருப்பது அவற்றின் சிறப்புகளில் ஒன்று. தனது அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள ...
மேலும் கதையை படிக்க...
'' நீ நினைக்கிற மாதிரி இல்லே. சுந்தரம் கட்டைப் பிரம்மச்சாரி ! '' சொன்ன தோழியை அதிர்ந்து, ஆச்சரியமாகப் பார்த்தாள் ராதா. ரத்னா விடாமல் தொடர்ந்தாள். '' அவரை எனக்கு நல்ல தெரியும். நாங்க ஒரே ஊர். பக்கத்து பக்கத்துத் தெரு. பள்ளிகூடம்கூட ஒண்ணா ...
மேலும் கதையை படிக்க...
கல்யாணமாகிய முதல் ஆறு மாதங்களில் அவர்களிடையே கடும்பூசல்கள் எதுவும் ஏற்படவில்லையானால் அந்தக்கட்டத்தில் அவர்கள் ஒருவருக்கொருவர் முழுவதும் அந்நியர்களாக இருந்தார்களென்பதுதான் காரணம். அந்நியர்களிடையே அவரவருடைய குறை நிறைகள் பற்றிய ஆழ்ந்த பிரக்ஞையோ உறுத்தல்களோ இருக்காது; அவை சார்ந்த திட்டவட்டமான விமர்சனங்களோ தீர்ப்புகளோ இருக்காது; ...
மேலும் கதையை படிக்க...
திண்ணையில் கேப்பைக்கூழை டம்ளரில் கலந்து வாகாக செல்விக்கு குடிப்பூட்டி கொண்டிருந்தாள் தாயம்மா. “ ஆயா.. சில்லுன்னு இருக்கு சூடா சோறு தா…” சிணுங்கினாள். “ ஆமா ஆத்தாக்காரி வந்து உனக்கு சூடா சோறு பொங்கி போடுவா.. கோபத்தில் தெறித்த வார்த்தைகளில் செல்வி கழுத்தை பின் ...
மேலும் கதையை படிக்க...
மீண்டும் ஒருமுறை!
கடைசியாக ஒரு தடவை மலையைப் பார்க்க ஆசைப்பட்டாள் கோகிலா. வண்டி வருவதற்கு இன்னும் நேரமிருந்தது. மலையைப் பார்க்க ரொம்பத் தூரமெல்லாம் நடக்க வேண்டியதில்லை. கொல்லைப் பக்கம் கதவைத் திறந்தால் மலைதான். வேலுவுக்கு ஏனோ அந்த மலை என்றால் ரொம்ப விருப்பம். மலை ...
மேலும் கதையை படிக்க...
சில நொடியில்…
தாய், தகப்பன் ஆகலாமா…?
புகைச்சல்கள்
பாதை மாறிய பயணம்…!
மீண்டும் ஒருமுறை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)