ரூட்டை மாத்து – ஒரு பக்க கதை

 

‘‘நானும் பத்து நாளா நீ செய்யறதை எல்லாம் கவனிச்சிக்கிட்டுதான் இருக்கேன். கிராமத்திலிருந்து வந்த என் அம்மாவுக்கு சாப்பாட்டு விஷயத்துல உபசரணை பண்றியோ இல்லையோ… முன் கதை சுருக்கமெல்லாம் சொல்லி, ‘அந்த சீரியலைப் பாருங்க’… ‘இந்த சீரியலையும் பாருங்க’ன்னு ஆர்வத்தைக் கிளப்பி விடறே! செலவைப் பத்தி கவலைப்படாம அவங்களுக்கு தனியா ஒரு டி.வியும் வாங்கிக் கொடுத்து உட்கார வச்சுட்டியே..!’’ – மனைவி தங்கத்திடம் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினான் செல்வம்.

‘‘அதுக்குக் காரணம் இருக்குங்க!’’ – மர்மப் புன்னகையோடு விளக்கினாள் தங்கம்.

‘‘சீரியல் பக்கம் அவங்க சிந்தனை ரூட்டை மாத்தினதாலதான் என்கிட்ட சண்டை பிடிக்கவோ, மத்தவங்களைப் பத்திப் பேசவோ நேரம் இருக்கறதில்லை. நம்ம குடும்ப விஷயங்களைப் பேசுறதை விட்டுட்டு, சீரியல்ல வர்ற குடும்ப சமாச்சாரங்களைப் பத்தி அதிகம் கவலைப்பட ஆரம்பிச்சிட்டாங்க. அக்கம் பக்கத்து வீடுகளுக்குப் போனா அவங்க வம்பளக்குற மேட்டரும் சீரியல்தான். அதனால என் டென்ஷன் குறையுது. மாமியாரோட சண்டை இல்லாம இருக்கறதுக்காக நான் கொடுத்த விலைதாங்க அந்த புது டி.வி!’’ என்றாள் தங்கம்.

‘‘தங்கம்… நீ ஒரு திருமதி செல்வம்!’’ என்று டைமிங் புகழ்ச்சியை உதிர்த்துச் சென்றான் செல்வம்.

- 09 Apr 2012 

தொடர்புடைய சிறுகதைகள்
வாழ்க்கையில் சந்திக்கும் அனைவரது முகமும் நமக்கு நினைவில் இருப்பதில்லை. ஆனால், நெருக்கமான நட்போ, உறவோ இல்லாத நிலையிலும் சிலரது முகம் எந்தக் காரணமும் இல்லாமல் அடிக்கடி ஞாபகத்தில் வந்துகொண்டே இருக்கும். எனக்கு அப்படி மறக்கமுடியாத முகம் மைக்கேலின் முகம். ‘‘பாக்க றவன் ...
மேலும் கதையை படிக்க...
“பதினைந்தாம் நம்பர்.” எனக்கு உதவியாக இருக்கும் பணியாள் உரத்துக் கூவுகிறான். அந்த இலக்கத்தையுடைய நோயாளி உள்ளே நுழைவதற்குள் வேறுசிலரும் முண்டியடித்துக் கொண்டு நுழைய முனைகிறார்கள். அவர்களைத் தடுத்து நிறுத்திப் பதினைந்தாம் இலக்க நோயாளியை மட்டும் உள்ளே அநுமதிக்கிறான் எனது பணியாள். என்னைத் தங்கள் குடும்ப வைத்தியனாகக் ...
மேலும் கதையை படிக்க...
பாணுக்கும் மனதிற்கும் என்ன சம்பந்தம்? கேவலம் வயிற்றுப் பசி அடங்க அது ஒரு வேளை உணவு மட்டுமே. ஆனால் ஓர் ஏழையைப் பொறுத்த வரை, அதைப் பெறுவதில் கூட நிறையச் சவால்கள். .அதை எதிர் கொண்டு அனுபவபூர்வமாக உணரும் போது, வாழ்க்கையே ...
மேலும் கதையை படிக்க...
முள் தோப்பு எங்கும் மல நாற்றம். இந்தத் தெருவிலேயே பெரியம்மாதான் முதலில் தோட்டத்துக்குப் போகும். தெருக் குழாயில் தண்ணீர் பிடிப்பதற்காக பெரியம்மாவுக்கு விடியற்காலை இரண்டு மணிக்கு எல்லாம் விழிப்பு வந்துவிடும். தண்ணீர் பிடித்துக்கொண்டு இருக்கும்போதே, பறவைகள் சத்தம் கேட்கிறதா எனப் பார்க்கும்.'பறவை ...
மேலும் கதையை படிக்க...
அடுத்தடுத்து தனது இரண்டு மகளுக்கும் திருமணம் நடத்தி முடித்து விட்டார் நந்தகுமார். மிகப்பெரும் பணக்காரரான அவரது வீடு அரண்மனை மாதிரி. மகன்களுக்கு வாய்த்த இரண்டு மருமகள்களும் மகன்களோடு அதே வீட்டில் தான் வாசம். அன்று நந்தகுமாரை பார்க்க அவரது நண்பரொருவர் வந்திருந்தார். வந்தவர் ...
மேலும் கதையை படிக்க...
மைக்கேல்
கடமை
பாணோடு போன மனம்
வெளிய
புதிய மருமகள் – ஒரு பக்க கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)