ராதா போட்ட டிராமா…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 20, 2020
பார்வையிட்டோர்: 4,868 
 

அவன் பெற்றோர்கள் அவனுக்கு வைத்த பெயர் ஆனந்தன்.அவன் வாழ்க்கையில் எப்போதும் ஆனந்தமாக இருக்க வேண்டும் என்ற ஆசையில் அந்த பெயரை வைத்து இருப்பார்கள் என்று அவன் நினைத்தான்.

ஆனால் ஆனந்தனுக்கோ தான் செய்யும் காரியம்,தன் குடும்பம்,தன் சம்பாத்தியம்,தன் மணை வி செய்யும் சமையல்,தன் குழந்தைகள் அழகு,அவர்கள் வாங்கும் மார்க்குகள்,தன் வீட்டு அழகு, எதுவுமே சந்தோஷத்தை தருவதில்லை.

பிறர் செய்யும் காரியங்கள் பிறர் வீட்டு அழகு,பிறர் குழந்தைகளின் மார்க்கு,இவைகள் தான் அவனுக்கு நன்றாய் இருப்பது போல் அவன் எண்ணுவான்.அவன் கை எழுத்து அழகாய் இருந்தாலும், பிறர் கை எழுதுவதை மிகவும் ரசிப்பான்.

எப்போதும் மற்றவர்கள் போல் இல்லையே என்று ஏங்குவான்.

அவன் மணைவி அவனுக்கு பல தடவை எடுத்து சொல்லி,அவனை அந்த மன நிலையில் இரு ந்து மாற்ற முயற்சி பண்ணினாலும்,அவன் மாறாமலே இருந்து வந்தான்.

பல தடவை முயற்சி பண்ணியும்,அவன் குணம் மாறாததால்,‘சரி போ,இது அவர் பிறவி குணம் போல இருக்கு.அது மாறாது’ என்று நினைத்து,என்று அவனை திருத்துவதை விட்டு விட்டாள்.

அன்று சனிக் கிழமை.சாயங்காலம் ஆனந்தும்,அவன் மணைவி கமலாவும் டீ.வி.யில் சினிமா பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

‘·போன்’ மணி அடித்தது.

‘·போனை’ எடுத்து பேசினான் ஆனந்தன்.அவன் நண்பன் ராஜா “ஆனந்த்,என் பையனுக்கு நாளைக்கு பொறந்த நாள்.நீ உன் மணைவியையும்,குழந்தையையும் அழைச்சு கிட்டு, மதியம் சாப்பா ட்டுக்கு இங்கே வந்து விடு என்ன” என்று சொல்லிக் கூப்பிட்டான்.

சந்தோஷம் ஆனந்தனுக்கு.

’அப்பாடா,நாளை மதியம் ஒரு நல்ல சாப்பாடு சாப்பிடலாம்.ராஜா மணைவி ராதா ரொம்ப நல்ல சமைப்பா’ என்று நினைச்சு சந்தோஷப்பட்டான்.அவன் மனம் குதுகூலத்தில் மிதந்தது.

மனதிற்குள் சந்தோஷத்துடன் விஷயத்தை மணைவி கமலாவிடம் சொன்னான் ஆனந்தன்.

ஞாயிற்றுக் கிழமை.மணி பத்து தான் ஆகி இருந்தது.

ஆனந்த் ரெடியாகி விட்டான்.

தன் பொடிப் பயலை அவனே ‘டிரஸ்’ பண்ணி ரெடி பண்ணி விட்டு,மனைவியை அவசர படுத் தினான் ஆனந்தன்.

“இருங்க,உங்களுக்கு என்ன ரெடி ஆயிட்டீங்க,எனக்கு எவ்வளவு வேலை இருக்கு.அதை எல்லாம் முடிக்க டயம் வேணாமா” என்று அதட்டினாள் கமலா.சாதாரண நாளாய் இருந்தால் அவளை கோபித்துக் கொண்டிருப்பான் ஆனந்தன்.இன்று தன் நண்பன் ராஜா வீட்டிற்கு சாப்பிட போகும் சந் தோஷத்தில் “சரி,சரி, சீக்கிரம் முடி”என்று சொல்லி விட்டு பேப்பர் படிக்க ஆரம்பித்தான் ஆனந்த்.

கமலா ரெடி ஆனந்தும் எல்லோரும் காரில் ஏற வெளியே கிளம்பினார்கள்.

பையனை அழைத்துக் கொண்டு ஆனந்தன் முன்னால் போனான்.

கமலா வீட்டு கதவை பூட்டி விட்டு பின்னால் வந்து காரில் ஏறினாள்.

அவள் கையில் இரண்டு தூக்குடன் இருந்ததை கவனித்த ஆனந்தன் “எதுக்கு இந்த தூக்கெ ல்லாம் எடுத்துக்கிட்டு வரே கமலா.அவங்க நம்பளை சாப்பிட கூப்பிட்டு இருக்காங்க.நீ ‘ஜம்’ன்னு கையை வீசிக் கிட்டு வரக்கூடாது.அவங்க என்ன நினைச்சுப்பாங்க”என்று செல்லமாக மணைவியை கடிந்துக் கொண்டான் ஆனந்தன்.

“இல்லீங்க,ராதா தான் ‘நைட்டு’க்கும் சாப்பாடு கையில் குடுத்து விடறேன்.‘நாம எல்லாம் கொ ஞ்ச நேரம் ‘கேம்ஸ்’ எல்லாம் ஆடிட்டு, ’ஈவினிங்க்’ வரை பேசிக் கிட்டு இருந்துட்டு ‘லேட்டா’ வூட்டுக்கு போவலாம்’ன்னு சொன்னாங்க” என்று கமலா சொன்னதும் ஆனந்தன் தன் மனதில்’ நல்ல வேளை,ராத்திரிக்கும் ராதா சமையலா’ என்று நினைத்து சந்தோஷப் பட்டான்.

பிறகு தன் காரை ஓட்டிக்கொண்டு தன் நண்பன் ராஜா வீட்டிற்கு வந்தான்.

கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டு எல்லோரும் சாப்பிட உட்கார்ந்தார்கள்.

ராதா எல்லோருக்கும் தட்டுப் போட்டு தான் செய்த சமையலை பறிமாறினாள்.

வெண்டைக்காய் மோர் குழம்பு ரொம்ப பிரமாதமாய் இருக்கவே ஆனந்தன் இரண்டு தடவை ஆசை தீர மோர் குழம்பு விட்டுக் கொண்டு ஒரு பிடி பிடித்தான்.

”ஆஹா வெண்டைக்கா மோர் குழம்பு ரொம்ப பிரமாதம்.’சூப்பர்’ .என்ன ருசி.வெண்டைக்கா மோர் குழம்பு பண்ணினா,இப்படி தான் ருசியா பண்ணணும்.நீயும் பண்றயே வெண்டைக்கா மோர் குழம்பு.மோர் குழம்பா அது.சக்கையும் தண்ணியுமா.கமலா நீ ராதா கிட்டே இன்னைக்கு இந்த மாதிரி மோர் குழம்பு எப்படி பண்றதுன்னு நல்லா கேட்டுக் கிட்டு வா” என்று ‘இது வேறு யாரோ வீடு’என்று கூடப் பார்க்காமல் மணைவிக்கு உபதேசம் பண்ணினான் ஆனந்தன்.

“சரிங்க.நான் ராதா கிட்டே கேட்டுத் தொ¢ஞ்சக்கறேன்” என்று சொல்லி விட்டு கமலா சாப்பி ட்டுக் கொண்டிருந்தாள்.

பிறர் சமையலை புகழும் போது தன்னையே மறந்து விடுவான்.அவ்வளவு சந்தோஷம் ஆனந்தனுக்கு.

சாயங்காலம் வரை அவர்கள் வீட்டில் ஏதோ ‘கேம்ஸ்’ ஆடுவது, நடு நடுவில் டீ.வி.யில் சினிமா பார்ப்பது, என்று பொழுது போக்கி விட்டு ஆறு மணிக்கு வீடு கிளம்ப தயார் ஆனார்கள் ஆனந்தனும் கமலாவும்.

“கமலா, நீ பண்ணிக்கொண்டு வந்த மோர் குழம்பு கொஞ்சம் தான் மீந்து இருக்கு.எங்கே அந்த மீதி மோர் குழம்பையும் உன் கிட்டே திருப்பி குடுத்து விடப் போறேன்ன்னு பயந்து போய் என் வீட்டுக்காரர்,நீங்க கை கழுவ போன போது என் கிட்டே ரகசியமா வந்து ‘ராதா, மீதீ மோர் குழம்பை திருப்பி குடுத்து விடாதே.எனக்கு ‘நைட்’ சாப்பிட வச்சுக்க.கமலா கிட்டே மோர் குழம்பு மொத்தம் காலியாகி ஆயிசுச்சின்னு சொ¡ல்லி விடு என்ன’ ன்னு கெஞ்சினார்.அதனால் நான் மீந்த மோர் குழம் பை அவருக்காக எடுத்து வச்சு கிட்டு உன் கிட்டே காலி தூக்கைத் தான் குடுத்து இருக்கேன். தப்பா எடுத்துக்காதே.இந்தா காலித் தூக்கு” என்று சொல்லி காலித் தூக்கை கமலாவிடம் நீட்டினாள் ராதா.

“இப்படியா எல்லோர் முன்னாலேயும் என் மானத்தே வாங்கறது ராதா.நீ ரொம்ப மோசம்.இரு, இரு.எனக்கும் ஒரு ‘சான்ஸ்’ கிடைக்காமலா போயிடும்.நான் நிச்சியம் ‘டிட் ·பார் டாட்’ பண்ணி பழி தீத்துக்காம விட மாட்டேன்” என்று போலி கோவத்தில் சொன்னான் ராஜா.

”தப்பா எடுத்துகாதீங்க ‘ப்லீஸ்’.நான் ஏன் சொன்னேன் என்கிற காரணத்தை உங்களுக்கு அப்புறமா சொல்றேங்க” என்று சொல்லி தன் கண்ணை சிமிட்டினாள் ராதா.

ராதா சொன்னதைக் கேட்ட ஆனந்தன் முகத்தில் பேய் அறைந்து போல் இருந்தது.

கமலா முகத்தை நிமிர்ந்து பார்க்க கூட ¨தா¢யமில்லை ஆனந்தனுக்கு.

‘கமலா பண்ண மோர் குழம்பை போய் ராதா பண்ணினதுன்னு நினைச்சு,நாம் எல்லோர் முன் னாலேயும் பொ¢ய ‘லெக்சர்’ அடிச்சோமே.அது எவ்வளு பொ¢ய முட்டாள் தனம்’ என்று நினைத்து வெ ட்கத்தால் தன் தலையை குனிந்துக் கொண்டே“கமலா கிளம்பலாமா,உன் ‘·ப்வோ¢ட் சண்டே ப்ரோக் ராம்’பாக்க டயம் ஆயிடுச்சே,கிளம்பு சீக்கிரம்” என்று கமலாவை ரொம்ப கரிசனத்தோடு கொஞ்சினான் ஆனந்தன்.

குழந்தையை அழைத்துக் கொண்டு எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு காரில் ஏறி கிளம்பி னார்கள் ஆனந்தனும் கமலாவும்.

அவர்களை அனுப்பி விட்டு கணவணை வீட்டுக்குள் தள்ளிக் கொண்டுப் போனாள் ராதா.

கணவனை கொஞ்சியபடியே “தப்பா எடுத்துக்காதீங்க.கமலா தான் அவள் கணவனின் ‘பிறரை யும்,பிறர் பொருள்களையும்,பாத்து புகழும் குணாதிசயதை’ மாத்தவே தான்,இந்த நாடகம் ஆட சொன் னா.வேறு ஒன்னும் இல்லீங்க” என்று சொல்லி சிரித்துக் கொண்டே அவன் கன்னத்திலே ஒரு ‘கிஸ்’ ஸையும் கொடுத்தாள் ராதா.

மகிழ்ந்து போனான் ராஜா.

காரை அமைதியாக ஒட்டி கிட்டுப் போன ஆனந்தன் மனம் அமைதியின்றி அலை மோதியது.

‘தன் கணவன் இப்படி அவசரப் பட்டு எல்லார் எதிரிலும் சொல்லி,தன் மூக்கை உடைச்சுக் கிட்டாரே’ என்று நினைத்து மிகவும் வருத்தப் பட்டு கிட்டே வந்தாள் கமலா.
ஒரு சபதம் எடுத்து கிட்டான் ஆனந்தன்.

’இனி மத்தவங்களே புகழும் தன் கெட்ட பழக்கத்தை இன்னியோடு குழி தோண்டி புதைச்சுட ணும்.இன்னிக்கு நடந்த சம்பவம் நமக்கு ஒரு நல்ல பாடமா அமையணும்’ என்று மனதில் எண்ணி ணான்.

உடனே அவன் எடுத்துக் கொண்ட சபதத்தை தன் ஆசை மணைவி இடம் சொன்னான்.

திருந்திய ஆனந்தன் மனதில் ஒரு புத்துணர்ச்சி பிறந்தது.அவன் மனம் நிம்மதி அடைந்தது.

தன் கணவன் எடுத்துக் கொண்ட சபததைக் கேட்ட கமலா மிகவும் சந்தோஷப் பட்டாள்.

‘அப்பாடா,நாம எவ்வளவோ முயற்சி பண்ணோம்.அது நடக்கலே.ஆனா நாம ராதா கிட்டே போட சொன்ன ‘டிராமா வாலே அது நடந்திச்சே’ என்று நினைத்து சந்தோஷப் பட்டாள் கமலா.

ஆனந்தன் ஒரு சினிமா பாட்டை முனு முனுக்க ஆரம்பித்தான்.

’அவர் சினிமா பாட்டு முனு முனுப்பதாலே,அவர் மனசு நிம்மதியா இருக்குன்னு தான் அர்த்தம்’ என்பதை நன்றாக அறிந்து இருந்த கமலா நிம்மதி பெரு மூச்சுவிட்டாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *