ராகிங் – ஒரு பக்க கதை

 

‘‘இங்கே புதுசா சேர்ந்தவர்களை ராகிங் பண்ணுவாங்களா..?’’

‘‘சேச்சே! அப்படியெல்லாம் இல்லை… யார் சொன்னது?’’

‘‘புதுசா சேர்ந்த ஸ்டூடன்ட்ஸ் தலையில் தண்ணி ஊத்துவாங்கன்னு கேள்விப்பட்டேன்…’’

‘‘அதெல்லாம் எப்போவோ நடந்தது… இப்போ அது மாதிரி இல்லை. ரொம்ப டிசிப்ளினா இருப்பாங்க…’’

‘‘பேப்பரை கிழிச்சு தலையில் போடுவாங்களாமே?’’

‘‘அப்படி எல்லாம் இல்லை!’’

‘‘ஜூனியர்ஸோட லன்ச் பாக்ஸைத் திறந்து மத்தவங்க சாப்பிடுவாங்கன்னு புகார் இருக்காமே?’’

‘‘மேடம்… யாரோ ஒருத்தன் எப்பவோ செய்ததை வெளியில இருக்குறவங்க பெரிசு பண்ணிப் பேசுறாங்க. எங்க நிறுவனத்துக்கு கெட்ட பேர் உண்டாக்குறதுக்காகவே கிளப்பிவிடுறதுதான் இதெல்லாம். நீங்க நம்பாதீங்க. எந்தத் தப்பும் நடக்காம நாங்க பாத்துக்குவோம்…’’

‘‘இன்னும் ஒரே ஒரு விஷயம்… சீனியருங்க தப்புப் பண்ணிட்டு பழியைப் புதுசா சேர்ந்தவங்க மேல போட்டுடுவாங்கன்னு சொல்றாங்களே… அது…’’

‘‘போட்டா..? நாங்க நம்பிடுவோமா? ஏன் உங்களுக்கு இப்படி எல்லாம் சந்தேகம்..?’’

‘‘மூணு வருஷமா என் மனசில் உறுத்திக்கிட்டு இருக்கிறதை இப்பத்தானே கேக்க முடியும்? அதுவும் ஆயிரக்கணக்கில் பணத்தைக் கட்டிட்டு… உங்களை நம்பித்தான் என் மகனை எல்.கே.ஜியில சேர்க்கறேன். யூ.கே.ஜி பசங்க அவனை படுத்தாம பாத்துக்குங்க!’’

- பெப்ரவரி 2014 

தொடர்புடைய சிறுகதைகள்
‘என்னம்மா... பையனைப் பிடிச்சிருக்கா? பதிலே சொல்லாமல் இருக்கே!’’ - சடகோபன் தன் மகள் மாலதியிடம் மெல்லிய குரலில் கேட்டார்.மாலதி மெளனமாக இருந்தாள். காரணம், இது ரெண்டாந்தார சம்மந்தம். பிரசவத்தின்போது மனைவியை இழந்தவர்தான் மணமகன். கையில் ஒரு பெண் குழந்தை. ‘‘பையனை நல்லா தெரியும்மா! ...
மேலும் கதையை படிக்க...
ரகுவோடு கல்யாணம் முடிந்து, உமா புகுந்த வீட்டுக்கு வந்தாயிற்று. புறப்படும் முன் அவள் அம்மா சொன்னதை மறுபடி நினைத்துக்கொண்டாள். ‘‘முதலில் சாமி படத்துக்கு விளக்கு ஏத்தி நமஸ்காரம் பண்ணும்மா...’’ - மாமியார் பார்வதி சொன்னாள். உமா ஒரு நிமிடம் தயங்கி நின்று, ‘‘பழக்கம் இல்லேம்மா... ...
மேலும் கதையை படிக்க...
‘‘நீ காலேஜ்ல படிக்கும்போது எடுத்த போட்டோக்கள் இருக்கா? அதுல நீ எப்படி இருக்கேன்னு பார்க்கணும்!’’ புது மாப்பிள்ளை பாஸ்கர் தன் மனைவி ரேகாவிடம் கேட்டான். அவன் மனதில் ஒரு திட்டம். தன் பர்சனல் ஆல்பத்தை எடுத்து வந்தாள் ரேகா. ஒவ்வொரு போட்டோவாக பார்த்தான் ...
மேலும் கதையை படிக்க...
”அம்மனுக்கு அர்ச்சனை பண்ணின குங்குமத்தை இட்டுக்கம்மா!’ – மருமகள் ரேவதியிடம் அன்பாகச் சொன்னாள் பார்வதி ”வேண்டாம் அத்தை…வியர்வையில் அழிஞ்சுடும் ஸ்டிக்கர் பொட்டே வெச்சுக்கிறேன்.” ”இல்லம்மா …வெளியே போகும்போது ஸ்டிக்கர் பொட்டு வச்சுக்க…இப்போ வீட்ல தானே இருக்கே? அதோட, அர்ச்சனை குங்குமம் இட்டுக்கறதுதானே நம்ம வீட்டு ...
மேலும் கதையை படிக்க...
ரேவதி கல்யாணம் முடிந்து புகுந்த வீட்டிற்கு வந்து சில நாட்கள்தான் ஆகியிருந்தன. அந்த வீட்டில் கடைப்பிடிக்கும் சில வழக்கங்கள் அவளுக்கு சரியாகப் படவில்லை. அதற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ள அவள் தயாராக இல்லை. ஈகோ இடித்தது. கணவன் ரவியிடம் சொல்லி வருத்தப்பட்டாள். “அது என்ன ...
மேலும் கதையை படிக்க...
நம்ப முடியுமா?
பொறுமை
போட்டோ
வழக்கம் – ஒரு பக்க கதை
மாற்றம் வரும் – ஒரு பக்க கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)