Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

யாருமா இவங்க?

 

“அம்மா யாருமா இவங்க? இப்படி இருக்காங்க!”

“ஓய்… சத்தம் போட்டுப் பேசாத.. அவங்க அசிங்கம்… அவங்களப்பத்தி பேசறோம்னு தெரிஞ்சா நம்மல அசிங்க அசிங்கமா திட்டுவாங்க.. அவங்க பக்கம் பார்க்காத?”

“அப்ப அவங்க மனுஷங்க இல்லையாமா?”, என்று கேட்ட விக்னேஷின் கேள்விக்கு, பதில் சொல்லத் திணறி, ‘உஷ்’ என்று உதட்டின் மேல் கைவைத்து அடக்கினாள் கோமதி.

***

அடுத்த நாள் கடைவீதியில் விக்னேஷுடன் நடந்து கொண்டிருந்தாள் கோமதி. கைப்பைக்குள் ஆஸ்பத்திரியில் கட்ட வேண்டிய ரெண்டு லட்ச ரூபாய் இருந்தது. விக்னேஷின் அப்பா ஒரு வாரமாய் ஆஸ்பத்திரியில், பெரிய வாகன விபத்திற்குப்பின் சிகிச்சையில் உள்ளார். ஒரு மேஜர் ஆப்ரேஷன் பண்ணினால் தான் பிழைப்பார் என்று சொல்லப்பட்ட நிலையில், எப்படி எப்படியோ கஷ்டப்பட்டு இந்த ரெண்டு லட்சத்தை புரட்டியிருந்தாள் கோமதி. கைப்பையை பத்திரமாக கைக்குள் அடக்கித்தான் நடந்து கொண்டிருந்தாள். அப்படியும் ஒரு திருடன், அந்த கைப்பையை பறித்துக்கொண்டு ஓட ஆரம்பித்தான்.

“திருடன் திருடன்”, என்று கத்திக்கொண்டே பத்து அடி கூட அவளால் ஓட முடியவில்லை. கால் தடிக்கி விழுந்தவள் ‘ஓ’வென கதற ஆரம்பித்து விட்டாள். அம்மாவின் அழுகை கண்ட விக்னேஷிக்கும் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. ஆனால் யாரோ அவனை துரத்திக்கொண்டு ஓடுவதாய் கண்ணில் பட்டது.

சுற்றிலும் கூடிய கூட்டம், பாவமாய் இருவரையும் பார்த்துவிட்டு நகர ஆரம்பித்தது.

அப்போது மாதாக்கோவில் மணி ஒன்பது முறை அடித்து ஓய, ‘ஒன்பதரைக்குள் பணம் கட்டிவிடுவேன்’ என்று நேற்று டாக்டரிடம் கோமதி சொன்னது ஞாபகம் வர இன்னும் பதட்டம் பற்றிக்கொண்டது.

அப்போது ஒரு குரல் கேட்டது.

“மேடம் இந்தாங்க உங்க பேக்”

சட்டென பெருமழை கொட்டியது போல உடம்பு முழுதும் சந்தோஷம் பொங்க தலையில் கைவைத்து அமர்ந்திருந்த கோமதி தலை நிமிர்ந்து பார்த்தாள்.

அன்று பார்த்த அதே திருநங்கை, மூச்சு வாங்கிய படி சிரித்த முகத்துடன் நின்று கொட்டிருந்தார்.

படாரென கன்னத்தில் அடி வாங்கியது போல உணர்ந்தாள் கோமதி.

“ரொம்ப நன்றிங்க”, எனச் சொல்லி தனது பேக்கை வாங்கிக்கொண்டாள்.

“உள்ள இருக்கற‌தெல்லாம் சரியா இருக்கானு பார்த்துக்கோங்க”

“பரவாயில்லைங்க, எல்லாம் சரியாத்தான் இருக்கும்.. விக்னேஷ் இவங்களுக்கு கை கொடு”

சிரித்த முகத்துடன் கை குலுக்கிய விக்னேஷ் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டான்.

“யாருமா இவங்க?”

“நம்ம தெய்வம்பா!”, என பதில் சொன்ன அம்மாவை வினோதமாகப் பார்த்தான் விக்னேஷ். 

தொடர்புடைய சிறுகதைகள்
"சார்.. ஒரே காத்தும் மழையுமா இருக்கு... சீக்கிரம் வீட்டுக்கு விடுங்க... பஸ் ஸ்டாண்டு போயி பஸ்ஸ புடிச்சா... ஒரு மணி நேரமாகும் வீட்டுக்கு போறதுக்கு... இப்பவே மணி ஆறாச்சு... இருட்டிக்கிட்டு வேற கெடக்கு...", என நான் புலம்பியது யார் காதிலும் விழுந்த ...
மேலும் கதையை படிக்க...
அவர்களுக்கு அது ஐந்தாவது விசிட்.. ஐந்து திக் ப்ரண்ட்ஸ்.. ஐடில ரொம்ப பிஸி லைப் வாழ்றவங்க... அப்பப்ப இந்த மர்ம மலைக்காட்டுக்கு ட்ரக்கிங் வருவாங்க.. விஜி, மிதுன், சோபன், ரித்தி அப்பறம் ரமேஷ்.. வேறு வேறு மாநில ஆளுங்கலா இருந்தாலும் எல்லோருடைய ...
மேலும் கதையை படிக்க...
மழைக்கான பருவ காலமே இல்லாத நேரத்தில் நேற்று இரவிலிருந்து பெய்த தொடர் மழையால் வீதிகள் நீரினால் நிரம்பி ஊரே வெள்ளத்தில் மிதக்க ஆரம்பித்திருந்தது. "தாத்தா.. தாத்தா.. வீட்டுக்குப் போலாம்..", என மீண்டும் அனத்த ஆரம்பித்தான் கேசவ்.. இங்கு வந்ததிலிருந்து இதே பாட்டுத்தான் பாடுகிறான்.. "டே.. ...
மேலும் கதையை படிக்க...
1,800 களின் பிற்பகுதி, அன்றைய பேச்சுத்தமிழே, காதில் தேன்வந்து பாய்ந்தது போல் சுவைக்கும். மண்மணக்கும் அந்த அழகிய கிராமத்தின் சுத்தமான காற்றை சுவாசித்துக்கொண்டே புதிதாய் பூத்த மஞ்சள் ரோஜாவை ரசித்து நின்றவள் காதில், உரக்கக்கேட்டது... “பூ... எங்கம்மா இருக்க....?” ஆனால் பூங்குழலி அக்குரலை சட்டை செய்யவில்லை. ...
மேலும் கதையை படிக்க...
"அந்த வில்லேஜ்ஜுல எதுக்கு தினமும் இவ்வளவு இறப்பு நிகழுது?.. அவ்வளவு வீரியமா அங்க கொரோனா இருக்கு?" "தெரியல சார்.. நான் நம்ம டாக்டர் டீம அங்க அனுப்பி வைக்கறேன்... அது நம்ம மாவட்டத்து எல்லையில ரொம்ப தூரம் தள்ளி ஒதுக்குப்புறமா இருக்கற வில்லேஜ்கறதால, ...
மேலும் கதையை படிக்க...
"வாங்க சார்.. வாங்க சார்... வாங்க சார்"னு கூப்ட்டு கூப்ட்டு ஓஞ்ச சமயத்துல, "சரி சரி அடுத்த திங்கக்கிழம வரேனு" ஒத்துக்கிட்டாரு எங்க எம்டி.. எதுக்கு எங்க... அப்படீன்னு நான் சொல்றதுக்கு முன்னாடி எங்க எம்டியைப்பத்தி சொல்லீட்றேன்... ஒரே சிடு சிடுன்னு இருப்பாரு... யாருக்கிட்ட எப்ப ...
மேலும் கதையை படிக்க...
"கிருஸ்மஸ் கிருஸ்மஸ் வந்தாச்சு நியூடிரஸ் நியூடிரஸ் தச்சாச்சு பரிசுகள் கிடைக்கும் பட்சணம் கிடைக்கும் மனசுக்குள் சந்தோஷம் வந்தாச்சு நம்ம மனசுக்குள் சந்தோஷம் வந்தாச்சு ஹேப்பி ஹேப்பி கிருஸ்மஸ்! மேர்ரி மேர்ரி கிருஸ்மஸ்! ஹேப்பி ஹேப்பி கிருஸ்மஸ்! மேர்ரி மேர்ரி கிருஸ்மஸ்!" என்ற பாடல் சத்தமாக தனது மகிழ்ச்சியை பீட்டரின் வீட்டிற்குள் ஒலி பரப்பிப்கொண்டிருந்தது. கிருஸ்மஸ்ஸுக்கு இன்னும் ...
மேலும் கதையை படிக்க...
"என்னங்க.. என்னங்க.. ராத்திரி பூரா குழந்தை அழுகற சத்தம் கேட்டுச்சே.. என்னவா இருக்கும்?" "என்ன‌.. குழந்தை அழுகற சத்தமா.. எனக்கு அப்படி ஒன்னும் கேக்கலையே..!" "என்னங்க சொல்றீங்க? அப்பறம் எனக்கு மட்டும் எப்படி கேட்டுச்சு..?", என்று பயந்தபடியே கேட்ட மனைவியை நானும் பயந்தபடியே பார்த்தேன்... எனக்கு ...
மேலும் கதையை படிக்க...
கட்சி அலுவலகம். தேர்தல் அறிவித்த தேதி முதலே கலகலப்பாக மாறிவிட்டது. யாரோ ஒருத்தர் வந்து போன இடமாக சில நாட்களுக்கு முன்பாக இருந்தது, இப்போது கூட்டம் கூட்டமாக கட்சிப்பணியாளர்கள் வந்து போகும் இடமாக மாறி இருந்தது. கட்சித்தலைமை ஒரு வழியாக கூட்டணி பேச்சு வார்த்தையை ...
மேலும் கதையை படிக்க...
கதை கேட்க: https://www.youtube.com/watch?v=9EUUtCFY3mI அமெரிக்காவின் அழகிய நகரமொன்றின் நதிக்கரை ஓரத்தில், மாலை நேர சூரியன் மேற்கிலிருந்து பார்க்க, ரம்யமான அந்த பொழுதில் அவன் கையை இறுகப்பற்றிய அவள், ஏதோ சொல்ல வாய் திறந்தாள்.. "எது வேணா சொல்லு... ஆனா நீ இப்போ சொல்லப்போறத மட்டும் ...
மேலும் கதையை படிக்க...
பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்
எங்கேயும் கேட்காத குரல்
ஈரம்!!
1800களின் பிற்பகுதி
சோறு முக்கியம் பாஸ்
ரசவாதி
வ‌ருவாரா மாட்டாரா?
திக் திக் திக்
திருந்தாத‌ ஜென்மங்கள்
இப்படியும் நடக்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)