மோட்டார் குதிரை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 1, 2012
பார்வையிட்டோர்: 10,946 
 

“ஞாயிற்றுக்கிழமை வாங்கித்தர்றேன்டா கண்ணா. எனக்கு லீவ் இல்ல.” என்று தன் மகன்கண்ணனை சமாதானப்படுத்தினார் ரவி.

கண்ணன் தன் நண்பன் பாரதியின் வீட்டில் இருப்பதுபோல ஒரு மரக்குதிரை வேண்டுமென்று மூன்று நாட்களாக அடம்பிடித்துக்கொண்டிருந்தான். தினமும் அலுவலகம் முடிந்து வீடு வந்து சேரவே ஏழெட்டு மணி ஆனதால் அதன்பிறகு வெளியில் சென்று வாங்கித்தரமுடியாமல் ஞாயிற்றுக்கிழமை
வாங்கித்தருவதாகக் கூறிவந்தார் ரவி.

இதற்கிடையில் சிறுவன், தந்தையின் பைக்கை குதிரையாக்கியிருந்தான். பக்கத்துவீட்டு வேலன்
முன்சக்கரத்தின் மண்-தடுப்பானின் மீதமர்ந்து விளையாடும்போதெல்லாம் அது சீசாவாகவும் மாறியது.

இதைப் பலமுறை பார்த்தும் ரவியும் அவர் மனைவி சந்தியாவும் எதுவும் கண்டுகொள்ளவில்லை.
ஞாயிறுவரை அவன் மரக்குதிரையை மறந்தால் போதுமென்றிருந்தது அவர்களுக்கு.

ஒருவழியாக ஞாயிறு காலை வந்தது. ரவி கண்ணனை எழுப்பினார்.

“எழுந்திருடா கண்ணா! குளிச்சிட்டு சாப்டிட்டு கிளம்பலாம்.” என்றார்.

“எங்கப்பா?.. நான் வரல. இன்னும் கொஞ்சநேரம் தூங்கிக்கிறேனே..” என்று கண்களைத் திறக்காது கெஞ்சி மீண்டும் மறுபுறம் புரண்டு படுத்தான்.

“சா¢. அப்ப மரக்குதிரைய அடுத்தவாரம் வாங்கிக்கலாம்.” என்றார் தந்தை.

அதைக்கேட்டதும் சிறுவன் வெடுக்கென்று கண்விழித்து எழுந்து, “வேண்டாம்பா. இன்னைக்கே வாங்கலாம். ப்லீஸ்!” என்றான்.

“சா¢. அப்ப கிளம்பு.” எனக்கூறி அவனுக்கு பல்துலக்க பேஸ்ட்டை பிரஷ்ஷில் வைத்துத் தந்தார்
தந்தை.

குளித்துவிட்டு அம்மா சுட்டுவைத்த நெய் தோசைகளை ஒரு பிடி பிடித்துவிட்டு தந்தையும் மகனும்
கிளம்பினார்.

வெயில் படாதிருக்க மகனுக்கு தொப்பியை அணிவித்தார் ரவி. இரண்டு மூன்று இடங்களுக்குச் சென்றுவரத் தாமதமாகும் என்பதால் ஒரு கவா¢ல் ஒரு பாட்டில் தண்ணீரை எடுத்து கைப்பிடியில் மாட்டினார் தந்தை. அதைக்கண்ட கண்ணன் தனது அழகிய தண்ணீர்க்குடுவையை நிரப்பச்சொல்லி
தன் தாயிடமிருந்து வாங்கி அழகாக தோளில் மாட்டிக்கொண்டான்.

இருவரும் கிளம்பினர். பாரதியைப்போல் தானும் மரக்குதிரையில் விளையாடப்போவதை எண்ணி
கண்ணனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

முதலில் மருந்துக்கடையின்முன் வண்டியை நிறுத்தினார். கண்ணனும் இறங்கி தந்தையின்பின் சென்றான். கண்ணாடி வழியாக தொ¢யும் பொருட்களைப் பார்ப்பதில் அவனுக்கு மிகுந்த விருப்பம்.

ஆனால் அங்கு வா¢சையாக நான்கைந்துபேர் நின்றுகொண்டிருந்ததால் எந்த பொழுதுபோக்கும்
இல்லாமல் நிற்க அவனால் முடியவில்லை. கால்களும் கைகளும் துறுதுறுவென்று இருந்தன. திரும்பி
வேடிக்கை பார்த்தவனுக்கு இருசக்கர மோட்டார் குதிரை தென்பட்டது.

cடிப்போய் ஏறி, “குதிரை குதிரை! வேகமா போ! டொக் டொக்..” என்று கத்தியபடி மேலும் கீழுமாக
சாய்த்து விளையாடினான். இரண்டுமுறைகூட அவன் ஆடவில்லை. அதற்குள் வண்டி சமதளத்தில்
இல்லாததால் திடீரென பக்கவாட்டில் சாய்ந்தது.

“அப்பா!” என்று அலறினான். வண்டி பெரும் சப்தத்துடன் விழுந்தது. cடி வந்தார் ரவி. கடையில்
நின்றிருந்த பிறரும் cடி வந்தனர். வண்டிக்கு அடியில் சிக்கி நொறுங்கியிருந்தது கண்ணனது
தண்ணீர்க்குடுவை. அவன் நூலிழை தூரத்தில் விழுந்துகிடந்தான்.

கொஞ்சம் தவறியிருந்தால் தண்ணீர் குடுவைக்கு நேர்ந்ததுதான் தன் மகனுக்கு நேர்ந்திருக்கும் என்பதை எண்ணி ஆடிப்போனார் ரவி. வீட்டில் விளையாடும்போதே தடுத்திருந்தால் இப்படி ஆகியிருக்காது என்று ஒரு குற்ற ‾ணர்வு ஏற்பட்டது அவருக்கு.

கைகளில் லேசான சிராய்ப்புகளுடன் தப்பினான் கண்ணன். அவனுக்கு முதலுதவி செய்துவிட்டு அழைத்துச் சென்றார் ரவி. ஒருவழியாக மரக்குதிரையை வாங்கிக்கொண்டு வீடுதிரும்பினர்.

வீட்டிற்கு வந்ததும், “இந்தக் குதிரை விழாதுல்லப்பா?!” என்று பயத்துடன் கேட்டான் கண்ணன்.

“விழாதுடா கண்ணா. இனிமே வண்டில ஏறி விளையாடக்கூடாது என்ன? ‾ன் ·ப்ரென்ட்சுக்கும் சொல்லீடு. சா¢யா?” என்றார் தந்தை.

தன் மனைவியிடம் நடந்ததைச் சொல்லி பிள்ளையைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளுமாறு கூறினார். இருவரும் தங்களது அலட்சியப்போக்கை எண்ணி வருந்தினர். இனி இப்படி எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதிலும் கவனமாயிருந்தனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *