மென்காற்றாய்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 30, 2015
பார்வையிட்டோர்: 10,672 
 

சொல்லாமல் கொள்ளாமல் உள்ளே நுழைந்த காற்று திறந்திருந்த கதவை தனது சின்னக்கால்களால் சற்றே பலமாய் எட்டி உதைத்து விட்டு வந்த வழியாகவே திரும்பிச்சென்று விடுகிறது.

அவசரத்தில் அது எந்தக்காலால் உதைத்தது எனப்பார்க்க மறந்தே போகிறான். எந்தக்காலாய் இருந்தால் என்ன, எட்டி உதைத்தது உதைத்ததுதானே?பட்ட மிதி பட்டதுதானே,,,,?எட்ட நின்று சட்டென்று அடித்தால் என்ன,,,?அல்லது பக்கம் வந்து லேசாக கன்னம் வருடி செல்லமாய் தட்டிபோனால் என்ன, என இல்லாமல் மெல்ல வந்து கிள்ளிப் போ,,மெல்ல வந்து கிள்ளிப்போ,,,,, என்கிற மனப்பாட்டுடன் இரண்டுக்குமான வித்தியாசம் உணர்கிற தருணமாய் அது ஆகிப் போகிறதுதான்.

கட்டற்ற வெளியில் துண்மனம் கொண்டு வருகிற பெருவெளி சுமந்த தீயைப் போல்எங்கும் வியாபித்திருந்த காற்று இவனதும் இவனது மகனதுமான உடல் தொட்டுஇவர்கள்சென்றுகொண்டிருந்தஇருசக்கரவாகனத்தை ஓட்ட விடாமல் திணறச்செய்து விடுகிறதுதான் சற்றே/

அதற்கென்ன,,,,அதையெல்லாம் அப்படியே ஏற்றுக்கொண்டு இவனைப்போல எத்தனைபேர்போய்க்கொண்டும் வந்து கொண்டும்தான் இருக்கிறார்கள், நீண்ட நாற்கரச்சாலையில்,,,,,

இவனும் மகனுமாய் விடுமுறை தினமான இன்று காலை மதுரை வரை போய் வந்துவிடலாம் என்கிறதான நினைப்பில் இருந்தான்.அந்த நினைப்பை செயலா க்கி கேட்ட சிலரிடம் கூட சொல்லி வைத்திருந்தான். அந்தசொல்லேசெயலாய் மாறும் போது விளைவு வேறொன்றாய் ஆகித்தெரிகிறது. மறு நாள்காலை கிளம்ப வேண்டும் மதுரைக்கு நினைத்து நின்ற போதும் சரி,நான் இல்லை அவன்தான் அது என்கிற மனோநிலையுடன்
இருந்தபோதும் சரி, ஞாயிற்றுக் கிழமையின்விடுப்பைவிட்டுக்கொடுக்கமனம்முழுவதுமாய்ஒப்புக் கொள்ள
வில்லை,இதற்காகவா இப்படிச்சொன்னோம் ,நேற்றுநண்பர்க ளிடம்/

அடப் பாவித்தனமே,இப்பொழுது ரெண்டுங்கெட்டானாக அல்லவா ஆகிப்போ னது, நெருங்கிய நண்பரது உறவினர் வீட்டுக்கல்யாணத்திற்கு போய் வரலாம். வா குற்றாலம் வரை எனக் கூப்பிட்டவரிடம் இல்லை இன்று மதுரையில் ஒரு நிகழ்ச்சி இருக்கிறது,போகவேண்டும் எனச்சொல்லி விட்டு இப்பொழுது இதற்கும்போக
முடியாதமுட்டாள்த்தனமாய்,,,,,முதலில் செருப்பைக் கொண்டு நாலு போடவேண்டும் இப்படியாய் யோசித்து வைத்திருந்த மனதை/ என நினைத் துக் கொண்டிருந்தவனுள் மனம்தோனியயோசனையாய் அப்படியே வண்டி யை எடுத்துக்கொண்டு சாத்தூர் வரை போய் விட்டு வந்து விடலாம் என்கிற நினைப்பு மனம் குடி
கொண்டதாகிப்போகிறது,

மகனிடம் சொன்ன போது சரி என்றான்,வாருங்கள் அப்படியே செல்வோம் கைகோர்த்துக் கொண்டும் மனம் இணைந்துமாய் எனச்சொன்ன மகன் உடனே இரு சக்கர வாகனத்தின் சாவியை வாங்கிக்கொண்டு வண்டியைக்கிளப்பி விட்டான்.அவனுக்குஒருஆசைமனதினுள்ளாக.இவன்வயதுபையன்களைப் போல் பெரிய வண்டிஓட்ட வேண்டும்,என/

ரோட்டில் அவனுடன் போகும் போது அது தெளிவு பட்டுத் தெரியும்,இவன் வயது பையன்கள் சிலர் சாலையில் பெரிய வண்டி ஓட்டிச்செல்கிற சமயம் விரிவுகொண்டஅவனதுவிழிகளில்பட்டுத்தெரிக்கிற ஏக்கம்இவனை வெகுவா கவே பாதித்ததுண்டு.சமயங்களின்சில வேளைகளில் அவனறியாமல் வார்த் தை கள்வந்து
விடுவதுண்டு.பெரிய வண்டி ஒண்ணுவாங்கிப்போட்டா நல்லாத் தான் இருக்கும் என/

இது போலாய் மனதில் குடிகொண்ட எண்ணங்கள் ஏக்கங்களாய்,ஏக்கங்கள் எண்ணங்களாய் மனம் நிறைந்து குடிகொள்கிறபோதும்,எண்ணங்கள் ஏமாற்றம் கொள்கிற போதும், வேதாந்தியாய் மனம் திரிகிற போதும் நன்றாக இல்லை தான்.அப்படியான நன்றாக இல்லையை சரிக்கட்டவே இப்போது சாத்தூர் வரை போய் வரலாம்
எனகிளம்புகிறான்.ஆத்திர அவசரத்திற்கு என முத்திரை குத்தி வைக்கப் பட்டிருந்தவண்டிவிசை பெற்று போய்க்கொண்டி ருந்த சாலை நால்வழிச் சாலையாய் காட்சிப்பட்டும்,படம் பிடித்துக் காண்பிக் கப்பட்டுமாய்/

இப்படியாய் இருசக்கர வாகனத்தில் எல்லையில்லா காற்றை எதிர் கொண்டு பயணிப்பதும் குதூகலிக்கும்எண்ணங்களின் குவியல்களை மனம் வியாபிக்க விட்டுக்கொண்டு அலைவதும் நன்றாகவே இருந்திருக்கிறது இது நாள்வரை, என்றான்மகன்/

இருசக்கரவாகனத்தில்ஏஆர் நகர் வரை சென்றார்கள். அங்கு ஒருகடையில் டீசாப்பிட்டுவிட்டு திரும்பிவிட்டார்கள்,டீநன்றாகஇல்லை.

ராமரின்குழந்தையைப்பார்க்கப்போனபோதுஇந்தக்கடையில்தான்டீசாப்பிட்டான், ஆறு மாதத்திற்கு முன்பாய்நடந்த கொடுமை சாப்பிட்ட டீயின் ருசியாய் இன் னும் மனம் ஒட்டிக் கொண்டிருந்ததாகவே பட்டது இப்பொழுது கடையில் டீ சாப்பிடும் போது.

ராமரின் மாமனார் வீடுஅங்குதான்இருந்தது,சொல்லியிருக்கிறான் ஏற்கனவே மாமனார் பற்றியும் மாமனாரின் வீட்டார்களைப் பற்றியுமாய். தலைமுறைதலை முறையாய் ஒன்றுக்குள் ஒன்றாய்இருந்த சம்பந்தம்தாண்டிமுதன்முறையாய் அந்நியத்தில் சம்பந்தம் செய்திருந்தான்.ராமரின் அம்மாவுக்குக்கூட இதில் ஒரு சின்ன வருத்தம் இருந்தது,எனது தம்பி பெண்,,,,என ஆரம்பித்து ஒரு பாட்டம் பாடித்தீர்ப்பாள். அந்தப்பாட்டையெல்லாம் காற்றோடு காற்றாய் போகும் படி செய்து விட்டான் ராமர்.கட்டுனா அந்நியத்துலதான்,இல்லைன்னா எனக்கு கல்யாணமே வேண்டாம் என்ற அவனது பிடிவாதம் ஏ ஆர் நகரில் அவனை சம்பந்தம் செய்ய வைத்தது.

தாய் வீட்டில் பாதி நாள் என்றால் மாமனார் வீட்டில்மீதி நாள்எனஇருந்தவன் திடீரென ஒரு நாள் அதிகாலை நான் அப்பா ஆயிட்டேன் என அறிவித்து விட்டான் எல்லோருக்கும் கேட்டும் படி,அது இவனுக்கும் கேட்டுவிட்டது.

இவனுக்கு குழந்தை பிறந்த நேரம் கௌவர்மெண்ட் ஆஸ்பத்திரியில் உடல் நலமில்லாமல் சேர்க்கப்பட்டிருந்த ராமரின் அம்மா இறந்து போகிறாள்.அம்மா இறந்தது அவசர வார்டின் அருகில் இருக்கிற பொது வார்டில்,குழந்தை பிறந் தது பிரசவ வார்டில்/ என்ன செய்வான் பாவம்,பெற்ற தாய் இறந்ததற்கு வருத்தப்படுவானா இல்லை மனம் பூரிக்க வைத்த குழந்தை பிறப்பிற்காய் சந்தோஷம் கொள்வானா?அம்மாவின் காரியம் முடிந்து வந்துதான் குழந்தை யைதூக்கிகொஞ்சுகிறவனாகிப்போகிறான்.அன்றிலிருந்துஇன்றுவரை தூக்கிக் கொஞ்சியகுழந்தையைகீழேவிடமனமில்லாமல்தூக்கிக்கொண்டுதிரிகிறவனாகிப் போகிறான்.

இவன் போனதும் ஒரு பாலீதீன் பை நிறைய பிஸ்கட் இதர வகையறாக்கள் மற்றும்கூல்ட்ரிங்க்ஸ்எனவாங்கி வந்து விட்டான். கைநிறைய அள்ளி தின்னக் கொடுத்தால் எப்படி,,,?வட்டமான பேப்பர் தட்டில் கொஞ்சம் மிக்சர், இரண்டு மூன்றுபிஸ்கட்கள்,கூடவேஒருடம்ளரில்நிறையகூல்ட்ரிங்க்ஸ்எனக் கொண்டு வந்துகொடுத்தான் ராமர்.

வீட்டிலிருந்துஅப்பொழுதான்சாப்பிட்டுவிட்டுப்போனதுவயிறுஇன்னும்திம்மென்றே இருந்தது.ராமரின் மாமியார், மச்சினர்கள் இரண்டு பேர்,ராமர் மற்றுமராமரின் மனைவி கைக் குழந்தையுடன்/இவர்கள் மத்தியில் மிக்சர் அள்ளி
சாப்பிடுவது ரொம்பவும் சங்கடமாகவே இருந்தது.இவனுக்கு.கொஞ்சம் மனநெளிசலுடன் மிக்சரை கொஞ்சமாய் அள்ளிச்சாப்பிட்டு விட்டு கூல்ட்ரிங்ஸை ஒரேமடக்கில் குடித்து விட்டு குழந்தையின் கையில் இருநூறு ரூபாயைக் கொடுத்துவிட்டுவந்தான்,

ஆண் குழந்தைநல்லவிரைப்பாக இருந்தது.வரும்போதுராமரின்மாமியாரிடம் சொல்லிவிட்டுத்தான் வந்தான்.பையன் நல்லா இருக்கான், நல்லா வளங்க என/

ராமரின்மனைவிபார்ப்பதற்குபாந்தமாய்இருந்தாள்சுடிதாரில்பூத்திருந்தசின்னப்பூச்செடிபோல/இவனுக்குமகள்இருந்திருந்தால்இந்நேரம்இப்பெண்ணின்வயது தான் இருக்கும்.ஒரு வேளை கல்யாணம் செய்து கொடுத்து பேரன் பேத்திஎடுத்திருக்கலாம்.

பெண்பிள்ளைஇல்லாதஏக்கம்பார்க்கிறபிள்ளைகளைஎல்லாம்மகளாய்நினைத்துப்பாவிக்கச் சொல்கிறது,சமயத்தில் அது சம்பந்தமான நினைவு கண்ணீரைக் கூடவரவழைத்து விடுவதுண்டு.

தனியாளாகஎங்கும்விசேசங்களுக்குப்போனானால்இன்னும்கூட்டத்தில்இணையத் தெரியவில்லை,,மீ,,,,மீஎனஏதாவதுபேசிவிட்டுவந்துவிடுகிறதனம் இருக்கிறது, கேட்டால் மனக் கூச்சம்என்கிறான், என்ன ஆளு நீங்க, ஊரெல்லாம் சுத்தி ஏங்பேரு,,,,,,,,,,,ங்குறகதையாஎங்கபோனாலும் நண்பர்களோடயும், தோழர்க ளோடயும் நெசவு நூத்துக்குற ஆளு இப்பிடி கூச்சத்த மடியில கட்டிக்கிட்டே
திரிஞ்சா எப்பிடி,,, ஊருல்ல இல்லாத பேச்செல்லாம் ஏங்கிட்டமட்டும்தான் போலயிருக்கு என்பாள் மனைவி அடிக்கடி,

ஏஆர் நகர்கடையில் சாப்பிட்ட டீமகனுக்கு ஒத்துக்கொள்ளவில்லை போலும் வீட்டுக்கு வந்ததும் வாந்தி எடுத்துவிட்டான். ”என்ன மனுசன் நீங்க, எங்க போனாலும் இந்த டீய விட மாட்டீங்க போலயிருக்கு, ஆசையா மகன வெளியில் கூட்டிக்கிட்டு போயிருக்கீங்க ,வேற ஏதாவது வாங்கிக் குடுக்குறதவிட்டுட்டு இப்பிடி டீய வாங்கிக்குடுத்து கூட்டி வந்துருக்கீங்களே, இந்த கொடுமைய எங்கயாவது கண்டமா”,,,,?எனடீ டம்ளரை நீட்டியவாறே சப்தம் போட்டுக் கொண்டிருந்தாள்.

“வேற ஒண்ணுமில்லை நாங்க போகும் போது நல்ல காத்து ஒத்துக்கல போலயிருக்கு.அதான் இப்பிடி ஆகிப்போச்சு என்கிறசொல்லுடன் அன்று நிகழ்ந்த பேச்சு இப்பொழுது ஞாபகம் வருகிறதாக/

மஞ்சள்க்கலரில்இருந்தபிளாஸ்டிக்கதவுஅது.சுற்றிநான்குபக்கமுமாய்அறையப்பட்டிருந்த மரப்பிரேம்கள் நான்கிலும் பிடிமானம் பிடித்துச்சென்ற குறுக்குச் சட்டங்களும் கதவின் நிலை ஓரப் பிடிமானக்கீழ்கள் இரண்டுமாய் சேர்த்து அதை லேசான பாத்ரூம் கதவு என அறிமுகப்படுத்தியது.

சமையலறையிலிருந்து தெற்கு நோக்கியதாய் வாசல் வைத்திருந்த பாத்ரூம் பார்ப்பதற்க்கும் புழக்கத்திற்கும் சற்று சிறியதாகவே இருந்தது.போதும் இது போதும் 750 சதுர அடி வீட்டில் பாத்ரூம் எந்தப்பக்கம்.அதற்கு இடம் எவ்வளவு என யோசிக்கும் போது வராண்டா,ஹால் சமையலறை ஒரு ரூம் என எல்லாவற்றிற்கும்போக பாத்ரூமிற்கெனஒதுக்கிக்கட்டப்பட்டிருந்ததக்ணூண்டு இடத்தில் தக்ணூண்டு ரூமாய் அமைந்து போனதும் கையடக்கத்துடனேயே/

சமையலறையின் தளத்திலிருந்து ஒரு அடிக்கும் கீழாய் தளம் இறக்கி கட்டப்பட்டிருந்தது பாத்ரூம்.பெரிசா ஒண்ணும் யோசிக்க வேணாம் சார்.சிமிண்ட் பூசி பால் ஆத்திவிட்டு கோடு அடிச்சி விட்டமுன்னா சரியாப் போகும் .டைல்ஸ், கியில்ஸுன்னுயோசிச்சிங்கின்னாசெலவுஇழுத்துரும்பாத்துக்கங்க,,,, என்றார்.
வீடுகட்டிக்கொடுத்தகொத்தனார்.அவர்சொல்லிஇருந்தவாஸ்தவம்பளிச்சிட்டுத்தெரிய சரி என ஒத்துக்கொள்கிறான் மன முரண்டு பண்ணாமல்/

காரணம்அவரது பேச்சிலும் நடப்பிலுமாய் இருந்த யதார்த்தம்.அந்தயதார்த்தம்தாங்கி பாத்ரூமின் பின் வாசலைத்திறந்தால் கொல்லைப்புறத்தில் இன்னும் ஒரு அடிப்பள்ளமாய் இறங்குகிற தளம்.

வீடு கட்டவேண்டும் என முடிவெடுத்த போதே இவனாகத்தான் வீட்டிற்கு வரைபடம்போட்டான். பெயருக்குஇஞ்ஜினியரிடம்ப்ளூபிரிண்டவாங்கவேண்டும் என்கிறகட்டாயத்திற்காய் வாங்கிக் கொண்டுவந்தான்.மற்றபடி இவனுக்குள் ளாய் குடிகொண்டிருந்த ஆசையே பெரு வடிவமாய் எடுத்து வீட்டின் பிளான் மற்றும் இதர விஷயங்களில் கறார் காட்டி நின்றான்,காண்ட்ராக்டர் கூடச் சொன்னார்,இல்லை சார்.சிலவிஷயங்கள் சில மாதிரி செய்தால்தான் நன்றாக இருக்கும் என/இவன் ஒரேயடியாய் மறுத்துவிட்டான்.இல்லை சார் இது என் வீடு,என் கனவு,என் லட்சியம் அது எப்படிஇருக்க வேண்டியதெனதீர்மானிப்பது நானாகத்தான் இருக்க வேண்டும். என/

டைல்ஸ் பார்க்க இவனும் மனைவியும் பிள்ளைகளுமாகப் போனார்கள், மூத்தவன் படிக்க வேண்டியதிருக்கிறது என வீட்டில் இருந்து விட்டான். சின்னவனுக்கு இவனும் மனைவியுமாக பார்க்கும் டைல்ஸ்கள் பிடிக்கவில்லை. கடைசியாக விலைக்குறைச்சலாகஇருந்தாலும்மகன்கைகாட்டியடைல்ஸ்கள் மனதுக்குப் பிடித்ததாய்இருந்தது.சொல்லிவைத்துவிட்டுவந்தான்கடைக்காரரிடம்,நாளைப் பின்னாய் வந்து எடுத்துக்கொள்கிறோம் என/ஆனால் நினைத்தது எல்லாமா முடிந்துவிடுகிறது, கையில் காசு இல்லை என டைல்ஸ் வேண்டாம் என முடிவெடுத்துவிட்டார்கள். இருக்கிறகாசில் டைல்ஸ் வாங்கி விட்டால் அப்புறம் சிமிண்ட் மூடைதூக்க காசு காணாமல் போய் விடும்,தவிர சனிக்கிழமை வேறு, வேலை
பார்த்தவர்களுக்குசம்பளம்தரவேண்டும்.சிமிண்ட்மூடைக்குக்கூடசொல்லிக்
கொள்ளலாம்.வேலைபார்த்தவர்களுக்குசம்பளம்.பாவம் அவர்களைக் காக்க வைத்து
விட்டு அப்படியெல்லாம் வீட்டை அலங்கரிக்க வேண்டாம் தான்

கொல்லைப் புறத்தில் பன்னீர் மரங்கள் இரண்டும், வேப்ப மரங்கள் இரண்டும்
கொன்றைப்பூ மரம் ஒன்றுமாய் நின்றது.தூத்துக்குடி ரோட்டில் இருந்த நர்சரி
கார்டனில் வாங்கி வந்தகன்றுகள்தான்இன்று மரங்களாய் வளர்ந்து கொண் டும்
ஆகுருதி காட்டிக்கொண்டுமாய் நிற்கிறது.அங்கில்லாத மரக்கன்று கள் இல்லை
எனலாம்.

இரண்டுஏக்கர்பரப்பளவில்இருந்தஇடத்தில்ஒரு ஓரமாய் குப்பையைக் கொட்டி
வைத்திருந்தார்கள்.இயற்கைமுறையில்மண்ணைக்கொட்டிகுப்பையைஅதனுள்
ளாய்க்கலந்து மக்க வைத்து சுற்றிலுமாய் பாத்தி கட்டியது போல் குப்பை மேட்
டின் மீதுகரைகட்டிதண்ணீர்ஊற்றி வைத்திருந்தார்கள். ஊற்றியிருந்த தண்ணீர்
இஞ்சியிருந்தது.இந்தகுப்பைஒருமாதம்இப்படியேஇருக்கும்.அடுத்தமாதம்ஒரு
குப்பை மேட்டை ரெடி பண்ணிவிடுவோம் என்றார்,நர்சரி கார்ட னின் ஓனர்.

“இப்பஎன சார் ஒரு காலத்துல கெட்டி ஆண்டோம் சார் விவசாயத்த, பருத்தி, கடல,
மொளகா, வத்தல், தொவரை, உளுந்துன்னு,,,,, நஞ்சையில கொஞ்சம்,
புஞ்சையிலகொஞ்சம்ன்னுநெறைஞ்சிகெடந்தநேரம்,வீட்டுலபுள்ளைகளுக்கும்
பஞ்சமில்லாத நேரம்,ஒரு போகம் விவசாயம் எடுத்தா ஒரு பொபளப்புள்ளயக்
கட்டிக்குடுக்கலாம்ங்குறதுகணக்கு.சமயத்துல ரெண்டு புள்ளைகளுக்கு நகை
செஞ்சிரலாம்.எங்க தலைமுறைக்கு ரெண்டு தலைமுறை முந்தியெல்லாம்
ஏதுகாசுக்குமதிப்பு,தேவையும்அவ்வளவாஇருந்ததில்லை,ஏதாவது வெளியூர்ப்
போகணும்ன்னாபிரயாணத்துக்கும்,ஏதாவதுபண்டிகைன்னாபுதுத்துணிஎடுக்க
வும் வீட்டுக்கு வெள்ளையடிக்கவுமா நல்லது பொல்லதுண்ணு வாங்கவும் காசு
வேணும்,அரிசி பருப்பு அரசலவுல இருந்து சேவு மிச்சருன்னு ஏதாவது
திண்பண்டம் வாங்குறவரைக்கும் பண்ட மாத்து மொறதான,மீறி ஏதாவது வேணுமின்னா
இப்பிடி விளைச்சல் வர்ற நேரத்துல கணக்குப்பண்ணிக்கிற
வேண்டியதுதான்.அப்டின்னுஇருந்தநெலமைகொஞ்சம்மாறிபோயிஎதுக்கெடுத் தாலும்
காசு பணம்ன்னு ஆகிபோன பெறகு எங்க தலமொற தலை எடுக்குது.

அப்பயும்விவசாயம்ஒண்ணும்அழிஞ்சிபோகல,சார்ரொம்பயெல்லாம்கெடையாதுஏதோசொல்லிக்கிறாப்புலக்
கொஞ்சம் விவசாயநெலம்இருந்துச்சி. அதுலபேர் பாதி நல்ல தண்ணி ஊத்து
இருந்தகெண று இருந்த நெலம். இருந்தரெண்டுப் பொம்பளப்புள்ளங்களையும்
அதுலவிவசாயபலன்எடுத்துத்தான்கல்யாணம்பண்ணிக்குடுத்தேன்.உள்ளூர்ல
ஒருபுள்ளையையும்,வெளியூர்லஒருபுள்ளையையுமா/

உள்ளூர்லக்கட்டிக்கொடுத்தபுள்ளஇப்பஆறுமாத்தையிலவந்துநிக்குதுஏங்கிட்ட,
மொதல்ல குடிமட்டும் ன்னு இருந்தவன் பின்ன கூத்தியாவையும் சேத்துக்
கிட்டான். சொல்லிப்பாத்த ஏங்மகளோட சொல் அவன் காதுல ஏறல/ ஏறாத சொல்ல
வச்சிக்கிட்டு என்ன செய்வா பாவம்,புருசனப்பிரிஞ்சி வர்றது பாவன் னு
தெரிஞ்சும் கூட வந்துட்டா, என்ன செய்ய அவளும்தான் எத்தன நாள்
புடுங்கத்தாங்குவா,,,,?வந்துட்டா ஒரு நா விடிகாலமா எந்திரிச்சி,

வெளியூர்ல பொறந்த வீடு இருந்தாலும் கொஞ்சம் யோசிக்கலாம். தோதா
உள்ளூறாப்போச்சா,இன்னையோடஅவவந்துஒருவருசத்துக்குப்பக்கத்துல ஆகப்
போகுது,அதோ அந்தா குப்பை மேட்டுக்கு பக்கத்துல நிக்குறா பாருங்க அவதான்,

அவ்வளவுநெலத்த வச்சிக்கிட்டு விவசாயம் பண்ணுணப்ப இருந்த தெளிவு இல்ல
இப்ப, ,வயசும் ஆகிப்போச்சி நெலத்துல உழைச்ச பலன எடுக்க முடியல
,நஷ்டமாகத்தான் ஆகிபோச்சி.ஒரு வருசம் ஆறு மாசம்ன்னு நெலத்துல இருக்குற
மண்ண அள்ளி தலையில போட்டுக்கிட்டு திரிஞ்சும் கூட உரிய பலன் கெடைக்கல.
கடுமையான உழைப்பு,கடுமையான செலவு கடுமையான மன ஒளச்சல் இத்தனையும் இருந்து
கூட நெலத்துல போட்டத எடுக்கமுன்ன உயிர் போயி உயிர் வருது. சரி ஆனது ஆகுது
இனிம வச்சிட்டு செலவழிக்க முடியாது அதுன்னு போன வெலைக்கி வித்துட்டு இப்ப
இந்த நர்சரி கார்டனப்
பாத்துக்குறேன்,அவ்வளவுதான்.ஏங்கூடஇருக்குறஏங்மகஎப்பதிரும்பிப் போறா ன்னு
தெரியல,ஏங் கண்ணு இருக்கமட்டும், பாத்துக் கிருவேன் அதுக்கப்பறம்,,,
,,,கடவுளே அவளுக்கு ஒரு நல்ல காலம் வரணும்.

இந்தக்கொல்லையிலஆறுதலானஒரேஒருவிஷயம்.அவமாமியார்காரிஅவளப் பாக்க டெய்லி
வந்துட்டுப் போயிற்ரா,இப்பக்கூட மத்தியானம் என்னமோ
மொச்சைபயிருகொளம்புவச்சேன்னுகொண்டு வந்தா,ரெண்டும் சேத்து தின்னு புட்டு
நல்லா திரியுதுக கெட மாடுக கணக்குட்டா,என்ன இப்படியே மருமக ளுக்கு சோறு
தண்ணி கொண்டு வந்து குடுத்தா மட்டும் போதுமான்னு கேட்ட துக்கு இல்லண்ணே
ஒரு நல்ல சங்கதி நடந்துக்கிட்டு இருக்கு,ஏங் மகன்இப்ப
கூத்தியாவீட்டுபக்கமெல்லாம்போறதுமில்ல,குடியவும்கொறச்சிட்டான்,அவன்
ஒண்ணும் அப்பிடி பறப்பெடுத்துப் போயி திரியிற வுனும் இல்ல, இதுல ஓங்
மகளோட தப்பும் இருக்கு.நாள் முழுக்க இழுத்துப் போத்திக்கிட்டே திரிஞ்சா
ஒரு ஆம்பள என்னாவான்,அதான் பாஞ்சிட்டான், அங்கிட்டு,இப்ப சீரழஞ்சி
செங்கச்சொமந்து வந்து நிக்கிறான்,

அத வுடுண்ணே,காலகாலத்துல ஒரு நல்ல விஷயம் நடக்குண்ணே, அதப்
பாத்துட்டுதான் நம்ம ரெண்டு பேரும் கண்ணு மூடுவோம்ண்ணே,முடிஞ்சா அதுக
ரெண்டும் ஒண்ணு சேந்தப்பறம் பேரன் பேத்திகள பாத்துட்டு சாவோம், இல்லஅது
கூட பாக்க வாய்க்கலைன்னாலும் சரிதான்னுபோயிச்சேரவேண்டி யதுதான்னு
சொல்லீட்டுப் போறா தெனம் தெனம் அவ வர்ற நாள் பூராம்/ நல் லது
நடக்கட்டும்ன்னு காத்திருக்கேன்,நடக்கும் நல்லது அதுக்கான சமிக்சை
தெரியுது சார் என அவர் அன்று பைநிறையஅள்ளிக்கொடுத்தமரக்கன்றுகளை இவன்
கொல்லையில் நட்டது போக மிச்சத்தை அக்கம் பக்கத்தவர்களிடம்
கொடுத்தான்.அதெல்லாம் இப்போது எப்படி வளர்ந்து நிற்கிறதெனத் தெரிய
வில்லை.

அடிபம்புநின்றஈசானமூலையில் மோட்டார் போட்டதற்கான குழாய்கள் குழிக்
குள்இறக்கப்பட்டுமூடப்பட்டிருந்தது.நேற்றுவரைஒற்றையாய்அரைஆள்உயரத் திற்கு
நின்றிருந்த அடிகுழாய் கழட்டி எடுக்கப்பட்டு தரையோடு தரையாய் மூன்று
குழாய்களை இறக்கியிருந்தார்கள் போர்க் குழிக்குள்.

பிளம்பர் நாகராஜனின் தந்தை மணிதான் அடிகுழாயை மாட்டிக்கொடுத்தார்.
அவரிடம் அடி குழாய் போடுவதற்காய் போய் பேசிய போதுஅவரதுவீட்டிற்கு
கூட்டிப்போய் வீட்டின் பின்புறம் போட்டு வைத்திருந்த அடிகுழாய் ஒன்றை
காட்டினார்.புதிதாய்வாங்குகிறஅடிகுழாயில் பாதி விலையைத்தான்
சொன்னார்.

இவனும்இப்படியானதைத்தான்தேடிக்கொண்டிருந்தான்.இதுபோல்இரண்டாவது கை மாற்றி
வாங்க வேண்டும் என்கிற நினைப்பில் பஜார்,பிளம்பர்கள், அடி குழாய்
ரிப்பேர் செய்பவர்கள்,அனைவரிடமும் கேட்டு அலைந்த போதுதான் மணியண்ணன்
கிடைத்தார்.படித்துறை இறக்கத்தில் இருக்கிற ஒரு அடிபம்பு ரிப்பேர்செய்கிற
பிளம்பரிடம் அடி குழாய் செட்டாக இருக்கிறது என கேள்விப்
பட்டுபார்க்கப்போனபோதுஇவன்மணியண்ணனைப்பற்றிகேள்விப்பட்டதையும்
சொல்லிவிட்டான்தெரியாத்தனமாக/ சொன்னபின்தான் தெரிந்ததுஏன்இப்படிச்
சொன்னோம்என/இவன்த்தேடிப்போனவர்சொன்னார்மணியண்ணனைநம்பாதீர்
கள், அவரிடம் இருக்கிற பொருள் தரமாய் இருக்காது.தவிர எங்காவது பொருள்
வாங்கி எங்காவது விற்கிற பழக்கம் கொண்டவர்.வேண்டாம் என்றார் கொஞ்சம்
ஆற்றாமை பெருமூச்சுடன்/இதை மணியண்ணனைபார்த்தநாட்களி ல் அவரிடம் சொன்னபோது
கடகடவென சிரித்தவர் அது ஒண்ணுமில்ல சார் மொதல்ல அவர்கூட சேந்துதான்
தொழில் பண்ணிக்கிட்டு இருந்தேன்.இப்ப அவர விட்டு பிரிஞ்சி வந்து இன்னையோட
ஆச்சு வருசம் மூணு/நம்ம கை சுத்ததுக்கும் பேச்சு சுத்ததுக்கும் தொழில்
தெறமைக்கும் அவர் கஸ்டமர்க பாதிப்பேரு நம்மகிட்ட
வந்துட்டாங்க.அந்தக்கடுப்புத்தானே ஒழிய பெரிசா வேறொன்னுமில்ல.இப்ப நான்
கூட என்னைய பெரிய உத்தமன்னு சொல்லி க்க வரல/நீங்க என்னையப்பத்தி முழுசா
விசாரிச்சிட்டு வாங்க அப்பறம் பேசலாம் யேவாரம் என அவர் சொன்ன இரண்டு
நாட்கள் கழித்து அவர் முன் போய் நின்ற போது ஒரு உண்மை சொன்னார் அவர்.

சார் கம்பெனி பேருக்காக சில பம்புக வெலக் கூடஇருக்கும்.அதேமாதிரி பம்போட
சிலலோக்கல்மேட்க சமயத்துல சில கம்பெனி மோட்டாரவிட சூப்பரா
ஓடிரும்.விலையும் கம்பெனி மோட்டார் வெலையில பாதிதான் இருக்கும்.இப்ப
ஏங்கிட்ட இருக்குறது ஒருகம்பெனி அடிபம்புதான்,பார்ட்டி அடி
குழாயைகழட்டிப்போட்டு விட்டு மோட்டார் மாட்டப் போறேன்னு சொல்லீட்
டாரு.அதை அப்பிடியே ஒரு வெலைப்போட்டு நானே எடுத்து வந்துட்டேன். அத நான்
ஒங்களுக்குக்காட்டுறேன்.அப்புறம் சொல்லுங்க என வீட்டின் பின் புறம்
அழைத்துப்போய் காண்பித்தார்.பார்ப்பதற்கு புதிது போல் இருந்த குழாய்
பெயிண்ட்கூடஇன்னும்உதிராமல்இருந்தது.இன்னும் பெயிண்ட் கூட கழறலை ன்னு
பாக்குறீங்களா,அது நாங்க அடிச்சது.என்றார். பொருளப் பாருங்க பொரு
ளோடதரத்தப்பாருங்க,வாங்கிப்போடுங் நானே வந்து மாட்டித் தர்ரேன். கொழா யோட
வெலை, மாட்டுக்கூலியெல்லாம் டாக்டர வச்சிப் பேசிக்கிருவோம் என்றார்.

டாக்டர் இவனது சொந்தக்காரர் .அவர்தான் மணியண்ணை அறிமுகம் செய்த வரும்
கூட/அவர்தான் பேசி முடித்தும் வைத்தார்.இவன்முடியாமல் கிடந்த போதுஇவனை
செப்பனிட்டு சரி செய்தவரும்,வாழ்வின் வழி ஒளியாய் நம்பிக்
கைஊட்டியவரும்அவர்தான். அவர்சொல் மீறியதில்லை இதுநாள்வரை பொது வான தொரு
நல்ல விஷயங்களுக்கு.

அதுபோல் அடி குழாய் போடுவதும் நல்லவிஷயம்தானே?அடிகுழாய் போட்ட புதிதில்
கொல்லையில் இருந்த மரக்கன்றுகள் ஒவ்வொன்றுக்குமாய் தினமும் இத்தனை வாளி
நீர் என இவன்தான் அடித்து ஊற்றுவான்.

செடி அதன் வளர்ச்சி பூப்பு காய்ப்பு பின் அதன் ஆகுருதி என்கிற பரிணாமம்
தண்ணீர் ஊற்றுகிற போதே இவன் மனக்கண்ணில் பட்டு விரியாமல் இருந்த தில்லை.

அதன் விரிவு கொல்லைதாண்டி எல்லை விரித்திருக்கிற பக்கத்து வீடுகள் அதன்
கம்பி வலைகள் காம்பவுண்டு சுவர்கள் கட்டிய கொல்லை வெளிகள்
எனக்காட்சிப்படுத்தி தெரு தாண்டிய ரோட்டைக்காட்சிப் படுத்தும்.

ரோட்டின் இருபுறமுமாய்ய் நடு வைக்கப்பட்டது போலிருந்த காம்ளக்ஸீம்
கடைகளும் அது அல்லாத வெற்று வெளியான இயக்கத்தை கண் முன்
காண்பித்துக்கொண்டே/

இதைஅத்தனையையும்தாண்டிகைபிடித்துவந்தகாற்றின்கைபிடித்து என் மேல் விழுந்த
மழைத்துளியே இத்தனை நாளாய்எங்கிருந்தாய்/ எனக்கேட்டு விடத்
தோணுகிறது.கைகொள்ளாமல் அள்ளிய நீரில் பட்டுத்தெரிகிற முகம் நன்றாக
இருக்கிறதா இல்லையா என்பதை விட நன்றாகஇருப்பதாகவேச் சொல்லிக் கொள்ள
கடமைப்பட்டதாய்/

ஷேவிங் பண்ணப் படாதமுகம்,முள்ளுமுள்ளாய் குத்திட்டு நின்ற முடிகள் அதில்
வெள்ளைக்குள் கறுப்பும்,கறுப்புக்குள் வெள்ளயுமாய் ஒளிந்து கண்ணா மூச்சி
காட்டுகிற அழகு என எல்லாம் தாண்டி கைஅள்ளிய நீரை அடித்துக் கொள்ளும்
போதுதான் தெரிகிறது முகம் கொள்ளாமல் குத்திட்டு நிற்கிற தாடி முடியின்
அழகும் படர்வுமாய்,/

நேற்று இரவு தூங்குவதற்கு சற்று நேரமாகிப்போனது.சற்று நேரமென்றால்
அதிகபட்சமாய் 3.30 ஆகிப்போனது.இது போலாய் இன்றைக்கு நேற்று வருவதி
ல்லை.அடிக்கடிநிகழ்வதுதான்.அப்பொழுதெல்லாம்பெரிதாகஒன்றும்தோன்றிய
தில்லைதான்.

நிகழ்வின் இடைவெளிகளற்று மனது சும்மா இருப்பதில்லை.தூக்கம்வராத இரவிலும்
அப்படித்தான் நினைக்கிறது,பேசுகிறது, நூர்க்கிறது,அது போலவே நேற்று
இரவும்/

தலைக்கட்டு வரி இவ்வளவு என சாமி கும்பிட வாங்கிப்போனார்கள், கும்பாபி
ஷேகம் மற்ற மற்றதிற்கான எல்லாவற்றுகுமாய்வந்துஇது நாள்வரை பணம்
கேட்டிருக்கிறார்கள்.இவனும்கொடுத்திருக்கிறான்.ஆனால்அதுபோலானவிஷேச
த்திற்குஒருநாள்கூடப்போனதில்லை.குடும்பத்தினரைஅனுப்பிவைத்திருக்கிறான்அல்லது
யாரும் போகாமல் இருந்திருக்கி்றார்கள்.அந்நேரம் வந்து விடுகிற வேலை
அல்லது படக்கென எதிலாவது ஒன்றில் ஆட்பட்டு விடுகிற தன்மை எனஒரு பெரு
நிகழ்வு முன்னெடுத்து வந்து நின்று விடுகிற பொழுது ,,,,

இந்தத் தடவை அம்மாவிற்கு உடல் நலமில்லாமல் போகமுடியவில்லை. அம்மா
ஆஸ்பத்திரியில் படுக்கையில் கிடக்கிற பொழுது கோயில்,பொங்கல்,
கொண்டாட்டம்,,,, என கரைந்து போகம்முடியவில்லை.மாமியார் வீட்டிலிரு ந்து
வந்திருந்த ஆடுக்கறியுடன் ஊர்ப்பொங்கல் கொண்டாட்ட நினைவு கலை ந்தும்
கரைந்துமாய்போய்விடுகிறது.என்கிற நினைவு தூக்கம்வராதநேற்றைய இரவில் நெசவு
கொண்டபொழுது என்ன செய்யவெனத்தெரியாமல் படுத்துக் கிடந்திருக்கிறான்
வெறுமனே/

இதுமாதிரியானநேரங்களில்படுக்கையிலிருந்துஎழுந்தமர்ந்தோஅல்லதுபடுத்த வாறோ
புத்தகம் படிப்பான் அல்லது டீ வி பார்ப்பான்.அல்லது கம்ப்யூட்டரின் முன்
விடிய விடிய உட்கார்ந்திருந்து விட்டு விடிந்ததிலிருந்து விடியலின் கரம்
பிடித்து கொஞ்ச நேரம் தூங்கிவிட்டு எழுந்து அலுவலகம் செல்கிறவனாய்/

சில தினங்களில் அதற்கு நேர்மாறாய் நன்றாக இருந்ததுண்டு. அன்றைக்குத்
தான்வேலைவேகமாகநடக்கும்.எழுத்து கொஞ்சம் பார்க்கிற மாதிரியாய் இருக்
கும். பேச்சுகொஞ்சம் கேட்கிறமாதிரியாய் இருக்கும். உடலும் மனது சுளுக்
கெடுத்ததுபோல்இருக்கும்.தவிரகாலைவேலைகளில்மனைவியுடன் அல்லது
தனியாகவாக்கிங் செல்கிற பொழுதுகிடைக்கிறமனநிம்மதி வேறெதிலுமாய்
கிடைப்பதில்லை.என்றுதான்எண்ணிவிடத்தோணுகிறது.அதுநிதமும் நிகழ்வ தில் லை
என்கிற போதிலும் கூட நிகழ்கிற கணங்களில் சந்தோஷம் கொண்டு விடுகிறது மனது.

சொல்லாமல்கொள்ளாமல்உள்ளேநுழைந்தகாற்று திறந்திருந்த கதவை தனது சின்னக்கால்களால்சற்றேபலமாய் எட்டி உதைத்து விட்டு வந்த வழியாகவே திரும்பிச்சென்று விடுகிறது.

விமலன்,,,

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *