மெதுவா…! – ஒரு பக்க கதை

 

இரவு நேரம்…. தூரத்தில் எங்கோ மணி பதினொன்று அடித்து ஓய்ந்தது…

கல்யாணமாகி இருபது வருடம் ஆகிவிட்டது. வியப்புடன் அருகில் படுத்திருந்த மனைவியை பார்த்தான். அவள் கண்களை மூடியபடி படுக்கையில் புரண்டு படுத்தாள்.

திடீரென்று அவனுடைய கை அவளுடைய கழுத்தின் பின்புறம் மெதுவாக தடவியது. என்ன ஆச்சர்யம் அவள் கண்களை திறக்கவில்லை.

அவனுடைய கை கழுத்திலிருந்து இப்போது அவளுடைய முதுகை நோக்கி மெல்ல நகர்ந்தது. அவளுடைய இதயம் சிலிர்த்தது. இருந்தாலும் கண்ணை திறக்கவில்லை.

அவனுடைய கையின் பயணம் இன்னும் நிற்கவில்லை. இடுப்பையும் தாண்டி அவளுடைய முழங்கால்களுக்கு கீழே ஒரு கணம் தயங்கியது. அடுத்த கணம் அவளுடைய பாதங்களுக்கு அடியில் சட்டென்று நகர்ந்தது.

மூடிய இமைகளுக்குள் அவளுடைய கண்கள் படபடத்தன. அந்த நொடியில் தீடீரென்று டி.வி. உயிர் பெற்றது. உலக தொலைக்காட்சிகளில் முதல் முதலாக…

என்னங்க.. என்ன ஆச்சு?

ரிமோட் கிடைச்சிடுச்சி…!

- வலைக்கள்ளன் (29-9-10) 

தொடர்புடைய சிறுகதைகள்
அது ஒரு தொடக்கப்பள்ளி.வாரத்தில் மூன்று நாள் கம்ப்யூட்டர் க்ளாஸ் நடக்கும்.மற்ற பாடங்களைவிட கம்ப்யூட்டர் க்ளாஸுக்கு ஆர்வத்துடன் மாணவர்கள் வருவதற்கு ஆசிரியர் இளங்கோவன் தான் காரணம். பிரேயர் முடிந்தவுடன் கனஜோராக குதூகலத்துடன் கம்ப்யூட்டர் க்ளாஸுக்கு ஓடும் குழந்தைகளளை தலைமை ஆசிரியை கண்டித்தும் கேட்பதில்லை.குட் மார்னிங் ...
மேலும் கதையை படிக்க...
அந்த நீலமலைத்தொடர்கள் எத்தனை அழகாய் இருக்கின்றன. சலசலத்தோடும் அருவிகள், ஓடைகள், சில்லென்ற தென்றல், குருவிகள் மைனாக்களின் கொஞ்சும் ஒலியலைகள் என்பன மனதுக்கு எவ்வளவு இதமளிக்கின்றன. பார்க்குமிடங்கள் எல்லாம் பசுமைகள், புல்வெளிகள் யாருக்குத்தான் மனதில் இனிமை உணர்வை உண்டு பண்ணாது! இவை எல்லாவற்றுக்கும் ...
மேலும் கதையை படிக்க...
"வாங்க அத்தே" என்று நான் வாய் மூடும் முன்னரே... "ஏண்டி மீனா இப்படி நீ செய்வியா. நம்ம சாதி சனத்துக்கு அடுக்குமா இந்தக் குறும்பு.? நாம என்ன அறுத்துக் கட்டுற சாதியா? மின்சார அடுப்பில் சோளப் பொரிகள் துள்ளிக் குதிப்பது போலச் சொற்கள் ஒன்றையொன்று ...
மேலும் கதையை படிக்க...
மாடி வராண்டாவில் பளபளவென்று உடையணிந்தபடி பட்டாம்பூச்சிபோல் நின்றிருந்த ஸஹானாவை கீழே இருந்து அர்ஜுன் கூப்பிட்டான். “ஸஹானா” என்று ராகத்துடன்! உடனே, “ஹாய்!” என்று கையசைத்துச் சிரித்தாள் ஸஹானா. “ஆச்சு, மணி நாலடிச்சாச்சு. கிளம்பிட்டா ராணி! இனிமே இருட்டினாத்தான் உள்ளே நுழைவாள்”, என்று அம்மா ...
மேலும் கதையை படிக்க...
டேய் ராமசாமி கர்ஜித்தார், வெங்கடாசலம். யார்டா இப்படி கறை ஆக்கினது? பிள்ளையும் பேரன்களும் ஊரிலிருந்து வருகிறார்கள் என்று வீட்டை ஒழுங்குபடுத்தி, புது பெயிண்ட் இப்போது தான் அடித்து முடித்திருந்தார். யாரோ எதையோ ஊற்றி கறை ஆக்கிவிட்டிருந்தார்கள். கண்களும் முகமும் ஜிவுஜிவுக்காக ராமசாமியை ஏறிட்டு நோக்கினார். நடுநடுங்கி போனான் ராமசாமி. ...
மேலும் கதையை படிக்க...
வெளி
உன்னைக் கொன்றவர்கள் யார்?
நீங்களே சொல்லுங்கள்…!
சின்னஞ்சிறு கிளியே…!
கறை நல்லது – ஒரு பக்க கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)