மெசேஜ் – ஒரு பக்க கதை

 

ஒரு வாரமாக எதற்கெடுத்தாலும் முரண்டு பிடிக்கிறாள் சுகன்யா.

செல்போனை எடுத்து வைத்துக் கொண்டு டெக்ஸ்டிங் என்று மணிக் கணக்காக யார் யாருக்கோ மெசேஜ் அனுப்பிக் கொண்டிருக்கிறாள்.

தன் மனைவிதானா இவள்.சந்தேகமாக இருந்தது ராஜனுக்கு.

கலயாணமாகி வரும்போது எதுவும் தெரியாது அவளுக்கு. தன் ஆபீஸ் நண்பர்களின் மனைவிகள் போல அவளையும் மாடர்னாக மாற்றலாம் என்று பியூட்டி பார்லர். ஃபிட்னஸ் சென்டர் என்று அழைத்துப் போனதெல்லாம் கூட சிக்கல் தரவில்லை. செல் வாங்கிக் கொடுத்ததுதான் படுத்துகிறது.

யாருக்கு அனுப்புகிறாள். புரியாமல் செல்லைப் பிடுங்கினான். அவள் சொன்னது அதிர்ச்சியாக இருந்தது.

“எனக்கு நானே எஸ்.எம்.எஸ் அனுப்பிக்கறேங்க. அதான் டூயல்சிம் இருக்கில்ல. எனக்கு நானேதான் அனுப்பறேன்.’

“என்னடி சொல்ற?’

“பின்ன என்னங்க. எப்பவும் நீங்க ஆபீஸ் வேலை அது இதுன்னு பிஸி. என்னை மார்டனா மாத்தினா போதுமா. கல்யாணமானப்ப அன்பா, பரிவா பேசின மாதிரி இப்பவும் பேச உங்களுக்கு நேரமில்லை. நான் யார்கிட்ட போய் பேசுவேன்?’

“ஸாரிடா கன்னுக்குட்டி. நான்தான் மடையன்’ என்று மனைவியை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

- சூர்யகுமாரன் (மே 6, 2011) 

தொடர்புடைய சிறுகதைகள்
பாரு...காபி கொண்டு வாம்மா! என்றார் ராமன். ராமன், இரு சக்கர வாகன உதிரி பாகங்கள் விற்பனை கடை ஒன்று சிறிதாக டவுனில் வைத்துள்ளார். நிலபுலங்கள் கிராமத்தில் இருந்தும் படிப்புக்காக புறநகர் வந்து வீடு கட்டி குடியேறிய நடுத்தர குடும்பம். இதோ அப்பா, அம்மா கலந்துண்டுருக்கா! ...
மேலும் கதையை படிக்க...
"சுத்தம் சோறு போடும்.." வீட்டின் முகப்பில் பொறிக்கப்பட்டிருந்த பெயரை நிறுத்தி நிதானமாக வாசித்து விட்டு வீட்டைச் சுற்றிப்பார்ப்பதற்காக நகர்ந்தனர் புதுமனை புகுவிழாவுக்கு வந்திருந்தவர்கள். “சும்மா சொல்லக்கூடாது. வீட்டை நல்லா பார்த்துப் பார்த்துதான் கெட்டியிருக்கான் உம்ம மருமவன்..” என்றார் ஒரு பெரியவர். “ஏன் பெரியத்தான் ...
மேலும் கதையை படிக்க...
மாற்றுவழி…
யாருக்கும் தொந்தரவில்லாமல்தான் அந்த சைக்கிள் மாடிப்படிக் கீழே பழைய சாமான்கள் போட்டு வைக்கும் அறையில் கிடந்தது. வடிவத்தில் மட்டுமே அது சைக்கிளாக இருந்தது. நடப்பட்ட நாற்று முளைத்துக் கிடக்கும் வயலைப்போல துரு சைக்கிளைப் பற்றிக் கிடந்தது. ""யார் கிட்டயாச்சும் கொடுத்திருக்கலாம்... இல்ல எடைக்காவது ...
மேலும் கதையை படிக்க...
அடையாறு, சென்னை. புதன்கிழமை, காலை பதினோருமணி. வெயில் சுட்டெரித்தது. டாக்டர் மூர்த்தி தன் கிளினிக்கில் நோயாளிகளுடன் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார். குடிப்பவர்களை அதிலிருந்து மீட்பதுதான் அவருடைய டாக்டர் தொழில். நிறையப்பேர் அவரிடம் தகுந்த ...
மேலும் கதையை படிக்க...
முதலில் கடித்தது தும்பு இலையான். தும்பு இலையான் உண்மையில் கடிக்காது, முட்டைதான் இடும். என்னுடைய மகள் கைக்குழந்தை. அவள் தோள்மூட்டில் முட்டையிட்டிருந்தது. கண்ணுக்குத் தெரியாத அந்த முட்டைப்புழு சருமத்துக்குள் புகுந்து வளர ஆரம்பித்தது. சருமம் வீங்கி குழந்தை நிறுத்தாமல் அழுதது. நாங்கள் ஆப்பிரிக்காவுக்கு வந்து ...
மேலும் கதையை படிக்க...
அனுபந்தம்
ஒரு வீடு பெயரிடப்படுகிறது..
மாற்றுவழி…
சைக்கிள் ப்ராண்ட்
உடனே திரும்பவேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)