மூன்று மாசம்

 

“மை டியர் மச்சா, நீ மனசு வைச்சா”….. என்று பாடல் வீட்டு டிவியில் ஓடிக்கொண்டு இருந்தது. அதை ரசித்தப்படியே கண்ணாடியில் தலைசீவிக் கொண்டிருந்தான் அசோக். டிபன்பாக்ஸில் தக்காளிசாதம் போட்டு மூடிக் கொடுத்தாள் அவன் அம்மா பார்வதி. அவன் பேக்யை மாட்டிக்கொண்டு சீப்பு ஒன்றைப் பேண்ட் பாக்கேட்டில் வைத்து விட்டு இறுதியாக கண்ணாடியில் தலையைக் கலைத்து ஸ்டையில் பண்ணி விட்டு அம்மாவுக்கு பாய் சொன்னபடியே சென்றான்.

“அப்பப்பாப்பா….. இந்த பசங்கள ஸ்கூலுக்கு அனுபரக்குள்ள, நாம படற பாடு இருக்கே ஒரு வழி ஆயிருவோம் போ” என்று சொன்னபடியே வீட்டில் தூணிகளை மடித்து வைத்து விட்டுப் பாத்திரங்களை கழுவ ஆரம்பித்தாள்.

மணி12.30 ஆயிற்று.

“ஐய்யோ, லட்சுமி என்ன சொல்லுவளோ!,அவன் பையன் லவ்வுக்கு ஓகே சொல்லுவாளா!, இல்ல வேற பெண்ணை பாத்துகீத்து வைப்பாளா”! என்று ஓரே யோசனையோடு டிவியை ஆன் செய்கிறாள்.

ஒரு வழியாக டிவியில் சிரியல் எல்லா முடிஞ்சவுடன் துணி துவைக்க மணி 2 ஆயிற்று. எல்லா வேளையும் முடிந்து மாலையில் தன் மகனுக்காக ஏங்கும் தாயாக, பள்ளி முடிந்து வருவானா என்று அந்த காலத்து அம்மாவாக இல்லாமல் எதர்ச்சியாக ஈவ்வினிங் டிபன், ஸ்நேக்ஸ் செய்ய ரெடியாக இருந்தாள்.

அப்போது…..

காலிங் பெல் அடிக்கிறது.

திறந்தால் வீட்டிற்கு வெளியே அசோக் வுடன் ஒருவர் வந்திருந்தார். அவரைப் பார்த்த அதிர்ச்சியிலே,யாராக இருக்கும் என ஒரு நிமிடம் யோசித்தாள். அவரை பேரண்ட்ஸ் டீச்சர்ஸ் மீட்டிங்கில் பார்த்தாக ஞாபகம்.

மனதில் அச்சத்துடன், “உள்ளே, வாங்க சார்” என்று அழைத்தாள்.

உள்ளே அழைத்து ஸ்சோபாவில் அமரசெய்து கூல்டிங்ஸ் கொடுத்தாள்.

“என்ன சார் ஆச்சு, என் பையன் ஏதாவது தப்பு பண்ணிட்டான?”

உடனே வந்தவர் நடந்ததை கூறினார்.

***

ஸ்கூலில்,

கடைசி பெஞ்சியில் உட்கார்ந்து கொண்டு, 2வது பெஞ்சில்யில், ஒரு சைடாக பூ வைத்துக் கொண்டு, காதில் கம்மல் தொங்கிக் கொண்டே, போர்டுடில் எழுதிபோடும் சார்யை கவனித்தப்படியே இருந்தாள் அந்த பெண். அந்த பெண்ணின் மீது இவன் பார்வை இருந்தது.

அவள் லேசாக திரும்பும் போது,

அவன் மனதில் தனசு பாடல் “இதயம் ஒரு ஒரோரம் சிரித்தாய் அன்பே, நிஜமாய் இது போதும் சிரிப்பாய் அன்பே” என்று பாடல் வரி அவன் மனதில் உதிக்க,

அப்போது அவன் நண்பன், “டேய், இன்னைக்காது உன் லவ்வை அவகிட்ட சொல்லுடா, இல்ல நீ இந்த வருடம் எக்சாமில் அவுட் தான்” என்று கூறி அவனை தயார்ப்படுத்தினான்.

“காலை பிரேக் முடிஞ்சி போச்சு, மதியம் பிரேக்கில் யாவது சொல்லுடா”, அப்படின்னு சொல்லி தைரியம் கொடுக்கிறான்.

மதியம் பிரோக்கில் அவன் அந்த பெண்ணிடம் செல்கிறான். பேச ஆரம்பிக்கிறான். ஐ என்று சொல்லும் போது, “உன் மேக்ஸ் நோட் தான்னு” சொல்லி மாத்தி தப்பிச்சுட்டான்.

அவன் நண்பன், ”டேய்! நீ சொல்ல வேண்டாம், எழுதிக் கொடுத்திறுன்னு” என்று சொல்கிறான்.

மாலையில் அவன் சொன்னபடியே எழுதிக் கொண்டு ஸ்கூல் முடிந்தவுடன் அவ பின்னாடியே போகிறான்.

அப்போ அவன் சார் அங்கு வருகிறார்.

“என்ன டா இதுன்னு” கேட்கிறார்,

அவன் பயத்துடன் உளறுகிறான்.

அவர் இவர்கள் மதியம் ஜன்னலில் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்து விட்டார்.

அவனை பிடித்துவுடன், அவன் அம்மாவை பார்க்க போலாம் என்று கூறி அழைத்து வந்துள்ளார்.

அசோக்கின் அம்மா குழப்பத்துடன், “யார் சார் அந்த பையன்”?

“அது இவன் நண்பன் தாம்மா”.

“அதான் அவனை பார்த்து விட்டு, இவனையும் பார்த்துட்டு போலாம்ன்னு வந்தேன்!”

அதற்கு அசோக்கின் அம்மா, “என்ன சார் இது? இந்த வயசுல வரது பேர் லவ் ஆ சார், பத்தாவது படிக்கிறான்.அறிவு இல்லையா, அவங்க அம்மா அப்பா எவ்வளவு கஷ்டபறாங்கன்னு, இப்ப லவ் பண்ணினால் அவங்க வாழ்க்கை தான் கெட்டு போகும், அவங்களுக்கு நாம தா சொல்லனும், இன்னும் மூணு மாதம் தா இருக்கு. பொதுத்தேர்வுக்கு படிக்கறத விட்டு இத பன்னிட்டு இருக்கறாங்க, அவங்க அம்மாவ சொல்லனும் வளர்ப்பு சரி இல்ல அதான், இந்த மூணு மாசம் உருபடியா படிச்ச அடுத்த நல்ல நிலைக்கு போலாம்ல, எல்லா இந்த வயசு தா சார்”

இப்படியே படபட வென பொரிந்து தள்ளினாள்..

அசோக் அவள் அம்மாவை கவனித்தாள். அவன் கண்களில் நீர் தழும்பியது, தன் தவற்றை உணர்ந்தான்.

அந்த சார் அசோக்கு என்ன சொல்ல நினைத்தாறோ அதைச் சொல்லி விட்டார், அந்த நிம்மதியில் விடைபெற்று சென்றார்.

பொதுதேர்வுக்கு அசோக் இப்பொது தயார் ஆகிறான். மூன்று மாதத்திற்குக்கா………

(இப்படி ஒவ்வொரு சின்ன சின்ன அறியா காதல்கள் ஒவ்வொரு பொதுத்தேர்விலும் மறைக்கப்படுகிறது, ஏதோ ஒரு சூழ்நிலையில்)

செய்யதக்க அல்ல செயக்கெடும்; செய்தக்க
செய்யாமை யானும் கெடும்.

ஒருவன் செய்யக்கூடாத செயல்களைச் செய்வதனாலும் தீமை விளையும், செய்யக் கூடியவற்றை உரிய நேரத்தில் செய்யாது விடுவதனாலும் தீமையே உண்டாகும். 

தொடர்புடைய சிறுகதைகள்
வயதான கிழவன் ஒருவர் இந்த கல்லூரிக்கு வருகை தந்தார். அந்த கல்லூரி வாயில் இருந்த பாதுகாவலர் அவரை வெளியே துரத்தினார். அந்த வாயில் வழியாகச் சென்ற முதல்வர் அவரைக் கண்டுக்கொள்ளாமல், காரில் கதவை மூடிக்கொண்டு சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு தொடர்ந்து ...
மேலும் கதையை படிக்க...
“அப்பா, அப்பா இன்னைக்கு நம்ம தாத்தா, பாட்டியைப் பார்க்க போறாமா? அவங்க ஊர் எப்படி இருக்கும் அப்பா? சொல்லுங்க பா? சொல்லுங்க? என்று வினாவினாள், ஐந்து வயது சிறுமி ஊர்மிளா. “அதுவா, நம்ம அங்க தான, போறோம் நீயே பாப்ப! என்று அவளை ...
மேலும் கதையை படிக்க...
ஜூன் 6 தேதியைக் கிழிக்கிறான் வளவன். அழகான பெயர் ,பெயர்க்கு ஏற்றவாறே அழகும், அறிவும் கொண்டவன். அவனுக்கு இன்று முதல் நாள் கல்லூரி. ‘’அம்மா போய்ட்டு வரேன்’’ ,என்று சொல்லி எழுதாத புதுநோட் மட்டும் எடுத்துச் சென்றான்.. “டேய் நில்லுடா”……………. அம்மா வாசலில் வந்து ...
மேலும் கதையை படிக்க...
அரசபுரம் என்ற ஊரில் பசுமையான வயல்களும், செல்வ செழிப்போடும் மக்கள் அனைவரும் வாழ்ந்து வந்தனர். அவ்வூரில் உள்ள பெரிய குளத்தில் என்றுமே மீன்கள் நிறைந்து இருக்கும். அந்நாட்டு அரசன் ஒரு நாள் அந்த குளக்கரைக்கு வந்தான். சோர்வு மிகுதியால், அக்குளத்திற்கு சென்று ...
மேலும் கதையை படிக்க...
காய்ந்த மரம்
எண்ணம்
முதல் நாள்
தங்க மீன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)