மூட நம்பிக்கை

 

என் தங்கையை சாந்தியை கல்யாணம் பண்ணிக் கொடுத்த இடத்திலே அவளது மாமனாரும், கணவரும் சுத்த பத்தாம் பசலிகள்.பஞ்சாங்கத்தைப் பார்த்து அதுக்கு நாள்,நாழிகைப் பார்த்து விட்டு எல்லா காரியம்மும் செய்வார்கள்.கல்யாணம் ஆன புதிதில் ஞாயித்துக் கிழமை சாயங்காலம் ஒரு சினிமாவுக்குப் போக வேண்டும் என்றால்,ஆறறைக்கு ஆரம்பிக்கும் சினிமாவுக்கு என் தங்கையை அழைச்சு கிட்டு தியேட்டருக்கு அஞ்சு மணிக்கு எல்லாம் போய் விடுவார்.என் தங்கைக்கு சினிமா விட்டு வீட்டுக்கு வந்து சாப்பிடுவதற்குள்,அவளுக்கு ‘பசி’ அதிகமா எடுத்து, ‘பசி’ பெருங்குடலை சாப்பிட்டு விட்டு சிறு குடல் கிட்டே வந்து விடும்..ரெண்டு வருஷம் கழித்து அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.ஹாஸ்பிடலில் அந்த பெண் குழந்தை பிறந்த நேரத்தை குறித்துக் கொண்டு வீட்டுக்கு அப்பாவும் பிள்ளையும் மாறி மாறிபஞ்சாங்கத்தை வைத்துக் கொண்டு ,ஜாதக கட்டங்கள் எல்லாம் போட்டு குழந்தை ஜாதகத்தை அவர்கள் எழுதியது இல்லாமல், மூன்று பொ¢ய ஜோஸ்யர்களிடம் போய் ஜாதகம் குறித்துக் கொண்டு வந்தார்கள்.

ஒரு ஞாயித்துக் கிழமை சாயங்காலம் பிள்ளை,அவர் அப்பா,ரமா,என் தங்கை நாலு பேரும் உட்கார்ந்துக் கொண்டு ‘காரம் போர்ட்’ விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.பாதி ஆட்டத்தில் ரமா எழுந்துப் போய் ‘பாத் ரூம்’ போய் விட்டு வந்தாள். வெளியே வந்த ரமா பயந்து விட்டு கத்திக் கொண்டே “அப்பா,மேலே இருந்து ஒரு பல்லி என் தலை மேலே விழுந்ததுப்பா.நான் பயந்துப் போய் விட்டேன்ப்பா” என்று சொல்லிக் கொண்டே ‘பாத் ரூமை’ விட்டு வெளியே வந்தாள். உடனே ‘காரம் போர்ட்’ ஆடுவதை நிறுத்தி விட்டு என் தங்கையின் கணவரும்,அவர் அப்பாவும் பஞ்சாங்க த்தை பிரித்து வைத்துக் கொண்டு அதில் ‘பல்லி விழும் பலனை’ ப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.பஞ்சாங்கத்தில் பல்லி தலை முடியில் விழுந்தால் ‘ம்ருத்யு பயம்’ என்று அச்சிடப் பட்டு இருந்தது. அப்பாவும் பிள்ளையும் ஆடிப் போய் விட்டார்கள்.உடனே அப்பாவும் பிள்ளையும் ரமாவை வெளியே எங்கும் போகக் கூடாது,ஸ்கூலுக்குக் கூட போகக் கூடாது,என்று சொல்லி வீட்டிலேயே வைத்துக் கொண்டு,ஆ·பீஸ் போகாத நேரத்தில் அவ கணவரும்,மத்த நேரங்களில் அவ மாமனாரும் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொண்டு வந்தார்கள். சாந்திக்கு அவர்கள் ரெண்டு பேரும் பண்ணுவது சுத்தப் பயித்தக்காரத் தனமாகத் தோன்றியது.பல முறை சொல்லிப் பார்த்தாள்.அவர்கள் கொஞ்சம் கூட மாறாமல் பழையபடியே இருந்து வந்தார்கள். அவள் யோஜனைப் பண்ணினாள் ஒரு முடிவுக்கு வந்தாள்.‘அன்று மாமனாரும், மாமியாரும் மத்தியானம் தூங்கிக் கொண்டு இருக்கும் போது சாந்தி அலமாறியில் இருந்து பஞ்சாங்கத்தை எடுத்து ‘பல்லி விழும் பலன்’ போட்டு இருப்பதைப் படித்தாள்.அந்தப் பலனை முழுக்கப் படித்தாள். தலை முடி மேல் விழுந்தால் ‘ம்ருத்யு பயம்’ என்று போட்டு இருந்தது.முழுக்கப் படித்துப் பார்த்தாள் சாந்தி.அதிலே ‘வலது செவி’ மேல் விழுந்தால் ‘தீர்க்காயுசு’ என்று அச்சிடப் பட்டு இருந்தது.சாந்திக்கு சந்தோஷம் தாங்கவில்லை. ரமாவை கூப்பிட்டு அவ கிட்டே ரகசியமா “ரமா,தாத்தா தூங்கி எழுந்தவுடன் நீ அவர் கிட்டே போய் ‘நான் இப்போ ‘பாத் ரூம்’ போய் விட்டு வந்தேன் தாத்தா.அப்போ என் வலது செவி மேலே ஒரு பல்லி விழுந்தது தாத்தா’ன்னு சொல்லு. தொ¢தா” என்று சொன்னதும் ரமா ”அப்படி ஏம்மா நான் ஒரு பொய்யை சொல்லணும்” என்று கேட்டாள்.சாந்தி ரமாவை பார்த்து “ரமா.நான் உனக்கு அதுக்குக் காரணம் அப்புறமா சொல்றேன். நீ என் கண்ணில்லே” என்று சொன்னதும் ரமா ஒத்துக் கொண்டு போனாள். சாந்தி மாமனார் எழுந்ததும் ரமா ஓடிப் போய் அவா¢டம் “தாத்தா, தாததா நான் இப்போ ’பாத்ரூம்’ போய் விட்டு வந்தேன்.அதே பல்லி இப்போ என் வலது காது மேலே விழுந்தது தாத்தா” என்று சொன்னாள்.உடனே என் தங்கையின் தாத்தா ஓடிப் போய் அலமாறியைத் திறந்து பஞ்சாங்கத்தை எடுத்து பல்லி விழும் பலனைப் பார்த்து விட்டு “சாந்தி, சாந்தி, ரமாவுக்கு இருந்த ‘ம்ருத்யு பயம்’ இப்போ போயிட்டது.அவ இப்போ ‘தீர்க்காயுசா’ இருந்து வருவா. வலது காது மேலே பல்லி விழுந்தா ‘தீர்காயுசுன்னு’ போட்டு இருக்காம்மா பஞ்சாங்கத்திலே.எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று சொல்லி விட்டு தன் செல் போனை எடுத்து தன் பிள்ளைக்கு போன் பண்ணீ “வெங்கட்,நான் அப்பா பேசறேண்டா.ஒரு ‘ஸ்வீட் நியூஸ்டா’ உனக்கு.நம்ப ராமவுக்கு ‘ம்ருத்யு பயம்’ போய், அவ வலது காது மேலே இப்போ ஒரு பல்லி விழுந்ததாம். ‘பல்லி விழும் பலனில்’ வலது காது மெலே பல்லி வழுந்தா பஞ்சாகத்திலே ‘தீர்காயுசுன்னு’ போட்டு இருக்குடா.எனக்கு இப்போ ரொம்ப நிம்மதியாய் இருக்குடா” என்று சொன்னார்.என் தங்கையின் கணவர் உடனே “ரொம்ப சந்தோஷப்பா.நான் ஆபீஸ்ஸில் இருந்து சீக்கிரமா வந்து விடறேன்” என்று சொல்லி விட்டு போனைக் கட் பண்ணினார்.

சாயங்காலம் மாமனாரும் மாமியாரும் கோவிலுக்குப் போய் இருந்தபோது சாந்தி தன் பெண் ரமாவை கூப்பிட்டு “ரமா,அப்பாவும் தாத்தாவும் வீணாப் பயப் படறா.நீ எத்தனை நாளைக்கு இப்படி ஸ்கூல் போகாம வீட்டிலேயே இருந்து வருவே .நீ படிச்சு முன்ன்னுக்கு வர வேணாமா.நாம் ஜாகிரதையா இருந்து வரணும்.அவ்வளவு தான்.நீ ஜாக்கிரதையா இருந்தா வா கடவுளை தினமும் வேண்டி வா போதும்.அப்பாவையும் தாத்தாவையும் இந்த மூட பழக்கத்த்தில் இருந்து வெளியே கொண்டு வரத்தான் நான் உன்னை இந்த பொய்யை சொல்லச் சொன்னேன்” என்று சொன்னதும் ரமா சிரித்துக் கொண்டே “அம்மா, நீ ரொம்ப ‘க்ரேட்ம்மா’.தாத்தா அப்பா ரெண்டு பேரையும் அவா நம்பும் பஞ்சாங்கத்தை வச்சியே மாத்திட்டேயே” என்று சொல்லி அம்மாவின் கையைப் பிடித்து குலுக்கினாள் ரமா.  

தொடர்புடைய சிறுகதைகள்
பாகம்-1 லதாவும் ரவியும் ஒருவரை ஒருவர் மிகவும் பிடித்து காதலித்து வந்தார்கள்.ஒருவரை மற்றொ ருவர் நன்றாகப் புரிந்துக் கொண்டு தான் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேன்டும் என்று நினைத்து இரண்டு வருஷம் காதலித்த பின்பு தான் கல்யாணம் ஒரு நாள் பண்ணிக் கொண்டார்கள்.அடுத்த ...
மேலும் கதையை படிக்க...
“அத்யா நோ தேவ சவித: ப்ரஜாவத் ஸாவீ: ஸௌபகம் பரா துஷ்வப்னியம் ஸுவ விஸ்வானி தேவ சவித: துரிதானி ப்ராஸுவ யத் பத்ரம் தன்மே ஆஸுவா” என்று மந்திரத்தைச் சொல்லி பஞ்ச பாத்திர பாத்திரத்தில் மீதி இருந்து ஜலத்தை கையில் விட்டு,தான் உட்கார்ந்திருந்த இடத்தில் தெளித்து விட்டு, ...
மேலும் கதையை படிக்க...
எனக்கு வயசு எண்பத்து நாலு ஆவுதுங்க.நான் ஈஸி சேரில் படுத்து கிட்டே யோஜனைப்ப் பண்ணி கிட்டு இருக்கேன். ஐஞ்சு வருஷம் முன்னாடி வரைக்கும் என் சம்சாரம் என் கூட இருந்து வந்தா. முடிந்திச்சோ, முடியலையோ அவளுக்கு அவ உடம்பு முடியும் போது, உப்போ ...
மேலும் கதையை படிக்க...
ராமசாமி ஒரு தனியார் கம்பனியில் வேலை செய்து வந்தார்.அவர் தன் வாழக்கையில் நன்றாக செட்டில் ஆனதும்,தன் அம்மா ஏற்பாடு பண்ணின ஒரு தூறத்து உறவு பெண் பத்மாவைக் கல்யாணம் பண்ணிக் கொண்டார். ரெண்டு வருஷம் ஆனதும் அவர்களுக்கு ஒரு பெண் ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம்-16 | அத்தியாயம்-17 | அத்தியாயம்-18 கொஞ்ச நேரம் ஆனதும் ரமேஷ் ”நான் கோவிலுக்கு வந்தேன்.ஆனந்த ஆத்லே இருப்பான்னு தெரியும்.அவன் கிட்டேநான் வாங்கி வந்த கேக்கையும்,சாக்லெட்டை யும் குடுத்துட்டு,உங்களேயும் பாத்துட்டுபோகலாம்ன்னு தான் வந்தேன்.என்ன மாமி,உங்களுக்கு உடம்பு சரியா இல்லையா. என்ன வோ போல ...
மேலும் கதையை படிக்க...
என்னாலேயே முடியலையே..அவனால் எப்படி..
நான் துரோகம் பண்ணலே…
கோடி புண்ணீயம்
சிறகு
தீர்ப்பு உங்கள் கையில்…

மூட நம்பிக்கை மீது 3 கருத்துக்கள்

 1. J Sankaran says:

  அன்புள்ள ரவிசந்திரன் தங்கவேலு அவர்களுக்கு என் நன்றி
  நம் நாட்டில் மூட நம்பிக்கைகள் ஏராளம் ஏராளம்
  சொன்னால் பல் பேர்கள் மனம் புண்படுகிறது.
  என்னை ஒரு” நாஸ்திகன்” என்று பட்டம் கட்டி விடுகிறார்கள்.
  இப்படிக்கு ஜெ சங்கரன்

 2. RAVICHANDRAN THANGAVELU says:

  சார் எனக்கு மூடநம்பிக்கைகளை நையாண்டி ஆக பேசும் கதை வேண்டும். அழகர்சாமியின் குதிரை மாதிரி

  • J Sankaran says:

   அன்புள்ள ரவிசந்திரன் தங்கவேலு அவர்களுக்கு என் நன்றி
   நம் நாட்டில் மூட நம்பிக்கைகள் ஏராளம் ஏராளம்
   சொன்னால் பல் பேர்கள் மனம் புண்படுகிறது.
   என்னை ஒரு” நாஸ்திகன்” என்று பட்டம் கட்டி விடுகிறார்கள்.
   இப்படிக்கு ஜெ சங்கரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)