மிருகம் – ஒரு பக்க கதை

 

ஞாயிற்றுக்கிழமை. வசந்த் ஷாப்பிங், பூங்கா, மிருகக்காட்சி சாலை என குதூகலத்துடன் கண்டு களித்துக் கொண்டிருந்தான்.

மிருகக்காட்சி சாலைக்குள் நுழைந்ததும் மகள் சுமி ஆர்வத்துடன் பார்த்து ரசித்தாள்.

அப்பா – அப்பா …அங்கே பாரேன். எத்தனை முயல், வித விதமான கலர்ல…! என ஆரம்பித்து மயில், புலி, சிங்கம், மான் , பாம்பு போன்றவற்றை எல்லாம் வியப்புடன் பார்த்து வந்த சுமி….

”ஏம்பா, வயசான மிருகங்களுக்குன்னு தனி கூண்டு இருக்கா?”

”இல்லடா செல்லம். எல்லா மிருகங்களையும் ஒரே கூண்டுலதான் போட்டு வைப்பாங்க்!”

‘ச்சே…நாமும் மிருகமாகவே பிறந்திருக்கலாம்பா..!”

”என்னடா சுமி, ஏன் இப்படி உளர்ற?”

‘இல்லப்பா, நாம மிருகமா பிறந்திருந்தோம்னா நம்ம தாத்தா, பாட்டியும் நம்ம கூடவே இருப்பாங்க! இப்ப பாருங்க மனுஷனா பிறந்ததால, அவங்க முதியோர் இல்லத்திற்குப்
போயிட்டாங்க…!

சுமியின் வார்த்தை பாம்பாய் கொத்த, குரங்கு முழி முழித்தான் வசந்த்.

- நா.கி.பிரசாத் (16-2-11) 

தொடர்புடைய சிறுகதைகள்
இரண்டொரு நாட்களாக வெப்பத்தில் தகித்திருந்த நிலத்தை குளிர்விக்கும் படியாக இன்று காலையிலேயே மழை பிடித்துக் கொண்டது. இடியும், மின்னலும் இருநாட்களுக்கு முன்னரே தொடங்கிவிட்டாலும் மழை மட்டும் இறங்கவில்லை. புதுக்குடி நிலபட்டா பெயர் மாற்றம் சம்பந்தமாக கிராம நிர்வாக அலுவலரை சந்திப்பதற்காக காருகுறிச்சி ...
மேலும் கதையை படிக்க...
வீட்டிற்குள்ளேயே நீச்சல்குளம், விளையாட்டு மைதானம், கைதட்டினால் ஓடும் கார், காந்த விசையால் மேலே, கீழே போகும் பென்க்வின்கள். போலீஸ் சைரனோடு ஓடும் கார்... இப்படி வீடு முழுவதும் எத்தனை எத்தனையோ வெளிநாட்டு விளையாட்டுச் சாமான்கள்! ஆனால், ரகுராமன் குழந்தைகளான சங்கீதாவும், சுமித்ராவும் இவை ...
மேலும் கதையை படிக்க...
புகார்ப் புத்தகம்
திருவரசு தம் மனைவியுடன் கடலூருக்குப் போவதற்காகக் கும்பகோணம் தொடர் வண்டி நிலையத்தில் காத்திருந்தார். கோடைகாலப் பகல். கேட்க வேண்டுமா? வெயில் தகித்தது. பாட்டிலில் தண்ணீர் தீர்ந்துவிடவே, நிலைய அண்டாவில் நிரப்பிக் கொள்ள எண்ணி, அருகில் போய்ப் பார்த்தால், காலி! பெருத்த ஏமாற்றம். ...
மேலும் கதையை படிக்க...
அருண்! நிறைய இடம் பார்த்தாச்சு, நீயும் அதை இதை சொல்லி தட்டி கழிச்சிக்கிட்டே இருக்கே, நாங்களும் உனக்கு பெண் தேடி அலுத்திட்டோம். இன்றைக்கு பார்க்கப் போகிற இடத்திலாவது உனக்கு ஏற்றவளா அமையனும்னு நான் வேண்டாத தெய்வமில்லை. நான் சொல்கிறதை கேளு, கொஞ்சம் ...
மேலும் கதையை படிக்க...
நிசப்தமான வீதி. மதியம் 3 மணி. அக்னி நட்சத்திரம் தகிக்கும் காலம். மக்கள் வெளியே வரவே அஞ்சும் வெப்பம்.. கோவையிலிருந்து ஈரோடு வழியாக நாமக்கல் செல்லும் பாதையில் ஒளப்பம்பாளையம் என்கிற உலகப்பம்பாளையம் செல்கிற மண் சாலை கிட்டத்தட்ட பொட்டல் காடு எனலாம். ...
மேலும் கதையை படிக்க...
காலத்தில் தொலைந்தவர்
அங்கே என்ன இருக்கு?
புகார்ப் புத்தகம்
மாமனாரைப் பிடிக்கல…
மரியாதைக்குரிய களவாணிகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)