மாற்றான் – ஒரு பக்க கதை

 

“பிள்ளை வீட்டுக்காரங்க, நாம எதிர்பார்த்ததைவிட அதிக வசதியானவங்களா இருப்பாங்கன்னு அவுங்க பேச்சிலிருந்து புரிந்தது.

பையனோட அப்பா, இருபது கார் வச்சுக்கிட்டு, நல்லா டிராவல் பிஸினஸ் சைடில் ஓடிக்கிட்டு இருக்கு. ஒன்றுக்கு நாலுவீடு வச்சிருக்காங்க. ஒரே பிள்ளையானதால், அப்பாவின் சம்பாத்தியம் முழுவதும் பையனுக்குத்தான்.

அவங்க வசதிகளைப் பார்க்கும்போது நாம எங்கேயோ தள்ளி நிற்கிறோம். அவ்வளவு சொத்தை கொடுக்கவில்லையானாலும், ஆண்டவன் உனக்கு அழகைக் கொடுத்திருக்கறதனால, அவங்களுக்கு உன்னை ரொம்பப் பிடிச்சு போச்சு. நீ என்னம்மா சொல்றாய்…’மகள் ரதியிடம் ரேவதி ஆவலோடு கேட்டாள்.

“அவங்க தங்களைப் பற்றி பெருமையா பேசியதை அலசி, ஆராய்ந்து முடிவு பண்ணலாம்!’ சஸ்பென்ஸ் கொடுத்து நிறுத்தினாள் ரதி.

“நீயே அதைச் செய்… நான் கேட்டுக்கறேன்…’என்றாள் ரேவதி.

“பத்தாயிரம் கிலோ மீட்டர் ஓடக்கூடிய கார் டயரை ஐயாயிரம் கிலோ மீட்டரிலேயே மாத்தி, புதுசு போடுவாங்க. கையில் நல்லா வருமானம் வரக்கூடிய பிஸினஸ் இருந்தாலும், சைடில் இன்னொன்று, ஒரே வீட்டில் இருந்தா போரடிச்சுரும்னு, வருடத்திற்கு ஒருமுறை வீடு மாத்துவாங்க.
சொந்தவீடு இருந்தாக்கூட, வாடகை வீட்டுக்கும் போவாங்க. எதிலும் அவுங்களுக்கு ஒன்றுக்கு மேல தேவைப்படுகிறது. பழசை அடிக்கடி மாற்றி, புதுசுக்குப் போற பழக்கமிருக்கிற குடும்பத்தில், என்னையும் ஒரு வருடத்தில் மாற்ற மாட்டாங்கங்கற உத்தரவாதம் அவுங்க பேச்சுல தெரிஞ்சா சொல்லுங்க… அப்புறம் முடிவு பண்ணலாம்.’

மகளின் அலசலைக் கேட்டு, பவர் கட்டிலும் ஷாக்காகி உட்கார்ந்தாள் ரேவதி.

- ஜனவரி 2013 

தொடர்புடைய சிறுகதைகள்
நாலு வயது மகளோடு பீச்சுக்குப்போய் ஒதுக்குப்புறமாக உட்கார்ந்து, கையிலிருந்த புத்தகத்தைப் பிரித்து படிக்க ஆரம்பித்தேன். மகள் முதலில் ஐஸ்கிரீம் வேண்டுமென்று கேட்டாள். ‘தொண்டையில் பூச்சி வந்துவிடும்’ என்று பயமுறுத்தினேன். லாலிபாப் கேட்டவளை, ‘வயிற்றில் பூச்சி வந்துவிடும்’ என்று சொல்லி சமாதாப் படுத்தினேன். அந்தப் பக்கமாக பலூன்காரர் ...
மேலும் கதையை படிக்க...
கிராமத்திலிருந்து அண்ணன் மணியைப் பார்க்க வந்திருந்த சத்யா. அவருடைய மளிகைக் கடைக்கு விஜயம் செய்தான். அடுக்கி வைக்கப்பட்டிருந்த பழைய செய்தித் தாள்களை ஒவ்வொன்றாக உருவி, கூம்பு வடிவத்தில் லாவகமாக மடித்து. அவைகளில் பலவகையான மளிகைச் சாமான்களைப் போட்டு, சணல் நூலால் கட்டி வாடிக்கையாளர்களுக்கு மணி ...
மேலும் கதையை படிக்க...
சார், நம் கம்பெனியில பெண்கள் வேலை செய்யிற பகுதிக்கு சூப்பர்வைஸர் தேவைன்னு விளம்பரம் கொடுத்திருந்தோம் இல்லையா? அதுக்கு அப்ளை பண்ணவங்க எல்லாருக்கும் டெஸ்ட் வச்சு இன்டர்வியூ முடிச்சாச்சு. வனஜா, கிரிஜான்னு ரெண்டு பேரு சம தகுதியோட இருக்காங்க. அவங்கள்ல யாரை செலக்ட் பண்றதுன்னு ...
மேலும் கதையை படிக்க...
”பிள்ளை வீட்டுக்காரங்க நேரா மாடிக்குப் போயிட்டாங்க. நானும் உடனடியா அங்கே போறேன். வந்தவங்களக்கு காப்பி கொண்டு வா” என்று பெண்ணிடம் சொல்லிய அம்மா பர்வதம் வேகமாக வாயிற்பக்கம் இருந்த படியேறினாள். ”மாப்பிள்ளை அளவுக்கு என் பொண்ணு படிக்கலை. ஆனா சமயோசிதமா நடந்துக்குவா” என்று ...
மேலும் கதையை படிக்க...
‘’உன்னை பெண் பார்க்க வரப் போறவருக்கு நல்ல படிப்பு, கை நிறைய சம்பளம் இருக்கு. உனக்கு மேட்ச் ஆகற மாதிரியே ஸ்மார்ட்டா இருக்காரு. எந்த குழப்பமும் செய்யாம, இவரையாவது ‘சரி’ ன்னு சொல்லுடி’’ என்றாள் மூச்சு விடாம அம்மா. ம்ம்ம்…வீட்டு வாசலில், பெரிய ...
மேலும் கதையை படிக்க...
இள வயது – ஒரு பக்க கதை
பொட்டலம் – ஒரு பக்க கதை
தனிக்குடித்தனம் – ஒரு பக்க கதை
தகுதி – ஒரு பக்க கதை
கோலம் – ஒரு பக்க கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)