மாறிய மனசுகள்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 26, 2022
பார்வையிட்டோர்: 4,114 
 

“அப்பா..! அப்பா ! இங்க வாங்களேன்..” காலை நேரம் . ஜன்னலிலிருந்து சரஸ்வதி கிசுகிசுப்பாய்க் கூப்பிட்டாள்.

இரவு ஊரிலிருந்து வந்த அலுப்பு. ஆனாலும் மகள் அழைக்கிறாள். தட்ட முடியாமல் அருகில் சென்றேன்.

“அங்கே பாருங்க…”கண்களால் வெளியே ஜாடை காட்டினாள்.

எதிர் வீட்டு வாசலில் கணவன் மனைவி இருவரும் ஸ்கூட்டரில் ஏறி தாயாராய் இருந்தார்கள். வாசல் குறட்டில் ஒரு வயதானவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு இரண்டு குழந்தைகள் அவர்களுக்கு கையசைத்தார்கள்.

அவர்களை அடையாளம் தெரிய எனக்குள் பயங்கர இடி., அதிர்ச்சி. !

“அது அவர்தானே..?!…”சரஸ்வதி பெரியவரைக் காட்டிக் கேட்டாள்.

“அ… ஆமாம் !”

“அவ…?”

“அடையாளம் தெரியுது. குழந்தைங்க…?” சந்தேகமாக இழுத்தேன்.

“ஒன்னுதான் அவருக்குப் பொறந்ததாச்சே ! பொண்ணு இந்தாளுக்குப் பிறந்திருக்கும்போல…”சொன்னாள்.

சில வினாடிகளில் அங்கிருந்த காட்சிகள் காணாமல் போனது.

ஸ்கூட்டர் சென்று விட்டது. பெரியவர், பிள்ளைகள் வீட்டிற்குள் சென்றுவிட்டார்கள்.

“மானம்கெட்ட ஜென்மங்கள்….! இப்பத்தான் எங்கேயோ கிடந்து ஒரு மாசத்துக்கு முன்னால் இங்கே குடி வந்தாங்க. சட்டுன்னு அடையாளம் தெரியல. எங்கேயோ பார்த்திருக்கோமேன்னு ரெண்டு நாள் மூளையைப் போட்டு கசக்கினதும் ஞாபகம் வந்துடுச்சி.

ஒரு நாள் அவளும் நானும்.. எதிர்பாராதவிதமா எதிரெதிரே சந்திச்சிக்கிட்டோம். என்னை அடையாளம் கண்டுக்கிட்டு சினேகமா சிரிச்சா. அவளை பார்த்து சினேகமா சிரிக்கிறதுக்கோ, பழக்கம் , நட்பு வைச்சிக்கிறதுக்கோ நானென்ன அவளை மாதிரி கேடு கெட்டவளா..?! சட்டுன்னு முகத்தைத் திருப்பிக்கிட்டு காறித் துப்பாத குறையாய் வந்துட்டேன்.

அவளும் அவனும் வேலைக்குப் போறாங்க. இந்தக் கிழம்தான் வீட்டு வேலைக்காரன் மாதிரி குழந்தைகளை அழைச்சுக்கிட்டுப் பள்ளிக்கூடம் கொண்டு விட்டு வரும், அழைத்து வரும். ரேசன், மளிகை கடைன்னு ஏகத்துக்கும் அலையும். இதைவிட பெரிய வெட்கக்கேடு.. ரெண்டு குழந்தைகளுமே அவரைத் தாத்தான்னுதான் அழைக்கும். எனக்கு நாக்கைப் பிடுங்கிக்கிறாப்போல இருக்கும். !” வார்த்தைகளை வெறுப்பில் கலந்து உமிழ்ந்.து நிறுத்தினாள்.

எனக்கு… அதிரிச்சி, ஆச்சரியம், இன்னும் அகலாமல் கோபதாபங்களும் சேர்ந்து தாக்கியது.

‘நாறப் பொணம்களா…!!’ – மனம் காறித்துப்பி… அவர்கள் நினைவுகள் என்னை விடாமல் துரத்தியது.

நானும் இந்த ஆள் சுப்ரமணியமும் ஒரே ஊர் ஊத்துக்காரன்பட்டி. ஒத்த வயது, நண்பர்கள். அவன் வெள்ளாளத் தெரு. நான் செட்டித் தெரு.

சுப்ரமணியம் ஊரில் நல்ல வசதி. பெரிய மிராசு. பிள்ளைக்குட்டி இல்லாதவன். தன் நாற்பத்தைந்தாவது வயதில் மனைவி காலமாகிவிட இவன் சிவனே என்று சும்மா இருந்திருக்கலாம்.

வயதான காலத்தில் தனக்குத் துணை வேண்டுமென்றோ, வாரிசு வேண்டுமென்றோ இவன் இன்னொருத்தி திருமணம் செய்து கொள்ள ஆசைப் பட்டான்.

என்னிடம்தான் வந்து யோசனைக் கேட்டான்

.”வயதான காலத்தில் எதற்கு வம்பு..? பாதி சொத்தை அநாதைக் குழந்தைகளுக்கு எழுதி வைத்துவிட்டு மீதி சொத்தை விற்று காசாக்கிக்கொண்டு முதியோர் இல்லத்தில் சேர்ந்துவிடு. யாருக்கும் கஷ்டம் இல்லை. உனக்கும் தொந்தரவில்லை.” சொன்னேன்.

அவன் அரை மனதாய் விழித்தான்.

“சரி. உன் வயதுக்கு ஒரு விதவை, இல்லை விவாகரத்தானவளாய்ப் பார்த்துத் திருமணம் செய்து கொண்டு பிள்ளைக் குட்டிப் பெற்று மகராசனாய் இரு !” சொன்னேன்.

இதில் உடன் பட்டுத் தலையாட்டிக்கொண்டு போனவன்தான்.

பெண் பார்ப்பதில் தடுக்கி விழுந்துவிட்டான்.

பாரம் தொலைய பெண்களைத் தள்ளி விடும் நடப்பில் ஒரு சின்னப் பெண்ணைக் கட்டிக்கொண்டு விட்டான்.

“இந்தாளுக்கு வயசு நாப்பத்தஞ்சு. அவளுக்கு இருபது. மனுசனுக்குப் புத்திப் பேதலிச்சுப் போச்சு !” ஊரே வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டது.

“ஏழைப் பெண்ணை ஏமாத்திக் கட்டி பணத்தைக் காட்டி வயசை மறைச்சுட்டான்.” ஏசியது.

“வாழப் போற அவளே சம்மதிச்சி கழுத்தை நீட்டி இருக்கா.. நமக்கெதுக்கு வம்பு ?!” – அப்புறம் அடங்கிப் போயிற்று.

உலகம் போற போக்கு ! – நானும் வாயை மூடிக்கொண்டேன்.

அவர்களுக்கு முதல் வருடமே குழந்தை. அதற்கு நான்கு மாதங்கள் ஆகிறவரைக்கும் குடும்பம் சுகம். வாழ்க்கை நல்லவிதம்.

அதன் பிறகுதான் விதி விஸ்வநாதன் ரூபத்தில் நுழைந்தது.

அவன் கிராம சேவக். கட்டைப் பிரம்மச்சாரி. தங்க அறை தேடி அலுத்தவனுக்குச் சுப்ரமணியம் தன் வீட்டு மாடி அறையை ஒழித்துக் கொடுத்தான்.

அதுதான் அவன் செய்த பெரிய தவறு. அவன் அதைச் செய்யவில்லை என்றாலும் விதி எப்படியோ..? அதன்படி நடந்திருக்கும். !?

ஆறே மாதம். அவள் இவனைப் பார்த்து மயங்கினாளோ, இவன் அவளைப் பார்த்து மயங்கினானோ தெரியாது. ஆறே மாதத்தில் பிள்ளையோடு ஆளை அடித்துக் கொண்டு போய்விட்டான்.

சுப்பிரமணியம் இடிந்து போய்விட்டான். அப்புறம் யாரிடமும் பேசாமல் ஒரு மாதம் வரை இருந்து இருப்பதெல்லாம் விற்று எடுத்துக் கொண்டு காணாமல் போனான்.

ஆற்றில் விழுந்தானா, ஆசிரமத்தில் சேர்ந்தானா..? முதியோர் இல்லம் போய் அண்டினானா ??…ஆளைப் பார்த்த செய்தி எவரிடமிருந்தும் வெளிவரவில்லை.

அதன் பிறகு ஆளை இப்போதுதான் இந்த நிலையில் பார்க்கிறேன்.

தனக்குத் துரோகம் செய்து ஓடிப்போனவர்களை விரட்டிப் பிடித்து கண்டந்துண்டமாக வெட்டி எறிந்து விட்டு சிறைச்சாலைக்குப் போகாமல் இதென்ன.. கையாலாகாத்தன வாழ்க்கை..? சூடு, சொரணை, மானமில்லாத கேடு கெட்ட உயிர் பிழைப்பு.! அதுவும் தன்னோடு ஓராண்டுக்கு மேல் வாழ்ந்து குடியும் குடித்தனமுமாக இருந்து குழந்தையையும் பெற்ற மனைவி ஒரே வீட்டில் மாற்றானோடு உள்ளே வாழ இவனுக்கு வெளித்திண்ணையில் படுக்கை..?! மனம் எப்படி சகித்துக் கொள்கிறது..?

ஒருவேளை வயதாகி விட்டதென்று இவர்களிடம் அடைக்கலம் புகுந்து விட்டானா..?!

அட! என்னதான் வயதாகட்டுமே..! ஆணானப் பட்டவனுக்குக் கொஞ்சம்கூடவா மான அவமானம், ரோசாபாசம், ஆத்திரமிருக்காது..?

எல்லாம் இழந்து, உளுத்த மரக்கட்டையாகி விட்டானா..? இதையெல்லாம் விட பெரிய கொடுமை…பெற்ற பிள்ளை ‘ அப்பா ‘ என்றழைக்காமல் ‘ தாத்தா ! ‘ அழைக்கிறதாம்..!! எவ்வளவு மானக்கேடு. ! சகித்துக் கொள்ளமுடியாத கொடுமை.

இரண்டாவது பிறந்தது…கூப்பிடட்டும்..? விஸ்வநாதனுக்குப் பிறந்தது. தனக்குப் பிறந்தது ‘ தாத்தா !’ என்றழைக்க எப்படி மனசு ஒப்பும்..?!! பிள்ளைதான் அறியாமல் அழைக்கிறதென்றால் பெற்றவள் எப்படி மனசு கூசாமல் குமையாமல் கேட்டுக் கொண்டிருக்கிறாள்…?!

முன்னாள் கணவன் முன் அவளுக்கு எப்படி இந்நாள் கணவனுடன் மகிழ்ச்சியாக… அதுவும் அவன் கண்ணெதிரிலேயே வாழ முடிகிறது..?

குடித்தனம் நடத்தும் அழகைப் பார்த்தால்… சுப்ரமணியமே இவர்களைச் சேர்த்து வைத்திருப்பான் போல.!? கண்டும் காணாமல் விட்டு பிணைத்திருப்பான் போல..? ஓடிப்போய்விடுங்கள் நான் பின்னால் வந்து சேர்ந்து கொள்கிறேனென்று அனுப்பி இருப்பான் போல…? ! – எனக்கு நினைக்க நினைக்க குமட்டிக் கொண்டு வந்தது.

ஆள் தனியாக மாட்டட்டும் . கேட்டுவிடுவோம் ! மனசு கறுவியது.

அதற்கான வாய்ப்பு அன்று மாலையேக் கிடைத்தது. சுப்ரமணியம் ஒயர் கூடையை எடுத்துக் கொண்டு கடைத்தெருவிற்குக் கிளம்ப… நான் அவனுக்கு முன் கிளம்பி…திரும்பி தற்செயல் சந்திப்பு போல் இடையில் வந்தவனை எதிரே வழி மறைத்தேன்.

என்னை எதிர்பாராமல் பார்த்ததில் சுப்ரமணியத்திற்கு அதிர்ச்சி, மகிழ்ச்சி.

“அடடே ! மக வீட்டுக்கு எப்போ வந்தே கோதண்டம்..?” மலர்ச்சியாகக் கேட்டான்.

நான் பேசப் பிடிக்காதவன் போல் வெறுப்பாய்ப் பார்த்தேன்.

“ஏன்..” துணுக்குற்றுப் பார்த்தான்.

“நீ கெட்ட கேட்டுக்கு உன்கிட்ட பேச்சு வச்சிக்கனுமான்னு தோணுது..”

அதிர்ந்தான்.

“நீ எல்லாம் ஒரு மனுசன்.! உனக்கு ஒரு வாழ்க்கை. இப்படி மானம்கெட்டத்தனமா வாழுறதை விட செத்துத் தொலைஞ்சிருக்கலாம்..!” – வெறுப்பு, கசப்பு எல்லாம் கலந்த கலவையில் என்னிடமிருந்து ஒவ்வொரு வார்த்தைகளும் அழுத்தம் திருத்தம், நெருப்புத் துண்டங்களாக வந்து விழுந்தது.

சுப்ரமணியம் ஆடவில்லை, அசையவில்லை.

என்…ஆவேசம் புரிய அவன் சிறிது நேரம் மவுனமாக நின்றான்.

“உன் ஆத்திரம் எனக்குப் புரியுது. என்னைப் பார்க்கும் எல்லோருக்கும் இந்த ஆத்திரம், ஆவேசம் வரத்தான் செய்யும். இருந்தாலும்…. அப்படி வா. கொஞ்சம் பேசலாம்..!” அழைத்தான்.

“என்ன சொல்லப் போறே..?”

“வாயேன் சொல்றேன்..!” நடந்தான்.

பின் தொடர்ந்தேன்.

இருவரும் பூங்காவில் ஓரமாக அமர்ந்தோம்.

முகத்தில் இன்னும் வெறுப்பு கலையாமல் எதிரில் அமர்ந்திருக்கும் என்னை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்துவிட்டு, கொஞ்சம் மௌனம் காத்து….. அப்புறம் பேசினான்.

“கோதண்டம் ! மனைவி மத்தவனோட ஓடிப்போய்ட்டாள்ன்னு தெரிந்த அடுத்த வினாடியே… எனக்கு அவளையும், அவனையும் வெட்டிப் போடனும்னுதான் எல்லாருக்கும் வர்ற சராசரி மனுச ஆத்திரம் எனக்கும் வந்துது. ஆனா…. ஆத்திரம் அடக்கி யோசனை பண்ணினேன். இந்த வயசுல ஒரு இளம் பெண்ணைக் கட்டி இருக்கக்கூடாது. கட்டிக்கிட்டது தப்புனு மனசுல உரைச்சிச்சு. கலியாணம் கட்டி ஒரு குழந்தைக்கும் தாயாகிவிட்ட பிறகு பொண்ணுக்கு என்ன குறை இருக்கப்போவுது..? ஓடிப் போனது கொழுப்புன்னு எல்லாரும் நினைக்கலாம். அது தப்பு. கணவன் மனைவி உறவு குழந்தை பெத்துக்கிறதுல மட்டும் திருப்தி ஆகிறதில்லே.

மனுஷனுக்கு வயசுக்குத் தகுந்த வேகமிருக்கு. கனவுகள் , கற்பனைகள், ஆசை, ஏக்கங்கள்ன்னு இப்படி எக்கச்சக்க இடைச் சொருகல்கள் இருக்கு. என்னதான் எதிரி இளசா இருக்கானேன்னு அவன் வாயசைத்தாண்டினவன் நினைச்சி வேகமாக ஓடினாலும் அந்த வேகப்படுத்தலிலும் வித்தியாசமிருக்கு. இது எனக்கு இவளைத் தொட்ட முதல் ராத்திரியிலேயே தெரிந்தாலும் இப்போ சுரீர்னு சுட்டுப் பொசுக்குச்சி.

சரி. தப்பு செய்ஞ்சிட்டோம். அவளும் ஓடிட்டாள். அதுக்காக ஆத்திரப்பட்டு அவுங்களைக் முகத்தில் இன்னும் வெறுப்பு கலையாமல் எதிரில் அமர்ந்திருக்கும் என்னை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்துவிட்டு, கொஞ்சம் மௌனம் காத்து….. அப்புறம் பேசினான்.

“கோதண்டம் ! மனைவி மத்தவனோட ஓடிப்போய்ட்டாளேன்னு தெரிந்த உடனேயே எனக்கு அவளையும், அவனையும் வெட்டிப் போட்டனும்னுதான் எல்லாருக்கும் வர்ற சராசரி மனுச ஆத்திரம் எனக்கும் வந்துது. ஆனா…. ஆத்திரம் அடக்கி யோசனை பண்ணினேன். இந்த வயசுல ஒரு இளம் பெண்ணைக் கட்டி இருக்கக்கூடாது. கட்டிக்கிட்டது தப்புனு மனசுல உரைச்சிச்சு. கலியாணம் கட்டி ஒரு குழந்தைக்கும் தாயாகிவிட்ட பிறகு பொண்ணுக்கு என்ன குறை இருக்கப்போவுது..? ஓடிப் போனது கொழுப்புன்னு நீ நினைக்கலாம். அது தப்பு. கணவன் மனைவி உறவு குழந்தை பெத்துக்கிறதுல மட்டும் திருப்தி ஆகிறதில்லே.

மனுஷனுக்கு வயசுக்குத் தகுந்த வேகமிருக்கு. கனவுகள் , கற்பனைகள், ஆசை, ஏக்கக்கங்கள்ன்னு எக்கச்சக்க இடைச் சொருகல்கள் இருக்கு. என்னதான் எதிரி இளசா இருக்கானேன்னு அவன் வாயசைத்தாண்டினவன் நினைச்சி வேகமாக ஓடினாலும் அந்த வேகப்படுத்தலிலும் வித்தியாசமிருக்கு. இது எனக்கு ஏற்கனவே தெரிந்தாலும் இப்போ சுரீர்னு சுட்டுச்சி.

சரி. தப்பு செய்ஞ்சிட்டோம். அவளும் ஓடிட்டாள். அதுக்காக ஆத்திரப்பட்டு அவுங்களைக் கொன்னு வாழ்க்கையைக் கெடுக்கிறதுனால என்ன நடக்கும்..? செத்துப் போவாங்க. நான் சிறைச்சாலைக்குப் போவேன். நான் பெத்தப் புள்ள நடுத்தெருவில் நிப்பான். அப்படி நிக்கிறப் புள்ளையைப் பார்த்து…’ ஐயோ..! ரோசக்காரன் புள்ளைன்னு ‘ அந்த பிஞ்சு குழந்தையை வாரி அணைச்சி வளர்க்குமா இந்த சமூகம்..? செய்யாது ! மாறாய்… கொள்ளைக்காரன் பெத்தப் புள்ளைன்னு துரத்தி துரத்தி அடிக்கும். நான் செய்த தப்புக்கு நான் கஷ்டப்படலாம். தண்டனை அனுபவிக்கலாம். எனக்குப் பிறந்த பாவத்துக்காக… ஒன்னும் அறியாத அந்த குழந்தை ஏன் இப்படியெல்லாம் கஷ்டப்படனும்..? இந்த நினைப்பு வந்ததுமே… மனசு மாறிப்போச்சு. கொலைக்கான எண்ணம் கை விட்டுப் போச்சு.”

அடுத்து… என் குழந்தையோட ஓடினாளே கூட்டிக்கிட்டுப் போனவன் அவளை மட்டும் மோகத்துல வைச்சுக்கிட்டு குழந்தையை நிராகரிச்சிடுவானோ..? அப்படி விட்டால் அதன் கதி..? – இதை நினைக்கும் போது பகீர்ன்னுச்சி. யாருக்கும் எந்த கெடுதலும் இல்லாமல் இதுக்குத் தீர்வு..?… நிறைய யோசிக்கும்போதுதான்… மனைவியை மகளாய் நினைச்சா என்ன என்கிற ஞானோதயம் பிறந்துச்சு. அப்படி நினைக்கும்போது மனசு தூசு தட்டின மாதிரி துப்புரவாயிடுச்சி. இதுதான் தீர்வுன்னு மனசு தீர்ப்பாயிடுச்சு.

இன்னைக்கு என் பையன் அவுங்க குழந்தையா இருந்தாலும் என் என் பையன் என்கிறது உண்மை. ஊருக்குத் தெரியலைன்னாலும்… என் மனசாட்சியை மறைச்சு மறுப்பு சொல்ல முடியாது. அந்தப் பிள்ளை தானா வளருவானா..? பராமரிக்க காசு வேணாம்..? அதைக் கொடுக்க வேண்டியது என் கடமை இல்லியா..? கொடுக்க நினைச்சேன்.

அப்போதான் இன்னொரு யோசனையும் வந்துது. இந்தா! என் புள்ளையை வளர்க்கக் காசுன்னு கொடுத்தா தம்பதிகள் வாங்கிப்பாங்களா..? வாங்க மாட்டாங்க. எப்படி கொடுக்கலாம்ன்னு யோசிச்சேன். மனைவியை மகளாய் ஏத்துக்கிட்டப் பிறகு பணத்தை சீதனமாய்க் கொடுக்கலாம்னு மனசு மாறிச்சு. சரி தானே..! அதனால் இந்த ஊரை வீட்டுக் கிளம்பி அவுங்களைத் தேடிப் பிடிச்சேன். மிரண்டங்க. தப்பான எண்ணமில்லேன்னு விசயத்தைச் சொல்லி சீதனம் கொடுத்தேன். வாங்க மறுத்தாங்க. வற்புறுத்தி கையில திணிச்சிட்டு வேலை முடிஞ்சுது காசி, ராமேஸ்வரம் போறேன்னு கிளம்பினேன். மனசுல உண்மையிலேயே மகளா நினைச்சிருந்தா நீங்க இங்க எங்களோடேயே வாழலாமே. அப்படி வாழலைன்னா… அது ஒப்புக்குச் சொன்ன வார்த்தை மாதிரின்னு புருசன் பொண்சாதி சொன்னங்க. அதுவும் சரிதானே.??.. இதை நிரூபிக்கவாவது அவுங்களோட இருக்க வேணாமா..?! . இருந்தேன்.!

“கோதண்டம் ! அவ மகள், அவன் என் மருமகன். குழந்தைங்க.. பேரன் பேத்திங்க. பையனை என் பையனா நினைக்கல. மறந்துட்டேன். அதனால அந்தத் தெரியாத பிஞ்சுக்கு உண்மையைச் சொல்லாம அவுங்க பையனாவே விட்டுட்டேன்.

அது அவுங்க குழந்தைதான். அந்த உண்மையை மறந்தும் வெளியில சொல்ல மாட்டேன். சொன்னா.. தாயைப் பத்தி, தகப்பனைப் பத்தி அந்த குழந்தைக்குத் தப்பான நினைப்பு வரும். அதனால் அதை விட்டுட்டேன். அவன் தாத்தான்னு அழைக்கிறதுல எனக்கு வருத்தமில்லே. மாறாய் சந்தோசம்தான்.. மக வீட்டுல இருந்து சேவை செய்யிறேன். மனுசன் மனசு இப்படியெல்லாம் மாறுமான்னு நெனைக்கிறீயா..? மனசு எப்படி வேணும்மின்னாலும் மாறும். மாத்திக்கலாம். மனசு வைச்சா மலையையேப் புரட்டலாம். இதென்ன மசுரு.” சுப்ரமணியம் நிறுத்தி நிதானமாகச் சொல்லி முடித்து பெரு மூச்சு விட்டார்.

‘ஆசை அறுமின். ஆசை அறுமின்!’ இவன் மனைவி ஆசை அறுத்துவிட்டான்! – எனக்குப் புரிய..

சுப்பிரமணியத்தை இப்போது மதிப்பாய் பார்த்தேன்.

“நண்பா..!” தழுதழுத்தது நெகிழ்ச்சியாய்க் கை பிடித்தேன்.

Print Friendly, PDF & Email

1 thought on “மாறிய மனசுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *