”என்ன மீனு சந்தோஷமா இருக்கே, ஏதாவது விசேஷமா ?- கணவன் ராஜேந்திரன் கேட்டான்.
”எங்க அப்பா கேரம் டோர்னமென்ட் விளையாட திருச்சி வந்திருக்காராம், முடிச்சுட்டு நம்ம வீட்டுக்குத்தான் வர்றாராம்”!
”வரட்டும்…வரட்டும்…உன் அப்பா டிஸ்டிரிக்ட் லெவல்ல பெரிய சாம்பினயன்தானே? என்கிட்ட மோதி ஜெயிக்கட்டும், நான் ஜெயிச்சா உனக்கு ஸ்பெஷல் பரிசு வாங்கித் தர்றேன்! என்றான்.
”நீங்களாச்சு…உங்க மாமனாராச்சு…”என சமையலறைக்குப் போனாள்.
மாமனாரும் வீடுவந்து சேர்ந்தார, உபசரித்து விருந்து முடிந்து சிறிது ஓய்வுக்குப்பின்….சவால் போட்டி ஆரம்பமானது, விளையாட்டு சூடுபிடித்தபோது சாம்பியன் மாமனார் கைவரிசையைக் காட்ட, ராஜேந்திரனும் சளைக்காமல் போட்டி போட்டான். கடைசியாய் சிவப்பு காயினை மாமானார் ஸ்ட்ரைக்கரால் தட்ட முயல, ஸ்ட்ரைக்கர் நேராக குழிக்குள் விழுந்து மைனஸ் ஆனது. ராஜேந்திரன் சுலபமாக ரெட்காயினைத் தட்டி, டசாம்பியனை தோற்கடித்தான். மறுநாள் ஊருக்குக் கிளம்பும் முன்பு…”எப்படிப்பா தோத்தீங்க?” என்று கேட்டாள் மீனு.”
”உனக்கு ஸ்பெஷல் பரிசும் வரணும், எனக்கு மாமனார் அந்தஸ்தும் குறையக்கூடாதும்மா, கண்டுக்காதே!” என்றார் அப்பா.
- 21-12-2015
தொடர்புடைய சிறுகதைகள்
“காலையில் இருந்து சாயங்காலம் வரைக்கும் உழைச்சு ஓடா தேயறோம்” மினிஸ்டர்; காட்டன்ல சட்டை போட்டுக்கிட்டு, துளியும் கசங்காம கார்ல வந்துட்டு போற முதலாளிக்கு நம்ம கஷ்டம் இன்னா தெரியும்” ஒரு பணியாளர் இன்னொரு பணியாளாரிடம் பேசிக்கொண்டிருந்ததை….. தொழில் நிறுவனத்தைச் சுற்றி பார்த்துக் ...
மேலும் கதையை படிக்க...
”மூச்சிரைக்க லக்கேஜ்களைத் தூக்கி கொண்டு அவசர அவசரமாக மக்கள் அதிக நடமாட்டமுள்ள ரெயில் ஜங்ஷனிற்குள் நுழைந்து… சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த பாலாஜியின் அலைபேசியில்.. ”உறலோ ! இன்னாங்க ஸ்டேஷனுக்கு போயிட்டீங்களா? ரெயில் வந்திடுச்சீங்களா? எத்தனை மணிக்கு ரெயில் புறப்படும்? லக்கேஜ்லாம் பத்திரமா ...
மேலும் கதையை படிக்க...
கதை கேளுங்கள்: https://youtu.be/YfBTUAOdslM
பசுமை நிறைந்த அழகிய கிராமம். புழுதி பறக்கும் மண்சாலை வசதி இருந்தது.
புழுதி பறக்கும் மண்சாலையைத் தாண்டினால் சிறிய மலைக்குன்று ஒன்று இருந்தது. அந்தக் குன்றின் மேலே ஏறுவதற்கு சரியான பாதை இல்லை!
பாதையில்லாததால். மலைக்குன்றில் மனித நடமாட்டம் இல்லாமல் அமைதியாய் ...
மேலும் கதையை படிக்க...
“சிவபெருமான் ஆழ்ந்த தியானத்திலிருக்கிறார்“
“தம்பூரா இசையோடு “நாராயணா, நாராயணா, நாராயண” நாரதரின் குரல் ஒலிக்கிறது
சிவபெருமான் தியானத்திலிருந்து எழவில்லை
“விடாமல் தம்பூராவை மீட்டிக் கொண்டிருக்கிறார்..கடைசியில் கண் விழிக்கிறார் சிவபெருமான்.
“என்ன நாரதரே சேதி எதுவும் உண்டோ?“
“ஐயனே! நீங்கள் இந்த இடத்தில் தொடர்ந்து தியானத்தில் இருக்க வேண்டுமென்றால், இருப்பிட ...
மேலும் கதையை படிக்க...
“வாய்நிறைய பல்லாக வரவேற்பதில், வெங்கட்டுவை மிஞ்சி அந்த ஏரியாவில் யாருமே இல்லை.
போஸ்ட்மேன் முதற்கொண்டு, கேஸ் டெலிவரி பாய் வரை,தெரிந்தவர், தெரியாதவர்கள் என்ற பாகுபாடில்லாமல் “உள்ற வாங்கோ, காபி சாப்பிட்டுட்டு போங்கோ“ன்னு உபசரிப்பதில் அலாதி பிரியம் அவருக்கு. அந்த பிரியத்திலும் சுயநலமுண்டு. வருகிறவர் ...
மேலும் கதையை படிக்க...
பதிவிற்கு நன்றி