மாப்பிள்ளை – ஒரு பக்க கதை

 

“அமெரிக்க மாப்பிள்ளை கிடைத்துவிட்டான். நிறைய சம்பாத்திப்பான். தன் பெண் நன்றாக இருப்பாள் என்ற சந்தோஷத்தில் நிறைய செலவழித்து அவனுக்கு தன் பெண்ணைக் கொடுத்து எவ்வளவு பேர் ஏமாந்து போயிருக்கிறார்கள் தெரியுமா?

மேலும் ஏதாவது என்றால் உன் ஒரே பெண்ணை அடிக்கடி போய் பார்க்கத்தான் முடியுமா? உன் பெண்ணுக்கு தமிழ்நாட்டிலேயே ஒரு மாப்பிள்ளை பார்… அதுதான் நல்லது…’ தன் சிநேகிதி கீதா சொன்னது வைதேகிக்கு சரியாகத்தான்பட்டது.

தரகர் சொன்ன அமெரிக்க மாப்பிள்ளையை நிராகரித்து விட்டாள்.

இரண்டு மாதம் கழித்து தரகரை எதேச்சையாக சந்தித்தபோது அவர் சொன்னார். “மாதம் இருபது லட்சம் சம்பாதிக்கும் அந்த மாப்பிள்ளையை வேண்டாம் என்று சொல்லிவிட்டீர்களே?… உங்கள் சிநேகிதி கீதா என் வீட்டிற்கு வந்து “வைதேகி நீங்கள் அவள் மகளுக்கு பார்த்த அமெரிக்க மாப்பிள்ளையை வேண்டாம் என்று சொல்லிவிட்டாளாமே? என் பெண்ணுக்கு அந்த மாப்பிள்ளையைப் பேசி முடியுங்களேன்’ என்று சொன்னாள்.

நானும் மாப்பிள்ளை பையனை பெண்ணை பார்க்கச் செய்து கல்யாணமும் நிச்சயம் ஆகிவிட்டது. உங்கள் பெண் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்…’

வைதேகி அதிர்ச்சி அடைந்தாள்.

- முகவை ராஜா (செப்டம்பர் 2011) 

தொடர்புடைய சிறுகதைகள்
1 ராமசாமி விருட்டென்று நடைக்குத் தாவிக் கதவைத் தட்டினான் தெரு விளக்கின் 'இருபத்தஞ்சு பவர் ' விளக்கு மட்டும் வீட்டுக் கதவை அடையாளம் காட்டும் புனித சேவையோடு கர்மயோக சாதகம் செய்து கொண்டிருந்தது. ராமசாமியிடம் கைக் கெடிகாரம் இல்லை. எனவே மணி என்ன ...
மேலும் கதையை படிக்க...
சந்தோஷின் செல்போன் ஒலித்தது. ‘‘என்னப்பா... காலைல ஆறு மணிக்கெல்லாம் பிசினஸ் காலா?’’ - கேட்டான் சஞ்சய். ‘‘இல்லை.. பர்சனல். இது ஹோம் மினிஸ்டர்’’ - சிரித்தான் சந்தோஷ். இருவரும் நண்பர்கள். சஞ்சய் பிசினஸ்மேன்; சந்தோஷ் பிசினஸ் டெவலப்மென்ட். அதாகப்பட்டது மார்க்கெட்டிங் மேனேஜர். இருவரும் ...
மேலும் கதையை படிக்க...
ஒரு வாளித் தண்ணீரையும் ஹாலில் கொட்டி விளையாடிக் கொண்டிருந்தான் சுரேஷ். "ஏண்டா கடங்காரா! சனியன் பிடிச்சவனே! திருட்டுக் கழுதை! ஒரு பக்கெட் தண்ணீரையும் வீடு பூராக் கொட்டி வச்சிருக்கியே! வழுக்கி விழுந்தா கை கால் முறியாதா?" ராதிகா, பிள்ளையை 'மடேர் மடேர்' என்று ...
மேலும் கதையை படிக்க...
கோவிலுக்குள் நுழையும்போதே கவனித்து விட்டேன். அந்தச் சிறுமி இன்றைக்கும் வந்திருந்தாள். அவள் உயரத்திற்கு ஒரு துடைப்பம். யாரையும் எதுவும் கேட்கவில்லை. கோயிலை பெருக்கத் தொடங்கினாள். பக்தர்கள் வந்தார்கள். பகவானை வழிப்பட்டார்கள். கோயிலை வலம் வந்தார்கள். அவள் அவர்களுக்கு இடையில் தான் பெருக்கிக் கொண்டிருந்தாள். ”ஏம்மா, இன்னும் கொஞ்சம் சீக்கிரமாவே ...
மேலும் கதையை படிக்க...
" இந்தக் கக்கூஸ’லேயே குடியிருக்கலாம் போல இருக்கு "என்றாள் மாதவி. கழிப்பறையின் பளபளப்பு அவளின் முகத்தில் மினுமினுத்துக் கொண்டிருந்தது. பிரகாசத்தை கழிப்பறையின் உட்சுவர்கள் பிரதிபலித்துக் கொண்டிருந்தன. ஒரு வகை பளபளப்பு இப்போதுதான் பளிங்குக் கற்களை பதித்துவிட்டு நகர்ந்து விட்டிருப்பதுபோல தோன்றச் செய்தது. ...
மேலும் கதையை படிக்க...
மனைவி
ஆண்கள்
மனைவியை அடக்க ஒரு திட்டம் – ஒரு பக்க கதை
பணம் – ஒரு பக்க கதை
கழிப்பறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)