மாடும் மனிதனும்

 

மயிலைக் காளைகள் இரண்டுக்கும் கோமாரி என்று கேள்விப்பட்டதிலிருந்து மன்னார்குடி மாணிக்கம் பிள்ளையின் மனம் சரியாகவே இல்லை. பொழுது விடிந்ததும் மாட்டு வைத்தியரை அழைத்துக் கொண்டு வந்து, அவற்றுக்கு வேண்டிய சிகிச்சையை அளிக்குமாறு பணித்துவிட்டு வெளியே வந்தார். பத்துப் பன்னிரண்டு பேர் அவருடைய வரவை எதிர்பார்த்து வாசலில் காத்துக் கொண்டு இருந்தனர்.

“என்னடாபயல்களா, என்ன சேதி?”

“பத்து நாளாப் பட்டினிங்க; பண்ணையிலே ஏதாச்சும்……”

“வேலைதானே ? அதற்குத்தான் இங்கே ஏகப்பட்ட ஆட்கள் இருக்கேடா!”

“முனியனுக்கு மூணு நாளாக் காய்ச்சல்னு கேள்விப்பட்டோம்……!”

“ஆமாம், அதற்கென்ன இப்போது?”

“அவனுக்குப் பதிலா எங்களில் யாரையாச்சும்…..!”

“ஓஹோ! அப்படியானால் கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்கள்; கணக்குப் பிள்ளை அவனைத்தான் பார்க்கப் போயிருக்கிறார்; வரட்டும்!”

அப்படியே அவர்கள் ஒதுங்கி நின்றனர். அதே சமயத்தில் ஒதுங்காமலும், பதுங்காமலும், நிமிர்ந்த நடையுடனும் நேர் கொண்ட பார்வையுடனும் எசமான் வீட்டு நாய் அவர்களுக்கிடையே நுழைந்தது. அதைத் தொடர்ந்து கணக்கப் பிள்ளையும் வந்தார்.

“என்னய்யா, ஆளைப் பார்த்தீரா? என்ன சொன்னான்? இன்றாவது வேலைக்கு வரப் போகிறானா, இல்லையா?” என்றார் மாணிக்கம் பிள்ளை.

“அவன் எங்கே இனிமேல் வேலைக்கு வரப் போகிறான்?” என்றார் கணக்கப் பிள்ளை.

“ஏன் வாயைப் பிளந்து விட்டானா?”
“ஆமாம்.”

“சரி, விடு கழுதையை! ஏய்! யாரடா அங்கே?” என்று திரும்பினார் மாணிக்கம் பிள்ளை.

அவ்வளவுதான்; “எசமான்”என்று விழுந்தடித்துக் கொண்டு வந்து அவருக்கு எதிரே நின்றான் ஒருவன்.

அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, “வந்திருப்பவர்களில் நீதான் தேவலை என்று தோன்றுகிறது; ஒழுங்காக வேலை செய்வாயா?”

ரோஸம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது அவனுக்கு; “என்னா அப்படிக் கேட்டுப்புட்டிங்க, உங்க காலு செருப்பாயிருப்பேனுங்க நானு” என்று சூள் கொட்டினான்.

“என்னமோ, தலைக்குக் கிரீடமாக வந்து சேராமல் இருந்தால் சரிதான்!-ஓய், இவனைப் பண்ணைக்கு அனுப்பிவையும்; பாக்கிப் பேரை வெளியே தள்ளிக் கதவைச் சாத்தும்!” என்று உத்தரவு போட்டுவிட்டு மாணிக்கம் பிள்ளை உள்ளே வந்தார். மாட்டு வைத்தியர் கையைப் பிசைந்து கொண்டு அவருக்கு எதிரே நின்றார்.

“என்னய்யா, எப்படியிருக்கு?”

“என்னாலே ஆன மட்டும் பார்த்தேனுங்க; தவறிப் போச்சுங்க!”

“இரண்டுமா?”

“ஆமாங்க!”

இதைக் கேட்டதுதான் தாமதம்; ‘ஆ’ என்று அலறிய வண்ணம் அப்படியே தலையில் கையை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார் பிள்ளை.

மாட்டு வைத்தியர் அதுதான் சமயமென்று மெள்ள நழுவினார்.

“அப்போது சேரிக்கு ஆள் விடட்டுமா?”என்று கேட்டுக்கொண்டே அங்கு வந்தாள் மாணிக்கம் பிள்ளையின் மனைவி.

“பேசாமல் போடி, சேரிக்கு ஆள் விடுகிறாளாம் ஆள்!” என்றார் பிள்ளை எரிச்சலுடன்.

“ரொம்ப நன்றாய்த்தான் இருக்கிறது முப்பது வருஷமாவேலை செஞ்ச முனியனே போயிட்டானாம்; மாடு போனா என்னவாம்?” என்றாள் அவள்.

“மனுஷன் முதலில்லாமல் வருவான்; மாடு முதலில்லாமல் வருமா?” என்றார் அவர்.

- விந்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, கலைஞன் பதிப்பகம், சென்னை. 

தொடர்புடைய சிறுகதைகள்
இன்னும் ஒரு குழந்தைக்குக்கூடத் தாயாகவில்லை அவள்; அதற்குள் அவன் போய்விட்டான்! 'போய்விட்டான்' என்றால் அவனா போய்விட்டான்? 'தர்மராஜன்' என்ற பெயருக்கு முன்னால், நகைச்சுவைக்காகத்தானோ என்னவோ, 'எம' என்ற இரண்டு எழுத்தையும் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறானோ, அந்தப் புண்ணியவான் அவளுடைய கணவனைக் கொண்டு போய் ...
மேலும் கதையை படிக்க...
மாதக் கடைசி; தேதி இருபத்து மூன்று; வெள்ளிக்கிழமை; மாலை நேரம். கணேசன் காரியாலயத்திலிருந்து மனச்சோர்வுடன் வீட்டுக்குத் திரும்பி வந்தான். அவனுடைய சோர்வுக்குக் காரணம் வேறொன்றுமில்லை; இந்தியாவின் பொருளாதார நிலை திருப்திகரமா யிருப்பதுபோல், அவனுடைய பொருளாதார நிலை திருப்திகரமாக யில்லாமற் போனது தான் அவனுடைய மனைவி ...
மேலும் கதையை படிக்க...
இருபத்து நான்காவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் மனோரஞ்சிதம் சொன்ன கடவுள் கல்லான கதை "கேளாய், போஜனே! அல்லும் பகலும் அனவரதமும் ‘கடவுளே கதி’ என்று இருந்த ஓர் ஆத்மாவுக்குத் திடீரென்று ஒரு நாள் ஒரு சந்தேகம் பிறந்தது. அந்தச் சந்தேகம் என்ன வென்றால்: ‘மற்ற யுகங்களிலெல்லாம் ...
மேலும் கதையை படிக்க...
'லொக்கு, லொக்கு, லொக்கு'.... நெஞ்சைப் பிளக்கும் இந்த இருமல் சத்தம் காதில் விழும்போதெல்லாம் அந்தச் சத்தத்துக்குரிய ஜீவனைக் கடை வாயிலில் உட்கார்ந்தபடியே அனுதாபத்தோடு பார்ப்பான் ஆறுமுகம். ஆம், அவனுடைய கடைக்கு எதிர்த்தாற் போலிருந்த நடைபாதையில் தான் அந்தக் கிழவன் வசித்து வந்தான். ...
மேலும் கதையை படிக்க...
காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த முத்தையா 'ஊம்.. ஊம்... ஊம்" என்று ஈச்சம் பாயில் படுத்தபடி 'ஊம்' கொட்டிக் கொண்டிருந்தான். அடுத்த வீட்டுக்காரியிடமிருந்து அப்பொழுதுதான் வாங்கி வந்த அரைப்படி நெல்லை உரலில் போட்டு 'உக்கும்...உக்கும்...உக்கும்' என்று குத்திக் கொண்டிருந்தாள் அவன் மனைவி மாரியாயி. முத்தையாவின் முணுமுணுப்பு வரவர ...
மேலும் கதையை படிக்க...
எத்தனை முறை எண்ணிப் பார்த்தாலும் எனக்கு இது அதிசயமாய்த்தான் இருக்கிறது. தன் உயிரின்மேல் அந்தக் கிழவனுக்குத்துளிக்கூட ஆசை இல்லை; ஆனால் உயிரோ அவன் மீது அளவற்ற ஆசை வைத்திருக்கிறது. என்ன செய்வான், பாவம்! படுக்கையில் படுத்தபடி ஒரு நாளைப்போலத் தன் உயிரோடு ...
மேலும் கதையை படிக்க...
டாக்டர் ரங்கராவ் அந்த ஆஸ்பத்திரியில் வேலைக்கு அமர்ந்ததிலிருந்து இதுவரை எத்தனையோ பிரேதங்களைப் பரிசோதித்திருக்கிறார். ஆனால் அன்றைய தினம் பரிசோதனைக்கு வந்த பிரேதத்தைப் பார்த்ததும் ஏற்பட்ட அதிர்ச்சியும் அனுதாபமும் என்றுமே அவருக்கு ஏற்பட்டதில்லை. ஏன்? அவருடைய உள்ளமறிந்த ஒரு ஜீவனின் பிரேதமாயிருந்தது அது! அவன் எப்படி இறந்தான்? ‘போலீஸ் ...
மேலும் கதையை படிக்க...
பதினெட்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் பரிமளா சொன்ன கள்ளன் புகுந்த கதை "கேளாய், போஜனே! பெரும்பாலும் விமானத்திலேயே பிரயாணம் செய்துகொண்டிருந்த மிஸ்டர் விக்கிரமாதித்தர், ஒரு சமயம் ஏதோ ஒரு மாறுதலை உத்தேசித்து ரயிலியே பிரயாணம் செய்ய, அந்த ரயில் யாரோ ஒரு புண்ணியாத்மா நடுவழியில் ...
மேலும் கதையை படிக்க...
வேலப்பனின் வேலையே அலாதியானது. மனைவி, மக்களை மறந்து நாள்தோறும் உயிரற்ற இயந்திரங்களிடமோ, உணர்ச்சியற்ற அதிகாரிகளிடமோ உயிரை விட்டுக் கொண்டிருப்பது அவனுடைய வேலையல்ல; அவன் தொழிலுக்கு அவனே வேலைக்காரன்; அவனே சொந்தக்காரன்! காலையில் எழுந்ததும் வேலப்பன் கடை வீதிக்குச் சென்று சில தேக்குமரத் துண்டுகளையும், ...
மேலும் கதையை படிக்க...
மூடியிருந்த 'ரயில்வே கேட்'டுக்கு முன்னும் பின்னும் மத்திய சர்க்காரை மீறி ஒன்றும் செய்ய முடியாத மாகாண சர்க்கார்களைப் போலச் சகல வண்டிகளும் நின்று கொண்டிருந்தன; சகல மக்களும் நின்று கொண்டிருந்தார்கள். அப்போது 'பாம், பாம்' என்று குரல் கொடுத்துக் கொண்டே வந்த லாரி ...
மேலும் கதையை படிக்க...
மறுபடியும்…
முதல் தேதி
இருபத்து நான்காவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் மனோரஞ்சிதம்
அவன் ஏன் திருடவில்லை?
பதினோராம் அவதாரம்
அவன் கேள்வி
கதவு திறந்தது!
பதினெட்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் பரிமளா
சுயநலம்
ஐந்தாண்டுத் திட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)