Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

மஹாளயத்தில் பொன்னம்மா யார்?

 

கணேசனின் தந்தை இறந்தபின் அவனுக்கு முன்னோர்கள் கடன் செய்வதில் சிரத்தைஅதிகம் ஏற்பட்டது. அம்மாவுக்கும் ரொம்ப திருப்தி. கருப்பு எள்ளு, பலாமூசு, வாழைத்தண்டு, என்று தேடித்தேடி வாங்கிவருவாள். நல்ல வெண்ணெயை வாங்கி காய்ச்சி ஹோமங்களுக்கும் சமையல் சாப்பாட்டுக்கும் பக்ஷணங்களுக்கும் வைப்பான். நுனிவாழைஇலை வாங்கி வருவான்.

வருடத் திதி வருகிறதென்றால் ஒருவாரம் முன்னாலிருந்தே அதே நினை வாக காய்ந்த வரட்டி, சிராய் என்று ஓமம் வளர்க்க தயார்ப்படுத்துவான்-அப்பா வருகிறார் என்று. அதை கர்மசிரத்தை என்பார்கள். அப்படிமுடிப்பான். ஐந்தாறு வருடங்கள் ஓடிவிட்டன.

அன்று மஹாளய தர்ப்பணம் செய்தான் கணேசன், வாத்தியாருக்கு வரமுடியவில்லை என்று போன் செய்துவிட்டார். “ஓரிடத்தில் சிரார்த்தம், ஒரு ’தவறவிட்ட கேஸ்’ வேறு கூடுதலாகக் கிட்டியிருந்தது. அதனால் நீங்களே புத்தகத்தை வைத்துக்கொண்டு செய்துவிடுங்க. சாயரட்சை நான் வந்து தாம்பூலம் எடுத்துக்கறேன்” என்று சொன்னார்.

சரி என்று கணேசன் தானே செய்தான். அப்பா, தாத்தா கொள்ளுத்தாத்தா, பாட்டி, பாட்டியின் மாமியார், பாட்டி மாமியாரின் மாமியார் என்று மூன்று தலைமுறைகளைக் கூப்பிட்டு தீர்த்தம் கொடுப்பது. தெரிந்தவர்கள் அறிந்த வர்கள், வாரிசு இல்லாதவர்களுக்கும் கொடுக்க முடியும். மாஹாளய பக்ஷம் என்பது இறந்தவர்களுக்கும் தாகசாந்தி செய்ய ஏற்பட்ட காலம். 15 நாட்கள் இறந்தவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நேரம் புரட்டாசியிலோ சில சமயம் ஆவணியிலோ வரும். அதாவது ஆவணி மாதம் பௌர்ணமிக்குப் பிறகு மஹாளய அமாவாசைவரையிலான 15நாட்கள். அப்போது தெய்வத்திற்குச் செய்தாலும் அது இறந்தவரையே சேரும் என்று சொல்வார்கள். புரட்டாசி சனிக்கிழமை கொண்டாடுபவர்கள்கூட மஹாளய பக்ஷத்தில் செய்யமாட்டார் கள்.

கணேசன் தன் குடும்பத்தவர்கள் பெயர்களைச் சொல்லி எள்ளும் தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்தான். எல்லாப் பெயர்களும்அம்மாவுக்குத் தெரியும், ஒவ்வொருவரையும் நினைத்துக் கொண்டாள்.

’பாவம் மாமியார்! மாமனார் காலாலேயே உதைப்பார். மருமகள் எதிரில் கூசி, குறுகித்தவிப்பாள்.அவளும் சாகும்வரை புருஷனிடம் அடிபட்டவள்.அவளுக்கு மாமியார் காசிக்குப்போய் திரும்பவில்லையாம், தாத்தா தொண்ணூற்றி யாறு வயது வாழ்ந்தார். கணேசனின் அப்பா இறப்பதற்கு ரெண்டு வருடம் முன்னாலே தான் போனார்…’

’அது சரி, இதாரு இது பொன்னம்மா? கணேசன் ஏன் அவளுக்குப் போய் தர்ப்பணம் விடறான்? ‘

”நம்ம குடும்பத்துலேயே யாருமே அந்தப் பேர்ல இல்லயேடா? எந்தப் பொன்னம்மாளைக் கூப்பிட்டு மூணு தடவை தர்ப்பணம் பண்ணினே?

கணேசன் நிதானமாகச் சொன்னான்: ”ஏம்மா? மறந்துட்டாயா? மறந்து போயிட்டா விஷயமே இல்லைனு ஆயிடுமா? கிணத்துலே மிதந்த பொன்னம்மா நமக்கு என்ன சாபம் எப்படி எல்லாம் குடுத்தாளோ? எனக்கு அப்போ புரியலை. ஆனா அவங்க மனசு குளிரவேண்டும். அப்போதான் நம்ம குடும்பம் நல்லாயிருக்க முடியும். அதனாலே தான் மஹாளய பக்ஷத்திலே கோத்திரம் வயசு வருடம் திதி ஏன் பேர் தெரியாட்டாக்கூட அவங்களை ஆனசுலே நெனச்சு நம்பிக்கையோட எள்ளும் தண்ணியும் குடுத்தா கட்டாயம் அந்த ஆத்மாவுக்கு தாகசாந்தி கிடைச்சு மனசு குளிர்ந்துவிடும். எனக்கு நம்பிக்கை இருக்கு. அதான், நான் பொன்னம்மாவை நினைச்சு நம்பிக்கை யோட எள்ளும் தண்ணியும் தர்ப்பணம் பண்ணறேன்”, என்றான்.

பதில் பேசாத அம்மா அந்த பொன்னம்மாவை நினைவுபடுத்திக் கொண்டாள். குடியானவப் பெண் பொன்னம்மா சுள்ளி பொறுக்க காட்டுப்பக்கம் போவாள். வரப்பில் விளைந்த காய்கிழங்குகளை எடுத்துவந்து கொடுப்பாள். அரிசி புடைப்பாள், கல்கொத்தி, களைபிடுங்கி சீர்செய்து கொடுப்பாள்… கணேசனின் அப்பா பெண்கள் விஷயத்தில் சற்று சபலம். ஆனாலும், தந்தையிடம் பயம் அதிகம். அதனால் எந்த விபரீதமும் ஏற்படவில்லை.

ஒருமுறை கிழவர் வெளியூருக்கு ஒரு திருமணத்திற்குபோயிருந்த சமயம் கணேசனும், அம்மாவும் போயிருந்தார்கள். ஏதோ வேலையாக வந்த பொன்னம்மாவை வாயில் துணியை அடைத்து தன் விருப்பத்தை தீர்த்துக் கொண்டார் கணேசனின் தந்தை. அவள் கிழவரிடம் சொல்லுவேன், அம்மா விடம் சொல்லுவேன் என்று அழுதாள். என்ன செய்வது, பின்புறமிருந்த பாழும் கிணற்றில் அவளைத் தள்ளிவிட்டார்.

மூன்று நாட்கள் ஆனபின் நாற்றம் அடித்தபோது ஊரிலுள்ள மக்கள் வந்து பார்த்தனர். பொன்னம்மாவைக் காணோம். ஆற்றின் எதிர்கரையில் அவளு டைய மாமன் வீடு இருந்தது. அங்கு போவதுண்டு. அவள் அங்கு போயிருப் பாள் என்று தேடாமலிருந்தார்கள். அப்படியிருக்க அவள் எதற்கு கணேசன் வீட்டுக் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டாள் என்று ஊர்மக்கள் குழம்பினார்கள்.

பத்துநாட்கள் ஆனபின் எல்லாருமே அவளை மறந்துவிட்டார்கள்.

கணேசனின் அப்பா கலகலப்பில்லாமல் வளைய வந்தார், சாகும்போது ”பொன்னம்மா சாபம் குடுத்துட்டாள்” என்று புலம்பினார், ஏன்? எதற்கு? என்ற விவரம் எதுவும் சொல்லவில்லை, இரண்டுநாளில் இறந்துவிட்டார்….

_’இப்போது நீ செய்தது மிகச் சரியான காரியம்தான்’ என்று கூறுவதாய் வாஞ்சையும் வருதமுமாய் கணேசனைப் பார்த்தாள் அவனுடைய தாய்.

- 06 ஆகஸ்ட், 2012 

தொடர்புடைய சிறுகதைகள்
பிருந்தா என்று பெயரிட்டதாலோ என்னவோ அவளுக்கு துளசி என்றால் ரொம்பவும் பிடிக்கும். சிறு வயது முதலே துளசிச் செடி வைத்து நீர் ஊற்றி கோலங்கள் போட்டு விளக்கேற்றி தோத்திரம் படித்து பிரதக்ஷினம் நமஸ்காரம் என்று பெரியவர்கள் போல சிரத்தையுடன் செய்வாள். திருமணமாயிற்று. புருஷன் ...
மேலும் கதையை படிக்க...
நந்தகுமார் கல்லூரி மாணவன். பெற்றோருக்குக் கடைசி மகன். செல்லப்பிள்ளை. நல்ல வசதியுள்ள குடும்பம். தாயார் அவனுக்கும் மணமுடிக்க ஆசைப்பட்டாள். உறவுமுறையில் ஒரு செல்வந்தரின் மகள் இருந்தாள். அந்தப் பெண் இந்துமதியை மணம் செய்விக்க முயற்சி செய்தாள். நந்தகுமாரின் அக்கா, தங்கைகள் இந்துமதியின் ...
மேலும் கதையை படிக்க...
பரசுவால் நீலு பேசும் ஒரு வார்த்தைளை பொறுத்துக் கொள்ளவோ மன்னிக்கவோ முடியவே இல்லை. கோபித்து கொள்ளவோ தடுக்கவோ தைரியமுமில்லை. அவளுடைய பேச்சுக்குப் பேச்சு அதை கேட்க நேர்ந்தது. மனம் திடுக்கிட்டு பதறுகிறது. ஆனால் அதற்கு ஒரு காரணமிருந்தது. அவன் சிறுவயதிலேயே யாரோ ...
மேலும் கதையை படிக்க...
அப்போது எனக்கு பத்தொன்பது வயது. மாலாவுக்கு ஒன்றரை வயது. அவள் என் தங்கைகளுடன் என் பிறந்த வீட்டிலேயே தானிருப்பாள். என்னைத் தேடவே மாட்டாள். மின்விளக்குவசதிகூட இல்லாத அந்த வீட்டில் நாங்கள் குடியிருந்தோம். பதினெட்டு ரூபாய் வாடகை; ஒரே மாதம் அட்வான்ஸ். ஒரு பெரிய அறை, ஒரு ...
மேலும் கதையை படிக்க...
நான் வீட்டை விட்டுக் கிளம்பி பத்துநாட்கள் ஆகிவிட்டன. புறப்படும்போது வித்யா திரும்பத்திரும்பச் சொன்னாள். ”இரண்டு தோசை சாப்பிட்டுவிட்டுப் போங்கள்” என்றாள். என் வேலைகளின் நடுவில் நேரமேயில்லை. அதனால் எனக்கு எந்தச் சிற்றுண்டி சாப்பிடும்போதும் என் வித்யாவின் தோசையே மனதில் நின்றது. கண்ணன் பாட்டில் ...
மேலும் கதையை படிக்க...
பாகீரதியிடம் தெருக்கோடி வீட்டு பையன் ஓடி வந்து, “உங்க வீட்டுக்குபுதுசா ஒருத்தர் வந்திருக்காரில்லயா? அவரை போலீஸ் பிடிச்சுண்டு ஜீப்புலே அழைச்சுண்டு போனா. நான் ஸ்கூலுக்கு போறபோது பார்த்தேன்” என்றபோது பாகி “ஐயையோ, புதுப்பையன் கன்னடமும் தெரியாது. இங்கிலீசும் பேசத்தெரியாது. எங்கே போய் ...
மேலும் கதையை படிக்க...
சைதன்யனும் சைத்ராவும் காதலர்கள். அவன் தன் தங்கையின் திரு மணத்திற்காகவும் அவள் தன்னுடைய அக்காவின் கல்யாணத்திற் காகவும் காத்திருக்க வேண்டிவந்தது. மூன்றுவருடங்களும் ஓடிவிட் டன. இவர்களுடைய திருமணப்பேச்சு வந்தபோது இருகுடும்பங்க ளும் சற்று முறைத்துக்கொண்டன. பிறகு, காலத்திற்குத் தக்கபடி அடுத்ததலைமுறையின் நல்வாழ்வுகருதி ...
மேலும் கதையை படிக்க...
ஒரு முக்கியமான வைபவத்திற்காக இரண்டு நாட்கள் நாங்கள் சென்னை போய் வந்தவுடன் என் மாமியார் ஒரே புலம்பல். மொலு மொலுவேன்று பொரிந்து தள்ளினார். “இங்கே பாரு சுசீலா, இப்படி முன்னே பின்னே பழக்கமில்லாத புது எடத்துல என்னத் தனியா விட்டுட்டு இனிமே ...
மேலும் கதையை படிக்க...
கௌசல்யாவை திருமணம் செய்துகொண்ட தசரதன் தன் மனதில் தீர்மானித்தான்: ’ஒருத்திக்கு ஒருவன் என்றே வாழுவேன், மற்றொருபெண்ணை மனதில்கூட நினைக்கமாட்டேன்’ என்று உறுதி எடுத்துவிட்டான். ஆனால் ராமனைப் பெற்றவுடன் கௌசல்யா இறந்துவிடவே கௌசல்யாவின் தந்தையே வற்புறுத்தி கேதகியை (இரண்டாம் மகளை) மணமுடித்து வைத்தார். ...
மேலும் கதையை படிக்க...
மாடி வராண்டாவில் பளபளவென்று உடையணிந்தபடி பட்டாம்பூச்சிபோல் நின்றிருந்த ஸஹானாவை கீழே இருந்து அர்ஜுன் கூப்பிட்டான். “ஸஹானா” என்று ராகத்துடன்! உடனே, “ஹாய்!” என்று கையசைத்துச் சிரித்தாள் ஸஹானா. “ஆச்சு, மணி நாலடிச்சாச்சு. கிளம்பிட்டா ராணி! இனிமே இருட்டினாத்தான் உள்ளே நுழைவாள்”, என்று அம்மா ...
மேலும் கதையை படிக்க...
கங்கை சொம்பு
அவனுடைய காதலி
ஓடியது யார்?
அப்படியோர் ஆசை!
சிறிய பொருள் என்றாலும்…
புதிய அனுபவம்
சைத்ரா செய்த தீர்மானம்
நேற்றைய நினைவுகள் கதை தான்
தசரதன் இறக்கவில்லை!
சின்னஞ்சிறு கிளியே…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)