மலடி – ஒரு பக்க கதை

 

மருத்துவமனையில் தீபா படுத்திருந்தாள். அருகில் குழந்தை.

முகத்தில் பெருமிதம். பிருந்தாவிற்கு பாட்டியாகிவிட்டோம் என்ற மகிழ்ச்சி.

மருமகளைப் பார்க்க ரேவதி வந்தாள். கூடவே பிரசன்னா.

அவன் முகத்தில் அப்பாவாகிவிட்டோம் என்ற மகிழ்ச்சி.

குழந்தையை ஆசையாகக் குனிந்து பார்த்தபடி இருந்தான்.

ரேவதியின் முகத்தில் மகிழ்ச்சியில்லை.

“என்ன குழந்தை பெத்துட்டோம்னு சந்தோஷமா? கரு தரித்ததும் கலைச்சுடுன்னு சொன்னேன். என் பேச்சுக்கு மதிப்பில்லை. உன் பிடிவாதத்தால் பிரசன்னா அமெரிக்கா போகும் வாய்ப்பை இழந்தான். இப்பொழுது கைக்குழந்தை, மறுபடியும் அமெரிக்கா வாய்ப்பு வந்தால் எப்படி போவான்? குழந்தையைப் பெற்றுக் கொள்ளாமல் மலடியாக இருந்திருக்கலாம். இப்பொழுது குழந்தையில்லைன்னு யார் அழுதார்கள்?’ வார்த்தைகளால் சுட்டாள் ரேவதி.

ரேவதியின் பேச்சைக் கேட்டு பிருந்தா துடிதுடித்தாள்.”சம்பத்தியம்மா குழந்தையில்லாம் அக்கம் பக்கத்திலும் உறவினர்களிடமும் நான் பட்ட வேதனை உங்களுக்கு எப்படித் தெரியும்? என்னை மலடி மலடின்னு சொல்லும்பொழுது என் காதில் கொதிக்கும் ஈயத்தை ஊற்றியது போல் துடிதுடித்தேன். உங்கள் மருமகளை நான் பெற்றவள் இல்லை. ஒரு அநாதை. என் மலடி பட்டத்தைப் போக்கிய ஒரு தேவதை’ வெளியே சொல்ல முடியாமல் கண்ணீர் விட்டாள்.

- மணியன் (பிப்ரவரி 11, 2012) 

தொடர்புடைய சிறுகதைகள்
ஆச்சு….புனிதாவும் அவளது கணவன் ராஜேஷும் ஒருவரை ஒருவர் முகம் பார்த்து பேசிக் கொண்டு…. இன்றோடு மூன்றாவது நாள் முடிகிறது…. …! இப்படியே ராஜேஷை விட்டுப் பிரிந்து போகவும் புனிதாவுக்கு மனதளவில் சம்மதம் தான்…குழந்தை அருண் மட்டும் பிறந்திருக்கவில்லையென்றால் …..அவளது முடிவு அதுவாகத் ...
மேலும் கதையை படிக்க...
சித்ராக்குட்டி
நீங்க நல்லா அனுபவிப்பீங்க'' சட்டென்று தூக்கம் கலைந்தது சரோஜாவுக்கு. உடம்பெல்லாம் வியர்த்திருந்தது. கட்டில் கிறீச்சிடத் தன் பெருஞ்சரீரத்தைப் புரட்டி எழுந்து கொண்டு, ஃப்ரிட்ஜைத் திறந்து அரை பாட்டில் குளிர்ந்த நீரைக் காலி செய்துவிட்டு, ஃபேனை இன்னும் கொஞ்சம் வேகமாகச் சுழலவிட்டு, மீண்டும் கட்டிலில் ...
மேலும் கதையை படிக்க...
உடைத்தெறியபட்ட கற்கள் சதுரங்களாயும்,செவ்வகங்களாயும் முக்கோண வடிவிலும் அருங்கோணமாயுமாய் இன்னமும் இன்னமுமான வடிவம் காட்டியுமாய் காட்சி தருகிறது.கூடவேகொஞ்சம் சிமெண்ட் மற்றும் செங்கல் காரையும் தூசியுடனுமாய் ஏதாவதுஒரு வீட்டின் தரைத்தளம், மற்றும் அடுப்படி மேடை சிங்க தொட்டியை உடைத்தெடுத்திருக்கவேண்டும்.நல்லதல்லாததைஉடைத்துவிட்டு நல்லதை வைத்திருக்க நடந்த ...
மேலும் கதையை படிக்க...
இரண்டு வருடங்கள் கழித்து இப்போதுதான் அப்பாவைப் பார்க்கிறாள் ரம்யா. தம்முடன் படித்த மகேஷைக் காதலித்து ஊரை விட்டு ஓடியவள், எத்தனை நாள் இரவில், அப்பாவுக்காக அழுதிருப்பாள். சின்ன வயதில் அம்மாவை இழந்த அவளையும், தங்கை ருத்ராவையும் எவ்வளவு பாசமாய் வளர்த்தார். பாழாய்ப்போன காதல் இப்படி ...
மேலும் கதையை படிக்க...
இதுவும் ஒரு சேவைதான்!
காலை நேரம். வீடு பரபரப்பாக இருந்தது. கணவன் - மனைவி இருவரும், வேலைக்கு கிளம்ப வேண்டும். குழந்தைகள் பள்ளிக்கு போக வேண்டும். 8:30 மணிக்குள் இதெல்லாம் நடந்தாக வேண்டும். மாலினி வழக்கம் போல், 5:30 மணிக்கு எழுந்து, குளித்து, சமையல் வேலை துவங்கியிருந்தாள். பரத் ...
மேலும் கதையை படிக்க...
மங்கையராய் பிறப்பதற்கு மாதவம்…. ஏதுக்கடி ?
சித்ராக்குட்டி
மாவுக்கல்லும் தூசியும்…
அன்புள்ள அப்பா… – ஒரு பக்க கதை
இதுவும் ஒரு சேவைதான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)