மறுபக்கம்

 

சங்கர், சங்கர் கூப்பிட்டுக்கொண்டே உள்ளே வந்த சியாமளா அங்கு ரகு மட்டும் உட்கார்ந்திருப்பதை பார்த்து ஒரு நிமிசம் தயங்கினாள்.

ரகு அவளை வெற்றுப்பார்வையாய் பார்த்துக்கொண்டிருந்தான். இவள் மெல்ல தயங்கி சங்கர் இல்லையா?

ஏன் சங்கர்தான் வேணுமா? அவன் குரலில் கேலியா, கிண்டலா தெரியவில்லை.

சங்கர் என்னைய கூப்பிட்டான், அதான் வந்திருக்கேன், இவள் குரலில் அலட்சியம் காட்டினாள்

இவளின் அலட்சிய பேச்சு இவனுக்கு கோபத்தை கொடுத்த்தது, அப்பவெல்லாம் ரகு ரகு அப்படீன்னுதான் வந்திட்டிருந்தே. இப்பவெல்லாம் என்னை கண்டா உனக்கு பிடிக்கறதே இல்லை.

இப்பவும் நான் உன் மேலே நல்ல பிரண்ட்ஷிப்தான் வெச்சிருக்கேன். நீதான் வேற என்னேன்னமோ நினைச்சுட்டு இப்படி பிகேவ் பண்ணறே.

ஓ உங்களுக்கு புதுசா யாராவது ஒருத்தர் கிடைச்சுட்டாங்கன்னா, பழையவன் வெறும் பிரண்ட்ஷிப் ஆயிடறான் இல்லையா.

ப்ளீஸ் ரகு புரிஞ்சுக்க, ஆரமபத்துல இருந்து உங்கிட்ட நல்ல நட்போடதான பழகிட்டு இருக்கேன்.

அது அப்ப, எப்ப நீ சங்கரை விரும்பறேன்னு தெரிஞ்சுதோ, அப்ப நானும் ஏன் உன்னை விரும்பாம போயிட்டேன்னு நினைக்கிறேன்.

அப்ப நீ ஒரு பொச்சிவ்னசினாலாதான் இப்படி நடக்குறேன்னு சொல்லு.

இருக்கலாம், ஏன் பொறாமையானால கூட இருக்கலாம்.

அப்படீன்னா என் கிட்ட நடந்துக்கறது பொறாமையினாலதான் சொல்றே?

அப்கோர்ஸ்..நீ இரண்டுபேர்கிட்டேயும் நட்பாவே இருந்திருந்தா எனக்கு இந்த எண்ணமே வந்திருக்காது.

நீ ரொம்ப குரூரமானவன், உங்கிட்ட பேசி இப்ப பிரயோசனமில்லை, நான் போறேன்.

முதல்ல உன்னைய போக விட்டாத்தானே !

வேண்டாம் ரகு, நீ பண்ணறது கொஞ்சம் கூட நல்லா இல்லே !

நீ இப்ப தனியாத்தான் வந்து எங்கிட்ட மாட்டியிருக்கே, எழுந்து அவளை நெருங்குகிறான்.

சியாமளா ஒண்ணும் தனியா வரலை ரகு…

சட்டென்று உள்ளே நுழைகிறான் சங்கர். திரும்பி பார்த்த சியாமளா ஓடிச்சென்று சங்கர் என்னை காப்பாத்து, இந்த ரகு மோசமா பிகேவ் பண்ணப்பாக்கறான்.

நீ கவலைப்படாதே சியாமளா, ரகு நீயெல்லாம் என் நண்பன்னு சொல்லிக்கறதுக்கே வெக்கமா இருக்கு.

அதை பத்தி எனக்கு கவலையும் இல்லை, இப்பவே உன்னை என்ன பண்ணறேன்னு பாரு

அங்கிருந்த ஒரு ஜாடியை எடுத்து எறிகிறான், அது குறி தவறி சுவற்றில் மோதி சுக்கு நூறாய் சிதறுகிறது.

சியாமளா முதல்ல நீ ஓடு வெளியே, இவனுக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சுன்னு நினைக்கிறேன், சியாமளா வெளியேற முயற்சிக்கு முன் பாய்ந்து வந்த ரகு கதவை தாளிட முனைகிறான்.

அப்பொழுது கீழே கிடந்த ஒரு கட்டையை எடுத்து சங்கர் ரகுவின் தலையில் ஓங்கி அடிக்கிறான்.

ரகு அம்மா..தலையை பிடித்துக்கொண்டே சரிந்து கீழே விழுகிறான்.

ஓடு ஓடு சியாமளா வெளியே ஒடிடு, சத்தமிட்டுக்கொண்டே இருக்கிறான் சங்கர்.

நீங்களும் வாங்க சங்கர் வெளியே ஒடிடலாம், சங்கரையும் வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டே வெளியே ஓடுகிறாள்.

“கட்” சத்தம் கேட்டவுடன், சுற்றியிருந்த அனைவரும் அப்பாடி என பெரு மூச்சு விடுகிறார்கள்.

வெரி குட் சியாமளாவாக நடித்த மீனாவிடம் அருமையா நடிச்சே.

சங்கராக நடித்த ரமேஷிடமும்” நல்ல இருந்துச்சு உன் நடிப்பும்” சொல்லி கொண்டிருக்கும்போதே..

உள்ளே ஓடிக்கொண்டிருந்தாள் மீனா

ரகுவாக நடித்துக்கொண்டிருந்தவனை பதட்டத்துடன் எழுப்பினாள் ரகுவின் மனைவியான,சியாமளாவாக நடித்த மீனா.

ஏங்க, ஏங்க எந்திரிங்க, அடிபட்டு விழுந்தது போல் கிடந்த ரகுவாக நடித்த உமேஷ் சிரித்துக்கொண்டே அவள் தோள் பிடித்து எழுந்தான்.

அருகில் வந்த டைரக்டர் உன் புருசனை கொஞ்ச நேரம் விட்டுக்கொடுக்க மாட்டேங்கறயே?

அதை ஏன் சார் கேக்கறீங்க? இந்த ஷூட்டுங் ஸ்பாட்டுலதான் இவ கூட என்னால சண்டை போட முடியுது.

சத்தமிட்டு சிரித்தான் ரகுவாக நடித்த உமேஷ். 

தொடர்புடைய சிறுகதைகள்
தாமு தன் மனைவியிடம் கத்திக்கொண்டிருந்தான் சீக்கிரம் கிளம்பு, எட்டு மணிக்கு கிளம்புனாத்தான் இந்த ட்ராபிக்கெல்லாம் தாண்டி உன்னைய கொண்டு போய் விட்டுட்டு நான் வேலைக்கு போய் சேர முடியும். "இதோ கிளம்பிட்டேன்" தன்னை மேலும் கீழும் கண்ணாடி முன் நின்று அழகு ...
மேலும் கதையை படிக்க...
எலே ராசு இந்தாடா காசு, ஸ்கூலு விட்டு வரும்போது மறக்காம அஞ்சு ரூபாய்க்கு வெல்லம் வாங்கிட்டு வந்துடு. சொன்ன மாரியம்மாளிடம்மூக்கில் வழியும் சளியை இடது கையால் துடைத்துக்கொண்டு அம்மோவ்! ஸ்கூலு முடியறதுக்கு நாலு மணி ஆயிடும், சொன்னவனின் தலையை வருடிய மாரியம்மா ...
மேலும் கதையை படிக்க...
ராம சுப்புவுக்கு இன்னும் ஒரு வாரத்தில் பாராட்டு விழா நடக்கப்போகிறதாம். உங்களுக்கு ஏதேனும் அழைப்பு வந்திருக்கிறதா? வரவில்லை என்றால் எதற்கு பாராட்டு விழா என்று தெரிந்திருக்காது, அவன் மிகப்பொ¢ய குழந்தை கடத்தல் கூட்டத்தை பிடித்துக்கொடுத்திருக்கிறான், அதற்காகத்தான் இந்த பாராட்டுவிழா, என்ன நம்ப மாட்டீர்களா? ...
மேலும் கதையை படிக்க...
மாதவி களைத்து வீட்டுக்குள் நுழையும் போது, குழந்தைகள் அமைதியாய் உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்தன.நேராக குளியலறைக்கு சென்று முகம் கை கால் கழுவிக்கொண்டு சமையலறைக்குள் நுழைந்தவள் பால் காய்ச்சாமல் வைத்திருப்பதை பார்த்து "அருண்" என்று கூப்பிட்டாள். படித்துக்கொண்டிருந்த அருண் உள்ளே வந்தான். உங்க அப்பா ...
மேலும் கதையை படிக்க...
பத்பனாபனுக்கு அன்று அலுவகத்தில் வேலையே ஓடவில்லை. அவர் மனம் முழுக்க மகள் பத்மாவை பற்றியே நினைத்துக்கொண்டிருந்தது. இந்நேரம் வீட்டில் என்ன செய்து கொண்டிருப்பாள்? தெரியவில்லை. ஏன் குழந்தைகளை கூட்டி வரவில்லை. முகத்தை பார்த்தால் நம் வீட்டிற்கு மகிழ்ச்சியாக வந்ததாக தெரியவில்லை.வேறு எதுவும் ...
மேலும் கதையை படிக்க...
விட்டில் பூச்சிகள்
ஐந்து ரூபாய் நாணயம்
ராம சுப்புவுக்கு பாராட்டுவிழாவாம்
எங்கே போகிறான்?
மகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)