மருமகள் – ஒரு பக்க கதை

 

கோமதிக்கு கண்ணம்மாவிடமிருந்து ஒரு போன் கால் அன்று வந்தது.

மூன்று மாதங்களுக்கு முன்பு வந்த மருமகள் சிந்து தன் பேச்சைக் கேட்பதில்லை, வீட்டில் அவள் ஆட்சிதான், மகன் மனைவிக்குத்தான் பக்கபலமாக இருக்கிறான், இதனை நல்லவிதமாக முடித்து வைக்க கோமதி நேரில் வரவேண்டும் என்று போனில் அழாக்குறையாகச்
சொன்னாள் கண்ணம்மா.

நான்கு வருடங்களுக்கு முன் திண்டுக்கல்லில் அடுத்தடுத்து வீட்டில் குடியிருத பழக்கம்

கோமதியின் மகனுக்கு திருமணம் நடந்த ஆறே மாதத்தில் மருமகள் லட்சமி , கோமதியிடம் அடிக்கடி தகராறு செய்துபோது, மேலுக்கு கோமதிக்காக பேசினாலும் லட்சுமியை ஆதரித்தாள் கண்ணம்மா. இது கோமதிக்கும் தெரியும்… பலன்? மகன் தனிக்குடித்தனம் போய் விட்டான். கணவனின் பணி மாறுதல் காரணமாக கோமதி மதுரை வந்துவிட்டாள்.

கண்ணம்மாவைப் பழி தீர்க்க இப்போது ஒரு சந்தர்ப்பம் , கோமதிக்கு. உள்ளூர மகிழ்ச்சி. மறுநாளே திண்டுக்கல்லுக்கு விரைந்தாள்

அவளை வரவேற்றார்கள் கண்ணம்மாவும் சிந்துவும். சற்று நேரம் கழித்து சிந்து ஆரம்பித்தாள்.

”என்னைப் பத்தி அத்தை புகார் செஞ்சிருப்பாங்களே? தெரியும் எனக்கு, பாருங்கம்மா! வயசானதால, ஓய்வெடுங்க…சமைக்கறது, தண்ணி எடுக்குறது, மாவாட்டுறது, துணி துவைக்கிறது எதையுமே அத்தை செய்ய வேண்டாம்கிறேன். அத்தை எல்லாத்தையுமே மறுக்குறாங்க.
உன் இஷ்டத்துக்கு ஆடாதேன்னு அடம்புடிக்கிறாங்க, அத்தைக்கு நீங்கதான் சொல்லணும்மா…”

பாதி கேட்டுக்கொண்டிருந்தபோதே கோமதிக்கு மயக்கம் மேலிட்டுவிட்டது…!

- மு.திருஞானம் (ஒக்ரோபர் 2013) 

தொடர்புடைய சிறுகதைகள்
எனக்கா, எனக்குமா....!? நானுமா....!? அதிர்வுடன் அவளைக் கேள்விகள் மின்சாரமாய்த் தாக்க அவசரமாய்த் துடித்தெழுந்தாள், சோபாவில் சாய்ந்திருந்த சர்மிளா. உலகமே ஒரு தரம் தலைகீழாய்ச் சுழல்வது போலவும், வீட்டுக்கூரை நிலை கெட்டு ஆடுவது போலவும் ஒரு பிரமை அவளை மருட்டியது. தலை விறைத்து ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம்-13 | அத்தியாயம்-14 | அத்தியாயம்-15 ஆறுமுகத்தைக் கூப்பிட்டு நகைப் பெட்டியை தன் ரூமில் வைக்க சொன்னான்.உடனே ஆறு முகம் ரமேஷிடம் இருந்து அந்த நகைப் பெட்டியை அவன் ரூமில் வைத்து விட்டு,அவன் வேலையை கவனிக்கப் போனான்.ஆறுமுகம் அவன் ரூமைத் திறந்த போது,அந்த ...
மேலும் கதையை படிக்க...
மெய்ப்பட வேண்டும்…
'இத்தனை பெரிய சதஸில், என் குழந்தை என்ன செய்யப் போகிறானோ?!’ என்ற பதற்றம், எனக்குள் அப்பிக்கொண்டது. இதே அரங்கத்துக்கு பலமுறை நான் வந்திருக்கிறேன். இதனுடைய பிரமாண்டம் அப்போதெல்லாம் என் மனதில் படிந்ததே இல்லை. தான் உடுத்தியிருக்கும் உடையைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், என்னை ...
மேலும் கதையை படிக்க...
"போன வேகத்திலேயே திரும்பி வர்றியே. என்னடா ஆச்சு?" அம்மா ஆச்சரியத்துடன் கேட்டாள்."வாசல்ல பக்கத்து வீட்டுப் பாட்டி நின்னுகிட்டு இருக்கு" வருண் எரிச்சலுடன் சொன்னான்."சனி கூட ஏழரை வருஷத்துல விட்டுடும். ஆனா இந்தக் கிழவி நம்மள விடற மாதிரி தெரியலை" அம்மா அலுத்துக் ...
மேலும் கதையை படிக்க...
மாடி வராண்டாவில் பளபளவென்று உடையணிந்தபடி பட்டாம்பூச்சிபோல் நின்றிருந்த ஸஹானாவை கீழே இருந்து அர்ஜுன் கூப்பிட்டான். “ஸஹானா” என்று ராகத்துடன்! உடனே, “ஹாய்!” என்று கையசைத்துச் சிரித்தாள் ஸஹானா. “ஆச்சு, மணி நாலடிச்சாச்சு. கிளம்பிட்டா ராணி! இனிமே இருட்டினாத்தான் உள்ளே நுழைவாள்”, என்று அம்மா ...
மேலும் கதையை படிக்க...
இயற்கையே நீயுமா???
தீர்ப்பு உங்கள் கையில்…
மெய்ப்பட வேண்டும்…
திருஷ்டி
சின்னஞ்சிறு கிளியே…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)