Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

மருமகள் – ஒரு பக்க கதை

 

திருமணமான இரண்டே வருடங்களில் மருமகள் மகனை அழைத்துக்கொண்டு தனிக்குடிதனம் போய்விடுவாள் என்று சாவித்திரி எதிர்பார்க்கவேயில்லை.

அவள் கண்களில் கண்ணீர்த் துளிகள்.

“ஏங்க… நம்ம மருமகள் பண்ண வேலையைப் பார்த்தீங்களா… நினைக்க நினைக்க வயிறு எரியுது…’

சரவணன் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.

“ஏங்க… நான் இவ்வளவு புலம்பறேன். நீங்க ஒரு வார்த்தைகூட பேசாம கம்முனு இருக்கீங்க…சொல்லுங்க.. உங்க மனசுல என்ன இருக்குது?’

எரிச்சலோடு கேட்டாள்….

“சொல்லறதுக்கு என்ன இருக்கு… நம்ம மருமகளாவது தனிக்குடித்தனம் போக இரண்டு வருஷம் எடுத்துக்கிட்டா. ஆனா நீ என்ன பண்ணேன்னு ஒரு நிமிஷம் நினைச்சி பாரு. திருமணமான மூணே மாசத்துல என்னை என் அப்பா, அம்மாகிட்ட இருந்து பிரிச்சி அழைச்சினு வந்துட்டே. “கொஞ்ச காலம் போகட்டும்’னு நான்
சொன்னதை நீ கேட்கவே இல்லை. உன்னைப் பார்க்கறதுக்கு நம்ம மருமகள் எவ்வளவோ பரவாயில்லை…’

கணவனை அதிர்ச்சியோடு பார்த்தாள் சாவித்திரி.

- இரா. வசந்தராசன் (மே 2012) 

தொடர்புடைய சிறுகதைகள்
என் பெயர் வினோத். நாற்பத்திஐந்து வயது. சென்னையின் நங்கநல்லூரில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் குடியிருக்கிறேன். ஒரு பிரபல கம்பெனியில் ஜெனரல் மானேஜராக இருக்கிறேன். மனைவி, குழந்தைகளிடம் பாசத்துடன் இருப்பேன். அவர்களுக்கு வேண்டியதைச் செய்து ஒரு பொறுப்புள்ள அப்பாவாக இருக்கிறேன் ...
மேலும் கதையை படிக்க...
சித்ராக்குட்டி
நீங்க நல்லா அனுபவிப்பீங்க'' சட்டென்று தூக்கம் கலைந்தது சரோஜாவுக்கு. உடம்பெல்லாம் வியர்த்திருந்தது. கட்டில் கிறீச்சிடத் தன் பெருஞ்சரீரத்தைப் புரட்டி எழுந்து கொண்டு, ஃப்ரிட்ஜைத் திறந்து அரை பாட்டில் குளிர்ந்த நீரைக் காலி செய்துவிட்டு, ஃபேனை இன்னும் கொஞ்சம் வேகமாகச் சுழலவிட்டு, மீண்டும் கட்டிலில் ...
மேலும் கதையை படிக்க...
இதோ புதை மணலுக்குள்ளிருந்து எடுக்கப் பட்ட அந்த சிலை நாயக்கர் மகாலின் நடுக் கூடத்திற்கு அலங்காரமாய் இன்றி வீற்றிருக்கிறது. .கண்டெடுக்கப் பட்ட சிலை கனவுகள் எல்லாம் தொலைத்து வெற்று சிற்பமாய் இன்று சிரிப்பை மட்டும் ஏந்தியபடி, சுற்றிக் காண்பிக்கும் கைடுகளுக்கு சொல்லப் ...
மேலும் கதையை படிக்க...
எப்போதும் வரும் ஒரு கனவு. கண்ணருகில் மெல்ல மெல்ல ஊர்ந்து வரும் மெல்லிய மஞ்சள் நிற பூவின் காம்பு ஒன்று... கண்ணருகே வந்ததும் வெளீர் சிவப்பாக மாறி அப்படியே அரக்கு நிறம் கலந்து கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக விரிந்து, விரிந்து, விரிந்து ...
மேலும் கதையை படிக்க...
அக்கா மனோகரி அன்றைக்குத் தன்னுடன் கூடவே கல்லூரிக்கு வராமல் போனது சசிக்குப் பெரிய மனக்குறையாக இருந்தது காரிலே போவதாக இருந்தாலும் அக்கா கூட வரும் போது சகோதர பாசத்தையும் மீறி நெருக்கமான நட்பு உணர்வுடன் காற்றில் மிதப்பது போல் மிகவும் ஜாலியாக ...
மேலும் கதையை படிக்க...
அத்துமீறல்
சித்ராக்குட்டி
திசை அணங்கு
யட்சி ஆட்டம்
காதல் தேவதைக்கு ஒரு கை விலங்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)