கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 26, 2019
பார்வையிட்டோர்: 8,707 
 

ஹரிஹரனுக்கு லேசான நெஞ்சு வலி இருந்ததால் இப்போது தன்னுடைய குடும்ப டாக்டரிடம் BPயை check பண்ணிக்கொண்டிருந்தான் 200/110 இருந்ததை பார்த்து டாக்டரே கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தார், என்னப்பா ஹரி BP ரொம்ப அதிகமா இருக்கே என்ன Officeல்ல் ரொம்ப Stress அதிகமோ? இல்ல உன்னோட பொண்டாட்டி ரொம்ப படுத்தறாலோ என உரிமையுடன் ஹரிஹரனை பார்த்துக்கேட்டார் இல்ல வேற ஏதாவது காரணம் இருக்கான்னு கேட்க, ஹரி Officeல்லதான் கொஞ்சம் Project Pressure அதிகமா இருக்குன்னு சொல்ல டாக்டர் ஹரிக்கு BPக்கு மாத்திரையும், ECG Sugar Testம் எழுதி கொடுத்து எடுத்துக்கொண்டு வரும்படி சொல்லி நாலு நாள் கழிச்சு மீண்டும் வரும்படி கூறி அனுப்பினார் ஹரியோட குடும்ப டாக்டர்.

இதுக்கெல்லாம் காரணம் என்னால “மறக்கவே முடியாத” என்னோட… என்னோட…. சொல்லிடலாமான்னு கூட ஒரு நிமிஷம் யோசிச்சான் ஹரி.

ஹரி ஒரு ஐடி கம்பெனியில வேலை பார்க்கறான். ஹரியை பற்றி சொல்லனும்னா நெற்றி நிறைந்த வீபூதி பட்டை, சந்தனுத்தடன் குங்குமம் French bird தாடியுடன் எல்லா நாட்களும் Pant with Tshirட்டுடன் பளிச்சென்ற முகத்துடன் இருப்பான்.

ஹரி தன்னோட officeக்கு போறதும் வர்றதும் office busல்லதான்.

ஒரு இரண்டு மூணு நாட்கள் ஆயிருக்கும் தன்னுடைய எதிர் சீட்டில்ல உட்காந்திருக்கிற அந்த கிராமத்து தேவதையை பார்க்ககூடிய சந்தர்ப்பம் அவனுக்கு கிடைச்சது.

வகுடே இல்லாம எப்பவுமே எண்ணெயோட படிய வாரிய தலை, அழகான round சிகப்பு நிற sticker பொட்டு, ரொம்ப முக்கியமா சொல்லனும்னா டீசன்டான Dress இதோட இல்லாம ஒவ்வொரு புதன்கிழமையும் தமிழர்களின் பாரம்பரியமான புடவைய கட்டிகிட்டு அவளை பார்த்தா “மகாலஷ்மி”யை போல கலையான முகம் ஹரிக்கு ரொம்ப ரொம்பவே பிடிச்சிருந்தது.

ஹரிக்கு அந்த கிராமத்து தேவதையோட புன்னகை ஒரே வாரத்துல்ல கிடைச்சுடுச்சு, ஆனா அதே சமயம் அவள் எல்லோருடனும் சகஜமா பழகற பொண்ணாவும் தெரியல்லை. IT Companyல்ல இப்படியும் ஒரு பொண்ணான்னு ஆச்சிரியமாத்தான் இருந்தது. அவளோட வளர்ப்பை நினைச்சு அவளோட அம்மா அப்பாவுக்கு ஒரு சபாஷ் சொல்லியே ஆகணும். ஒரு பொண்ணுன்னா இப்படிதான் இருக்க்வேண்டும்னா இவளைதான் நாம கண்டிப்பா Exampleக்கு எடுத்துக்கனும்.

ஒரு நாள், ஹரியே ஒரு அரிய சத்தர்பத்தில தன்னையும் அறிமுகபடுத்திகிட்டு அவளோட பேர் அந்த கலையான முகத்துக்கு ஏத்த மாதிரி அவளோட பேரும் மஹாலஷ்மின்னும், எந்த domain எந்த projectல்ல வேலை பார்க்கறான்னும் கேட்டு தெரிந்து கொண்டான். கேட்ட கேள்விக்கு மட்டுமே பதில் கிடைச்சுது ஆனா மஹாவிடமிருந்து எந்த ஒரு கேள்வியும் வரவேயில்லை.

இது ஹரிக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது. IT Companyல்ல இப்படியும் சில பேர் வேலை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்ன்னு ரொம்பவே ஆச்சிரியபட்டான்.

ஹரிக்கு ஒரு நாள் மொபைல் போன்ல்ல wifi connect ஆகலை, இன்னொரு நாள் மொபைல்ல ஏதோ language problem. இந்த இரண்டையும் solve பண்ணினதெல்லாம் மஹாதான். இப்போ ஹரிக்கு எல்லாமே மஹாதான். ஹரி என்ன கேட்டாலும் செய்து கொடுப்பாள், என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்வாள்.

இப்போது ஹரிக்கு அவனே எதிர் பார்க்காத காலை வேளையில் மங்களகரமான புன்சிரிப்புடன் Good Morning மற்றும் இரவு புன்சிரிப்புடன் Good Byeம் சேர்த்து கிடைத்தது. யாருக்குமே கிடைக்காதது தனக்கு கிடைத்திருச்சிருந்ததை நினைச்சு… நினைச்சு கர்வம் தலைக்கு ஏறி தான் போயிருந்தது ஹரிக்கு, ஆனால் அவனோட கர்வத்திற்க்கு யாரோட கண்ணோ இல்லை, அவனோட கண்ணே பட்டுவிட்டதான்னும் தெரியல்லை.

அன்று Bus ஏறியவுடன் ஹரிக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது, ஆமாம் மஹா எப்பவுமே உட்காந்திருக்கும் சீட்டில் அமராமல் ஒரு வரிசை முன்னால் உள்ள சீட்டில் அமர்ந்திருந்தாள். சரி தெரியாமல் உட்காந்திருப்பாள் என எண்ணினாலும் அன்று அவனுக்கு எப்போதும் கிடைக்கும் புன்சிரிப்பும் Good Morningம் கிடைக்க்வில்லை. அன்று இரவும் நன்றாக தூங்கி கொண்டிருந்ததால் Good Byeம் கிடைக்க்வில்லை.

மஹா, அடுத்த நாளூம் அதே இடத்தில் தான் அமர்ந்திருந்தாள். ஹரி அன்று அவள் உட்காரும் பழைய சீட்டில் அமர்ந்தான்.

என்ன காரணம்னும் தெரியவில்லை, கேட்கவும் மிகவும் தயக்கமாக இருந்தது.

அடுத்த நாள் நான்கு ஐந்து Row முன்னால் உள்ள சீட்டில் தன் தோழியுடன் அமர்ந்திருந்தாள்.

இப்போது ஹரிக்கு மஹாவிடமிருந்து புன்னகை இல்லை, Good Morning இல்லை Good Bye இல்லை. ஏனோ ஹரிக்கு வெறுப்பாக இருந்தது என்ன காரணத்தால் இதெல்லாம் நடக்குதுன்னு புரியவே இல்லை. ஏதாவது தப்பாக பேசி விட்டோமா அல்லது தொண தொணன்னு பேசினது பிடிக்கலையா என மண்டையை போட்டு குடைந்துக்கொண்டிருந்தான்.

இப்போ ஹரிக்கு வேற Project கிடைச்சதால அவனுடைய Shift Timeம் மாறிடுச்சு. மஹாவோட Busல்லேயும் வரதில்லை. ஆனால் ஹரி அவளை எப்படியோ ஒரு முறையாவது Officeல்ல பார்த்துடுவான். ஒரு சில நாட்கள் வேலை காரணமாக வெளியிலேயே வர முடியாத சூழ்நிலையிலே மஹாவை பார்க்க முடியாமலும் போயுடும்.

நல்ல நல்ல சந்தர்ப்பங்களில் மஹாவிடம் சொல்ல வேண்டியதை தயக்கத்தினால்சொல்லாமல் போனதையும் இனி அதை எப்படி மஹாவிடம் சொல்ல போகிறோமோ! “மஹா” என்னை தப்பாக நினைத்து விடக்கூடாதேன்னும் நினைச்சு.. நினைச்சு ரொம்பவும் வருத்தப்பட்டு இப்போ BPயும் அதிகமாகி விட்டது.

நீ என்னோட பொண்ணு……. என்னோட பொண்ணுன்னு… எப்படி மஹாவிடம் சொல்ல போகிறோமோன்னு நினைச்சு ரொம்ப கவலைபட்டான்.

இப்போது ஹரி Mobileல்ல Ring Tone மற்றும் கேட்டு கொண்டிருக்கும் பாடல்கள்……

ஆனந்த யாழை மீட்டுகிறாள் அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாள்…….

நீ அடம் பிடித்தாலும் அடங்கி போகின்றேன்…….

ஒரு தெய்வம் தந்த பூவே……

கண்ணான கண்ணே

ஹரி எனக்கே ஒரு பெண் பிறந்திருந்தாலும் இப்படியெல்லாம் வளர்த்திருக்க முடியுமா என்று எண்ணி ஆச்சரியப்படுவான். தயக்கமும் பயமும் நீங்கி “நீ என்னோட பொண்ணு”ங்கற இந்த நல்ல விஷயத்தை கூடிய விரைவில் சொல்லி “தந்தை மகள்” பாச மழையை அதே busல் மீண்டும் அவர்கள் பல பல ஆண்டுகள் ஒன்றாக பயணிப்பதையும் கண்டு மகிழ்வோம்.

Print Friendly, PDF & Email

2 thoughts on “மயக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *