மன அழுத்தம்!

 

நீங்க ஒரு பக்கக் கதை, ஒரு நிமிடக்கதைகளில் கூட இதுபோல் படித்திருக்க மாட்டீர்கள்! நேற்று நடந்த உண்மைநிகழ்ச்சி இது!

உங்களுக்கு மங்களத்தைத் தெரியாது! எனக்கு பத்துவருஷமாத் தெரியும்!

எதிர் வீடு தான்! அந்தம்மாவுக்கு அறுபத்தி ஐந்து வயசுஎன்று யார் சொன்னாலும் நம்ப மாட்டார்கள்! பார்க்கும்பொழுது ஐம்பது வயசு கூட மதிக்கத் தோன்றாது!

இரண்டு ஆட்களை அடித்துப் போடும் அளவுக்குப்பலசாலி! என் வீட்டுக்காரி ஒரு நோஞ்சான். அவளால்கிரைண்டரை நகர்த்தக் கூட முடியாது! வீட்டில் பீரோ,மேஜை, போன்றவைகளை நகர்த்த வேண்டுமானால்,அவள் எந்த ஆண் துணையையையும் எதிர் பார்க்கமாட்டாள்.

“ மாமி!..” என்று ஒரு குரல் கொடுத்தால் போதும், மங்களமாமி உடனே வந்து விடுவார்கள்!

“ மாமி!….இந்தக் கிரைண்டரை எடுத்து அடுப்பு மேடையில்கொஞ்சம் வைத்துக் கொடுங்கள்!..” என்று தான்சொல்வாள்.

அடுத்த நிமிடம் புறாவைத் தூக்குவது போலகிரைண்டரைத் தூக்கி அடுப்பு மேடையில் இருக்கும்ஸ்விட்சுவுக்கு பக்கத்தில் வைத்துக் கொடுத்துவிடுவார்கள்! அவ்வளவு பலம். ஓடி வந்து மற்றவர்களுக்குஉதவி செய்யும் நல்ல குணம்!

நாங்க கோவில், குளம் போகிறோமோ இல்லையோ,கண், பல், சுகர், பிரஸர் என்று நகரத்தில் இருக்கும் எல்லாடாக்டர் மருத்துவ மனைகளுக்கும் போய் வந்துவிடுவோம்! மங்கள மாமி தலைவலி என்று சொல்லிக்கூடஇந்த பத்து வருஷத்தில் நாங்க கேட்டதில்லை!

மங்கள மாமியின் ஒரே மகன் சந்துருவுக்கு ரியல்எஸ்டேட் பிஸினஸ்! கோடிகளில் பணப் புழக்கம்! ஆர்.எஸ்.புரத்தில் பெரிய பங்களா. வீட்டில் நாலு கார்கள்!

மங்களத்தின் ஒரே பெண் சாந்தி எங்கள் எதிர் வீட்டில்தான் பத்து வருஷங்களுக்கு மேலாக வசிக்கிறாள்.வாடகை வீடுதான்! அவளுக்கு மூன்று குழந்தைகள்!வசதியும் சுமார்தான்!

கடந்த பத்து வருஷமாக மங்கள மாமி மகன் வீட்டிற்குப்போவதில்லை! மாமியார் மருமகள் பிரச்னை தான்! மகன்சந்துரு மட்டும் காரில் பத்து நாட்களுக்கு ஒரு முறைவந்து பார்த்து விட்டுப் போவார்.

மங்கள மாமியின் நெருங்கிய உறவினர்கள் வரும்பொழுதெல்லாம் “உங்க ஒரே மகன் கோடியில்புரளுகிறான்!…ஆள், அம்பு அங்கு ஏராளம்!…நீங்க எதற்குமகள் வீட்டில் இருந்து கொண்டு கஷ்டப் படுகிறீர்கள்?…”என்று சொல்லாதவர்கள் இல்லை! வருவோர் போவோர்எல்லாம் பிரஸர் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்!

மங்களம் மாமி ரோஷக்காரி! மகன், மருமகள் யாராகஇருந்தாலும் ஒரு பேச்சு தாங்க மாட்டாள்! மருமகள்பணக்கார வீட்டுப் பெண். மாமியாரை மதிக்க மாட்டாள்.அவள் இஷ்டத்திற்குத் தான் அந்த வீட்டில் எல்லாம்நடக்கும்! ஏதாவது கேட்டாலும் பதில் சொல்ல மாட்டாள்.அல்லது அலட்சியமாக சொல்லி விட்டுப் போய் விடுவாள்!தனக்கு மரியாதை இல்லாத வீட்டில் இருக்க பிடிக்காமல்தான் மகள் வீட்டிற்கு மங்களம் வந்து விட்டாள்.சுயகௌரவத்தை விட்டு, வசதிக்காக மற்றவர்களைஅனுசரித்துப் பிழைப்பதை விட பிச்சை எடுப்பது மேல்என்பது மங்களத்தின் பிடிவாதம்!

சாந்தி வீட்டிற்கு அம்மா வந்த பிறகு சந்துரு பல முறைவந்து கெஞ்சிப் பார்த்தும் மங்களத்தை அவர் வீட்டிற்குகூட்டிக் கொண்டு போக முடியவில்லை! அது அவருக்குகௌரவ பிரச்னையாக இருந்தது. அதனால் நெருங்கியஉறவினர்கள் மூலம் தொடர்ந்து பத்து வருடங்களாகஅம்மாவுக்கு பிரஸர் கொடுத்துக் கொண்டே தானிருந்தார்.மங்கள மாமி கஷ்டப் பட்டு அதை தவிர்த்து வந்தார்.

அன்று காலை ஏழு மணியிருக்கும். வாசல் கேட் அருகில்கிடந்த பேப்பரை எடுக்கப் போனேன். எதிர் வீட்டிற்குமுன்னால் ஒரு ஆட்டோ நின்று கொண்டிருந்தது. அதைசுற்றிலும் சாந்தி, நேற்று ஊரில் இருந்து வந்தமங்களத்தின் தங்கை மல்லிகா, தம்பி கணேசன் மற்றும்பலர் நின்று கொண்டு, ஆட்டோவுக்குள் தலையை விட்டுபார்த்துக் கொண்டிருந்தார்கள்.

என்னவோ ஏதோ என்று ஓடிப் போய் விசாரித்தேன்

மங்களத்தின் தம்பி தான் சொன்னார்.

“ அக்கா சந்துரு வீட்டிற்குப் போக ரொம்ப பிடிவாதம்பிடிச்சாங்க..நானும் தங்கையும் ஊரிலிருந்து வந்து ரொம்பமுயற்சி செய்து அக்காவை ஆட்டோவில் கொண்டு வந்துஏற்றினோம்!..ஆட்டோ புறப்படும் நேரத்தில் அக்காநெஞ்சைப் பிடித்துக் கொண்டிருந்தார் நான்…உள்ளே போய்தண்ணீர் கொண்டு வருவதற்குள் உயிர் போய் விட்டது!..”என்று துண்டால் வாயைப் பொத்திக் கொண்டு அழுதார்.

மங்களம் மீண்டும் தன் மருமகளைப் பார்க்காமலேயே போய் சேர்ந்து விட்டாள். மெதுவாக அவள் உடலை ஆட்டோவிலிருந்து இறக்கி மகள் வீட்டிற்குள் கொண்டு சென்றார்கள்.

மன அழுத்தத்தைப் பற்றி கேள்வி பட்டிருக்கிறேன்! அதுஉயிரைப் போக்கும் அளவுக்கு கொடியதா?

மங்களத்தை நேரில் பார்க்க விட்டால், நான் எந்த டாக்டர்சொல்லியிருந்தாலும் நம்பியிருக்க மாட்டேன்!

- புதுகை தென்றல் (அக்டோபர் 2014) 

தொடர்புடைய சிறுகதைகள்
அரவிந்தன் மாநிலத்திலேயே மிகச் சிறந்த அரசியல் பேச்சாளன். அந்ததொகுதியில் இடைத் தேர்தல். இரண்டு முக்கிய கட்சிகள் நேரிடைப் போட்டி! ஒரு கட்சி சார்பாக அந்த நகரத்தில் வாக்கு சேகரிக்க அரவிந்தன் வருகை தந்திருந்தான். உள்ளூரைச் சேர்ந்த சில கட்சித் தொண்டர்களோடு, அரவிந்தன் காரில் முக்கிய ...
மேலும் கதையை படிக்க...
சூலூர் சுகுமாரனுக்கு சினிமா என்றால் உயிர்! அவனுக்கு நிறைய சினிமாச் செய்திகள் தெரியும் பிலிம் நியூஸ் ஆனந்தனைப் போல! எதைப் பற்றி பேசினாலும், அதை சினிமாவோடு தொடர்பு படுத்தித் தான் பேசுவான். நடிகர் சிவக்குமார், சூர்யா, கார்த்தி, டைரக்டர் மணிவண்ணன் எல்லோருமே இந்த சூலூர் ...
மேலும் கதையை படிக்க...
பாசம் போகும் பாதை!
“ அசோக்!....எனக்கு ரெண்டு வாரமா உடம்புக்குச் சரியில்லே!......காலையிலே எழுந்திரிக்கும்போதே ஒரே தலை சுத்தல்…….உள்ளங்கால் பூராவும் ஒரே எரிச்சல்……வாயில் புண் வந்து ஆற மாட்டேன்கிறது……..ஒரு வாரமா நெஞ்சு வலியும் இருக்குடா!....வீட்டிலே ஒரு வேலையும் செய்ய முடியலே!...டாக்டரைப் பார்த்தா நல்லா இருக்கும்!.....” என்று முணகிக் ...
மேலும் கதையை படிக்க...
“ இன்னைக்கு....ஞாயிற்றுக் கிழமை….சரியா ஒன்பது மணிக்கு நீங்களும், உங்க அருமைப் பொண்ணும் டைனிங் டேபிளில் வந்து உட்கார்ந்திடுவீங்க!...நான் அதற்குள் சிக்கன் குழம்பு, வறுவல், இட்லி, தோசை எல்லாம் தயார் செய்ய வேண்டாமா?...சீக்கிரமா போய் ‘லெக் பீஸா’ நீங்களே பார்த்து.... இளங்கறியா வாங்கிட்டு ...
மேலும் கதையை படிக்க...
கதிரேசனுக்கு எழுபது வயசு பூர்த்தியாகி விட்டது. வயசானவர் என்பதற்கு அடையாளமாக சுகர், பிரஸர், மூட்டு வலி எல்லாம் நிரந்தரமாக வந்து விட்டது. அதனால் முன்பு மாதிரி எதற்கெடுத்தாலும் பைக்கை எடுத்துக் கொண்டு வெளியில் போவதை நிறுத்திக் கொண்டார். முடிந்த வரை பூஜை, புனஸ்காரம் ...
மேலும் கதையை படிக்க...
செல்லாத ஓட்டுகள்!
சூலூர் சுகுமாரன்
பாசம் போகும் பாதை!
சமயம் பார்த்து அடிக்கணும்
பிரியம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)