மனம் – ஒரு பக்க கதை

 

கடற்கரையில் அமர்ந்திருந்தனர் சூர்யாவும், ராஜேஸ்வரியும்.

ஒரு வயதான தம்பதியினர் மணலில் நடந்து வந்து கொண்டிருந்தனர்.

யாரை யார் தாங்கிப் பிடித்திருக்கிறார்கள் என்பதே தெரியாத அளவிற்கு, ஒருவர் மீது ஒருவர், ஆதரவாக சாய்ந்தபடி நடந்து வந்தனர்.

அந்தப் பெரியவரை, மெதுவாக மணலில் அமர வைத்துவிட்டு, அந்த அம்மாவும் மெதுவாக அமர்ந்தார்!

“அடடா…! வயசாயிட்டா, நானும் இப்படித்தானே இருப்பேன்! இந்த வயசான அம்மாபோல, என் மனைவியும் என்னை கவனிச்சுக்குவாளா…?’ என்று நினைத்த சூர்யா, திரும்பி மனைவியைப் பார்த்தான்.

அதே காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த ராஜேஸ்வரி, “அங்க பார்த்தீங்களா! இந்த வயசுலயும் ஒருத்தருக்கு ஒருத்தர் எவ்வளவு அன்பா, அனுசரணையா இருக்காங்க! நம்ம பசங்களும் வயசானா, இப்படித்தானே இருப்பாங்க…!

அவங்களுக்கும், அந்தம்மா மாதிரி, பொறுப்பா இருக்குற பொண்ணுங்களா பார்த்து கட்டி வைக்கணுங்க…’ என்றாள்.

“அடடா…! “மனைவி’ என்ற இடத்தை விட “தாய்’ என்னும் இடம் எவ்வளவு உயர்ந்தது…!’ என எண்ணி, ஆச்சரியப்பட்டான் சூர்யா.

- ப. உமாமகேஸ்வரி (25-1-12) 

தொடர்புடைய சிறுகதைகள்
கதை ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன் அம்மா தனக்குத்தானே பேசிக் கொண்டிருக்கிறாள் என்னுடன் பேசுவதாக நினைத்துக் கொண்டு தனியே பேசிக் கொண்டிருப்பது கேட்டது. இல்லாத எதைஎதையோ பற்றிக் கொண்டு தான் முதுமையில் வாழவேண்டியிருக்கும் போலிருக்கிறது, இருட்டில் தடுமாறி விழுந்து அடிபட்டுவிட்ட அம்மாவை மூன்று நாட்களாக மருத்துவமனையில் அனுமதித்திருந்தோம்.. இரவில் ...
மேலும் கதையை படிக்க...
நலம் விரும்பி நல்ல சாமி விருவிருவென்று போய்க் கொண்டிருந்தார் தாலுகா அலுவலகம் நோக்கி. ஏம்வே இன்னிக்கு யாரப்பத்தி கோள் மூட்டி உடப் போறீறு. அடி பைப்பில் தண்ணீர் பிடிக்க வந்த சின்னத்தாயியின் குரலைக் கேட்டும் கேட்காததுபோல் ஓடிக் கொண்டிருந்தார் அவர். சின்னத்தாயி குடத்தை இடுப்பில் ...
மேலும் கதையை படிக்க...
தூசி
''என்னம்மா, குழந்தை! ஏன் அப்படிப் பார்க்கிறே?'' செம்பட்டை மாறாத தலையில் எண்ணெய் தடவிய கோலம். ஆறு வயதுதான் மதிக்கலாம். கவுனில் ஈர மண் படிந்த அழுக்கு. கருவிழிகள் குறுகுறுக்க, செப்புவாய் வியப்பிலே சற்றே அகன்றிருக்க, குழந்தை அவள் கேள்விக்குப் பதில் சொல்லாமலே பார்த்துக்கொண்டு ...
மேலும் கதையை படிக்க...
நோர்வே சொற்காபுரியாக இருந்தாலும் தரனின் வாழ்க்கை இந்தச் சொற்காபுரியில் ஒரு நரகமாகவே தொடங்கியது. அது அவர்கள் தப்பு அல்ல எங்கள் இயலாமை என்பது தரனுக்குத் தெரியும். அதன் காரணம் தெரிவதால் நரகம் ஒன்றும் சொர்க்கமாகி விடுவதில்லை. அடர்ந்த பனைக் காட்டில் கூட்டமாக ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம்-4 | அத்தியாயம்-5 ’அடேயப்பா,பணக்காரா எல்லாம் இப்படி தான் தினமும் வித விதமா சாப்பிடுவாளா. நம்மை போல எப்போதும் குழம்பு,ரசம்,மோர்ன்னு சாப்பிட மாட்டாளா’ என்று யோசித்து கொண்டு இருந்தா ள்.”நான் கேக்கறேன்,நீ பதில் ஒன்னும் சொல்லாம நிக்கறயே”என்று அந்த மேடம் கேட்டதும் ...
மேலும் கதையை படிக்க...
சொந்தக்குரல்
மினுங்கும் தாரகை
தூசி
நரகம் சொர்க்கம் மோட்சம்
தீர்ப்பு உங்கள் கையில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)