மனம் – ஒரு பக்க கதை

 

ஏங்க..எதுத்தாப்ல இருக்கிற இந்த காலி இடத்தைப் பாருங்க, முள்ளும் முடிச்சும் எவ்வளவு அசிங்கமா இருக்குது. தினமும் காலைல இது முகத்தில் முழிக்கறதுக்கு கஷ்டமா இருக்குது. பேசாம இந்த வீட்டைக் காலி பண்ணிட்டு வேற வீட்டுக்கு போயிடலாங்க…”

உனக்கு விஷயம் தெரியாதா, ரம்யா. இந்த இடத்துக்காரர், பழைய கேஸ் ஒண்ணுல ஜெயிச்சுட்டாராம் அவருக்கு ஒரு பெரிய தொகை கிடைக்கப் போகுதாம். அதை வச்சி கூடிய சீக்கிரம் இங்கு வீடு கட்டப் போறாராம்”

அப்படியா? ரம்யாவின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது.

ஒரு வருடம் ஓடி விட்டது

ஏங்க..இந்த வீட்டைக் காலி பண்ணிட்டு வேற வீட்டுக்குப் போயிடலாமா?

ஏன்…ஏன்…?

எதிர் வீடு எவ்வளவு பிரமாண்டமா வசதியா இருக்குது. பாருங்க காலைல இந்த வீட்டைப் பார்க்கிறதுக்கே எனக்குப் பொறாமையா இருக்குது. பேசாம இந்த விட்டைக் காலி பண்ணலாங்க” என்று சொன்ன மனைவியை அதிர்ச்சியோடு பார்த்தான் சித்தார்த்!

- இரா.வசந்தராசன் (ஜனவரி 2013) 

தொடர்புடைய சிறுகதைகள்
அப்போது பிச்சைக்கனிக்கு ஆறேழு வயதிருக்கும். பாட்டையா இறந்துபோய் வாசல் நிரம்பி வழிந்தது. பெஞ்சுகளில் திண்ணைகளில் மரத்தடியில் என சாதிசனம் நண்டு சிண்டு பரிவாரங்களுடன் திரண்டிருந்ததில் அவனுக்கு ஒரே கிறுகிறுப்பு. ஆனந்த போதை. மூக்கை உறிஞ்சியபடி பரபரப்புடன் சுற்றி வந்தான். குமாரசாமியைக் குனியச்சொல்லி ...
மேலும் கதையை படிக்க...
காற்று புகாத கண்ணாடி காகிதத்தினுள்ளும் கைநீட்டி குறும்பாக சிரித்தது அந்த வெள்ளை நிற டெடி பொம்மை. பொம்மைக்கு முற்றும் முரணாக கரடுமுரடான முகத்துடனும் கன்னத்தில் வெட்டுத்தழும்புடனுமான அந்த நடுத்தர வயது மனிதரின் மடியில் மூச்சு விடாமலும் மனதளவில் சிரித்துக்கொண்டேயிருந்தது அந்த டெடி. ...
மேலும் கதையை படிக்க...
இப்பொழுதெல்லாம் பரமசிவத்தை பார்த்தால் அவரின் சகோதர சகோதரிகளுக்கு அனுதாபமே வருகிறது. நம்மால்தானே அண்ணன் இப்படி இருக்கிறார் என்கிற குற்ற மனப்பான்மையாக கூட இருக்கலாம். வயது நாற்பதாகியும் ஒரு பெண் அவருக்கென்று அமையாமல் இருப்பது அவர்களுக்கு பெரிய வருத்தம்தான். இந்த வருத்தத்தை அவரவர்களின் ...
மேலும் கதையை படிக்க...
பசுமை வெல்க !
""என்ன சந்திரா... வயசான காலத்தில் உனக்கெதுக்கு பிடிவாதம். பசங்க போனில் சொன்னபோது நான் நம்பலை. நேரில் வந்து பார்த்த பின்தான் தெரியுது. ""உனக்கென்ன குறை? அருமையான பிள்ளைகள், கிரானைட் பிசினசில் கொடிகட்டிப் பறக்கிறாங்க. கோடிக்கணக்கில் லாபம் வருது. உன்னையும் சகல வசதிகளோடு நல்லபடியாக ...
மேலும் கதையை படிக்க...
அந்தக் கம்பெனியிலிருந்து நேர்முகத் தேர்விற்கு வரச் சொல்லி தீபாவுக்கு கடிதம் வந்திருந்தது. எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி. தீபாவுக்கும்அப்படித்தானே இருக்கும். ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி…!’ என்றேன். ஆனால் அவள் உம்மென இருந்தாள். மிகவும் விரும்பித்தான் விண்ணப்பித்திருந்தாள். அவள் வாழ்வின் லட்சியமே அந்த வேலைதான் ஆனால் கடிதம் வந்ததிலிருந்து அவள்முகம் ...
மேலும் கதையை படிக்க...
குடும்பப் புகைப்படம்
மனைவிக்கு வாங்கிய பொம்மை
அனுதாபம் வயிற்றெறிச்சலான கதை
பசுமை வெல்க !
தகுதியானவள் – ஒரு பக்க கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)