மதி – ஒரு பக்க கதை

 

மாரியப்பன் கோபத்தில் அரிசிப்பானையை எட்டி உதைத்தான். பானை உடைந்தது. அதில் அரிசிதான் இல்லை.

“எங்கடி ஒளிச்சு வைச்சிருக்க…’ மனைவி ராகினியை மிரட்டினான். அவனுக்கு இன்னும் கொஞ்ச நேரத்தில் நூறு ரூபாய் இல்லையென்றால்… அவனால் நிற்க முடியாது. உதறல் எடுக்கும். சரக்கு உள்ளே போனால்தான் கம்பீரம்.

“என்னய்யா இருக்கு ஒளிக்க…? நீ என்னாத்த சம்பாரிச்சு கொடுத்த…இங்க ஒளிச்சுவெக்க…? கழுத்துலகூட மஞ்சக் கயிறுதான தொங்குது!’

புலம்பியபடி ராகினி வெளியே வீட்டு வேலைக்குப் புறப்பட்டாள்.

மாரியப்பன் இயலாமையால் பாத்திரங்களை உதைத்தான்.

“அப்பா…’

பிஞ்சுக் குரல் கேட்டு திரும்பினான். அவனது மூன்றாவது படிக்கும் பெண்குழந்தை தன் பென்சில் பாக்சில் இருந்து, கொஞ்சம் சில்லறைகளை எடுத்து கையில் வைத்துக்கொண்டு…

“இந்தா வெச்சுக்கப்பா…’ – மழலையாக வேண்டினாள்.

மாரியப்பன்… தன் பெண்ணையும்… அந்த காசையும் மாறி மாறிப் பார்த்தான்.

உடம்பில் ஏதோ மின்சாரம் பாயும் உணர்வு ஏற்பட… “என் கண்ணு…’ என்று மகளை அப்படியே அள்ளிக்கொண்டான். குழந்தை தலையில் அடித்து சத்தியம் செய்தான். “இனி குடிக்கவே மாட்டேன்!’ என்று.

- ஆனந்த் சீனிவாசன் (ஜூன் 2011) 

தொடர்புடைய சிறுகதைகள்
காலை பத்து மணிக்கு ஸ்வேதாவுக்கு ஸ்கேன் சென்டரில் அப்பாயிண்ட் மெண்ட். இப்பொழுதே மணி ஒன்பதரை ஆகிவிட்டது. சென்னை டிராபிக்கில் எவ்வளவு லாகவமாக பைக்கை ஓட்டினாலும் அந்த இடத்தை அடைய முக்கால் மணி நேரம் ஆகலாம். ஸ்வேதாவின் கணவன் மகேஷ், ...
மேலும் கதையை படிக்க...
வாணிதாஸபுரம் என்பது ஒரு பூலோக சுவர்க்கம். ஆனால், இந்த சுவர்க்கத்தில் ஒரு விசேஷம். மேலே இருக்கும் பௌராணிகரின் சுவர்க்கம் எப்படியிருக்குமென்று அடியேனுக்குத் தெரியாது. ஆனால் இந்த சுவர்க்கத்தைப் பொறுத்தவரை, இது வாணியின் கடைக்கண் பார்வை ஒரு சிறிதும் படாத இடம் என்று ...
மேலும் கதையை படிக்க...
அம்மா என்று வலியால் மோகன் அலறியபோது போலீஸ்காரரின் குண்டாந்தடி மோகனின் உடம்பில் எங்கே பட்டது என்பது சுசிக்குத் தெரியாமலிருந்தது. அநேகமாக முதுகில் எங்கோ பட்டிருக்க வேண்டும் என்று நினைத்தாள். அவன் உடம்பைக் கயிற்றைச் சுருட்டிக் கொள்வது போல் சுருட்டிக்கொண்டு தரையில் விழுந்தான். போலீஸ்காரர் ...
மேலும் கதையை படிக்க...
”தபால்!” என்று கூவினான் தபால்காரன். கடிதத்தை வாங்கிக் கொண்டாள் கமலா. கடிதத்தைப் பிரித்துப் படித்துக் கொண்டிருக்கும் சமயம் அவள் தகப்பனார் வந்தார். நல்ல வெயிலில் அலைந்து முகம் கன்றிப்போயிருந்தது. கொஞ்சம் தண்ணீரைச் சாப்பிட்டுவிட்டுத் தாழ்வாரத்தில் உட்கார்ந்தவர், ”யார் எழுதியிருக்கிறார்கள்?” என்றார் கமலாவைப் பார்த்து. கடிதத்தைப் ...
மேலும் கதையை படிக்க...
“படுத்துக்க மட்டும் வசதி. பெத்துக்க வசதியில்லையா?” ரமா மெளனமானாள். ரமா- வித்யா, நெருங்கிய நண்பிகள். ரமா, காதல் திருமணமானவள். டாக்டரான வித்யாவிடமே, ரமா போய் நின்றாள். கன்சல்ட் செய்ய அல்ல..? அபார்ஷனுக்காக..! ஒரு குழந்தைக்காக தவமா தவமிருக்காங்கடி..? முதல் பிள்ளையையே கலைக்கறேங்கற…? ”வேற டாக்டரையாவது ரெகமண்ட் செய் ...
மேலும் கதையை படிக்க...
உபகாரம்
கலியாணி
ஆண் மரம்
நீர் ஊற்று
பாசமா? தப்பா..! – ஒரு பக்க கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)