மதிப்பெண்கள்

 

தன்னுடன் அலுவலகத்தில் பணி புரியும் சுந்தரத்தை வீட்டுக்கு அழைத்து வந்திருந்தார் தீனதயாளன். இருவரும் வரவேற்பறையில் அமர்ந்து அலுவலக விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்தில் பேச்சு குடும்ப விஷயத்துக்குத் திசை திரும்பியது. எட்டாவது படிக்கும் தன் மகன் சரியாகவே படிக்கமாட்டேன் என்கிறான் என்று குறைபட்டுக் கொண்டிருந்தார் சுந்தரம். உடனே தன் மகளைப் பற்றி பெருமையாகச் சொல்லத் தொடங்கினார் தீனதயாளன்.

“அஞ்சாவது படிக்கும் என் மக யாமினி படிப்பில் படு சுட்டி… எல்லா சப்ஜெக்ட்டிலும் அவ நூத்துக்கு நூறு மார்க் எப்பவும் வாங்கிடுவா..” என்று தீனதயாளன் சொல்லிக் கொண்டிருந்தபோதே பள்ளிக்கூடத்திலிருந்து வீடு திரும்பினாள் யாமினி.

“டாடி…மன்த்லி எக்ஸாம் மார்க்ஸ் வந்தாச்சு..” என்றபடி தன் புத்தகப் பையில் மார்க் ஷீட்டை தேடத் தொடங்கினாள் யாமினி.

தீனதயாளனுக்கு ‘பக்’கென்று ஆயிற்று. லேசாக முகம் சுளித்தார். தன் மகள் என்ன மார்க் வாங்கியிருப்பாள் என்று தெரிந்திருந்த தீனதயாளன் ‘சுந்தரம் வந்திருக்கும்போதுதானா இவள் மார்க் ஷீட்டைக் கொண்டுவந்து நம் மானத்தை வாங்க வேண்டும்’ என்று அலுத்துக் கொண்டவர், நிலைமையைச் சமாளிக்க “இதோ வந்து விட்டேன், ஒரு நிமிஷம்..”
என்று சுந்தரத்திடம் சொல்லிவிட்டு உள்ளே போனார். போகும் போது, “யாமினி.. நீயும் உள்ளே வா” என்று குரல் கொடுத்துக் கொண்டே போனார்.

யாமினி தன் மார்க் ஷீட்டை தந்தை அமர்ந்திருந்த நாற்காலி அருகில் இருந்த ஸ்டூல் மீது வைத்துவிட்டு உள்ளே ஓடினாள்.

வரவேற்பறையில் தனித்து விடப்பட்ட சுந்தரத்துக்கு யாமினியைப் பற்றித் தீனதயாளன் சொன்னது நினைவுக்கு வந்தது. ஆர்வம் மேலிட, யாமினியின் மார்க் ஷீட்டை எடுத்துப் பார்த்தார்.

கணக்கு-2; விஞ்ஞானம்-8; சமூகம் 12; ஆங்கிலம் 11 என்றெல்லாம் யாமினி வாங்கியிருந்த மார்க்கைப் பார்த்ததுமே திகைத்தார் சுந்தரம். எடுத்த சுவடு தெரியாமல் அந்த பேப்பரை ஸ்டூல் மீது வைத்துவிட்டார்.

கையில் டிபன் தட்டுடன் வந்தார் தீனதயாளன்.

சுந்தரத்துக்கு டிபன் சாப்பிடும்வரை கூடப் பொறுக்க முடியவில்லை. யாமினியின் கம்மியான மார்க் பற்றிக் கேட்டு, ‘தீனதயாளனின் முகம் போகிற போக்கைப் பார்த்து ரசிக்க வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டார்.

அப்போதுதான் மதிப்பெண்கள் அடங்கிய அந்தத் தாளைப் புதிதாகப் பார்ப்பதுபோல் எடுத்துப் பார்த்தார் சுந்தரம். முகத்தில் பொய்யான வியப்புக் குறியுடன், “என்ன சார் இது…உங்க டாட்டர்தான் எப்பவுமே ப்ர்ஸ்ட் ராங்க்னு சொன்னீங்க.. என் மகனே பரவாயில்லை போலிருக்கிறதே, இவ்வளவு மோசமா மார்க் வாங்கியிருக்காளே” என்றார், குரலில் வலுக்கட்டாயமாக வியப்பை வெளிப்படுத்தியபடி..!

இக்கட்டான இந்த நிலைமையை எப்படிச் சமாளிப்பது என்று ஒரு விநாடி யோசித்த தீனதயாளன் பெரிதாக வாய்விட்டுச் சிரித்தார்.

“ஓ இதுவா..? எப்போதும் எல்லாத்துலேயும் நூறு மார்க் வாங்குவா.. இந்தத் தடவை மன்த்லி டெஸ்டைச் சரியா எழுதலேன்னு சொன்னா.. அதுனால ‘யாமினி ஒவ்வொரு சப்ஜெக்ட்லேயும் நூத்துக்கு எவ்வளவு மார்க் குறைச்சலா வாங்கியிருக்காள்னு குறிப்பிட்டு எழுதி அனுப்புங்க’ ன்னு அவ டீச்சர்கிட்டே நான் தான் சொல்லியிருந்தேன்.. அதைத்தான் அவங்களும் எழுதி அனுப்பியிருக்காங்க..” – என்று தீனதயாளன் வழிய, ‘நல்லாவே சமாளிக்கிறீங்க சார்..’ என்ற அர்த்தமுள்ள புன்னகையை அவர் மீது வீசினார் சுந்தரம் !

- ஆனந்த விகடன் 12-9-1993 இதழில் பிரசுரமான கதை 

தொடர்புடைய சிறுகதைகள்
சியாமளாவுக்கு வயது ஐம்பத்தி எட்டு. மூன்று மாதங்களுக்கு முன்புதான் எல்.ஐ.ஸி மயிலாப்பூர் கிளையிலிருந்து சோனல் மானேஜராக பணியாற்றி ஓய்வு பெற்றாள். அவளுக்கு இருபத்தி ஐந்து வயதில் கல்யாணம் ஆனது. இருபத்தியெட்டு வயதில் அவள் கணவர் ஸ்ரீராம் ஒரு விமான விபத்தில் இறந்துவிட்டார். அவருடன் வாழ்ந்த ...
மேலும் கதையை படிக்க...
மாம்பலத்தில் எனக்கு அடுத்த வீடுதான் பாண்டுவின் வீடு. அவர் எப்பவும் நகைச்சுவையாகப் பேசுவார். தவிர பேசிக் கொண்டிருக்கும்போதே ஸ்பான்டேனியஸாக ஜோக் அடித்துக்கொண்டே இருப்பார். அது ரசிக்கக்கூடிய நகைச்சுவையாகவும் அமையும்; சில சமயங்களில் கடி ஜோக்காகவும் இருக்கும். ஆனால் அவருடன் பேசும்போது என் மனசு ...
மேலும் கதையை படிக்க...
என் பெயர் வந்தனா. வயது முப்பத்தைந்து. அன்பான கணவர். பதினைந்து வயதில் ஒரு அழகான மகள். பெயர் சுகன்யா. சேலத்தில் ஒரு பிரபல பள்ளியில் ப்ளஸ் டூ படிக்கிறாள். அழகான, அமைதியான கவிதை போன்ற என் குடும்பத்தில் மகள் சுகன்யாவால் தற்போது நிம்மதியிழந்து தவிக்கிறேன். ...
மேலும் கதையை படிக்க...
அன்புள்ள அம்மாவுக்கு, தாங்களின் வளர்ப்பு மகள் லாவண்யா எழுதும் கடிதம். எனக்கு எக்ஸாம் எல்லாம் முடிந்து விட்டது. எனது படிப்பிற்காக தொடர்ந்து அடுத்த வருடமும் தாங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும். செய்வீர்கள் என்று நம்பிக் கொண்டிருக்கும், உங்கள் வளர்ப்பு மகள் லாவண்யா. ஒரு ...
மேலும் கதையை படிக்க...
மாணிக்கம் ஒரு ஏழை விவசாயி. தினமும் காலையில் எழுந்து தனக்குச் சொந்தமான வயற்காட்டுக்குச் சென்று கீரை வகைகளைப் பறித்து, அதைச் சந்தைக்கு கொண்டு சென்று விற்று, அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தைக் கொண்டு தன் குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்தான். அவன் தினமும் கீரைகளைப் பறிக்க, ...
மேலும் கதையை படிக்க...
"வாசல்ல எதுக்குடி மசமசன்னு நிக்கற, சந்தியவன வேளையாறது... போய் சாமிக்கு விளக்கேத்துடி. வயசுக்கு வந்த பொண்ணு, காலங்கெட்டுக் கிடக்கறது தெரியாம, இப்படி போறவங்க வர்றவங்களையெல்லாம் பார்த்துக்கிட்டு வாசல்ல நிக்கலாமா?" மங்களம் பாட்டி, தன் மகன் வயிற்றுப் பேத்தி லலிதாவை விரட்டிக் கொண்டிருந்தாள். லலிதாவுக்கு மிகவும் ...
மேலும் கதையை படிக்க...
“மாமி, நெஜமாவா சொல்றீங்க ஒங்களுக்கு எழுபது வயசுன்னு?” அலமேலு நூறாவது தடவை இந்தக் கேள்வியை வேதவல்லி மாமியிடம் கேட்டிருப்பாள். “ஆமாண்டி, எனக்கு இந்தச் சித்திரை வந்தா எழுபது வயசு முடியறது.” “நம்பவே முடியலை மாமி.” “ஒன்னோட பெரியம்மா மதுரம் இருக்காளே, அவ என் கூட நடுத்தெரு பள்ளிக் ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘வராஹ அவதாரம்’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது) எங்கும் வியாபித்திருந்த தண்ணீரில் இருந்து விஷ்ணு தோன்றினார். அதன் பின்னர் பிரும்மதேவன் தோன்றினான். அசரீரி வாக்கு அவனை தவம் செய்யுமாறு பணித்தது. அவன் கடும் தவம் புரிந்த பின்னர், அவன் ...
மேலும் கதையை படிக்க...
அபிதாவுக்கு சம்யுக்தா அக்காதான் எல்லாமே. அவளுடைய அப்பா ஸ்ரீரங்கம் போஸ்டல் டிபார்ட்மெண்ட்டில் நாற்பது வருடங்களாக அதே வேலையைச் திரும்பச் திரும்பச் செய்து ரிடையர்ட் ஆனவர். அதன்பிறகு தற்போது அனைவரும் சென்னை வாசம். அவர் செய்தது அம்மாவுடன் ஒழுங்காக குடித்தனம் நடத்தி நான்கு பெண்களைப் ...
மேலும் கதையை படிக்க...
உங்களின் பெயரை, நீங்கள் சொல்லிப் பார்க்கும்போது உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? அப்படீன்னா நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி. பிறகு என்னங்க? எனக்கு என்னுடைய பெயரே சிறிதுகூட பிடிக்கவில்லை. கூடிய சீக்கிரம் நான் என்னுடைய பெயரை அரசிடம் விண்ணப்பித்து, முறையாக மாற்றிக்கொண்டு சந்தோஷமாக இருக்கப் போகிறேன். ராஜேஷ், ரமேஷ், சுரேஷ், ...
மேலும் கதையை படிக்க...
துணை
கடன் பட்டவன்
இக்கால இளசுகள்
தத்து
தாரை
காலம் கெடவில்லை
இளமை ரகசியம்
மாங்கனிக்காக அல்ல…
முனைப்பு
பெயரை மாற்ற வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)