மண்ணு வேணும்டா…

 

“கால் கிரௌண்டா இருந்தாலும் நமக்குன்னு சொந்தமா மண்ணு வேணும்டா… அத விட்டுட்டு என்னமோ தீப்பெட்டி அடுக்குனமாதி, பிளாட்டு வாங்குறானுங்களாம் பிளாட்டு… எவனாச்சு பிளாட்டு வாங்கிருக்கேன், அது வாங்கிருக்கேன்னுட்டு என்ன வந்து தங்கச் சொன்னிங்க, நல்லா கேப்பேன்…

தாத்தா அடிக்கடி சொல்லும் வார்த்தை இதுதான் என்று அப்பா சொல்வார்.

தாத்தா ஒரு காலத்தில் நல்ல சொத்துக்களோடு வாழ்ந்தவராம்.

அவருடைய அப்பா எப்போது சொத்துக்களையெல்லாம் விற்று குதிரைப் பந்தயத்தில் தோற்று, ஊர்க்காரர்களின் கிண்டலுக்கு ஆளானாரோ, அப்போதிருந்தே தானும் அந்த அளவுக்கு சொத்து வாங்கிய பிறகே இந்த ஊரில் காலெடுத்து வைப்பேன் என்று தன் உறவுக்காரர்கள் முன்னால் சத்தியம் செய்துவிட்டு வந்தாராம்.

அதே போலவே தன் இரண்டு மகன்களுக்கும், ஒரு மகளுக்கும் ஆளுக்கொரு இடம் வாங்கிக் கொடுத்தார்.

ஆனால் அந்த அடுத்த தலைமுறைகள் வாங்கிக் கொடுத்த நிலத்தையெல்லாம் விற்றுவிட்டு ஆளுக்கொரு பிளாட் வாங்கி மூலை மூலைக்கு தங்கிவிட, அதுவே தாத்தாவுக்கு பெரிய ஆத்திரம்.

மனிதர் இன்றுவரைக்கும் பிடிவாதமாக யார் வீட்டிலும் வந்து தங்கவே இல்லை. அதற்காக தன் சொந்த ஊருக்கும் போகாமல் இங்கேயே ஒரு கட்சி ஆபீஸில் வாட்ச்மேனாக தங்கி தன் காலத்தை போக்குவதை அப்பா எப்படித்தான் இத்தனை நாள் பொறுத்துக் கொண்டிருந்தாரோ தெரியவில்லை.

ஒரு வழியாக அப்பாவுக்கு இப்போதுதான் ஒரு மனமாற்றம் வந்தது. கொஞ்சமாக இருந்தாலும் சொந்தமாக மண் வேண்டும் என்று வைராக்கியத்தோடு இருந்த தாத்தாவுக்காக ஒரு இடத்தை வாங்கினார்.

இப்போது அந்த இடத்தில்தான் நின்று கொண்டிருக்கிறோம்.

“ஏம்பா… வாங்குனதுக்கப்பும் வேற யாரும் வந்து என்னுது, உன்னுதுன்னு வந்து தகராறு பண்ண மாட்டாங்கள்ல?…”

என்றார் அப்பா.

“அதெப்படி சார்? ஒரே இடத்த வேற வேற ஆளுங்களுக்குப் போயி குடுப்பாங்களா?… அப்படியெல்லாம் ஆகாது சார்…”

என்றார் அவர்.

“அப்புறம்… கட்றதுல்லாம் எப்படி? நீங்களே கட்டிக் குடுத்துருவீங்களா?…”

“அதெல்லாம் பக்காவா பண்ணிடுவோம் சார்… உங்களுக்கு என்ன மாடல்ல வேணுமோ, அந்த மாடல்ல…”

“வேற யாரும் வந்துராம பாத்துக்கப்பா…”

“ஒன்னியும் பிரச்சனை இல்ல சார்… சும்மா புதைச்சு மண்ணப் போட்டம்னாதான், பாடியை எடுத்துப் போட்டுட்டு இன்னொரு பாடிய புதைச்சிருவானுங்க… கல்லறை கட்டிட்டோம்னா அப்படி ஆவாது சார்…”

கல்லறையில் புதைத்திருந்த சிலுவையில் இருக்கும் தாத்தாவின் பெயரையே சில நொடிகள் உற்றுப் பார்த்த அப்பா, ஒரு பெருமூச்சோடு மௌனமாக நடக்க ஆரம்பித்தார்.

“அவர் உயிரோட இருக்கும்போதுதான் ஒரு மகனா அவர் நெனச்சதை செய்ய முடியாம போச்சு… “ 

தொடர்புடைய சிறுகதைகள்
அரசு மருத்துவமனை. வெள்ளை நிறத்தில் மின்விசிறி சுழன்று கொண்டிருந்தது. படுக்கையில் காலில் கட்டுடன் மூர்த்தி படுத்திருந்தான். சவரம் செய்யாத முகம். கண்களில் களையே இல்லை. கலைந்திருந்த தலை அவன் பல நாட்களாக இங்குதான் இருக்கிறான் என்பதைச் சொன்னது. கையில் பச்சை குத்தியிருந்த “லட்சுமி” என்ற ...
மேலும் கதையை படிக்க...
பதற்றத்தோடு அங்குமிங்கும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தான் வாசு. தன்னுடைய நோட்டுப் புத்தகத்தை அடைவதற்காக. ஆனால் அதுவோ அங்கிருந்த எல்லோரின் கைக்கும் மாறி மாறிச் சென்றது. வகுப்பறையிலிருந்த சிறுவர்கள் வாசுவை வெறுப்பேற்றுவதற்காக அவனுடைய நோட்டை மாற்றி மாற்றிப் போட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். எல்லாம் ...
மேலும் கதையை படிக்க...
சென்னையில் நான் பரோட்டா சாப்பிட்டிருக்கிறேன். ஆனால் இந்த பரோட்டா வித்தியாசமாக இருந்தது. இதைச் சப்பாத்திக் கட்டையால் தேய்த்து, தோசைக்கல்லில் சுடுவதில்லை. மாறாக, தேய்க்காமலேயே உருண்டை வடிவத்தில் எண்ணெய்ச் சட்டிக்குள் போட்டு வடை சுடுவதுபோல் சுட்டு எடுக்கிறார்கள். நல்ல சுவை. நான் இந்த ஊருக்கு ...
மேலும் கதையை படிக்க...
"அவன் அவன் வாயக்கட்டி வயித்தக்கட்டி, ஒரு இன்ஷியல் அமௌண்ட்டக் கட்டி, அதுக்கு டியூவையும் கட்டி, கண்ணுக்கு கண்ணா ஒரு பைக்கு வாங்கி வச்சிருந்தா, இவனுங்க மாசாமாசம் கவர்மென்ட்டுக்கு கணக்குக் காட்றதுக்கும், மாசக்கடைசில கட்டிங் வாங்குறதுக்கும், நோ பார்க்கிங்னே போடாத முட்டுச்சந்துக்குள்ள விட்டுருக்க ...
மேலும் கதையை படிக்க...
டாக்டர் செல்வராஜ் - 9841108211 அந்த மொபைல் நம்பரையே ரொம்ப நேரமாக உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கிறேன் என்பது மட்டும் புரிந்தது. ஆனால் எவ்வளவு நேரம் ஆகியிருக்கும் என்று தெரியவில்லை. ஒரு ஆறு, ஏழு நிமிடம் இருக்கலாம். என் நண்பர்கள் சிலர் எனக்கும் அவர்களுக்கும் மனஸ்தாபம் ...
மேலும் கதையை படிக்க...
முரண்
அன்புடன்…
தங்கச்சி மடம்
நேர்மைன்னா என்ன?…
கைப்பேசி எண்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)