மங்களம் உண்டாகட்டும் – ஒரு பக்க கதை

 

எல்லோரும் அவசரமாக தங்கள் பணிக்காக ஓடுக்கொண்டிருந்த காலை நேரம். மும்பை தாராவி நேரு நகரில் வாடகை வீட்டில் தங்கியிருந்த ரவியிடம் அம்மா ‘’மீனா உன் காதலி வீட்டிலிருந்து யாரும் எதுவும் கேட்க வரல். ஊரிலிருந்த நான் வந்து ஒரு மாசமாச்சு. இன்றைக்கு மத்தியானம் இரயிலில் ஊருக்குப் போகிறேன். எதிர் வீட்டிலிருந்து கிட்டு ஒரு நாளாவது வந்து பேசியிருக்கலாமில்லியா?” என்று கேட்டாள்.

“என்னம்மா. நாம் மாப்பிள்ளை வீட்டுக்கார நம்ம வந்து பேசணும்னு நெனச்சிருப்பாங்க.”

“அவங்க வந்து பேசறதா தானே உன் லவ்வர் தேவி சொன்னதா சொன்னாய்.”

“என்ன பிரச்சினையோ. தெரியல. நீ கெளம்பு. டிரெயினுக்கு நேரமாச்சு.”

“அப்படீன்னா ஊரிலே போய் நான் வேற பொண்ணு பார்க்கவா?”

“ஒண்ணும் வேண்டாம். நான் அவங்களப்பார்த்துப் பேசி, ஊருக்கு வந்து உன்னையும் அப்பாவையும் பார்க்கச்சொல்கிறேன்” என்றவன் டாக்ஸி பிடித்து வி.டி. ஸ்டேஷனுக்கு வந்து அம்மாவை வழியனுப்பி வைத்தான்.

மறுநாள், ரவி தேவியைச் சந்தித்தபோது, “ஏன் தேவி உங்க அம்மா எங்க அப்பா கிட்டே வந்து பேசப்போறதா தானே சொன்ன. அப்புறம் என்னாச்சு.” என்று கேட்டான் ரவி.

“வீட்டிலே என் தங்கச்சி எங்கேயோ மாட்டி கிட்டு… விடு ரவி. இப்ப என்ன செய்யலாம். பேசாம… ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாமா?”

“நான் வீட்டுல கடைசி பையன். எல்லோரும் என் கல்யாணத்த ஜாம் ஜாமுண்ணு நடத்தணும்மு எதிர்பார்க்கிறாங்க. நீ ஒண்ணு பண்ணு. நான் நாளைக்கு ஊருக்கு கெளம்புறேன். நான் தார நம்பர்ல உங்க அப்பாவை நாளை மத்த நாள் கூப்பிடுப் பேசச்சொல்லு.” என்று தொலைபேசி எண் கொடுத்து விட்டு கிளம்பினான்.

ரவி ஊருக்கு வரும்போது வீடு திருமண களைக் கட்டியிருந்தது. பந்தல் எல்லாம் போட்டிருந்தது. ‘யாருக்குத் திருமணம்’ என யோசித்துக்கொண்டே வந்த போது “மாப்பிள்ளை வந்தாச்சு” என்ற ரவியின் மாமா (மீனாவின் தம்பி)

நேரக அம்மாவிடம் போய் “என்னம்மா யாருக்குக் கல்யாணம்?” என்றான் ரவி.

“எல்லாம் உனக்கும் உன் மாமா பொண்ணு திவ்யாவுக்குந்தான். சும்மா லவ்வு கிவ்வுண்ணு ஏதாவது சொன்ன…. அப்புறம் நடக்கிறதே வேற. ஒழுங்கா திவ்யா கழுத்துல தாலிய கட்டிகிட்டு இங்கே உள்ள வெவசாயத்தைப் பாரு. இல்லை, நான் தூக்கில தொங்குவேன்.” என்று அம்மா கத்திய போது அதிர்ந்து நின்றான் ரவி. 

தொடர்புடைய சிறுகதைகள்
சாகுலை கண்டிப்பாக நான் சென்னை விமான நிலையத்தில் எதிர் பார்க்கவில்லை. அவன் கடவுச்சீட்டு சரி பார்க்கும் வரிசையில் எனக்கு முன் மூன்றாவது ஆளாக நின்று கொண்டிருந்தான். 'சத்தம் போட்டுக்கூப்பிடலாமா?’ என்று நினைத்தேன். அநாகரீகமாக இருக்கும் என்று உணர்ந்து கொண்டு பின்னால் நின்றவரிடம் “ஒரு ...
மேலும் கதையை படிக்க...
இமய மலையில் இருந்து சாமியார் திரும்பி வந்திருந்தார். அவரை பார்ப்பதற்காக ஒரு பெரிய கூட்டம் அங்கே காத்துக் கொண்டிருந்தது . ஒரு நீண்ட வரிசையில் மக்கள் காத்துக் கொண்டிருந்தனர். அவள் அதை பார்த்து மலைத்துப் போனதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை! இன்னும் வரிசையில் யாரும் வரும் முன், ...
மேலும் கதையை படிக்க...
இது கடிதமல்ல…
அன்புள்ள வசந்தனுக்கு, இருபது நாட்களாக யோசித்து இறுதியில் முடிவு செய்து இதை எழுதுகிறேன். மூன்று வாரங்களாக உன்னை சந்திப்பதைத் தவிர்த்து உன்னை இனியும் அலைய வைப்பது தகாது என்ற முடிவில்தான் இந்தக் கடிதத்தை… இல்லை.. பிரிவு மடலை உனக்கு எழுதுகிறேன். பிரிவு என்ற சொல்லை ...
மேலும் கதையை படிக்க...
மதுமிதா அமெரிக்காவிலிருந்து வந்திருந்தாள். சென்னைக்கு வந்தவள் மாமா வீட்டுக்கு திருச்சி அருகிலுள்ள பால்குளம் கிராமத்திற்கு வந்திருந்தாள். அவள், அந்த வீட்டுக்கு வந்த பிறகுதான் காஞ்சனாவிற்கு எரிச்சலும், கோபமும் மிகுந்தது. ‘எப்போதும் சாந்தமும், சந்தோஷமும் நிறைந்திருக்கின்ற பெண் காஞ்சனா. ஏன் இப்படி மாறினாள்’ என்று ...
மேலும் கதையை படிக்க...
ஷார்ஜா, மீன் காட்சி சாலையில் அலுவலகத் தோழிகளோடு மீன்களைப் பார்த்து இரசித்துக் கொண்டிருந்த போது தன் கண்ணாடியில் பிரதிபலித்த உருவத்தைப் பார்த்து ஒருமுறை அதிர்ந்துபோனாள் ராணி. திரும்பிப் பார்த்த போது, அதே பசுத்தோல் போர்த்திய புலியாக புன் சிரிப்புடன் செல்வம் நின்று கொண்டிருந்தார். இவர் ...
மேலும் கதையை படிக்க...
வேதக்கார ஆண்டாள்
ஊருக்குள் காரில் வந்து இறங்கிய போது விஜய்க்கு கொஞ்சம் ஆச்சரியங்கள் அதிகமாகவே இருந்தது. பதவி உயர்வு, பணி, அரசியல் எடுபிடி என்று இந்தியாவின் பல இடங்களுக்கு மாற்றலாகி, குடும்பத்தோடு ஊரில் வந்து தங்கி விடலாமென்று நினைத்த போது மூத்தமகன் விமலன், டெல்லியிலேயே ...
மேலும் கதையை படிக்க...
பொன் அந்தி மாலையும் தென்றல் காற்றை மெதுவாக பூமிக்கு அனுப்பி வெப்பம் குறைந்துள்ளதா என வேவுபார்த்து வர அனுப்பியது. ஆதவன் தன் வேலை நேரம் முடிந்து விட்டதென ‘டாட்டா’ காட்டி விட்டு பூமிக்குள் ஓடி ஒளிய முயற்சி செய்து கொண்டிருந்தது. தன்னருகே கதிரவன் ...
மேலும் கதையை படிக்க...
சித்ரா ஸ்கூல் முடிந்து வந்ததும், முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்தாள். அம்மா மல்லிகா எவ்வளவு சொல்லியும் காபி, டிபன் சாப்பிடாமல், தன் தந்தை திரவியம் வருவதற்காகக் காத்திருந்தாள். “சித்ரா, எந்த விஷயமாக இருந்தாலுகம் அப்பா வந்த பிறகு பேசலாம். ஒழுங்கா அடை சாப்பிட்டு ...
மேலும் கதையை படிக்க...
என்ன செய்வதென்றே தெரியவில்லை ரேவதிக்கு. வாசித்த கடிதத்தை கைப்பையினுள் வைத்து விட்டு, தன் கையிலே மருதாணி போட்டு விட்டு கைகழுவச் சென்ற தோழிகள் வரக் காத்திருந்தாள். விடிந்தால் அமெரிக்க மாப்பிள்ளை ஆனந்திற்கும் அவளுக்கும் நிச்சயதார்த்தம்…. இந்த நேரத்தில் ஆறு மாதமாக காணாமற்போன விஜய் ...
மேலும் கதையை படிக்க...
”விடிந்தால் வயல் அறுவடைக்கு மெசினை இழுத்துக்கொண்டு செல்ல வேண்டும்” என்று தன் முன்னால் அடிபட்டு படுக்கையில் கிடந்த எழுத்தாளர் ’வசந்த நிலா’வின் ”எங்கே என் சுவாசங்கள்?” நாவலை தொடக்கத்தில் வாசித்துக் கொண்டிருக்கும் போது அவன் வலியின் முனகலில்,திரும்ப்பார்த்து புத்தகதை வைத்து விட்டு ...
மேலும் கதையை படிக்க...
நம்பிக்கை ஒளி…
முத்துமணிமாலை!!!
இது கடிதமல்ல…
அமெரிக்கப் பறவை
இரண்டாவது வசந்தம்!?
வேதக்கார ஆண்டாள்
வசந்தங்கள் வரும் நேரம்
அம்மா என்றால் அன்பு
மனதின் மடல்
தேவதைகள் தூங்குவதில்லை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)