ப்ளீஸ், இன்னும் ஒரு தடவை..! – ஒரு பக்க கதை

 

சீதா இன்னும் ஒரு தடவை மட்டும் – கெஞ்சினான் வினோத்

ச்சீய்..பேசாமல் படுங்க. பதினோரு மணிக்குள் மூணு முறை ஆகிவிட்டது. மறுபடியும் ஒன்றா..? உடம்பு என்னத்துக்கு ஆகும்..? என்றபடி திரும்பிப் படுத்துக் கொண்டாள்

இல்லே, சீதா, கடைசியா…

இப்படித்தான் கடைசி கடைசின்னு ஏழு மணிக்கு ஒரு முறை, அப்புறம் ஒன்பது மணிக்கு ஒரு தரம், மீண்டும் பத்து மணிக்கு, இப்போ நாலாவது முறையா…உம்..ஹூம் நான் மாட்டேன்! – சீதா பிடிவாதம் பிடித்தாள்

வினோத்துக்கு நாக்கு வரண்டது. உதடுகள் ஏங்கின. நெஞ்சுக்குள் ஒரு தவிப்பு. அந்த இளம் சூடான இன்ப சுகத்துக்கு, உள்ளம் ஏங்கியது. உடலுக்கு கெடுதல் என்றாலும் இதை விட்டு விடுவதற்கு முடியலியே…

சீதா…சீதாக் கண்ணு ,டார்லிங்கஃ என் கண்ணுல்ல நீ கேட்ட புதுப்புடவை நாளைக்கு வாங்கிடலாமா?

எந்தக் கேள்விக்கும் பதில் கூறாது அசைந்து கொடுக்காது அவன் தவிப்புகளை அலட்சியம் செய்தாள் சீதா.

சே, மனுஷனுக்கு இதுல இவ்வளவ ஆசையா? என மனதிற்குள் சலித்துக் கொண்டாள்

இல்லே, சீதா , முழுசா ஒண்ணு இல்லேன்னாலும் இந்த தடவை பாதி சிகரெட்டாவது கொடுத்துடு சீதா. பல வருஷத்துப் பழக்கம். இப்படி ஒரே நாளிலே விட முடியுமா? ஒண்ணு ஒண்ணா குறைச்சு ஒரு மாசத்துல அடியோடு விட்டுடறேன். சீதா, ப்ளீஸ் இப்போ ஒரு தடவை மட்டும்”

கணவனின் தொடர்ந்த கெஞ்சலில் சற்று மனம் இரங்கினாள் சீதா.

‘சரி, எக்கேடு கெட்டாவது தொலையுங்க, என்ற போலி கோபத்துடன் பிடுங்கி ஒளித்து வைத்திருந்த சிகரெட் பாக்கெட்டை எடுத்து அவனிடம் எறிந்தாள்.

- தேவி காந்தன் (ஏப்ரல் 1, 2014 ) 

தொடர்புடைய சிறுகதைகள்
ஆதவன் கிழக்கில் உதிக்க, ஈரக் கூந்தலை உலர்த்திய படி பால்கனியில் வந்து நின்றாள் வெண்மதி. பனிப் புகை முற்றி--லும் விலகாத நிலையிலும் மலை மேல் ஏறுபவர்களும், தரிசனம் முடிந்து கீழிறங்கு-பவர் களுமாக.. திருமலை சுறுசுறுப்பாக, பரவசமாக இருந்தது. பிரம்மோற்சவம் நெருங்கிக் கொண்டிருந்த ...
மேலும் கதையை படிக்க...
'நடேசா, சௌக்கியமா இருக்கியா ? இங்க நானும், உங்கம்மா, தங்கைகளும் சௌக்கியம், நம்ம பட்டுக்கோட்டை பெரியப்பா ஒரு வாரமா இங்கே வந்து தங்கியிருந்துட்டு போன புதனுக்குதான் கிளம்பினாங்க, அவங்களும் உன்னை ரொம்ப விசாரிச்சதா சொல்லச் சொன்னாங்க, உன் சிநேகிதப்பய பரமசிவனுக்கு அடுத்த ...
மேலும் கதையை படிக்க...
தனிக்குடித்தனம் போய்விடுவது என்று முடிவெடுத்து விட்டேன். அதைக் கணவரிடம் சொன்னதும், முதலில் கடிந்து கொண்டார். ”நாம தனியாப்போயிடறதுதாங்க நல்லது!” தீர்க்மான என்னுடைய வார்த்தைக்குக் கணவர் கட்டுப்பட்டார். ஓரிரு நாட்களில் லாரியில் சாமான்களை ஏற்றியதும் மருமகளிட்ம் சொன்னேன். ”நாங்க தனியாப் போயிடறோம் ஷர்மிளா! அப்பத்தான் உனக்குக் குடும்ப பொறுப்பு வரும். ...
மேலும் கதையை படிக்க...
எலே ராசு இந்தாடா காசு, ஸ்கூலு விட்டு வரும்போது மறக்காம அஞ்சு ரூபாய்க்கு வெல்லம் வாங்கிட்டு வந்துடு. சொன்ன மாரியம்மாளிடம்மூக்கில் வழியும் சளியை இடது கையால் துடைத்துக்கொண்டு அம்மோவ்! ஸ்கூலு முடியறதுக்கு நாலு மணி ஆயிடும், சொன்னவனின் தலையை வருடிய மாரியம்மா ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 ராஜா ஆபீஸில் நுழைந்ததும் அவன் பின்னாலே வந்து “குட் மார்னிங்க் சார்” என்று அவனுக்கு வணக்கம் தெரிவித்தாள் அவன் ‘செகரட்ரி’ லதா. ”சார் நீங்க இன்னைக்கு ரொம்ப ‘ட்ரிம்மாக’ இருக்கீங்க.’யூ லுக் க்ரேட் டுடே சார்” என்று ‘ஐஸ்’ ...
மேலும் கதையை படிக்க...
நிம்மதி!
அப்பாவும், நடேசனும்
பொறுப்பு – ஒரு பக்க கதை
ஐந்து ரூபாய் நாணயம்
அவசர முடிவு எடுத்தது தப்பு தான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)