பொய் – ஒரு பக்க கதை

 

பக்கத்துக்கு வீட்டு குடிசைக்குள் நுழைந்த என் மனைவி மரகதம் கையில் மூடிய கிண்ணத்துடன் திரும்பி வந்தாள்.

வழியில் அமர்ந்திருந்த எனக்கு….

கருவாட்டுக் குழம்பு வாசனை கம கமவென்று என் மூக்கில் ஏறியது.

புரிந்து விட்டது!

அந்த வீட்டிலிருந்து இதை வாங்க வேண்டிய அவசியமே இல்லை. அவர்கள் பிழைப்புக்காக வெளியூரிலிருந்து வந்தவர்கள். கணவர் வாய் பேச முடியாத மனிதர் கூலித் தொழிலாளி. மனைவி, இரண்டு பிள்ளைகளோடு பிழைப்புத் தேடி வந்தவர்களுக்கு ஊர் பெரிய மனிதர் என்கிற முறையில் என் தந்தை தன் வீட்டிக்குப் பக்கத்தில் இடம் கொடுத்து, பிழைப்பும் கொடுத்திருக்கிறார்.

பிள்ளைகள் இருவரும் அருகிலுள்ள அரசாங்க பள்ளியில் படிக்கிறார்கள்.

ஒட்டு வீட்டுக்காரி குடிசைக்குள் போய் குழம்பு வாங்கி வருகிறாளென்றால்…?

எனக்குள் எரிச்சல் சுறுசுறுவென்று ஏறியது.

“என்னடி…?” அதட்டினேன்.

“ச்ச்சூ..! கம்முன்னு இருங்க…” என்று அதட்டி என்னை அடக்கிவிட்டு அவள் அடுப்படிக்குச் சென்றாள்.

“ஏன் இப்படிப் பண்றே…” நான் விடாமல் அவள் பின் சென்று கேட்டேன்.

“பாவம் அவுங்க. ஆட்டுக்கறி விற்கிற விலையில் வாங்கி சாப்பிட முடியுமா..? நம்ம வீட்டுல இன்னைக்கு கறிக்குழம்பு. சும்மா கொடுத்தால் என்ன நினைப்பார்களோ..!? ஏழையாய் இருந்தாலும் வாங்கத் தயங்குவாங்க. அதான்.. ‘பசங்களுக்குக் கொடுங்க’ ன்னு நம்ம குழம்பைக் கொடுத்துட்டு ‘எனக்குக் கருவாட்டுக் குழம்பு பிடிக்கும்!’ ன்னு பொய் சொல்லி அவுங்க குழம்பை வாங்கி வர்றேன்.” என்ற மனைவி எனக்குள் மடமடவென்று உயர்ந்தாள்.

கருவாட்டுக் குழம்பு எனக்கும் மணத்தது. 

தொடர்புடைய சிறுகதைகள்
சண்டை போட்டா வீட்டுக்காரியைச் சரி படுத்தத் தெரியனும்.! இல்லேன்னா வில்லங்கம், விவகாரம், விவாகரத்து ! - இதுக்குப் பயந்துக்கிட்டுத்தான் இத்தினி காலமா பொண்டாட்டியோட சண்டை போடாமல் இருந்தேன். ஆனாலும் எத்தினி காலத்துக்குத்தான் இப்படி இருக்க முடியும்..? நேத்திக்கு முதல் நாள். முந்தாநேத்து. எனக்கும் என் ...
மேலும் கதையை படிக்க...
கண் விழித்துக் கடிகாரத்தைப் பார்த்தாள் பத்மா. மணி 10.10. சொரக்..! சொரேரென்றது !!. 'சோபாவில் உட்கார்ந்த நிலையிலேயே தூங்கி இருக்கிறோம். எதற்கு கண் அசைந்தோம், ஏன் அசைந்தோம்.... ? '- என்று நினைக்கக் கூட நேரமில்லாமல்... 'இத்தனை நாளும் 12.30.க்கெல்லாம் வருபவர்.. இன்றைக்கு 12.00 மணிக்கெல்லாம் வந்து ...
மேலும் கதையை படிக்க...
'இந்த வீட்டில் இணைய தள இணைப்பிலிருந்து அனைத்து வசதிகளும் இருக்கு. ஆனா தொலைபேசி மட்டும் அரத பழசு.!! அழைத்தால் எடுத்து.... '' ஹலோ..! '' சொல்ற அமைப்பு. அழைக்க வேண்டும் என்றால் எண்களை அழுத்தி ஒலிவாங்கியைக் காதில் வைக்கும் அமைப்பு. .இதில் அழைப்பு எண்கள் ...
மேலும் கதையை படிக்க...
உங்களுக்கு நடராஜ் கதை தெரியுமா...? ! தெரியாது ! சொல்றேன். நடராஜ் வேலை செய்யும் இடத்தில் 48 பேர்கள் வேலை செய்கிறார்கள். 12 பெண்கள். மீதி ஆண்கள். இந்த 12 ல் குறிப்பிட்டுச் சொல்லும்படியாய் பாஸ் மார்க் வாங்கும் அழகில் உள்ள பெண்கள் மூன்று. ...
மேலும் கதையை படிக்க...
புத்தகத்தை எடுத்துக்கொண்டு மாடி பால்கனிக்கு வந்து நாற்காலியில் அமர்ந்து நான் படிக்க அமர்ந்தபோதுதான் எதிர் வீட்டு பவானி அவள் வீட்டு பால்கனியில் பளீரென்று தோன்றினாள். இடையில் சாலை. போக்குவரத்து. !! 'சே...! படித்தாற்போலத்தான் ! 'மனம் சளித்தாலும் பார்வை அவளை அப்பியது. நல்ல களையான ...
மேலும் கதையை படிக்க...
காலை முகூர்த்தத்திற்கு மண்டபம் சந்தடியின்றி இயங்கிக்கொண்டிருந்தது. மணமகள் அறையில் மணப்பெண் மல்லிகா மட்டும் நிலைகொள்ளாமல் தவித்தாள். இவள் கண்களுக்குப் படுகிறமாதிரி சுவர் ஓரம் சேகர் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தான். அவனை அப்படிப் பார்க்கப் பார்க்க இவளுக்குள் ஏகத்துக்கும் எரிச்சல், கோபம் ! ' தன்னை, இவன் பலி பீடத்தில் ...
மேலும் கதையை படிக்க...
அலுவகத்தின் உள்ளே உம்மென்று நுழைந்த திவ்யா... இவளை ஏறெடுத்தும் பார்க்காத அபிஷேக்கைக் கண்டும் காணாமல் சென்று தன் இருக்கையில் அமர்ந்தாள். தூரத்தில் அமர்ந்திருந்த தீபன் இவளைக் கண்டதும் புன்னகைத்தான். இதுதான் இவளுக்கு எரிகிற தீயில் எண்ணையை விட்டது போலிருந்தது. வரட்டும்! இன்னைக்கு எதிரே உட்கார்ந்து ஆள் ...
மேலும் கதையை படிக்க...
மாலை மணி 6. 30 கண்கள் குழி விழுந்து சோர்வு, தளர்வுடன் வரும் சேகரைப் பொறாமையாகப் பார்த்தார்கள் அறை நண்பர்களான சிவா, குமார், ராமு, கணேஷ். " ஒரு இரவு, ஒரு பகல் ! ஏ அப்பா !" "மச்சம் உள்ள ஆளு…!!" "தினைக்கும் அனுபவிக்கிற…ராசி ! ...
மேலும் கதையை படிக்க...
சென்னையில் நண்பனின் மகளை ஐந்து வருடங்களுக்குப் பிறகு சந்திப்போமென்று கனவிலும் நினைக்கவில்லை கதிரவன். சின்னக்குழந்தையாய்க் கைகளில் தவழ்ந்தவள். அப்புறம் வளர்ந்து உருமாறி, படித்து.... திருமணத்தி;ற்குப் பிறகு அப்பன் சாவில் சந்தித்ததோடு சரி. இதோ உஸ்மான் சாலை ஒரம் நடந்து செல்ல...அருகில் ஊர்ந்து உரசியபடி ...
மேலும் கதையை படிக்க...
நான் அலுவலகத்தில் வேலையாய் இருக்கும்போது கைபேசி அழைத்தது. எடுத்தேன். "அண்ணே..."- என் உடன் பிறந்த தங்கை. "என்ன அருணா..?" "அங்கே என் மாமியார் வாதங்களா...?" "எங்கே...?" "உன் வீட்டுக்கு ..." "என் வீட்டுக்கா...?!" "ஆமாம் !" "ஏன்..?" "கோபம். உன் வீட்டுக்கு வர்றேன்னு கிளம்பினாங்க...'' "யார்கிட்ட கோபம்...?" "சட்டைத் துவைச்சுப் போடலைன்னு காலையில மாமா என்னைத் திட்டுச்சி. இவங்க ...
மேலும் கதையை படிக்க...
மனைவியை நைஸ் பண்ணத் தெரியனும்..!
சரம்… சரம்…. அவசரம்…!
தொ(ல்)லைபேசி? – ஒரு பக்க கதை
வழி விடுங்க…
காதல்..காதல்…காதல்..!
முறை மாமன்..!
அவன்..! – ஒரு பக்க கதை
மச்சம் உள்ள ஆளு…!
சம்பாதிப்பு……!
அத்தை..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)