பெண் பாவம் பொல்லாதது!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 8, 2016
பார்வையிட்டோர்: 9,650 
 

இப்படியும் பழி வாங்க முடியுமா? இதில் சில பகுதிகள் அருவருப்பைத் தரலாம்… பொருத்துக்கொள்க….

மங்கையர் மென்மையானவரே, அதில் சந்தேகமே இல்லை, ஆனால் அதே நேரத்தில், வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் பெண்களே ஆண்களை விட அதிக வலியை தாங்குகின்றனர் என்பதும் உண்மைதானே? பொருத்துக்கொள்வதற்கும் ஒரு அளவு இருக்கிறது. அந்த அளவு மீறினால்…. “சாது மிரண்டால், காடு கொள்ளாது…” என்பார்கள். அது தான் நடக்கும்…

சில வருடங்களுக்கு முன் எங்கேயோ நான் படித்த சம்பவங்களில் ஒன்றுதான் என் மனதைத் தொட்ட இந்தச் சம்பவம்.

அன்றொறு நாள் கணவன் வைரவன் ஆபீஸ் வேலையை முடித்துக்கொண்டு சீக்கிரமே வீட்டிற்குக் கிளம்பினான், தன் ஆசை மனைவிக்கு ஆச்சரியத்தை அளிக்க. வரும் வழியில் சில மலர்களையும், சுவீட்ஸ் வகையில் சிலவற்றையும் அன்புடன் வாங்கிக்கொண்டான். தான் வைத்திருந்த சாவியைக்கொண்டு, பூட்டியிருந்த வாசல் கதவை திறந்தான். விட்டிற்குள் நுழைந்ததும், அவள் வேறு எதையோ திட்டம் போட்டு செய்திருப்பதை அறிந்துகொண்டான். அவனுடைய காம்ப்யூட்டர் ஆன் செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்தது. அதன் திரையில் எதோ ஒரு நோட் செய்தி டைப் செய்யப்பட்டிருந்தது. சுற்று முற்றும் பார்த்தான், அவளைக் காணவில்லை. சர்ர்ர் என்று ஏறிய கோபத்தில், அவள் மீதிருந்த ஆசைகள் அத்தனையும் சிதறும் ஒசையை உணர்ந்தான். என்னவாயிருந்தாலும், அவனுடைய ஆசா பாசங்களுக்கு ஈடு கொடுப்பவள் தானே. நல்ல அழகு, அடக்கம், எதையும் தாங்கிக்கொள்ளும் இதயம், எப்படி புரட்டி எடுத்தாலும் பரவாயில்லை, அவன் வேண்டும் பொழுதெல்லாம் அவனை திருப்தி செய்யவே பிறந்தாள் போலும்… எங்கே போயிருப்பாள்…? அவன் குழம்பிக்கொண்டிருந்த வேளையில் காம்ப்யூட்டரின் ஒரு பக்கத்தில் அவனுடைய கைத் துப்பாக்கி இருந்ததை கண்டு மிரண்டு போனான். காம்ப்யூட்டரின் எதிரே, சுழல் நாற்காலியில் அமர்ந்தவுடன், மறு பக்கத்தில் மேஜையின் மீது வலி நிவாரணி மாத்திரைகளின் காலி டப்பா கிடந்ததைக் கண்டான். அவனுடைய நெஞ்சம் படபடத்தது. அவனுடைய கம்ப்யூட்டர் திரையிலிருந்து அவனையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த அந்த வாசகத்தை படிக்க ஆரம்பித்தான்…

“நீ இந்த வாசகத்தை படிக்க ஆரம்பிக்கும் பொழுது ஏற்கனவே நான் செத்துப்போய் இருப்பேன். ஆகவே, அலட்டிக்கொள்ளவேண்டாம். என்னை வீட்டிற்குள் தேடவேண்டிய அவசியமுமில்லை. உண்மையில், என் பிணம் என் குழந்தைகள் காணும் இடத்தில் கிடத்த நான் விரும்பவில்லை, ஏனெனில், அவர்கள் ஏற்கனவே உன்னுடன் நான் சகிக்கும் துன்பத்தையும் நீ செய்யும் சித்திரவதைகளையும் அளவிற்கு அதிகமாகவே கண்டுள்ளனர். வருடக்கணக்காக அவர்கள் ஏங்கிக்கொண்டிருக்கும் தந்தையின் அன்பிற்கு அடையாளமாக அவர்களுடைய தாய் பல வழிகளில் அவர்களுடைய தந்தையாலேயே துன்புறுத்தப்படுவதை அந்த பிஞ்சுக்கள் பார்த்துக்கொண்டும், அதை தன் நெஞ்சங்களில் ஆழப் பதித்துக்கொண்டும் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு என் முடிவினால் பிரிவு துன்பத்தை அளிக்கப்போகின்றேன் என்று நான் அறிந்திருந்தும், இனி என்னால் ஒரு கணமும் இவ்வாழ்க்கையை உன்னுடன் வாழ முடியாது என்ற ஒரு நிலைக்கு தள்ளப்பட்டு, உன்னால் இழைக்கப்பட்ட வலிகளிலிருந்து நிவாரணம் பெற பரிந்துரைக்கப்பட்ட இந்த வலி நிவாரண மாத்திரைகளை விழுங்கி விட்டேன், டப்பா முழுக்க, இப்பொழுது நான் எங்கேயோ உறங்கப் போகின்றேன்….

என்னைத் தேட கவலைப்படவேண்டாம். வெறும் இங்கே அமர்ந்து நீ பத்து வருடங்களாக செய்யாத ஒரு காரியத்தை செய், நான் சொல்வதை கவனமாகக் கேள். உன் கவனத்தைப்பெற நான் எங்கேயோ சென்று சாகும் பொழுது, நீ குறைந்த பட்சம் இப்பொழுது செய்யவேண்டியதெல்லாம் என்னவென்றால், இந்த செய்தியை படித்து முடிப்பதுதான். இதை நான் என் தலையில் திரும்ப திரும்ப பல வருடங்களாக திருத்தி எழுதிக்கொண்டிருக்கிறேன். நீ என்னை அடித்து உதைக்கும் ஒவ்வொரு தடவையும் நான் அதை திருத்தி எழுத வேண்டியிருந்தது, பயங்கரத் தன்மைகள் கூடிக்கொண்டேயிருந்தன. இதை நீ நன்றாகவே அறிவாய். அத்துடன், நான் இறந்தபின் நீ என்னைத் தேடி காணவேண்டாம். என் பிணத்தை நீ தொடும் அந்த அறுவறுப்பான எண்ணமே என் வயிற்றை குமட்டுகிறது. நீ என்னை மீண்டும் தொட நான் மறுக்கிறேன், என் வாழ்விலும், என் சாவிலும். நான் சாக விரும்பியது ஏனெனில் நான் உன்னை மணக்கும் பொழுது இறைவனிடம் சத்தியம் செய்தேன், என் உயிர் உள்ள வரை என் வாழ்க்கை முழுக்க உன்னை நான் நேசிப்பேன், என்று. நான் உன்னைவிட இறைவனுக்கே அதிகமாக அஞ்சுவதால், நான் சாவை தேர்ந்தெடுத்தேன். இனி என்னால் உன்னை நேசிக்க முடியாது! ஆகவே, நான் இந்த இடத்தை விட்டு காலி செய்தாகவேண்டும். நான் இந்த வீட்டை சற்று நோக்கும் பொழுது, வேடிக்கையாக உள்ளது, தெரியுமா…? ஆனால், நாம் கழித்த நல்ல நேரத்தையும் பங்கிட்டுக்கொண்ட சந்தோஷத்தையும் என்னால் நினைவுகொள்ள முடிகிறது. குழந்தைகளின் பிறப்பிற்கு முந்தி, உன் குடிப் பழக்கத்திற்கு முந்தி, உனக்கு நினைவிருக்கா? எனக்கு இருக்கிறது. அப்பொழுது நன்றாகவே இருந்தது. நானும் இத்தனை வருடங்களாக, நீ எனக்கு அளித்த அன்பின் பின்னணியில், மீண்டும் அந்த வசந்த காலத்திற்கு என்னை கொண்டு செல்வாய் என்ற வெறும் நம்பிக்கையிலேயே நலனை யூகித்துக்கொண்டிருக்கிறேன். இதை நீ ஒரு காலும் மறுக்க இயலாது. எனது இடுப்பு எலும்புகள் கொடுத்துக்கொண்டிருக்கும் வலியைவிட அதிக வேதனையளிப்பது என்னவென்றால் நான் உன்னை இன்றும் நேசிக்கின்றேன் என்ற உண்மைதான். இந்த கணிப்பு நீ என்னை நோக்கி முழு பலத்துடன் ஓங்கி குத்தும் உன் கரத்தைவிட சக்திவாய்ந்தது. உனக்காக இருந்த என் அன்பு நீண்ட நாட்கள் நீடிக்கும் வலியை எனக்கு அளிக்கும் என்று தெரிந்திருந்தும், அது, ஸ்டீல் டோ பொருத்திய உன் பூட்ஸ் காலால் என் கவிட்டையில் நீ உதைத்து பிசிந்த வலியைவிட மிக மோசமாக இருக்கிறது. ஆனால் இவ்வலியை நான் தாங்கிக்கொண்டேன், இதற்கு நிவாரணும் நான் தேடிக்கொள்வேன். உன்னிடம் அடிபட்டு அடிபட்டு மரத்துப்போன என் உடல் இப்பொழுது வலியை உணரவில்லை. ஆனால் எனக்கு நிம்மதி தேவை.

இன்று காலை என் முகத்தை கண்ணாடியில் நோக்கி நேற்றிரவு நீ எனக்கு அளித்த சிவந்து நீலமான கண் இமைக் காயத்தை ரசித்துக்கொண்டிருந்த பொழுதே எனக்கு நன்கு விளங்கியது… நீ என்னை இனி தொடவே முடியாது. வீங்கி வெடித்த என் பூப்போன்ற உதடுகளிலிருந்து கசிந்த இரத்தத்தை உறிஞ்சிய எனக்கு, இனி மீண்டும் ஒரு உதையோ அடியோ வாங்கும் சக்தி கிடையாது. என்னால் தாங்கவும் இயலாது. நீ என்ன சொன்னே? என்னே இனி அடிக்க மாட்டியா? எத்தனையோ முறை விவாகரத்து கேட்டு உன்னை விட்டு பிரிந்து நிம்மதியுடன் இருந்தேனே. உன் கண்லே முதலைக் கண்ணீரை கொட்டி, மண்டியிட்டு, புனித புத்தகத்தின் மீது கை வச்சி இனி என் மீது கை ஓங்க மாட்டேன்னு எத்தனை முறை சத்தியம் செய்திருப்பே? மீண்டும் மீண்டும் என்னை உன்னோடு வாழ வற்புறுத்தி, கோர்ட்டுக்கு போகாமல் தடுத்து, என்னிடம் மன்றாடி, அழைத்துப்போய் இருப்பே? இரண்டு முறை கோர்ட்டுக்கு போயும் நீ அங்கே சமாதானம் பேசி, மன்னிப்புக்கேட்டு, உன்னுடன் வாழ என்னை அனைவரும் நிர்பந்திக்கப்போய் நான் உன்னை நம்பி வந்தேனே. உனக்கு கொஞ்சமாவது நினைவிருக்கா? “கல்லானாலும் கணவன், புல்லானலும் புருஷன்” என்று என் வீட்டார் என்னையே திட்டி உன் வேண்டுகோள்களுக்கு இணங்க என்னை உன்னுடன் நரகத்தில் வாழ தள்ளிவிட்டனரே. நல்லது, உன் பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டன. இல்லை, நீ என்னை இனி தொடப் போவதில்லை. நான் இறைவனின் செயலை என் கையில் எடுத்து அதை சாதிக்கப்போகிறேன் என நினைக்கிறேன்.

நேற்றிரவு கீழே விழுந்துவிட்ட நான், சுதாரித்துக்கொண்டு எழும்பி மீண்டும் சாய்ந்தேன். அது நீ என்னை தாங்கிப் பிடிப்பாய் என்ற எண்ணத்தில் இல்லை. என்னால் சரியாக நிற்க முடியவில்லை. நீ நினைத்திருந்ததைப் போல் சாயும் என்னை நீ தாங்கிக் கொள்வாய் என்ற எதிர்ப்பார்ப்பும் எனக்கு இருந்ததில்லை. எப்படியோ, நீ என்னை அள்ளி எடுத்து நமது படுக்கையில் கிடத்தினாய்.. என் மீது படுத்து வீங்கியிருந்த என் முகத்தில் இதமாக முத்தமிட்டாய். சிதறியிருந்த என் கேசத்தை கண்களின் மீதிருந்து மெதுவாக நகர்த்தி வீங்கி சிவந்திருந்த என் இமைகளின் மீது முத்தமிட்டாய். எனக்குச் சற்றும் உணர்வுகளே இல்லாமல் இருந்தது. நீ என் கால்களை விரித்து தொடைகளின் மத்தியை சுவைத்த பொழுது, நான் முனகியிருக்கலாம், ஆனால், எனக்கு எந்த இன்பத்தின் உணர்வும் இருந்ததேயில்லை. நீ உன்னை எனக்குள் கலக்கும் பொழுது, நான் உன்னை என் பக்கம் இறுக்க அழுத்தி உன் பெயரை சில முறை உச்சரித்தது, சீக்கிரம் உன் ஜோலியை முடிக்க உதவிசெய்து நான் விடுதலைப் பெறத்தான். உன் பளுவான பூத உடல் வலியால் நொருங்கிக் கொண்டிருந்த எனது இடுப்பின் எலும்புகளை அழுத்திக்கொண்டிருந்ததால் தான் நான் முனகி புலம்ப நேரிட்டது. ஆனால் உன் முதுகை என் நகங்களால் கீறும் பொழுது நீ என் கிட்ட என்ன கேட்டே? என்ன மயிருக்கு நான் அதை செய்தேன் என்றா? அது எனக்குத் தேவைப்பட்டது. மேலும் நீ தூங்கியபின் நான் உன் அடியில் கிடந்தது என்னால் எழுந்திருக்க முடியவில்லை என்பதால்தான். நீ கடைசியில் என் மீதிருந்து புரண்டு படுத்த பொழுது, உன் ஆட்டமும் உஷ்ணமும் முடிந்து அது தொங்கலுக்கு வந்து விட்டது. அதனால் நடந்தது என்னவென்றால், நீ உபயோகித்த கண்டம், ஆணுறையை எனக்குள் விட்டுவிட்டாய். நீ தேடிக்கொண்டிருந்த அதே ஆணுறை, ஏனெனில் நீ பூட்ஸ் காலால் உதைத்து ஏற்பட்ட காயத்தின் இரத்தத்தை முன்பு பல முறை கசிந்ததுபோல் மீண்டும் இன்று நான் உன் மீது கசியக்கூடாதென்று நீ உபயோகித்த அதே ஆணுறை நீ எனக்குள் இருக்க விட்டு விட்டாய்.

எந்நாளும் போல் இன்று காலையும் உனக்கு முன்பே நான் எழுந்துவிட்டேன். உனக்காக பிரேக் ஃபாஸ்டும் வழக்கம்போல் தயார் செய்தேன். நீ உண்ட ஓட்ஸ் மீலில் என் சிறுநீரும், வெடித்திருந்த என் உதடுகளிலிருந்து கசிந்த இரத்தம் உன் ஜெல்லியிலும் இருந்ததை நீ இன்று உண்டு களித்தாய், என்னை நம்பு. நான் உனக்காக டோஸ்டு செய்யும் முன் அதை நான் மலம் கழித்தபின் நன்கு தேய்த்து எடுத்தேன். அந்த டோஸ்ட்டின் மீது ஜெல்லியை நீ தடவியதை கவனித்தேன். மற்ற சால்னாவுடன் நான் என்ன செய்தேன் என்று உனக்குச் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. உன் காப்பியில் துப்பி அதை நீ குடித்ததை ரசித்து கவனித்தேன். உன் முகப் பாவனைகளை கவனித்தேன், ஏதோ ஒரு தினுசாக சரியில்லாமல் இருப்பதாக உனக்கு தோன்றியது. நீ உன் பிரேக் ஃபாஸ்ட் முடித்துக்கொண்டதும், மீதம் இருந்த அனைத்தையும் கழுவு தொட்டியில் இட்டு, நீ உபயோகித்த கத்தியை மட்டும் ஒரு நேப்கின்னில் சுற்றி என் பாக்கெட்டில் வைத்துக்கொண்டேன்.

நீ சென்றபின், நான் சிரித்தேன், பலமாக சிரித்தேன், பைத்தியம் போல் சிரித்தேன், உரக்கமாக சிரித்தேன். சிரித்துக்கொண்டே பேங்குக்குப் போய் நமது கணக்கில் இருந்த பணம் அனைத்தையும் எடுத்துக்கொண்டேன். நம்மிடம் உள்ள கிரெடிட் கார்டுகளில் அனைத்திலும் மேக்ஸிமம் அட்வான்ஸ் எடுத்துக்கொண்டேன். மொத்தத்தில் பாதி தொகையை பல பெண்கள் நலனைக்காக்கும் நிறுவனங்களுக்கு டொனேஷன் கொடுத்துவிட்டேன். அது பல இலட்சங்களை தாண்டியது. என்னைப்போல் சித்திரவதை செய்யப்பட்டு, நியாயம் கிடைக்காமலும், நேரத்துடன் விவாகரத்து கிடைக்காமலும் வாடிக்கொண்டிருக்கும் பெண்களுக்காகவும், தன் கொடுமைக்கார கணவனை உதறித்தள்ளி தனியாக வாழ வலிமைக் கொண்ட இலட்சக்கணக்கான பெண்களுக்காகவும் நீ இப்பொழுது உன் வாழ் நாள் முழுக்க சம்பாதித்து ஏற்பட்ட கடனை தீர்ப்பாய். அப்படிப்பட்ட பெண்களும் மறுக்கப்பட்ட நியாயத்தை பெற்று, தம் நிரந்தர விடுதலையை பெற அப்பணம் உதவும். மீதிப்பணத்தை என் பிள்ளைகளுக்காக அர்பணித்துவிட்டேன்.

என் மகன் பிரபுக்கு அவன் உயர் படிப்பிற்குத் தேவையான பணத்தை வைத்துவிட்டேன், ஏனெனில், நீ என்னை ரெப்ரிஜிரேட்டர் மீது தள்ளி என் தலையை நொறுக்கிய சம்பவம் கண்டு அரண்டு போன அவன், குறைந்தது இந்த சந்தோஷத்திலாவது அவன் ஆத்மாவுக்கு ஏற்பட்ட சேதத்தை சரிசெய்து கொள்வான். மிச்சம் மீதி பணத்தை என் மகள் மைதிலியின் காலேஜுக்கு அனுப்பி விட்டேன். அவள் பட்டம் பெற்று உன்னை தேடி வர இனி அவசியம் இருக்காது. நீ எக்காரணத்தைக்கொண்டும் இனி என் பிள்ளைகளை தொடக் கூடாது. அதற்கு நான் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டேன். இல்லை, நான் நிச்சயமாக சொல்கிறேன் நீ அவர்களை தொட முடியாது.

ஆக, நான் சென்று விட்டதனால், உடனே நீ உன் சின்ன வீட்டிற்கு ஓடிப்போவாய்… நல்ல செய்தியை அவளிடம் சொல்ல. ஆகவே, இன்று மதியம் நான் அவளிடம் சென்றேன். அந்த வேசியைக் கொன்று விட்டேன். இரண்டாம் தாரம் மணக்க மதமோ, சட்டமோ இடம் கொடுக்கவில்லை என்றால், உனக்கு வைப்பாட்டி ஒரு கேடா? நேர் வழியாய் வந்த என் வாழ்கையை நாசமாக்கி, பின் கதவு வழியாய் ஒருத்தியை இழுத்து சேர்த்துக் கொண்டவனுக்கு ஆம்பிளை என்ற பட்டம்! வெட்கமாயில்லை? எனக்குத் தெரிந்தது இவ ஒன்று மட்டும் தான், இன்னும் எத்தனையோ? விசாரித்தால்தான் தெரியும். நீ காலையில் உபயோகித்த கத்தியைக்கொண்டு, அவளை சாரமாரியாக குத்திக் கொன்றுவிட்டேன். மிகப்பெரிதாக ரகளை செய்தாள். எங்கு பார்த்தாலும் வீடு முழுக்க இரத்தமும் மலமும் கிடக்கிறது. போலிஸ் சீக்கிரமே அங்கே வந்தடையும். நீ எனக்குள் மறந்து விட்டுச் சென்ற அந்த நாஸ்டி ஆணுறையை அவளுக்குப் பின்புறத்தில் திணித்து விட்டேன். நீ அவளை கொல்லவில்லை என்று எனக்குத்தெரியும், ஆனால் ஒரு நாள் நீ நிச்சயம் அதைத்தான் செய்வாய் என்றும் எனக்குத் தெரியும். அவள் சாவிற்கு நீ தான் காரணம், உன் தப்பு தான். ஆகவே, உன்னைத் தவிர மற்றவர் மீது ஏன் பழி சுமத்த வேண்டும்? நீ அவளை, பின் புறத்தில் புணர்ந்த பின் கொண்று விட்டதனால், அது திட்டம் போட்டு செய்ததாக தெரியாமல் போகலாம், ஆகவே, உன்னை அவர்கள் ஒருவேளை கொல்லாமல் சாதரண கொலையாக கருதி உனக்கு குறைந்தது, ஆயுள் தண்டனையாவது கிடைக்கும். ஆனால் இது உனக்கு சதாரணமானது தானே? உன்னை பாதுகாக்க உன்னிடம்தான் சிறந்த லாயர் குழு இருக்கிறதே. ஒரு தடவை அலுவலக பணக் கையாடலில் லஞ்சம் கொடுத்து உன்னை விடுவித்தவர்கள். நீ அந்த ஆவணங்களை தூள் ஆக்கி எரிக்க என்னிடம் கொடுத்தது உனக்கு நினைவிருக்கா, டியர்? நல்லது, அவைகளில் சிவற்றை மட்டும்தான் நான் தூளாக்கி எரித்தேன். மற்றவைகளை இன்று காலை தலைமை அட்டார்னிக்கு அனுப்பி விட்டேன். நீ ஏற்கனவே உன் வைப்பாட்டியை கொன்று விட்டதால், பல வருடங்கள் ஜெயிலில் வாடுவாய். இந்த ஆவணங்களும் உனக்கு பலமுறையில் சேதமளிக்கும்.

ஆனால் இதை எல்லாம் நினைக்கும் முன்பே அவைகளை நான் மெய்ல் செய்துவிட்டேன்.

அடடா, இவ்வளவு அமைதியாக இன்று வரை நீ இருந்ததேயில்லை! உண்மையில் நீ சும்மா அமர்ந்திருந்ததை நான் பார்த்த ஞாபகமே இல்லை. உன் வாயை அடைக்க நான் செய்ய வேண்டியிருந்ததெல்லாம் நான் சாவது தான் என்று எனக்கு தெரிந்திருந்தால், நான் ஏற்கனவே செத்துப்போய் இருப்பேன். உன் இடைவிடாத கவனத்தை நான் இப்பொழுது கவர்ந்துவிட்டதால், ஒரு மாற்றத்திற்காக, இப்பொழுது நீ என்ன செய்ய வேண்டும் என்பதை நான் சொல்கிறேன். காம்ப்யூட்டரின் ஒரு பக்கத்தில், ஒரே ஒரு குண்டுடன் உன் கைத்துப்பாக்கி இருக்கிறது. அடுத்த பக்கத்தில் டெலிபோன் இருக்கிறது. நீ, இப்பொழுது: (1) போலிசை அழைத்து சரண் அடைந்துவிடு. ஜெயிலுக்குப்போய் வாழ்நாள் முழுக்க அழுகிப்போ. அல்லது (2) அந்த துப்பாக்கியை தூக்கி என்னுடன் சேர்ந்துவிடு. என்ன செய்ய வேண்டுமோ அது உன்னுடைய விருப்பம்.

பிரபுவைப் பற்றி கவலைக்கொள்ளாதே. அவன் உன் தாயுடன்தான் இருப்பான். நீ இனி அவனைக்காண முடியாது. நீ ஏற்கனவே உன் சினேகிதியை கொன்றுவிட்டாய். அவள் உனக்கு இனி உதவப்போவதில்லை. நீ உன் தொழிலை தொலைத்து, ஜெயிலுக்குப் போகப் போகிறாய். உன் மனைவி விசித்திரமான முறையில் உன் அலுவலகத்தில் நாளைக் காலையில் பிணமாக கிடப்பாள். என் உடம்பு முழுக்க நீ என்னை சித்திரவதை செய்த காயங்கள், முக வீக்கம், சிவந்து நீலமான கண் இமைகள், வீங்கி வெடித்த உதடுகள் அது போதாமல், முந்திய இரவு நான் உன் முதுகை கீரியபின் என் நகங்களில் மாட்டிக்கொண்டிருக்கும் உன் முதுகின் மேல்தோல், ஒஹ் ஷிட், இப்பொழுதுக்கு அவை அனைத்தும் நன்றாக தெரியவில்லையே! ஆமாம், அவைதான் உனக்கு அடிக்கும் சாவு மணி.

ஆனால், நேற்றிரவு, நீ என்னை சுவற்றின் மீது வீசும் போது என்ன சொன்னாய்? நான் வேசியா? நல்லது, நான் வேசி இல்லையா?, ஓஹ் நானே சாவேன் என்று நீ நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டாய், இல்லையா? இப்பொழுது என்ன சொல்லப்போகிறாய்? நான் உன்னை ஏற்கனவே கொன்று விட்டேன், தேவ…. மவனே. ஓன்று நீ ஜெயிலுக்குப்போய், உன்னை பலர் பலாத்காரம் செய்து உன் காவலர் நீ என்னை உதைத்து நொறுக்கியது போல் உன்னுடன் அதையே செய்யட்டும். நான் செத்தது போல் நீயும் சாக வேண்டும், எனக்கு அளித்த வேசிப் பட்டத்தை நீ பெற்றபின். இல்லை, இரண்டாவதாக அங்கேயிருக்கும் துப்பாக்கியை எடுத்து உன் பெருந்தலையில் ஒன்றை விட்டுக்கொள், அதனால் எனக்கு ஒன்றும் வித்தியாசம் இல்லை. சாகும் வரை ஒன்றாக இருப்போம் என்று சொன்னது, ஞாபகம் இருக்கா?

சில வினாடிகள் கழிந்தன …

நிசப்தம்….

ஒரு சொடுக்குச் சத்தம்… ஒரு குண்டுச் சத்தம் நிசப்தத்தைக் கலைத்தது. அவனுடைய உடல் தரையின் மீது சாய்ந்தது. அவன் கொண்டு வந்த ரோஜாப்பூக்கள் குளமாக ஓடிய அவனுடைய இரத்தத்தில் மேலெழும்பி ஒரு விசிறியைப்போல் காட்சியளித்தன. அவனுடைய மனைவி தான் மறைந்திருந்த அலமாரியிலிருந்து மெதுவாக வெளியே வந்தாள். நேராக போலிசுக்கு போன் செய்தாள். தன் கணவனை தாண்டிச் சென்று அவன் அம்ர்ந்திருந்த சுழல் நாற்காலியில் அமர்ந்து டைப் செய்திருந்த அவளுடையச் செய்தியை முற்றிலுமாக அழித்தாள். அவள் அவனுக்காக ஏற்கனவே டைப் செய்து வைத்திருந்த தற்கொலை நோட்டை காம்ப்யூட்டரின் திரையில் மினுங்கச்செய்தாள். மாத்திரை டப்பாவை அப்புறப் படுத்தினாள். மாமியார் வீட்டிற்கு போன் செய்து, தன் குழந்தைகள் நன்றாக இருப்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டாள். அவனுடைய வைப்பாட்டி வீட்டிற்கு போன் செய்து உடனே துண்டித்து விட்டாள். அவளோ பல முறை இவள் வீட்டிற்கு போன் செய்தும், இவள் பதிலுக்கு போன் எடுத்து பேசவில்லை.

கணவன் தற்கொலைக்கு முன் அவனுடைய வைப்பாட்டியுடன் பேசியிருக்கிறான் என போலிஸ் யூகித்துக்கொள்ளும். அவள் கூறவேண்டியதெல்லாம் நன்றாக மனப்பாடம் செய்து கொண்டாள். போலிஸ் வருவதை அறிந்து, வாழ் நாள் முழுக்க அவளை நேசித்து பாதுகாப்பதாக இறைவனிடம் வாக்குறுதியளித்து மறந்து போய் விட்ட அவள் கணவனின் பிணத்தின் அருகில் மண்டியிட்டு அமர்ந்தாள். அப்படி வாக்குறுதியளித்தவன் என்றைக்கோ போய் விட்டான், இவன் யாரோ இவளுக்கு இனம் தெரியாதவனாய் இருந்துவிட்டான். அவளுடைய இடுப்பு எலும்புகளின் சேதத்தால் ஏற்பட்ட வலியைத்தவிர எந்த வலியின் உணர்வும் அவளுக்குத் தெரியவில்லை. அவளுக்கு எந்த வருத்தமும் இல்லை. அவனுடைய துன்ப நிலையிலிருந்து விடுவித்து, ஒரே ஒரு புல்லெட்டின் உதவியுடன், அவள் தனக்கும் விடுதலையைப் பெற்றுக்கொண்டாள்.

இருப்பினும், அவள் வாழ்க்கை அழிந்து விட்டது போல் அவள் குனிந்து, ஓலமிட்டாள்.

வாழ்க்கையில் விருப்பு வெறுப்பு சகஜம் தான். பலவந்தமாக யாரையும் மகிழ்விக்க முடியாது. பொருத்தமற்ற உயிர்கள் ஒன்றுக்கொன்றை பழி வாங்கும் என்பது உண்மையே.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *