புள்ளி – ஒரு பக்க கதை

 

வழக்கமான முடிவெட்டு, முகச்சவரம் தவிர, கூடுதலாக தலைமுடிக்கு சாயம் அடித்து பாதி வயது குறைந்து விட்டது போன்ற உணர்வுடன் நடந்து கொண்டிருந்தார்
அகவை ஐம்பதைக் கடந்த பரமேஸ்வரன்.

நண்பர்கள் எல்லாம் “நல்லா இருக்கு’ என்று பாராட்டியது அவரை வித்தியாசமாக சிந்திக்க வைத்தது.

“துணை இல்லாத வாழ்க்கை என்ன வாழ்க்கை’ என தனக்குள் பேசிக் கொள்வார். தரகர் நல்லமுத்துவிடம் இலைமறை காயாக தனது எண்ணத்தை வெளிப் படுத்தியிருந்தார்.

“சரி. ஒரு இடம் இருக்கு பார்த்துச் சொல்லுதேன்’ என்று சொல்லி இருந்தார் தரகர்.

அன்று இரவு ஒரு போன் அழைப்பு… அவராகத்தான் இருக்கும் என்று ரிஸீவரை எடுத்து காதோடு பொருத்தியபோது எதிர் முனையில் இருந்து ஒலித்தது அந்தப் பெண் குரல்.

“பரமேஸ்வரன் சார் தானே, எப்படி இருக்கீங்க?’

குரலைக் கேட்டவர் நடுங்கிப் போனார், வழக்கமாக “தாத்தா நல்லா இருக்கீங்களா?’ என்று நலம் விசாரிக்கும் பேத்தி ஹேமா இன்று சார் போட்டு அழைக்கிறாளே,
விஷயம் மும்பை வரை எட்டி விட்டதா? இரண்டாம் கல்யாணம் செய்யும் எண்ணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பரமேஸ்வரன்.

- ஆழ்வாநேரி சாலமன் (ஜூலை 2012) 

தொடர்புடைய சிறுகதைகள்
மாடியிலிருந்து லியோ அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தான். உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் என்று பலர் பண்ணை வீட்டில் குழுமியிருந்தார்கள். தெரிந்த முகங்களிடையே புரிந்த அன்பின் அடையாளம் விரவியிருக்கும் என்று எண்ணிய லியோவுக்கு அவர்கள் ஒருவருக்கொருவர் ஏசிக்கொண்டும் அடித்துக் கொண்டும் இருந்தது வருத்தமாக இருந்தது. ...
மேலும் கதையை படிக்க...
திரு. பரந்தாமன் அன்றைய மாலைப்பொழுதில் மிச்சமிருக்கும் வயதைத் தூக்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தார். இதுநாள்வரையிலான வாழ்க்கை அவருக்குத் தூக்கிப்போட்டுவிட்டுப் போகும் காகிதக் குப்பைகளாகத் தெரிந்தது. ஏறக்குறைய அவரின் பெரும்பாலான வாழ்க்கையின் பக்கங்கள் எழுதப்பட்டு இறுதி அத்தியாயத்துக்காக மட்டும் காத்திருப்பதாக அவருக்குத் தெரிந்தது. மனம் ...
மேலும் கதையை படிக்க...
இயற்கையின் நியதி!
காலை, ஒன்பது மணி.தலைமை நர்ஸ் பேஷன்டுகளை பார்வையிட வந்தார்.மனைவி நாகம்மாவின் கட்டில் அருகில் அமர்ந்திருந்த சத்தியமூர்த்தி, எழுந்து ஜன்னல் பக்கம் எட்டிப் பார்த்தார்.மருத்துவமனை வாசலில் அந்தப் பெண் நின்று கொண்டிருந்தாள். அவள், தவிப்புடன் நிற்பது தெரிந்தது.அவர், "ஒரு நிமிஷம் நில்லும்மா... இதோ ...
மேலும் கதையை படிக்க...
“குப்பெ வந்துட்டான். குப்பெ வந்துட்டான்"னு எல்லாரும் ரொம்ப அருவசமாச் சொன்னாங்க. குப்பெயப் பாக்குரதுக்கும் ரொம்ப அருவசமாத்தான் இருந்துச்சு. அவனுக்கென்ன பேரா இல்ல? எல்லாப் பெயமக்களும் குப்பெ வந்துட்டான் குப்பெ வந்துட்டான்"னு சொல்லிக்கிட்டுத் திரியிறாளுகன்னு அவுகம்மெ தெருவுல கத்திக்கிட்டுத் திருஞ்சா.“அவம்பேரு யாருக்குத் தெரியும்? ...
மேலும் கதையை படிக்க...
"எம் புள்ளையை ஸ்கூல்ல யாரோஅடிச்சிட்டாங்கலாம்... அலுவலகத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பி அழைப்புமணி அடித்துக் காத்திருந்த குமாரை வரவேற்றது மனைவி விமலாவின் குரல். மணி ஏழைக் கடந்து விட்டிருந்ததைக் காட்டிய கடிகாரத்தின் விநாடி முள் வழக்கத்தை விட அதிகமாகத் துடிப்பது போலிருந்தது அவனுக்கு. நாள் முழுக்க ...
மேலும் கதையை படிக்க...
மகிழ்ச்சி எந்திரம்
மன அழல்
இயற்கையின் நியதி!
விட்டு விடுதலையாகி…
கால் மணி நேரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)