Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

புலம்(பல்) பெயர்தல்!

 

மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்……இந்த நகரில்,காலநிலையை ‘கோடை’யாகி விட்டதே,இனி,எல்லா நாளும் வெப்பமாகவே இருக்கும்!.. என்று உடனே ஒரேயடியாய் சொல்லி விட முடியாது.நேற்று,சிறிது கூதலை ஏற்படுத்தியது, இன்று,எரிக்கிற நாளாக வாட்டப் போகிறது. திலகன்,(10வயசு) தனது மகள் இருக்கும் சக்கர நாற்காலியை,தள்ளிக் கொண்டு பல்கணிக்கு வந்தான். மனைவியின் ரசனை காரணமாக பூத்தொட்டிகள் சில வாங்கி ஓரமாக வைத்திருந்தாள். அவற்றில்,ஊதா,சிவப்பு,மஞ்சள் என பூக்கள் …பூத்திருந்தன. சிறிலங்காவில், அங்காங்கே பூத்துக் கிடக்கிற அழகழகான ‘பத்தைப் பூக்களை’யெல்லாம் இங்கே தொட்டிகளாக்கி.. வீடுகளில் காட்சிப்படுத்துகிறார்கள்.

மாடி, மாடியாய் குடியிருப்புக்கள் போய்க் கொண்டிருப்பதால்… குடும்பங்களுக்கு என்று ஒரு தனி ‘வீட்டு அலகு’ முழுமையாய் இங்கே ,கிடைப்பதில்லை.மண்ணுள்ள நிலம்,தோட்டச் சூழல்…இதெல்லாம் எட்டாக் கனிகள்..மட்டுமில்லை விலை கூடியவையும் கூட!அங்கத்தைய,நடுத்தர அலகு தான்,இங்கத்தைய பணக்கார அலகு!சிறிலங்காவில் மட்டும் மண்ணாசை மிக்க அரசியல்வாதிகள் இல்லாமலும்,புத்தரின் கோட்பாடுகளும் மேலோங்கியும் இருந்திருந்தால்…அது இந்த நாட்டை விட எத்தனையோ மடங்கு மேலானதாக இருக்கும்.இன,மத,மொழிக் குரோதங்கள் ஒரு நாட்டையே செல்லரிப்பது போல அழித்து விடும்’என்பது தெரியாமல், அரசாங்கம்,‘அழகான தீவை’ ராணுவ ஆயுதங்களால் சிதைத்துக் கொண்டிருக்கிறது.

அது மட்டுமில்லை,வல்லமை மிக்க நாடுகள், சிறிய நாடுகளில், 3ம் உலகப் போரிற்காக செய்கிற தயாரிப்பு வேலைகளும்… சமாதானம் வராதற்குக் முக்கிய காரணமாக இருக்கிறன.ஐக்கிய நாடுகள் சபையினர்,மனித உரிமைகளைப் பற்றி கதைப்பதிலும் பார்க்க, அந்நாடுகளின் வெளிநாட்டுக் கொள்கைகளைப் பற்றி கதைத்தால் ஏதாவது விளையலாம்.

‘மகளை’யும் கடவுள் ஒரேயடியாய் கை விட்டு விட்டாரே!’பெருமூச்சு விட்டான்.கிட்ட போய் கதைப்பது போல ..அலம்ப… காயத்திரி, தொடர்ந்தாற் போல சிரித்துக் கொண்டிருந்தாள்.அவளின் கையையும்,காலையும் சிறிது நீவி விட்டான்.அவளுக்கு வலிப்பு வராமல் இருந்தது.அடிக்கடி வலிப்புகள் வந்து,ஒரு நிமிசம் போல நீடித்து..அவளையும் வருத்தி,அவனையும் வருத்தும். உடம்பை விறைப்பாக்கி,கதிரையில் இருக்கவே கஸ்டப்படுவாள்.வலிப்பு நின்ற பிறகு ‘வீல்’கத்தல் வேறு. தூக்கி,உடனே மடியில் இருத்தியாக வேண்டும்.உடம்பினுள் சில எலும்பு இணைப்புக்கள் அங்காங்கே (சரிவர இணையாது) சிறிது விலகிப் போய் இருப்பதால்.. வைத்திருக்கிற போதும் அசைக்கேக்க நொந்து விடும்.உடனே வலிப்பும் வந்து� விடும்.பிறகென்ன…ஒரு நிமிசம் போல ..இழுக்கும்.1-2கிலோ கூடி விட்டது போல கனக்கவும் செய்வாள். மடியில் இருக்கிற போது ‘கைச்சூட்டில் இருப்பதால்.. கத்த மாட்டாள்.

அவளோடு சேர்ந்து அவனும் கீழே வேடிக்கை பார்த்தான்.அவள், அவனையே முழுசிப் பார்த்துக் கொண்டிருந்தாள். மூளையில் சில உயிர்க் கலங்கள்பாதிக்கப்பட்டிருப்பதால்,பார்க்கிறாளா?கேட்கிறாளா?..என்பதெல்லாம் உண்மையில் தெரியாது.இருந்தாலும், அவன் அவளோடு கதைத்தான்.

“கட்டிடக் காடாக நகரம் கிடக்கிறதால் காற்றோட்டம் இல்லாது சூடாகப் போகிறது.கார்களை அதிகம் பாவிப்பதால் வெளியிடப்படுகிற மாசடைந்த காற்றால் தான் இங்கே பல புரியாத வருத்தங்கள் வருகின்றன” அவன் சொல்வதைக் கேட்டு அழகாகச் சிரித்தாள்.

யங் வீதியிலிருந்து கிழக்காக போற வீதிகளில் ஒரு வீதியில் அவனுடைய மொட்டை மாடி இருக்கிறது.அந்த வீதிக்கும்,தெற்குப் பக்கமிருக்கிற வீதிக்குமிடையில் பெரிய காணிப்பகுதி,வெளியாக இருந்தது. நகரத்தில் வெளிகள் இருந்தால் கண்ணுக்கு குளிர்ச்சியை தரும்.அதில், அரைவாசி ‘ட’வில் புல் தரையும்,மற்ற ‘ட’வில் கார் பார்க்கிங் பகுதியும் இருந்தன.

அது,ஒரு பழைய விவசாயப் பண்ணையின் காணி, சிறிய கொட்டில் மட்டும் எச்சமாக இருந்தது. அதிலேயும், இனி,கொண்டோ கட்டப் போறார்கள்.விளம்பரப் பலகையை நாட்டி வைத்திருக்கிறார்கள். அந்த கொட்டிலை திருத்திக் கட்டி விற்பனை நிலையமாக்கிஇருக்கிறார்கள்.

காசு வாங்கிற ஆள், சனி,ஞாயிறு நாட்களில், பார்க்கிங் பகுதியில்… இருப்பதில்லை.வீதியில் காசு போட்டு நிறுத்த வேண்டும் என்பதற்காக பலர்,ஆளில்லை தானே என்று..காணியிலே, வாகனங்களை கொண்டு போய் நிறுத்துகிறார்கள். சிலர்,காசைப் போட்டு, பற்றுச் சீட்டைப் பெற்று,வீதியிலே தான் நிறுத்துகிறார்கள்.ஆள் நடமாட்டம் குறைந்து, சிறிது வெறிச்சென்று வீதி கிடந்தது.

பின்பக்கம்,2 சைக்கிள்களைக் கட்டியதாக வான் ஒன்று மெதுவாக வந்து,வீதியில் பார்க் பண்ணியது.சிறு பையனும்,நடுத்தர வயதாளும் இறங்கினார்கள்.பையன் மெசினில்,காசைப் போட்டு பற்றுச் சீட்டை எடுத்து வந்தான்.அவர்,அதை, உள்ளே (டாஸில்..)தெரியக் கூடியதாக வைத்து கதவைப் பூட்டினார்.பக்கத்தில் இருக்கும் உணவு விடுதியை நோக்கி இருவரும் நடையைக் கட்டினார்கள்.காயத்திரியும் நல்ல மாதிரியாய் இருந்திருந்தால்..அவனும் அப்படி திரியலாம்.கடவுள், தான்‘பாஸ்’மார்க்கை யாருக்கும் எளிதில் போட்டு விடுவதில்லையே. எங்களை தொடக்கத்திலே ஃபெயிலாக்கி விட்டான். எங்களுக்கும் பிறகு பாஸாக சந்தர்ப்பம் இருந்தது தான்.ஆனால்,நிலவிய குழப்பம் அதையும் கெடுத்து விட்டது.

மற்றவர்களுக்கு ‘பாஸ்மார்க் ’என சந்தோசப்படுற அனுபவிக்க வைத்து விட்டு,திடீரென ‘குண்டையும் தூக்கி’போட்டு விடுகிறான்.சுனாமி போல, அல்லது‘எயர் இந்தியா’விபத்து போல!எல்லாமே நொடியில் நடந்து விடுகிறன.

“கடவுள் மொத்தத்தில் நல்லவர் இல்லையடி”என்றான்.அவள் குசலாய் மடியில்இருந்து..கேட்டாள். “அவர் படைத்த மனிதன் கூட நல்லவனில்லை தானடி”என்றான்.”இல்லாவிட்டால் சிறிலங்காவில் தமிழ்மக்கள் மீது குண்டுகளைப் போட்டு ,கடவுளிட வேலையை செய்வார்களா?”பேசாமல் இருந்தாள்.அவர்கள் போன கையோட, ‘அபராத டிக்கற்றை வைக்கிற ஆபிசரி’ன் கார் ஒன்று ஊர்ந்து வந்தது.உள்ளே இருந்தபடியே அந்த வானை எட்டிப் பார்த்தான். வைத்த பற்றுச் சீட்டு தெரியவில்லை போல இருக்கிறது .இருந்தபடியே,சிறிய எலெக்ரோனிக் மெசினில்,டிக்கற்றை மளமளாவென எழுதினான்.இறங்கியவன், அந்த அச்சில் வந்த மஞ்சள் பேப்பரை வானில் நீர் வழிக்கிற தடியின் கீழ் வைத்து செருகினான்.அப்ப,பற்றுச் சீட்டு அவன் கண்ணில் நிச்சியம் பட்டிருக்க வேண்டும்..ஆனால்,அது,ஓரமாக செருகப் பட்டது போல விழுந்து போய்க்.. கிடந்தது தெரிந்தது.ஆபிசர்,அதைக் குறித்து அதிகம் அக்கறைப் படவில்லை.செருகின டிக்கற் செருகினது தான்.அந்த நேரம்,சீனப் பெட்டை ஒருத்தியின் ‘கொன்டா’கார் வானுக்குப் பின்னால் வந்து பார்க் பண்ணியது.அவளுக்கு வானில் இருந்த பற்றுச்சீட்டு தெரிய,அவள் முகத்தில் குழப்பம் ஏற்பட்டது.மெசினில் காசு போட்டு எடுத்த பற்றுச் சீட்டை தன் காரில் வைத்து விட்டு,ஆபிசரின் கார் நகரும் வரை நின்று கொண்டிருந்தாள். பிறகே,அகன்றாள்.

நேற்று கூட இந்த ஆபிசர்கள், ‘மோசமாக டிக்கற்றுக்கள் வைப்பது’ பற்றி தொலைக்காட்சியில்,விமர்சிக்கப்படுவதைக் காட்டினார்கள். அதிகமானவர்கள், அவற்றை வழக்குக்கே… பதிகிறார்களாம். அவை,வழக்கு மன்றத்துக்கு வர ஒரு வருசத்திற்கு மேலே ஆகிறது.அதனால்,எந்த நேரமும்,பதியிறதுக்கு நிறைய கூட்டம் அலை மோதுவதையும், நிறைய வழக்குகள் வழக்காடாது தேங்கிப் போய்க் கிடப்பதையும்… சொன்னார்கள்.

விடுமுறை நாள்,ஆரவாரம் குறைந்த நாள்,டிக்கற் வைப்பது தேவையற்றது தான்!சாதாரணமாக இருந்த நகரை,பழமைவாதக் கட்சி,மாநகராக்கி தடபுடலாக்கிய பிறகு, செலவுகள் அதிகமாகி விட்டன. இப்படி,பணம் பிடுங்குவதும் மோசமாகி விட்டன.இப்ப பல இடங்களில் 7 நாளும் காசு போட்டு தான் வாகனங்களை வீதியில் பார்க்பண்ணலாம்.பாவம்!வான்காரன்,நேர்மையானவன்,பற்றுச் சீட்டு வைத்தும் அவனுக்கு மஞ்சள் டிக்கற் கிடைக்கிறது! இதமான காற்று கொஞ்சம் பலத்து வீசியது.அட கடவுளே,அந்த வீசலில் டிக்கற் படபடக்கிறதே! திரும்ப வீசியதில்…அது, பறந்து போய் புல்தரையில் இறங்கியது.

“எடியே,அவனுக்கு டிக்கற் வைக்கப்பட்டதே தெரியாமல் போகப் போகிறதடி”என்றான். ‘அவனுக்கு நடந்தால் உனக்கென்ன?’என காயத்திரி பொம்பிள்ளைப் பார்வை பார்த்தாள். “இல்லை,அவனுக்கு தபாலில் கடிதம் வருகிற போது,உணார்ச்சி வசப்படுறவனாக இருந்தால்,கட்டாயம் தலையிடி வரப் போகிறது”என்றான்.இப்ப இருக்கிற பற்றுச்சீட்டை அதுநாள்வரை வைத்திருந்து,திரும்ப வழக்குக்கு பதிய போற போதும் சட்டச் சிக்கல்களைச் சந்திப்பான்.தவிர, யாருமே அப்படி பற்றுச்சீட்டை பாதுகாத்து வைப்பதுமில்லை.அதனால்,பேசாமல் அவர்கள் சொன்ன அபராத தொகையோடு ஃபைனையும் கட்டி அழவே வேண்டியே அவனுக்கு இருக்கும்.

நாமும்,எம்முடைய வரவு- செலவுகளிலும் கட்டாயம் இப்படி வரப் போகிற செலவுக்கென… 15 வீதம் பணம் ஒதுக்கி வைத்திருக்கப் பழகவே வேண்டும்.கட்டிடக் கலைஞர்கள் கட்டிட மதிப்பீட்டை தயாரிக்கும் போது, 15 % எதிர்பாராச் செலவுகள் என சேர்க்கிறார்கள்.

‘தனிப்பட்டவர்களின் வாழ்க்கையிலும் இது போல… இருக்கிறது’என்பது யாருக்குமே பெரும்பாலும் தெரிவதில்லை. ‘விரலுக்கேற்ற வீக்கம்,எளிமையாக வாழ்’என்றெல்லாம் பழசுகள் அனுபவத்தால் தான் எச்சரிக்கைப் படுத்தியிருக்கிறார்கள்.

சம்சாரமாக வாரவளுக்கும், எப்பையும் ‘ராஜவாழ்க்கை வாழனும்’ என்ற ஆசை.ஏன்,எமக்கே கூட அந்த ஆசை ஏற்பட்டு
விடுகிறது.அதனால்,புலம்பெயர்ந்த புதுவாழ்வின் ஸ்டைலே மாறி,குழம்பிப் போகிறது.15%வீத ஒதுக்கல் கூட பத்தாத நிலை.எல்லா வீட்டிலேயும் பணப் பிரச்சனை.ஒன்று,இரண்டு என்று பல வேலை அடி!, அப்பவும் பிரச்சனை தீர்வதாக இருப்பதில்லை.6/49இல் அல்லது வேறு லொத்தரில்… கிடைத்தாலும், உடனடியாக ஈச்சாப்பியாக மாறுறதே குடும்பங்களுக்கு நடக்கிறன.தேவைப் படுற போது யாருக்குமே உதவிகள் கிடைப்பதில்லை.சம்சார வண்டியை 2 மாடுகளும் சேர்ந்தே இழுக்க வேண்டும்.அதனால்,அவமானங்களுடனே வண்டி நகர்வதும் விதியாகிறது.

ஒவ்வொருவக்கும் ..ஏன் அவனுக்கே தெரியாமல் கூட எத்தனையோ செலவுகள் ஏற்பட்டபடி தான் இருக்கின்றன.கணக்கைப் போல யாராலேயுமே 1+1=2 என்பது போல எந்த செலவுகளையும் தீர்மானிக்க முடியாது. ‘அவனுக்கென்ன செலவு’ என நினைப்பது தவறு,

“சிறிலங்காவிலோ,தமிழன் காணாமல் போகிறான்,சில வேளை முடிந்தும் விடுகிறான்.வாழ்க்கைடேப் விரைவாக ஓடுறது போல.. அங்கே நிலமை. இங்கே, நாம், ‘அங்கை என்ன நடந்தால் என்ன?’என்ற விடாந்திப் போக்கிலே கிடக்கிறோம்.நம் பிரச்சனையே தலையைப் பிய்க்கிறது.என்று தாம் நாம் சிமார்ட்டாக வாழ்றது நடக்கப் போகிறதோ?” கண்ணெதிரே நடக்கிற தவறுகளையும் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய விதி இருக்கிறது.

காயத்திரி,அவன் புலம்பலை பார்த்தும் சிரித்தாள்.

- ஆகஸ்ட் 2008 

தொடர்புடைய சிறுகதைகள்
அம்மன் கோவில் திருவிழாவில் பொலிஸ், பாதுகாப்பிற்கு அழைக்கப்பட்டிருந்தது.விதியின் விளையாட்டு போல..சிங்களவர்கள் இருவரையும் பணிக்கு அமர்த்தியிருந்தார்கள். பெண்கள், அரைச்சாரியில், மல்லிகைப் பூச்சரம் சூடி,அவர்களே தேடித் தேடி அறிந்திருந்தவைகளை பூசியும்,செருகியும் அலங்காரப் படுத்திக் கொண்டு..தேவதைகளாக வந்திருந்தார்கள்.சமவயது ஆண்களை விட, பெண்கள் அழகில் தூக்கலாக இருப்பார்கள். ...
மேலும் கதையை படிக்க...
பெண்கள் மாத்திரமில்லை, ஆண்களும் ... தம்மவர்களைப் பார்த்து பொறாமைப்படுகிறார்கள். ஆனால்,அவர்களுடையது போல ஆழமான போக்குடையதில்லை. விமலுக்கு சுரேசின் தலை வாருதல் கண்ணைக் குத்துகிறது. மாலையில் கூட அப்படியே குலையாமல் இருந்து.. விமலைப் பார்த்து ஒரு நக்கல் பார்வை பார்க்கிறது. 'நான் என்ன ...
மேலும் கதையை படிக்க...
நினைவுகளை இரை மீட்பதற்காக எழுதிய தொடர். அத்தியாயம் ஒன்று! | அத்தியாயம் இரண்டு! | அத்தியாயம் மூன்று! | அத்தியாயம் நான்கு! அராலிக்கூடாகச் செல்கிற பிரதான வீதியிலிருந்து மேற்குப் புறமாக வேலியில்லாமல் திறந்த 'ட'னா வடிவில் முருகமூர்த்திக் கோவில் வளவு, மண்பாதையுடன் செல்கிறது.. ...
மேலும் கதையை படிக்க...
பொன்னம்பி, அவனிடம் ஒரு கேள்வியை எழுப்பி இருந்தான்."நீ (அரசியல்)அமைப்பிலே வேலை செய்யாமல் வெளியிலே போய் பயிற்சி எடுக்கணும் என்று அவசரப்படுகிறாய்.உனக்குத் தெரியுமா, இங்கே(தளத்திலே) வேலை செய்வது தான் முக்கியமானது,ஒரு காலத்தில் உணர்வாய்!"என்றான். இதையெல்லாம் நின்று நிதானிக்கும் நிலையில் அவன் இருக்கவில்லை.. மனோவும் ,சதிஸும் ...
மேலும் கதையை படிக்க...
ராதா,வாகனத்தில் கண்ணுக்கு நேரடியாக சூரிய ஒளி வருவதை தடுப்பதற்காக உள்ள மேல்பகுதி மட்டையை இழுத்து விட்டான். கைத்தோலில் படும் வெய்யில் பூதக்கண்ணாடியினூடாக வருகிற மாதிரி சுடுகிறது. 'டாக்ஸி'யில் இருக்கிற ஓட்டி 'ஒவனு'க்குள் இருக்கிற மாதிரி துன்பப்பட வேண்டியிருக்கிறது.பின்னால் இருக்கிறவர்களுக்கு ஒருவித சொகுசுப் ...
மேலும் கதையை படிக்க...
வேள்வி
ஓட்டம்
சலோ, சலோ!
எட்டாப் புத்தகம்
சமூகக்குற்றம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)