கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம் முதல் அத்தியாயம்
கதைப்பதிவு: August 2, 2020
பார்வையிட்டோர்: 4,348 
 

அத்தியாயம்-1 | அத்தியாயம்-2

நளினி கிருஷ்ணன் தம்பதிகளுக்குப் பிறந்த ஒரே செல்லப் பொண்ணு.நளினி பிறந்த பிறகு அவர்களுக்குக் குழந்தியே பிறக்கவில்லை.

கிருஷ்ணன் தம்பதிகள் நளினியை நன்றாகப் படிக்க வைத்துக் கொண்டு இருந்தார்கள். நளினியும் மிக நன்றாகப் படித்துக் கொண்டு வந்தாள்.

நளினி B.Com.பாஸ் பண்ணினதும்,ராதா தன் கணவனிடம் “நளினி B.Com ‘பாஸ்’ பண்ணீ ட்டாளே அவளுக்கு ஒரு நல்ல இடத்லே காலா காலத்திலே ஒரு கல்யாணத்தே பண்ணீடலாமே. நீங்கோ அதே யோஜனைப் பண்ணேளா” என்று கேட்டதும் கிருஷ்ணன் பதில் சொல்வதற்கு முன் னால் நளினி “அம்மா,எனக்கு இப்போ கல்யாணம் எல்லாம் வேணாம்.நான் M.Com சேந்து ‘பஸ்ட் க்லாஸிலே’ ‘பாஸ்’ பண்ணிட்டு, அமெரிக்காப் போய் ஒரு இன்னும் மேலே படிச்சுட்டு, அங்கே இருக் கும் ஒரு நல்ல கம்பனியிலே சேந்து கை நிறைய சம்பாதிச்சு வரணும்ன்னு ரொம்ப ஆசையா இருக்கு” என்று சொன்னாள்.

கிருஷ்ணன் மகளின் ஆசையை பூர்த்தி பண்ண வேண்டும் என்று ஆசைப் பட்டார்.

ஆனால் அவர் மணைவி ராதா “நளினி,நீ எங்களுக்கு ஒரே பொண்ணு.உனக்கு அப்புறமா அந்த பகவான் எங்களுக்கு ஒரு குழந்தையையும் ‘அனுக்கிரஹம்’ பண்ணலே” என்று சொல்லி தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

உடனே கிருஷ்ணன் “ராதா,நீ இப்போ அதை எல்லாம் நினைச்சுண்டு கண்ணே கசக்கறே. பகவான் நமக்கு என்ன ‘ப்ராப்தமோ’ அதேத் தந்து இருக்கார்.எத்தனையோ தம்பதிகள் ஒரு குழந்தை கூட பொறக்காம மனக் கஷ்டம் பட்டுண்டு வறா தெரியுமோ.அது வரைக்கும் அந்த பகவான் நமக்கு ஒரு பொண் குழந்தையையாவது குடுத்தாரேன்னு,நினைச்சு சந்தோஷப் படாமே,என்னமோ கண் ணே கசக்கிண்டு இருக்கே” என்று சற்று அதட்டலாகச் சொன்னார்.

கண்ணைத் துடைத்துக் கொண்ட ராதா தன் கணவனைப் பார்த்து “ஏதோ என் மனசிலே இரு க்கற ஆதங்கத்தை சொன்னேன்.நேக்கு கொஞ்சம் அழுகை வந்துடுத்து.அது போகட்டும் விடுங்கோ. நீங்கோ சொல்றது ரொம்ப சரிதான்.நான் நளினி கேட்டதுக்கு பதில் சொல்றேன்.நளினியே அப்படி எல்லாம் கல்யாணம் ஆகாத உன்னே அமெரிக்கா எல்லாம் அனுப்பி படிக்க வக்க முடியாது. அமெரிக் காலே இருக்கற பசங்க எல்லாம் ‘ஒரு மாதிரி’.அவா கலாசாரம் வேறே, நம்ம கலாசாரம் வேறே. நீ அமெரிக்கா படிக்கப் போய் உனக்கு ‘ஏதாவது’ நடக்கக் கூடாது நடந்துடுத்துன்னா,அப்புறமா யார் அவஸ்தைப் படறது.என்னே விட உங்களுக்கு அமெரிக்காவை பத்தி ரொம்ப நன்னாத் தெரியும். நீங்கோ ஒன்னும் சொல்லாம நின்னிண்டு இருக்கேளே.நளினிக்கு சித்தே நிதானமாச் சொல்லி புரிய வக்கக் கூடாதோ” என்று கணவனைப் பார்த்து கேட்டாள்.

உடனே கிருஷ்ணன் ”நீ சொல்றது உண்மைத் தான்.எனக்கு அமெரிக்காவைப் பத்தி நன்னாத் தெரியும்.இந்த காலத்லே நிறைய பொண் குழந்தைகள் அமெரிக்காப் போய் படிக்கறா.அவா நல்ல ஒரு வேலையையும் அவா அங்கேயே தேடிக்கறா.ஏன் உன் அத்தே பொண்ணு மீரா அமெரிக்கப் போய் நன்னா படிச்சுட்டு ஒரு நல்ல வேலேலே இல்லையா.பக்கத்து ‘ப்லாட்லே’ இருக்கிறவா,அவா பொண் ணே அமெரிக்கா அனுப்பி இருக்கா.அவ படிப்பு முடிஞ்சதும் அவ ஒரு நல்ல வேலேயே தேடிக்கப் போறா. நளினி கேக்கறது நேக்குத் தப்பாத் தோணலே.அவ M.Com ‘பாஸ்’ பண்ணிட்டு,அமெரிக் காவுக்குப் போய் மேலே படிச்சுட்டு ஒரு நல்ல வேலையை தேடிக்கட்டுமே” என்று சொன்னார்.

கிருஷ்ணன் சொல்லி முடிக்கவில்லை ராதா “நான் நிச்சியமா நளினியே ஒரு கல்யாணத்தே பண்ணிக்காம அனுப்ப மாட்டேன்.அவ அமெரிக்கா மேல் படிப்பே விட,எனக்கு அவ கல்யாணம் தான் முக்கியமாப் படறது” என்று சொன்னாள்.

உடனே நளினி “என்னம்மா இப்படி சொல்றே.எனக்கு அமெரிக்காப் போய் மேலே படிக்கணும் ன்னு ரொம்ப ஆசையா இருக்கு.நீங்கோ என்னடான்னா எனக்கு ஒரு கல்யாணத்தே பண்ணி வக்க றது தான் முக்கியம்ன்னு சொல்றேள்.அப்போ என் ஆசை என்ன ஆறது” என்று அம்மாவின் முந்தா ணையைப் பிடித்துக் கொண்டு கேட்டாள்.

ரெண்டு பேருக்கும் ஒரு சமரசம் பண்ணீ வைப்போமே என்று நினைத்து கிருஷ்ணன நளினி யைப் பார்த்து “நளினி, நீ முதல்லே M.Com சேந்து நன்னாப் படிச்சு ஒரு ‘ஹை பஸ்ட் க்லாஸ்லே பாஸ்’ பண்ணு.அது முடியவே இன்னும் ரெண்டு வருஷம் ஆகும்.அதுக்கு அப்புறமா நாம இந்த அமெரிக்கா போய் படிக்கறதே பத்தி பேசலாம்” என்று சொன்னதும் இருவரும் அவர் சொன்னதை ஒத்துக் கொண்டு சும்மா இருந்தார்கள்.

ஆனால் நளினி M.Com படித்து முடித்த பிறகு,அமெரிக்கா போவதில் தீர்மானமாய் இருந் தாள்.அது போலவே ராதா நளினி M.Com பாஸ் பண்ணினதும் அவளுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வைத்து விட வேண்டும் என்பதில் தீர்மானமாய் இருந்தாள்.

நளினி M.Com ‘கோர்ஸ்’ சேர்ந்தாள்.’நாம ரொம்ப கஷ்டப் பட்டு படிச்சு, அப்பா சொன்னா மாதிரி ஒரு ‘ஹை பஸ்ட் க்லாஸ்லே’ பண்ணி விட்டு,எப்படியாவது அம்மாவை ஒத்துக்க வச்சு நாம அமெரிக்காப் போய் மேலே படிக்கணும்.அப்புறமா ஒரு நல்ல வேலேயேத் தேடிக்கணும்’ என்று நினைத்து நன்றாகப் படித்து வந்தாள்.

நளினி M.Com ‘பாஸ்’ பண்ணீனாளே ஒழிய அவளுக்கு ‘ஹை பஸ்ட் க்லாஸ் மார்க்’ வரவில்லை.இருந்தாலும் ‘பஸ்ட் க்ளாஸ்லே’ பாஸ்’ பண்ணி இருந்தாள்.

நளினி அவள் அப்பா,அம்மா கிட்டே தான் அமெரிக்கப் போய் படிக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து வந்தாள்.ஆனா ராதாவோ M.Com படிப்பு படித்தது போதும் நளினியை ஒரு கல்யாணம் பண்ணிக்க சொல்லி வற்புறுத்தி வந்தாள்.ரெண்டு பேருக்கும் நடுவிலே மாட்டிக் கொண்ட கிருஷ்ணன் ’நாம யார் பக்கம் பேசறது.யார் நம்ம பேச்சைக் கேட்பார்கள்’ என்று புரியாமல் தவித்து வந்துக் கொண்டு இருந்தார்.

பம்பாயில் வசித்து வந்த ராதாவின் அண்ணன், தன் மணைவியை அழைத்துக் கொண்டு தன்னுடைய மிக நெருங்கிய நண்பன் ஒருவர் கல்யாணத்திற்கு சென்னைக்கு வந்து இருந்தார். கல்யாணம் முடிந்ததும் ‘நாம இவ்வளவு தூரம் வந்து இருக்கோமே,ராதாவையும், அவ குடும்ப நபர்களையும் பார்த்து விட்டுப் போகலாமே’ என்று நினைத்து ராதாவின் வீட்டுக்கு வந்து ‘காலிங்க் பெல்லை’ அழுத்தினார்.

வாசல் கதவைத் திறந்த ராதாவுக்கு,தன்னுடைய அண்ணாவையும், மன்னியையும் நின்றுக் கொண்டு இருப்பதைப் பார்த்து ஆச்சரியப் பட்டு, உடனே “வா அண்ணா, வாங்கோ மன்னி” என்று சொல்லி வரவேற்றாள்.கிருஷ்ணனும் அவர்களைப் பார்த்து ஆச்சரியப் பட்டு, “வாங்கோ வாங்கோ” என்று அழைத்து ‘சோபாவில்’ உட்காரச் சொன்னார்.இருவரும் ‘சோபாவி’ல் உட்கார்ந்துக் கொண்டார்கள்.

இரு குடும்பமும் பேசிக் கொண்டு இருந்தார்கள்.பேச்சின் நடுவிலே ராதா ‘தான் நளினி இடம் சொல்லிக் கொண்டு வருவதையும்,நளினி பிடிவாதம் பிடித்து வருவதை’யும் தன் அண்ணாவிடமும் மன்னியிடமும் சொன்னாள்.

“ரெண்டு பேரும் ஆசைப் படறாப் போல என் கிட்டே ஒரு நல்ல ஐடியா இருக்கு.சொன்னா நீங்க ரெண்டு பேரும் பண்ணுவேளா” என்று ஒரு விடுகதைப் போட்டார் பலராமன்.உடனே ராதாவும் நளினியும்”நாங்க பண்றோம்.நீங்க உங்க ‘ஐடியாவை’ சொல்லுங்கோ” என்று அவசரப் படுத்தினார்கள்.

“அது ஒன்னும் இல்லே ராதா.எங்க ‘ப்லாட்டுக்கு’ அடுத்த ‘பலாட்லே இருக்கிறவா,அவா பையனுக்கு ஒரு நல்ல இடமா பாத்துண்டு வறா.அவா பையன் அமெரிக்காவிலே படிச்சுட்டு, ஒரு நல்ல வேலைலே இருக்கான்.அவா குடும்பம் ரொம்ப நல்ல குடும்பம்.எனக்கு அவாளே ரொம்ப வரு ஷமாத் தெரியும்.நீங்க எல்லாம் ஆசை பட்டா,நான் அவர் கிட்டே நிளினியையும் அவ படிப்பைப் பத்தியும் பத்தி சொல்றேன்.ஜாதகம் ஒத்து இருந்து,அவாளும் சரின்னு சொன்னா,நளினியை அவா பையனுக்கு கல்யாணம் பண்ணிக் குடுங்கோ.கல்யாணம் பண்ணீண்டு நளினி அமெரிக்கா போய் மேலே படிக்கட்டுமே” என்று சொன்னதும் கிருஷ்னன ராதா நளினி மூனு பேரும் அவர் சொன்ன ‘ஐடியா’வை ஒத்துக் கொண்டார்கள்.

ரெண்டு நாள் கழித்து பலராமன் தன்னுடைய அடுத்த ‘ப்லாட்டில்’ வசித்து வந்த ராமனாதன் குடும்பத்தாரிடம் தன் தங்கை குடும்பத்தை பற்றியும்.அவர்கள் பெண் நளினி,அவள் வயசு, படிப்பு எல்லா விவரமும் சொன்னார்.

இரு குடும்பமும் ஜாதகப் பா¢வர்த்தணை பண்ணி,ஜாதகங்கள் ஒத்து இருக்கவே,அவர்கள் பையன் ரெண்டு வார லீவில் பம்பாய் வந்ததும்,அவனை அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்து நளினியை ‘பெண் பார்த்து’ கல்யாணத்துக்கு சம்மதம் தெரிவித்து கல்யாணம் பண்ணிக் கொள்ள முடிவு பண்ணினார்கள்.

‘அமெரிக்காலே நல்ல வேலையில் இருக்கும் மாப்பிள்ளை ஆச்சே’ என்று நினைத்து, பெண்ணுக்கு நிறைய நகைகள் போட்டு,நாதஸ்வரம்,பேண்ட்,ரிசப்ஷன்,டின்னர்,’லைட் மியூஸிக்’ கச்சேரி, மா லையில் பஜன்,என்று பணத்தை வாரி இறைத்தார்கள் கிருஷ்னன் தம்பதிகள்.

பையன் வீட்டாருக்கும் ‘நமக்கு இவ்வளவு நல்ல சம்மந்தம் கிடைத்ததை’ எண்ணி மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.கல்யாணம் முடிந்து கோபாலும் நளினியும் அமெரிக்கா கிளம்பிப் போனார்கள்.

முதல் மூன்று மாதம் இருவரும் ‘சொர்க லோலத்தில்’ இருப்பது போல் சந்தோஷத்தில் மூழ்கி திளைத்தார்கள் கோபாலும் நளினியும்.ஒரு நாள்,கோபால் நளினியைப் பார்த்து “நாம சீக்கிரமா ஒரு குழந்தையை பெத்துண்டு,அந்த குழந்தையை நன்னா வளத்து வரலாமா” என்று சிரித்துக் கொண்டே தன் எண்ணத்தை சொன்னான்.

உடனே நளினி “இல்லே,நான் முதல்லே ஒரு நல்ல அமெரிக்கா ‘யூனிவர்சிட்டிலே’ சேந்து, நன் னா படிச்சு, ஒரு ‘டிகிரீ’ வாங்கி,ஒரு நல்ல வேலையிலே சேந்து, ஒரு இரண்டு வருஷமாவது வேலை பண்ணின அப்புறமா தான் குழந்தையை பத்தி யோஜனை பண்ணப் போகிறேன்.இப்போதைக்கு குழ ந்தே வேணாமே ‘டார்லிங்க்’ என்று கொஞ்சினாள்.நளினி அப்படி சொல்லி விட்டு பிறகு கோபால் அப் போதைக்கு ஒன்னும் சொல்லாமல் சும்மா இருந்தான்.

சமயம் கிடைக்கும் போதெல்லாம் கோபால் “நள்,நாம சீக்கிரமா குழந்தை பெத்துண்டாத் தான் நல்லது.பெண்களுக்கு வயசு ஆயி ‘லேட்டா’ ஆற பிரசவங்கள்ளே நிறைய ‘காம்பிளிகேஷன்ஸ்’ வறது ன்னு இங்கே நிறைய ‘ரிஸர்ச்’ பண்ணி புதுசா கல்யாணம் ஆன ‘கப்பல்ஸ்’க்கு ‘அட்வைஸ்’ சொல்லிஇருக்கா” என்று அவன் சொல்லி முடிக்கும் முன்பே நளினி “வேணாம்.ப்லீஸ் நான் படிச்சு. ஒரு ‘டிகிரீ’வாங்கிண்டு,ஒரு நல்ல வேலைக்குப் போனப்புறமா தான் குழந்தை பெத்துக்கலாம்ன்னு இரு க்கேன்.குழந்தைன்னு ஒன்னு பொறந்துட்டா,அப்புறமா நான் படிக்க முடியாது.ஒரு நல்ல வேலை க்கும் போக முடியாது.எனக்கு நன்னா படிச்சுட்டு,ஒரு வேலைக்குப் போய் நன்னா சம்பாதிக்கணும் ன்னு ரொம்ப ஆசையா இருக்கு கோப்” என்று சொல்லி அவள் மறுத்து வந்தாள்.கோபால் மௌனமாக இருந்து விட்டான்.

இந்த ‘மன வேற்றுமையே’ நாளடைவில் இவர்களுக்குள் காரசாரமான விவாதமாக ஆகிவிட்டது ரெண்டு மாதம் ஆனதும் இதுவே ஒரு ‘மன வேற்றுமையை’ கொடுத்து வந்தது.
நளினி தன் கணவன் கோபால் சொல்லி வந்ததற்கு மாறாக,அவள் சொன்ன பதிலையே சொல்லி வந்ததால் இருவருக்கும் இடையே நாளுக்கு நாள் சண்டை வலுத்து வந்துக் கொண்டு இருந்தது.

கோபால் தனக்கும், நளினிக்கும் இருந்த ‘மன வேற்றுமை’யையும் சொல்லி,அது ஒரு சண்டை யாக மாறி வருவதை தன் பெற்றோர்களிடம் பகிந்துக் கொண்டான்.கோபால் சொன்னதைக் கேட்டு அவன் பெற்றோர்கள் மிகவும் வருத்தப் பட்டார்கள்.அவர்கள் “பாத்துக்கோ கோபால்.நீ தான் ‘பெஸ்ட் ஜட்ஜ்’.எங்களுக்கு அப்பப்போ என்ன ‘டெவலப்மெண்ட்’ன்னு மட்டும் சொல்லிண்டு இரு” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்கள்.

இதைப் போலவே நளினியும் தன் பெற்றோர்களிடம் தனக்கும் கோபாலுக்கும் இருக்கும் மன் வேற்றுமையை சொன்னாள்.நளினி பெற்றோர்கள் நளினியிடம் ”நீ சொல்றது தான் சரி நளினி. அமெரி க்காவிலெ படிச்சு ஒரு ‘டிகிரீ’ வாங்கி ரெண்டு வருஷமாவது நீ வேலை பண்ணின அப்புறமா தான்,நீ ஒரு குழந்தையைப் பெத்துக்கணும்.இப்போவே நீ ஒரு குழந்தையை பெத்துண்டா,அப்புறமா நீ படிக் கவும் முடியாது.ஒரு நல்ல வேலைக்கும் போக முடியாது.கல்யாணம் பண்ணீண்டு அமெரிக்கா போகும் எல்லா பொண்களும் இப்படித் தானே பண்றா”என்று சொல்லி அவளை மேலே படிக்க ஊக்குவித்தார்கள்.

சென்னையிலே இருந்த ராதாவின் நெருங்கிய உறவினர்களும்,கிருஷ்ணன் உறவுக்காரர்களும் நளினியிடம் ”நீ சொல்றது போலத் தான் பண்ணணும்”என்று சொல்லி அவர்களும் நளினியை ஊக்கு வித்தார்கள்.

நளினிக்கு அவள் பெற்றோர்களும்,அவளுடைய உறவுக்காரர்களும் சொன்னது ரொம்ப பிடித்து இருந்ததால்,தன் ‘ப்ளானில்’ தீவீரமாக இருந்து வந்தாள்.

ஒரு நாள் வாக்கு வாதம் உச்ச கட்டத்தை அடைந்த போது நளினி “கோபால்,நீ என்னை படி க்க வக்காட்டா,நான் இங்கே இருக்கமாட்டேன்.நீ எனக்கு சென்னைக்கு ஒரு ‘டிக்கட்’ வாங்கி என் னை சென்னைக்கு ‘ப்லேன்’ ஏத்தி அனுப்பி விடு.நான் சென்னைக்குப் போய் என் வழியை பாத்துக் கறேன்” என்று தீர்மானமாக சொல்லி விட்டாள்.

கோபால் அவளை பார்த்து “நள்,நான் உனக்கு சென்னைக்கு ‘டிக்கட்’ வாங்கி தரேன்.அது ஒரு ‘ப்ராப்லெமே’ இல்லை.நீ கல்யாணம் ஆனவ.நீ சென்னைக்கு போயிட்டா திரும்ப அமெரிக்கா வருவது ரொம்ப கஷ்டமா இருக்கும்.நீ அவசரப் படாம நன்னா யோஜனைப் பண்ணு.நீ இங்கே இருக்கிறது தான் நல்லது” என்று எவ்வளோ தடவை சொல்லிப் பார்த்தான்.

ஆனால் நளினி கோபால் சொன்னதை கேட்பதாய் இல்லை.அவள் சொன்னதையே சொல்லிக் கொண்டு வந்தாள்.

நளினியின் பிடிவாதத்தை புரிந்துக் கொண்ட கோபால் ”சரி,நான் உனக்கு சென்னைக்கு ஒரு ‘ஏர் டிக்கட்’ வாங்கித் தறேன்.நீ ஜாக்கிறதையா சென்னைக்குப் போய் வா” என்று மிகவும் வருத்தப் பட்டுக் கொண்டே சொன்னான்.

அடுத்த நாளே நளினி தன் துணீ மணிகள்,நகைகள் எல்லாம் எடுத்துக் கொண்டு சென்னை க்குக் கிளமபினாள்.கோபால் நளினியை ‘ஏர் போர்ட்டில்’ ‘ட்ராப்’ பண்ணி விட்டு,அவன் விமானம் கிளம்பிப் போனதும் தன் ‘அபார்மெண்டுக்கு’ வந்தான்.

கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக் கொண்டு கோபால் தன் பெற்றோர்களிடம் நடந்த விஷயங்க ளை ஒன்னு விடாமல் சொல்லி விட்டு ”அப்பா,அம்மா நான் ரொம்ப தீர்மானமா இருக்கேன்.நான் இப்போ எந்த வித அவசர முடிவுக்கும் போகப் போறது இல்லே.நளினியா என்னிக்கு மனம் திருந்தி அமெரிக்கா வறாளோ,அது வரை நான் பொறுமையாக இருக்கப் போறேன்” என்று சொல்லி விட்டான்.

கோபால் பெற்றோர்கள் ‘தன் பையன் கல்யாண வாழக்கை இப்படி ஆகி விட்டதே’ என்று நினை த்து மிகவும் கவலைப் பட்டு வந்தார்கள்.

நளினி சென்னை ‘ஏர் போர்ட்டு’க்கு வந்ததும்,நளினியின் பெறோர்களும்,உறவினர்களும் அவ ளை சந்தோஷமாக வரவேற்று வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போனார்கள்.
சென்னைக்கு வந்த மூன்று நாட்களுக்கு.நளினிக்கு ‘ஜெட் லாக்’ இருந்து வந்தது.‘ஜெட் லாக்’ சரியானதும் நளினி தன் உறவினர்களை சந்திப்பதும்,‘ப்ரெண்ட்ஸ்’கள் வீட்டுக்கு போய் தன் அமெரி க்கா ‘லைப்’ பற்றி பேசுவதிலும் தன் பொழுதை கழித்து வந்தாள்.

ரெண்டு மூனு மாதமாக தன் வேலையில் கோபால் கவனக் குறைவாக இருந்து வந்ததால், கோபால் நளினி சென்னைக்குக் கிளம்பிப் போன ‘ப்ராப்லெத்தை’ மறந்து விட்டு, தன் வேலையை மும் முரமாகக் கவனித்து வர ஆரம்பித்தான்.

நளினி சென்னைக்கு வந்து பதினைந்து நாட்கள் ஆகி விட்டது.

நளினி தன் பெற்றோர்களிடமும்,உறவுக்காரர்களிடமும் கலந்து பேசினாள்.எல்லோரும் ஒரு வாய் வைத்தர் போல் “நளினி,நீ உடனே ஒரு நல்ல ‘கோச்சிங்க் சென்டா¢ல்’ சேந்து TOFEL, GRE, படிச்சுட்டு,அதிலே எல்லாம் நல்ல மார்க் வாங்கு.அப்புறமா நீ ‘அமெரிக்கன் கான்ஸலேட்டுக்கு’ப் போய் அமெரிக்க போக ‘விஸா’ வாங்கிண்டு,அமெரிக்காப் போய் உனக்குப் பிடிச்ச ‘கோர்ஸிலே’ சேந்து படிச்சு ‘பாஸ்’ பண்ணிட்டு,ஒரு நல்ல வேலையைத் தேடிக்கோ.அப்புறமா உன் ஆத்துக்காரர் கிட்டே போய் சேந்துக்கோ” என்று சொல்லவே நளினி சந்தோஷப் பட்டு அவர்களைத் ‘தாங்க்’ பண்ணீனாள்.

அடுத்த வாரமே நளினி ஒரு ‘கோச்சிங்க் சென்டா¢ல்’ சேர்ந்து TOFEL,GRE, படிக்க ஆரம்பித்தாள்.

நளினி அமெரிக்காவை விட்டு சென்னைக்கு வந்து இரண்டு மாதம் ஆகியது.’கோர்ஸ்’ நேரம் தவிர நளினி வீட்டில் தன் பாடங்களைப் படித்துக் கொண்டு வந்தாள்.ஆனால் ராதாவுக்கு மட்டும் ’கல்யாணம் ஆன நம்ம பொண்ணு நளினி,இப்படி ஒரு சின்னப் பொண்ணு போல ஆத்லே உக்காந் துண்டு,படிச்சுண்டு வறாளே.எல்லாம் நல்ல படியாப் போய்,இவ TOFEL,GRE,ரெண்டிலேயும் நல்ல மார்க் வாங்கி ‘பாஸ்’ பண்ணிட்டு ஒரு நல்ல படிப்பு படிச்சுட்டு,ஒரு நல்ல வேலை கிடைச்சு,அப்புறமா அவ ஆத்துக்காரர் கிட்டே போய் சேந்து இருக்கணும்.அது வரை நளினி ஆத்துக்காரர் வேறே யாரையும் கல்யாணம் பண்ணிக்கம இருக்கணும்.எனக்கு என்னவோ நளினி அமெரிக்காவை விட்டுட்டு சென் னைக்கு வந்தது ரொம்ப தப்புன்னு படறது’ என்று நினைக்கும் போது அவள் மனது ரொம்ப வேதனப் பட்டது.

தன் வேதனையை கணவர் தனியாக இருக்கும் போது சொல்லி வருத்த பட்டாள்.

உடனே கோபால் ராதாவிடம் “அப்படி எல்லாம் ஆகாது ராதா.நீ வீணா கவலைப் பட்டுண்டு வறே.எல்லாம் சரியாப் போகும்” என்று சொல்லி ராதாவுக்குத் தேத்தறவு சொல்லி வந்தார்.

நளினி ஒரு சின்ன பெண்ணாக இருந்த போது படித்து கொண்டு வந்தது போல்,இப்போது அவ ளால் முழு கவனமும் படிப்பில் செலுத்த முடியவில்லை.தான் கோபால் இடம் பிடிவாதம் பிடித்து சென் னைக்குக் கிளம்பி வந்த ‘நிகழ்வு’ ஞாபகம் வரும் போது மட்டும் ‘சீரியஸாக’ படித்தாள் நளினி.

நடு நடுவிலே வேறே விஷயத்தில் தன் கவனத்தை செலுத்தி வந்தாள் நளினி.

நளினி TOFEL,GRE,பா¢¨க்ஷகள் எழுதினாள்.

‘TOFEL,GRE, ‘ரிஸல்ட்’கள் வரும் வரை நளினி வீட்டில் ஒன்று செய்யாமல் சும்மா இருந்து வந்தாள்.

ராதா மட்டும் தினமும் வேண்டி வரும் காமாக்ஷ¢ அம்மனிடம் “அம்மா தாயே,எல்லாம் நல்லபடியாப் போய்,நளினி அமெரிக்கவுக்குப் போய் அவ ஆசை பட்டா மாதிரி படிச்சுட்டு, ஒரு நல்ல வேலை யைத் தேடிண்டு,சீக்கிரமா அவ ஆத்துக்காரரோடு சேந்து, அவ சந்தோஷமா வாழ்ந்துண்டு வரணும். அதுக்கு நீ தான் ‘அனுக்கிரஹம்’ பண்ணனும்” என்று வேண்டி வந்தாள்.

நளினி ரொம்ப சுமாராகத் தான் பா¢¨க்ஷ எழுதி இருந்ததால்,அவளுக்கு ரொம்ப சுமாரான மார்க்குகள் வந்து இருந்தது.நளினிக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

நளினியின் அப்பா ”நள்,இந்த TOFEL,GRE, மார்க்குக்கு உனக்கு நல்ல ‘யூனிவர்சிடியில் ‘அட்மிஷன்’ கிடைக்காதேம்மா.அதேத் தவிர உனக்கு எந்த ‘யுனிவர்சிடியும்’‘எய்டூம்’ தர மாட்டாளே. ’கோர்ஸ் ‘பீஸ்’ மொத்ததத்தையும் நாம தானே கட்டி படிக்கணும்.அதுக்கு ரொம்ப செலவு ஆகுமே. அதேத் தவிர உனக்கு அமெரிக்காப் போக ‘ஏர் டிக்கட்டும்’ வாங்கி ஆகணும்,நீ ‘ஹாஸ்டல்லே’ தங்கிப் படிக்க செலவும் நாம தான் பாத்துண்டு ஆகணும்” என்று மெல்ல இழுத்தார்.

கிருஷ்ணன் சொன்னதைக் கேட்ட ராதா “இன்னும் இத்தனை செலவு நாம பண்ணி ஆகணுமா” என்று கவலையுடன் கேட்டாள்.

நளினி “இல்லேப்பா,ரெண்டு ‘எக்சாம்களும்’ ரொம்ப கஷ்டமா இருந்தது.எல்லோரும் கம்மி மார்க்குதான் வாங்கி இருக்கா” என்றாள்.கிருஷ்ணன் நளினியைப் பார்த்து “நளினி,நீ வேணும்ன்னா மறு படியும் அந்த ‘கோச்சிங்க் சென்டா¢ல்’ சேந்து நன்னாப் படிச்சு ரொம்ப நல்ல மார்க் வாங்க ‘ட்ரை’ பண்ற யா” என்று கேட்டதும் நளினி சந்தோஷப் பட்டு “சரிப்பா,நான் மறுபடியும் அந்த ‘கோச்சிங்க் சென்டர் லே’ சேந்து படிச்சு நல்ல மார்க் வாங்க ‘ட்ரை பண்றேன்” என்று சொல்லி விட்டு அவள் மறுபடியும் ‘கோச்சிங்க் சென்டா¢ல்’ சேர்ந்து,கஷ்டப் பட்டு படித்து வந்தாள்.முன்னம் படித்து வந்ததை விட இன் னும் முழு கவனத்தோடு படித்து வந்தாள்.

நளினி சென்னைக்கு வந்து ஒன்னரை வருஷம் ஆகி விட்டது.

நளினியின் வாழ்வு ‘மலருமா’’மலராதா’ என்று எண்ணி வேதனை பட்டாள் நளினியின் அம்மா.

அவள் மன வேதனை நாளுக்கு நாள் அதிகமாகி,அவள் ஒரு நாள் மாரடைப்பால் காலமாகி விட்டாள்.மணைவியின் ஈமச் சடங்குகளை எல்லாம் முடித்து விட்டு கிருஷ்ணன் சகஜ நிலைக்கு வந்தார்.

ராதாவின் ‘காரியங்களுக்கு வந்த இருந்த உறவினர்களில் சிலர்,மறைமுகமாக ‘சவால் விட்டு ட்டு வந்தாஆச்சா.முழு ஒத்துழைப்பையும் போட்டு,இத்தனை நாளைக்குள்ளே TOFEL,GRE பா¢ ¨க்ஷ எழுதி,நல்ல மார்க் வாங்கிட்டு,‘விசா’ வாங்கிண்டு அமெரிக்கா போய் இருக்கணும் இந்த நளினி’ என்று பேசிக் கொண்டு இருந்தது நளினி காதுகளிலும்,அவள் அப்பா காதுகளிலும் விழுந்தது.

நாளடைவில் உறவினர்கள் இவர்கள் வீட்டுக்கு வருவது குறைந்து விட்டது.

நளினி ‘ப்ராப்லெம்’ இப்போது அவளுக்கும்,அவள் அப்பாவுக்கும் மட்டும் தான் சொந்தமாகி விட்டது.மகளை இன்னும் கவனமுடன் படித்து நல்ல மார்குகள் வாங்கும் படி கண்டிப்பாக சொல்லி வந்தார் கிருஷ்ணன்.நளினியும் ‘சீரியஸா’கப் படித்து வந்தாள்.

ஒரு நாள் ‘மோட்டார் பைக்கில்’ ‘ஆபீஸ்’க்கு போகும் போது கிருஷ்ணன் மேலே ஒரு லாரி மோதி,அவருக்கு இடுப்பு பாகத்தில் நல்ல அடிப் பட்டு,எலும்பு முறிவும் ஆயிற்று.அவர் ‘பைக்கை’ பக்கத்தில் இருந்த ஒரு வெத்திலைப் பாக்கு கடையிலே விட்டு விட்டு,அந்த கடைக்காரரை அவர் ‘பைக்கை’ கொஞ்சம் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு,ஒரு ஆட்டோவைப் பிடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார்.

அவர் ஆட்டோக்காரனுக்கு பணத்தை கொடுத்து விட்டு,விந்தி,விந்தி வீட்டுக்குள் வந்து,தனக் கு அடிப்பட்ட விஷயத்தை நளினியிடம் சொன்னார்.உடனே நளினி அப்பாவை அருகில் இருந்த ஒரு ‘ஹாஸ்பிடலில் ’சேர்த்தாள்.‘ஹாஸ்பிடலில்’ கிருஷ்ணனுக்கு ‘எக்ஸ்ரே’ எடுத்துப் பார்த்து விட்டு,அவரு க்கு ஏற்பட்டு இருந்த எலும்பு முறிவுக்கு இடுப்பில் இருந்து கால் பாதம் வரை மாவு கட்டு போட்டார்கள்.

நளினி ‘ஹாஸ்பிடலுக்கு பணத்தை’ கட்டி விட்டு,அப்பாவை ஒரு ஆட்டோவில் ஏற்றிக் கொ ண்டு,அவரை ஆட்டோ டிரைவர் உதவியுடன் கைக்தாங்கலாகப் பிடித்துக் கொண்டு,வீட்டுக்குள் அழைத்து வந்து கட்டிலில் படுக்க வைத்தாள்.

தன் அப்பாவை கவனித்துக் கொள்வது,சமையல் வேலை,வீட்டு வேலை எல்லாம் நளினியின் தலையில் தான் விழுந்தது.

நளினி எல்லா வேலைகளையும் பண்ணி விட்டு, தன் படிப்பில் கவனம் செலுத்தி வந்தாள்.

நடு நடுவே ‘அமெரிக்காவில் தான் எடுத்த முடிவில் தன்னால் ஜெயிக்க முடியவில்லையே என் கிற கவலை’ வேறே அவள் மனதில் தலை தூக்க ஆரம்பித்தது.எதையும் வெளிக் காட்டி கொள்ளாமல் தான் சந்தோஷமாக இருப்பது போல் நடித்து வந்தாள் நளினி.

ஒரு மாசம் ஆனதும் நளினி அப்பாவை ‘ஹாஸ்பிடலுக்கு’ அழைத்துப் போய் காட்டினாள். கிருஷ்ணன் மாவுக் கட்டைப் பிரித்துப் பார்த்த டாகடர் நளினியிடம்” உங்க அப்பா கால் எலும்பு முறிவு நல்லா சேரலே.அவருக்கு மறுபடியும் ‘ஆபரேஷன்’ பணறது,அவர் வயசுக்கு நல்லது இல்லே.அதனால் லே அவர் ஒரு அக்குள் கட்டையை வச்சுக் கிட்டு நடந்து வறது தான் நல்லது” என்று சொல்லி இருவ ரையும் அனுப்பி விட்டார்.டாகடர் சொன்னதைக் கேட்ட கிருஷ்ணனுக்கும் நளினிக்கும் துக்கி வாரிப் போட்டது.

வேறு வழி இல்லாமல் கிருஷ்ணன் டாக்டர் சொன்னது போல் ஒரு அக்குளில் கட்டை வைத்து கொண்டு வீட்டிலேயே நடமாடி வந்தார்.ஒரு மாசம் ஆனதும் கிருஷ்ணன் ‘ஆபீஸ்க்குப் போய் வந்துக் கொண்டு இருந்தார்.அக்குள் கட்டையை வைத்துக் கொண்டு ’ஆபீஸ்’ வேலை வேலை செய்து வரு வது ரொம்ப கஷ்டமாக இருக்கவே,கிருஷ்ணன வேறே வழி இல்லாமல்,V.R.S. வாங்கி கொண்டு வீட் டோடு இருந்து வந்தார்.

இந்த தடவை கஷ்டப்பட்டு படித்து TOFEL,GRE,ரெண்டு பா¢¨க்ஷகளிலும் நல்ல மார்க் வாங்கினாள் நளினி.

’ஹாஸ்பிடல்’ செலவு, வீட்டில் மாத வரும்படி இல்லாமல் இருந்து வரும் குடும்ப நிலைமை எல்லாம் சேர்ந்து நளினியையும்,கிருஷ்ணனையும் பணக் கஷ்டத்தில் அழுத்தியது.அமெரிக்க போக ‘டாக்குமெண்ட்ஸ்’ எல்லாம் தயார் பண்ணிக் கொடுத்த கம்பனி,அதற்கு நிறைய ‘பீஸ¤ம்’வாங்கி கொ ண்டார்கள்.

நளினி குறிப்பிட்ட நாளில் ‘விசா’ ஆபீஸ்க்கு போனாள்.

இவளை ‘இன்டர்வ்யூ’ பண்ண ‘விசா ஆபீசர்’ நளீனியின் ‘பாஸ்போர்ட்டை’ப் பார்த்தவுடன் “நீங்க அமெரிக்காவை விட்டு விட்டு வந்து இரண்டு வருஷத்திற்கு மேல் ஆகி விட்டதே.ஏன் உடனே நீங்க அமெரிக்கா திரும்பிப் போகலே” என்று பட்டென்று கேட்டார்.நளினி இதற்கு நோ¢டையாக பதில் சொல்லாமல் ஏதோ சொல்லி மழுப்பினாள்.கொஞ்ச நேரம் ஆனதும் நளினி “இல்லை நான் ‘ஸ்டூடென் ட்ஸ்’ ‘விசா’வில் போக ‘அப்ளை’ பண்ணி இருக்கேன்” என்று சொன்னதும்,அந்த ‘விஸா ஆபீஸர்’ பதில் ஒன்னும் சொல்லாமல் ‘விசாவை’ ‘ரிஜெக்ட்’ பண்ணி விட்டார்.

மனம் ஒடிந்து போய் வீட்டுக்கு வந்தாள் நளினி.

நளினி அமெரிக்காவை விட்டு வந்து மூன்று வருஷங்கள் ஆகி விட்டது.நளினியின் நிலைமை யைப் பார்த்த கிருஷ்ணன் மனம் புழுங்கினார்.

‘மறுபடியும் ’விசா’க்கு ‘அப்ளை’ப் பண்ணி,’விஸா ஆபீஸரிடம்,இந்த தடவை தன் வாழ்க்கை யில் நடந்த உண்மைகளை எல்லாம் சொல்லி ‘விசா’ வாங்க முயற்சி பண்ணுவது’ என்று தீர்மானம் பண்ணி,நளினி மறுபடியும் வேறு ஒரு Consultantஐ பார்த்து அமெரிக்காப் போக வேண்டிய ‘டாக்கு மெண்ட்ஸ்’எல்லாம் தயார் பண்ணினாள்.கிருஷ்ணன் தன் கையில் இருந்த பணத்தை எல்லாம் திர ட்டிப் போட்டு,கொஞ்சம் கடனும்,வாங்கி, consultant க்கு ‘பீஸ்’ ஆக கொடுத்தார்.நளினியின் ‘பாஸ் போர்டை’ பிரித்து பார்த்த்தும்,அந்த ‘விசா’ ஆபீசர்’ போன தடவை உங்களுக்கு ஏன் ‘விசா’ ‘ரிஜெக்ட்’ ஆச்சு” என்று கேட்டார்.

தைரியத்தை வர வழைத்துக் கொண்டு நளினி நடந்தவற்றை எல்லாம் உண்மையாக ‘விஸா ஆபீஸரிடம்’ சொல்லிட்டாள்.’விசா ஆபீஸர்’ சிரித்துக் கொண்டே“மாம், ‘விசா’ சட்டதிற்கு புறம்பாக நான் உங்களுக்கு ‘விசா’ தர முடியாது.உங்களிடம் போதுமான ஆதாரங்கள் இல்லே” என்று சொல்லி விட்டு ‘விசா வை’ ‘ரிஜெக்ட்’ பண்ணி விட்டார் அந்த ‘விசா ஆபீஸர்’.நளினிக்கு உலகமே இருண்டு விட்டது தோன்றியது.

வேறு வழி இல்லாமல் வீடு வந்து சேர்ந்தாள்.நளினி சொன்னதைக் கேட்டா கிருஷ்ணன் மனம் உடைந்து போனார்.அவர் உடனே “அம்மா நளினி,இனிமே நீ அமெரிக்கா போறதுன்றது,ஒரு முடியாத காரியமா ஆயிடுத்தே.எப்படிம்மா நீ மறுபடியும் மாப்பிள்ளைக் கிட்டே போய் ஒன்னா இருக்கப் போ றே.எனக்கு இன்னும் புரியலையேம்மா” என்று சொல்லி கண் கலங்கினார்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *