கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 16, 2013
பார்வையிட்டோர்: 9,975 
 

எனது அம்மத்தா ஊரிலிருந்து வந்தது. என்னைப் பார்க்க வேண்டும் எனது மனைவி குழந்தையைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் வந்தது. வந்த உடனே ஊருக்குக் கிளம்பியது. இன்னும் இரண்டு நாள்கள் இருந்துவிட்டுப் போகச் சொன்னதற்கும் மறுத்துவிட்டது.

இல்ல சாமி நாம் போறன் என்று சொல்லிவிட்டு, கண்ணு…. நீ கண்டிப்பா அடுத்த வாரம் ஊருக்கு வா. அந்த ஜோசியர் கிட்டப் போலாம். அவருதான் உன் ஜாதகத்த எழுதுனவரு. அவரு உன் ஜாதகத்தக் கணிச்சுச் சொன்னபடியே உன்ற அப்புச்சிக்குக் காடு கெடச்சிட்டுது என்று சொல்லிய அம்மத்தா அப்போதே ஊர் சென்று விட்டாள். எனக்குப் புதையல் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை. ஏனெனில், கை விட்டுப் போன பூமி என் ஜாதக பலனால் கிடைத்தது என்பதிலும் ஒரு முரண்பாடு. எனக்-கு மூணுவயசில் _ மூன்று முடியும் போது அப்புச்சி பூமி கிடைக்கும் என்று ஜோசியர் சொன்னது ஆறு வயது முடிந்த போதுதான் கிடைத்தது.

unmai - Mar 16-31 - 2010அந்த பூமி எப்படிக் கை விட்டுப் போனது? அப்புச்சியின் அவசரப்புத்தி, முன் கோபம், முரட்டுத்தனமான அணுகுமுறை. அப்புச்சிக்கும் அம்மத்தாவுக்கும் இடையில் பல வகையில் மனஸ்தாபம். அதனால், பக்கத்துத் தோட்டத்துக்காரன் சின்னப்பனை _ அண்ணந்தம்பி போன்று அந்யோன்யப் பழக்கமுள்ளவனைப் பத்திரப் பதிவு அலுவலகத்திற்குக் கூட்டிப் போய், அவர் பூமியை அவன் பேருக்கு எழுதிக் கொடுத்து விட்டு வந்து விட்டார். எழுதிக் கொடுத்தது சின்னம்மத்தாவிற்குக்கூடத் தெரியாது. சின்னம்மத்தாவிற்கு அங்கலாய்ப்பு _ இந்த மனுசன் இப்படியும் செய்யலாமா. அநியாயமா இப்படிப் பண்ணிட்டாறே. கட்ன பொண்டாட்டி _ விவரம் தெரியா கைக்கொழந்தையையும் அம்போன்னு உட்டுட்டாரே. மனம் கனக்கிறது என்று புலம்பினாள். மூன்று வருசம் கடந்து விட்டது. எனது தாயாருக்குத் தந்தை மேல் உள்ள கோபத்தால் பிரசவத்திற்குப் போகக் கூடாது என்று நினைத்திருந்த வேளையில் சின்னம்மத்தாள் வந்து சமாதானப்படுத்திக் கூட்டிப் போனாள். மூன்றாவது மாதம் நான் பிறந்தேன். பக்கத்து ஊரில் ஒரு ஜோசியர் இருந்தார். அவரிடம் சென்று நான் பிறந்த நேரத்தைச் சொல்லி ஜாதகம் எழுதித் தரக் கேட்க _ அவரும் எழுதிக் கொடுத்தார்.

ஜோசியர் என் ஜாதகம் பற்றிப் புகழ்ந்து தள்ளினாராம். எனக்கு மூணு வயசு ஆகும் போது அப்புச்சி கைவிட்டுப் போன காடு திரும்பக் கிடைக்கும். பையனும் நன்றாகப் படிப்பான். படித்து முடிந்ததும் அரசாங்க உத்தியோகத்திற்குப் போவான். மேலும், இந்தப் பையனுக்குப் பதினேழு வயதாகும் போது பொதயல் கிடைக்கும். பெரிய ஆளா வருவான். அளந்து விட்டு விட்டாராம். என் அம்மத்தா மனதுள் புளகாங்கிதம்.

எங்கள் காட்டிற்கு நேர் மேற்கே அரைமைல் தூரத்தில் முனியப்பன் கோயில் உள்ளது. அங்கு சென்று அம்மத்தா பொங்கல்வைத்துப் படையல் போட்டாள். ஒரு உடைந்த ஓட்டில் நெருப்பை அள்ளிப் போட்டுக் கொண்டு வந்து வைத்தாள். கை கூப்பி, கண் மூடி மனமுருக வேண்டினாள்.

வேண்டிக் கொண்டே மடியில் போட்டுக் கொண்டு வந்திருந்த மிளகாயை அள்ளி அள்ளி எடுத்து நெருப்புச் சட்டிக்குள் போட்டாள். அந்த மிளகாய் காந்தல் சுற்று வட்டாரத்தில் பரவியது. மாடு மேய்த்துக் கொண்டிருந்த பையன்கள் இருமினார்கள். மாடுகள் தும்மிக் கொண்டே ஓடின. அம்மத்தாவும் சேலைத் தலைப்பால் முகத்தை இறுக மூடியபடி ஓடிவந்தாள்.

முனியப்பன் கோவிலில் முப்பது நாள் கெடுவிதித்து வேண்டி வந்து இரண்டு மாதமாகிவிட்டது. அம்மத்தாள் மனம், நிலை கொள்ளாமல் தள்ளாடியது. மீண்டும் ஜோசியரிடம் சென்றாள். அவர் _ நீ அவசரப்படாத சில வருசங்கள் முன்பின் ஆகும். கண்டிப்பா சொன்னபடி நடக்கும் என்று கூறியதைக் கேட்டு மனம் சோர்ந்து வந்தாள்.

இரண்டு வாரங்களுக்கு முன் சின்னப்பன் தோட்டத்தில் நிறை மாத சினை மாடு பாம்பு கடித்து இறந்து விட்டது. சின்னப்பன் கிணற்று மேட்டில் துவைத்துக் காயப் போட்டிருந்த வேட்டியைக் காற்று தூக்கிக் கிணற்றுக்குள் வீசி விட்டது. அதை எடுத்து வர இறங்கியவர் கால் வழுக்கி பத்து பதினைந்து படி உருண்டு போய் கிணற்றிற்குள் விழுந்து விட்டார். பின்பு எப்படியோ கஷ்டப்பட்டு வீடு வந்து காய்ச்சலில் படுத்தவர்தான் எழுந்திருக்க-வில்லை. வடபுரத்துத் தோட்டத்து ரங்கசாமி சின்னப்பனைப் பார்த்துப் போக வந்தவர் மேபுறத்துக் காட்டுப் பெரியவரோட கொழுந்தியா முனிசாமி கோயில்ல சாமிக்குப் பொங்க வச்சுப் படப்புப் போட்டுத் தீய வழிச்சிட்டு வந்து முன்னால வச்சுதாம். பிறகு, சாமி கிட்ட முனீப்பா _ என்ர மச்சான் எழுதிக்குடுத்த காட்ட, திருப்பி எழுதிக் குடுக்கச் சொல்லு இல்லன்னா இந்த மொளகா எரிஞ்ச பஸ்ப்பமாகற மாதிரி அவுகளப் பண்ணிப்போடுன்னு வேண்டிட்டதா எங்க மாடு மேய்க்கற பையன் எப்பவோ பாத்ததா சொன்னான். வயிறு எரிஞ்சு போனவங்கதான் பழிக்குப்பழி வாங்க இப்படி எரிச்சு சாமிகிட்ட வேண்டிக்குவாக… அது சாபங்குடுத்த மாதிரித்தான். அப்படியும் இருக்கலாம் என்றார். சின்னப்பன் மனைவிக்கு எழுதி வாங்கின போதே மனம் ஒப்பவில்லை. நெருங்குன சொந்த பந்தமாகூட இல்ல. எதுக்காக அடுத்தவன் சொத்து. முனியப்பங் கோயில்ல மொளகா எரிச்சுச் சாபமுட்டுட்டு வந்திருக்கறா. செனமாடு செத்தது. இவரு கெணத்துக்-குள்ள விழுந்திருக்காரு. எப்படியோ பொழச்-சுட்டாரு. அடுத்தவன் சொத்து எங்களுக்கு வேண்டாம். திரும்ப எழுதிக் குடுத்தர்றோம் என்று குலதெய்வத்திடம் வேண்டிக் கொண்ட-தோடு, உடல்நலம் சரியானதும் காட்டையும் அப்புச்சிக்கு எழுதிக் கொடுத்தனர்.

நான் ஒன்பதாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தபோது இரண்டு வருடமாக மழை சரிவரப் பெய்யவில்லை. ஊரில் அய்யாவுக்குக் கொத்து வேலையும் நடை-பெறவில்லை. மலை அடிவாரத்தில் மரம் வெட்டி லாரியில் ஏற்றிக் கொடுக்க கான்ராக்ட் பேசி, அங்கேயே செட்அடிச்சித் தங்கி மரம் வெட்டினோம். என் படிப்புத் தொலைந்தது. பத்துவருசம் தினக்கூலி வேலை. தினம் மூன்று ரூபாய் சம்பளம், அதன் பின் மாதச்சம்பள மேஸ்திரியானேன்.

ஊர் நினைவுவர, கிளம்பிச்சென்றேன். அம்மத்தா பக்கத்து ஊர் ஜோசியர் வீட்டுக்குக் கூட்டிச் சென்றாள். ஜோசியர் எதிரில் உட்கார்ந்தோம். அம்மத்தா ஜாதகத்தை அவர் முன் வைத்தார். ஜோசியரே பையனுக்குப் பதினேழு வயசுல பொதையல் கிடைக்குமுன்னு சொன்னீங்க. அதுவும் கெடைக்கல _ பிறகு இருபத்தி ஏழுல கெடக்குமுன்னீங்க அதுங் கெடைக்கல. இன்னும் எப்பத்தாங் கெடக்கும். கொஞ்சம் நல்லாப் பாத்துச் சொல்லுங்க என்றாள்.

இந்த ஜாதகப்படி கண்டிப்பா பொதையல் கெடைச்சிருக்க வேணும். இவங்கப்புச்சி பூமி திரும்பக் கெடச்சாப்படி அதும் கெடைச்-சிருக்கணும். சந்தேகமில்ல. வயசு முப்பதுக் குள்ர… என்றார் ஜோசியர்.

அய்யா… நா இப்ப வேலை பாக்கறது டேம் கட்ற வேலை. இப்ப பவுண்டேசன் தோண்டி எடுத்து முடிந்து அணை கட்டிக் கொண்டிருக்-கிறோம். நீங்க, நா நல்லாப் படிச்சி அரசாங்க உத்தியோகத்துக்கு வருவேன்னீங்க. நா இப்பப் பாக்கற வேலை-கூட டேம் கட்டி முடிக்கறவரைதான், இன்னம் ரெண்டு வருஷம் இருக்கும். பெறகு ஊட்டுக்கு அனுப்பீருவான். பொதயல்ங்கிறது மண்ணுக்குள் இருந்து கெடைச்சாத்தானே. வேற வழியிலயும் கெடைக்கிமோ…

கெடைக்கலாம் போற வழியில பணப்-பெட்டியோ, நகைப் பெட்டியோகூட கெடந்து எடுத்தா பொதயல்தான்… என்றார்.

அப்போது எனக்கு அந்த ஞாபகம் வந்தது. ஒரு வருஷ மிருக்கும். நா வேலைக்கி வாறன். ரோட்டின் ஓரத்தில் ஒரு பத்துரூபா நோட்டுக் கெடந்தது. அதை எடுத்துட்டு வந்தன்

ஜோசியர் முகம் மலர்ந்தது. ஆ… அதும் பொதயல் மாதிரிதான். பத்துலட்சமா பத்துக் கோடியாக்கூட கெடச்சிருக்கலாம். அது பத்து ரூபாயோடு போச்சு. அவ்வளவுதான்.

என்னுள் _ என்னுடன் வேலைபார்க்கும் ராமனாதன் மகன் ஞாபகம் வந்தது. ஜோசியரே எங்கூட ராமனாதன்னு ஒருத்தர் வேலை பார்க்கறார் அவருக்கு ஒரே மகன். போன வருஷம் மகனுக்-குப் பொண்ணு-பார்த்துப் பொருத்தம் பார்த்தபோது, கொழந்த குட்டிகளோடு நூறாயுசு வாழ்வா-கன்னு சொன்னார். ஆனா, கண்ணாலம் முடிஞ்சு மறு வாரம் பொள்ளாச்சி டவுணுக்குள் ரெண்டுபேரும் நடந்து போற போது ஒரு லாரிக்காரன் வந்து மோதிட்டான். பொண்ணு அப்பவே செத்துப் போச்சு. பையனுக்கு ஒரு காலு தொடயில இருந்து எடுத்துட்டாக. இது எப்படி? ஜோசியர் முகம் சுண்டிப் போய் விட்டது. மேலே தலை தூக்கிக் கூரையையே பார்த்துக் கொண்டிருந்தார்.

நீங்க ஜோசியம் பார்த்து நல்ல நேரம் கெட்ட நேரம் எல்லாம் சொல்வீங்கல்ல. பொண்ணு மாப்பிள்ளை பொருத்தம் பார்த்தப்ப ஏன் சொல்லக்கூடாது. நேரம் சரியில்ல கெட்ட நேரமுன்னு சொல்லிக் கல்யாணத்த நிறுத்தியிருக்கலாமல்லவா? கல்யாணத்துக்கு அத்தன பேரும் பொருத்தம் பார்த்துத்தான் செய்யறாக. ஆனா, அத்தன பேரும் நல்லா இருக்காங்களா? எத்தன பேரு உடனே செத்துப் போறாக. போனவார பேப்பர்ல கோயில்ல கல்யாணம் பண்ணிட்டு வர்ற வழியில ஆக்சிடெண்ட் ஆயி பொண்ணு மாப்பிள்ளை மொத்தம் 10 பேரு செத்துட்டாகளாம். 12 பேர் ஆசுபத்திரி-யிலாம். இப்படியெல்லாம் நடக்குமுன்னு கல்யாணத்துக்கு முன்னால பொருத்தம் பார்க்கறப்ப சொல்லியிருந்தா இந்தக் கதி_கேடு யாருக்கும் வந்திருக்காதல்ல என்றதும்,

ஜோசியர் நெளிந்தார் கிடுக்குப் பிடி போட்டுட்டானே என்பது போல. அப்படிச் சில பேருக்குத் தவறு நேருது. அது ஜோசியகாரனோட தப்பல்ல. ஒவொருத்தரோட பொறந்த நேரத்தக் கரெக்டா _ துல்லியமாச் சொல்லியிருந்தா இது மாதிரிக் குழப்பம் வராது. பொறந்த நேரம் ஒரு நிமிசம் மாறினாலும் கிரகங்கள் ஊடுவிட்டு ஊடு மாறும் போது நல்லது கெட்டது பாலாபலனும் மாறும். இதுதான் அடிப்படையான விஷயம். சரி நீங்க போங்க. வெளிய ரெண்டு மூணு பேரு காத்திருக்காக. இன்னொரு நாளக்கி வாங்க சாகவாசமா பேசிக்குவோம். முகத்தைச் சுழித்தபடி பேச்சைத் துண்டித்துக் கொண்டார்.

நான் எங்க ஊர் நடந்து வர வர எனக்குள் ஒரு நினைவு பசுமையாக விரிந்தது. ஜோசியர் சிலேட்டில் ஒன்பது கட்டம் வரைந்து அதில் ஒன்பது கிரகங்களை அடைத்தார். ஆனால், வானத்தில் கிரகங்கள் ஒவ்வொன்றும் லட்சக்கணக்கான மைல்கள் தூரத்தில் அந்தரத்தில் நின்று சூரியனைச் சுற்றி வருகின்றன. ஒன்றோடொன்று நெருங்குவது கூட இல்லை. அப்படி இருக்க இந்த ஜோதிடத்துக்கு மட்டும் இரண்டு கிரகங்கள் எப்படி ஒரு இடத்தில் இருக்கும்-? எப்படி அடிக்கடி இடம் மாறும்? பொய்யப் பொருந்தச் சொன்னா நெசம் நின்னுட்டு முழிக்குமாம். அப்படித்தான் ஜோசியனும்.

இப்படிப் பக்குன்னு ஏமாத்திப் போட்டானே ஜோசியன். இவஞ்சொன்னதை நம்பி நானும் இத்தனை நாளா எம் பேரனுக்குப் பொதயல் கிடைக்கும் கெடைக்-கிம்னு சொல்லிட்டுத் திரிஞ்சன் படுபாவி.

இப்படி அம்மத்தா பைத்தியம் பிடித்தது போல் பேசிக் கொண்டே நடந்தாள்.

– ஆகஸ்ட் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *