புதுமுகம் – ஒரு பக்க கதை

 

என்ன சொத்துக்களை எல்லாம் விக்கப் போறீங்களா? நான் விடவே மாட்டேன்! –

பேயாட்டம் ஆடிய மனைவி பார்வதியை அடியோ அடி என்று அடித்து, வீட்டை விட்டு வெளியேற்றினான் பரமசிவன்

அடுத்த இரண்டாம் நாளில் கோடிகளோடு அவன் கோடம்பாக்கத்தில்!

”தம்பி, உதவி இயக்குநராகவே எவ்வளவு காலம்தான் குப்பை கொட்டுவே? நான் உன்னை இயக்கநர் ஆக்குறேன். ‘நச்’ னு ஒரு காதல் படம் எடுத்துக் கொடு…!” என்றதும் உதவி இயக்குநருக்குத் தலைகால் புரியவில்லை

”கேட்டுக்கு தம்பி…படத்துக்கு பணம் போடறதால நான்தான் ஹீரோ எனக்கு என்ன குறைச்சல்? அழகோ அழகா,இளசோ இளசா ஒரு புதுமுகத்தைக் கண்டுபிடிச்சி எனக்கு ஜோடியாக்குறதுதான் உன்னோட முதல் வேலை!”

”அந்த வேலை முடிஞ்சிருச்சுன்னு வச்சுக்கங்க சார்.

ஒரு புத்தம் புதுமுகம் நேத்துத்தான் கோலிவுட்டுக்குள நொழைஞ்சுது. ‘ஜில்’னு அப்பிடி ஒருஃபிகர்!. ‘பாஜல்’னு பேர் வச்சோம்…பாருங்க இந்த போட்டாவை!’

டூ பீஸ் ஸ்விம் சூட்டில் சுண்டி இழுப்பது போல் கண் சிமிட்டிக் கொண்டிருந்த பாஜலைப் பார்த்தும் பரமசிவம் பேயடித்தவனை போல ஆனான்.

பின்னே? அவன் மனைவி பார்வதிதான் இந்த பாஜல் என்றால் அவன் அரண்டு போக மாட்டானா?

- சுபமி (ஏப்ரல் 2014) 

தொடர்புடைய சிறுகதைகள்
காலை பத்து மணிக்கு ஸ்வேதாவுக்கு ஸ்கேன் சென்டரில் அப்பாயிண்ட் மெண்ட். இப்பொழுதே மணி ஒன்பதரை ஆகிவிட்டது. சென்னை டிராபிக்கில் எவ்வளவு லாகவமாக பைக்கை ஓட்டினாலும் அந்த இடத்தை அடைய முக்கால் மணி நேரம் ஆகலாம். ஸ்வேதாவின் கணவன் மகேஷ், ...
மேலும் கதையை படிக்க...
ஞாயிற்றுக்கிழமை. காலை 11.00 மணி. விடுமுறைதினம் என்பதால் சமைப்பதற்கு தேவையான பொருட்களை வாங்கி தந்துவிட்டு ஹாயாக சோபாவில் அமர்ந்து டிவியை ஆன் செய்தேன். சிறிதுநேரம் சேனலை மாற்றி மாற்றி பார்த்தும் மனம் டிவியில் ஒன்றவில்லை. எங்காவது வெளியில் சென்று என்று பைக்கை ஸ்டார்ட் செய்தேன். ...
மேலும் கதையை படிக்க...
பழைய புகைப்படம்
இப்போது எனக்கு பத்து வயதிருக்கும். மாமரத்தின் கீழ் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து என்னுடைய பாட்டி நிட்டிங் செய்து கொண்டிருந்தாள். கோடை காலத்தின் இறுதிக்காலம் என்பதால் மரத்திலிருந்து வீசும் காற்றில் இளம் சூடு கலந்திருந்தது. தோட்டத்தில் சூரியகாந்தி மலர்கள் பூத்திருந்தன. குளிர்காலத்திற்கான உல்லன் ...
மேலும் கதையை படிக்க...
வினோத் லேசில் பையைத் திறந்து காசை வெளியில் எடுத்துவிட மாட்டான். பஸ்ஸுக்குச் செலவழிக்க மனமின்றி, இரண்டு மைல் துhரம் கால் கடுக்க நடந்து செல்ல அஞ்ச மாட்டான். சினிமா, டிராமா சட்டென்று துணிந்து போய் விடமாட்டான். ‘ஓசி’ டிக்கட் கிடைத்தால் தொலையட்டும் ...
மேலும் கதையை படிக்க...
மதியம் ஒரு மணி. வாசல் வரண்டாவில் சாய்வு நாற்காலி போட்டு சாய்ந்திருந்தேன். சூரியவெக்கை உடலை தழுவி இருந்தது, ‘‘ஐயா !’’ பவ்விய குரல் கேட்டு நிமிர்ந்தேன். வெள்ளை வேட்டி சட்டையில் எதிரில் ஐந்தடிக்கும் சற்று குறைவான குள்ள உருவம். கருத்த மேனி. பழகிய ...
மேலும் கதையை படிக்க...
உபகாரம்
மறைமுக பிச்சைக்காரர்கள்
பழைய புகைப்படம்
சில உரிமைகள், உரியவருக்கே!
ரோசம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)