புதுப்புடவை – ஒரு பக்க கதை

 

வசுந்தரா கணவனை இழந்தவள். மகன் வினோத்தின் வளர்ப்பில் கணவனின் பிரிவை மறந்து வாழ்ந்து வருபவள்.

அன்று அலுவலகத்திலிருந்து சீக்கிரமாய் வீடு வந்தவள் அவனின் அறையை சுத்தம் செய்ய முனைந்தபோது அட்டைப்பெட்டியில் புதுப்புடவை அவள் கண்ணில் பட்டது.

என்ன இது யாருக்காக வாங்கி இருக்கான். ஏதாவது காதல் அது இது என்று மாட்டிக் கொண்டானா? வழக்கம்போல இரவு பத்து மணிக்கு வந்த வினோத் சாப்பிடாமல் கூட படிக்கணும்மா, என்னை தொந்தரவு செய்யாதே என உள்ளே சென்று கதவை தாழிட்டுக் கொண்டான்.

எதுவும் பேச முடியாமமே போயிற்று வசுந்தராவுக்கு. விடிந்ததும் கேட்டு விடலாம் என்று வந்த கோபத்தை தன்னுள் அடக்கி கொண்டு படுத்தவளுக்கு உறக்கம் எப்போது கண்களை தழுவியது என தெரியாது.

அம்மா, ஹேப்பி பர்த்டேம்மா, எழுந்திரும்மா என விடிந்ததும், விடியாத காலைப்பொழுதில் மகன் அழைக்க கண் விழித்தாள்.

அவன் கையில் அந்தப் புதுப்புடவை, மகனின் மாற்றத்திற்கு காரணம் தெரிந்ததும் பூரித்துப் போனாள்.

- வி.புவனா (ஜூலை 2010) 

தொடர்புடைய சிறுகதைகள்
குவளை மலர் போன்ற அவளது நயனங்கள் இன்னும் பூக்கவில்லை. சன்னலுக்கு வெளியே ஒளிவிலக்கம் கண்டதும் எழுந்து கொண்டேன். எங்கோ ஐந்து தரம் ஒலித்த மெல்லிய மணியோசை, ஒரு முழு நாளின் அடிவேரும் கருகிவிட்டதை உணர்த்திற்று. மென் மஞ்சத்தில் அவளது அழகிய நித்திரை நீடித்தது. இறைவனின் ...
மேலும் கதையை படிக்க...
ஜெயரஞ்சனி யின் அப்பா ஓரிரவு அவள் விரும்பிய கரடி பொம்மையை வாங்கி வந்திருந்தார். அவள் அவரைக் கட்டிக்கொண்டு முத்தம் பொழிந்தாள். அடுக்களையிலிருந்து வெளிவந்த அம்மாவுக்கு ஜெயாவின் சந்தோஷம் மனதை பிசைந்தது. கரடி பொம்மையின் புசுபுசுவென்ற அடர் கருமைநிற முடியை ஜெயா வாஞ்சையுடன் ...
மேலும் கதையை படிக்க...
நீண்ட யோசிப்பிற்குப் பின் கிருஷ்ணன் அந்த யோசனையைக் கூற, சற்றும் தயக்கமின்றி அதை முழு மனதோடு ஆமோதித்தாள் பார்வதி. ‘நானே சொல்லலாம்ன்னு இருந்தேங்க….நீங்களே சொல்லிட்டீங்க…ரொம்ப சந்தோஷம்…தாராளமாச் செய்யலாம்” என்றாள். ‘ஆமாம் பார்வதி…..விதி அரக்கன் தன்னோட அகோர பசிக்கு நம்ம மகனோட உயிரை எடுத்துக்கிட்டான்…நாம ...
மேலும் கதையை படிக்க...
தொட்டுப்பார்த்தலட்டும் பிய்த்துப்பார்த்த மைசூர் பாகும் கிலோ 150 என்றார்கள். லட்டுக்கொஞ்சம் பதம் கூடித்தெரிந்தது.தொட்டுப்பார்த்தாலே கொஞ்சமாய் அமுங்கியது.மைசூர்பாகு அப்படியில்லை.பதமும் இனிப்பும் சரியான விகிதத்தில் இருந்தது.கேட்டதற்கு தீபாவளி நேரம் கொஞ்சம் அப்படித்தான் இருக்கும் பொறுத்துக்கொள்ளுங்கள் என்றார்கள்.இவனுக்கு ஸ்வீட் எடுத்து சாம்பிள் காண்பித்த பெண். தவிர மொதமொத இந்த ...
மேலும் கதையை படிக்க...
அம்மா படுத்த படுக்கையாகக் கிடந்தாள். அவள் இப்படிக் கிடந்து ஏழெட்டு நாட்களாகிறது. முன்னர் கொஞ்சம் அங்குமிங்கும் நடந்து திரியக்கூடியதாயிருந்தது. விழுந்துவிடுவேனோ என்ற பயத்துடன் ஊன்றுகோலைப் பிடித்துக்கொண்டு நடப்பாள். இப்போது அதுவும் முடியவில்லை. ஊன்றுகோல் கட்டிலின் ஒரு பக்கத்தில் வைக்கப்பட்டிருந்தது. தற்செயலாக நடக்க ...
மேலும் கதையை படிக்க...
பூமி விளக்கம்
வேலியோர பொம்மை மனம்
அவர் நாண நன்னயம்
கப்பி மண்…
வராமற்போனதும் வராமற்போனவர்களும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)